Monday, September 5, 2011

மனித நேயம்!!!



                                


                பேருந்தில் ஊனமுற்றோர் நின்றிருந்தாலும்
       பார்காததது போல் அமர்ந்திருக்கும் சிலர்
    
       பாதை கடக்க முடியாமல் திணறும்
       பார்வையற்றோரை பார்க்காமல் ஓடும சிலர்

       யாருக்கேனும் விபத்து நேரிட்டால் கூட
       யாருக்கென்ன என ஓடும் சிலர்
    
       பாதாள சாக்கடை திறந்தே கிடந்தாலும்
       பார்த்துக்கொண்டே போகும் சிலர்

       பொருட்கள் விற்க வீடு தேடி வருவோரை
       பொறுமையின்றி பொறிந்து தள்ளும் சிலர்

       பக்கத்துக்கு வீட்டில் கொலை கொள்ளையே நடந்தாலும்
       நமக்கென்ன என டி.வீ .பார்க்கும் சிலர்

       ஆதரவற்றோருக்கு ஆதரவு கேட்டு வரும்
       அன்பு உள்ளங்களை அவமதிக்கும் சிலர்

       ஏழை மக்கள் சிறுக சேமிக்கும் பணத்தையும்
       ஏப்பம் விடும் சிலர்

       என பலர் இவ்வுலகில் உலவிக்கொண்டிருந்தாலும்
       கொஞ்சமேனும் மழை பெய்கிறதென்றால்
                

      அது உலகின்எங்கோ ஓர் மூலையில்
      மனிதநேயம் வாழ்ந்து கொண்டிருப்பதாலே!! 


"இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட 
ஒரு கை நீட்டி தர்மம் செய் நீதான் கடவுள்"
--அன்னை தெரசா
_________________________________________________________________________________________________________
நேற்று(04.09.11-ஞாயிறு)சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற பதிவர் சந்திப்பில் 
கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி..கலந்து கொண்ட பதிவர்களுக்கும்,சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி!
__________________________________________________________________________________________________________

29 comments:

K said... Reply to comment

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!

ரொம்ப அருமையான கவிதை சார்! அன்னை தெரேசாவின் பொன்மொழியும் சூப்பர்! சிந்திக்கவச்சுட்டீங்க பாஸ்!

காட்டான் said... Reply to comment

மாப்பிள கவிதை அருமை வாழ்துக்கள்.. இஞ்ச நீங்க போட்ட சிலர் என்ற வார்தைக்கு பதிலா பலர்ன்னு போட்டிருக்கலாம்.. ஹி ஹி

செங்கோவி said... Reply to comment

நல்ல கருத்து..அன்னை சொன்னது உண்மை.

மகேந்திரன் said... Reply to comment

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே,
இன்று நீங்கள் வரிசைப்படுத்திய அளவில் தான்
பெரும்பாலானோர் அடங்குகின்றனர்...

நல்லோர் சிலர் இருக்கும் பொருட்டு
மழைபொழிகிறது என்பது நிதர்சனமான உண்மை.

மகேந்திரன் said... Reply to comment

தமிழ்மணம் 4

மாய உலகம் said... Reply to comment

உண்மை தான் மனித நேயம் ஒன்று பலரிடம் இருந்திருந்தால்.... மக்கள் இறப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்திருப்பார்களா...துன்பபடுவதைதான்வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருப்பார்களா... எட்டிபார்க்கும் நல் உள்ளங்களிலிருந்து இனியேனும் மனித நேயம் துளிர்விடட்டும்... பகிர்வுக்கு நன்றி நண்பரே

மாய உலகம் said... Reply to comment

தமிழ் மணம் 6

Philosophy Prabhakaran said... Reply to comment

பதிவர் சந்திப்பில் கலந்துக்கொண்டதற்கு நன்றி...

சுதா SJ said... Reply to comment

கருத்தாழமிக்க கவிதை, அன்னை தெரசாவின் போட்ட அழகு.

Anonymous said... Reply to comment

நீங்கள் தெரிந்து செய்தீர்களோ என்னவோ...இந்த நாள் அன்னை தெரேசாவின் புனிதர் நாள்...

அருமையான கவிதை...கோகுல்...

Unknown said... Reply to comment

கவிதை எல்லாம் கலக்குது!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

//"இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட
ஒரு கை நீட்டி தர்மம் செய் நீதான் கடவுள்"
--அன்னை தெரசா// அன்பான வார்த்தைகள் .

K.s.s.Rajh said... Reply to comment

//இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட
ஒரு கை நீட்டி தர்மம் செய் நீதான் கடவுள்"
--அன்னை தெரசா//

இவர்(அன்னை தெரசா) வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்து இருக்கின்றேம் என்பதே எவ்வளவு பெரிய பெருமை.

கூடல் பாலா said... Reply to comment

உண்மைதான் ....நல்லவர்களாக வாழ்ந்து நாட்டை பஞ்சத்திலிருந்து காப்போம் !

சக்தி கல்வி மையம் said... Reply to comment

நல்லவர்களாகவே வாழ்வோம்..

Unknown said... Reply to comment

நல்லார் ஒருவர் உளரேல் அவர்
பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை

என்னும் கருத்தை அடுக்கடுக்காக
எடுத்துக் காட்டோடு, எடுத்துக் காட்டியுள்ளீர்
அருமை நண்பரே!

புலவர் சா இராமாநுசம்

ஆகுலன் said... Reply to comment

அண்ணே கவிதை அருமை...

என்னை பாதித்த பதிவு உலகம்........

கவி அழகன் said... Reply to comment

நெஞ்ச தொட்ட கவிதை
மனித நேயம் வாழ்க

Unknown said... Reply to comment

அருமையான கவிதை...

காக்கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவில் தான் இன்றைய மனித நேயம் இருக்கிறது!!??

Unknown said... Reply to comment

மாப்ள நச் கவிதை!

M.R said... Reply to comment

"இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட
ஒரு கை நீட்டி தர்மம் செய் நீதான் கடவுள்"
--அன்னை தெரசா

நச்

M.R said... Reply to comment

tamil manam 19

SURYAJEEVA said... Reply to comment

எதோ ஒரு கடவுளை நம்பி
வாழ்க்கை ஓடுவதால் தான்,
தானே ஒரு கடவுள் என்பதை மறந்தான் மனிதன்..
மறந்த மனிதன் மறந்தது
தானும் மனிதன் என்பதை...

சென்னை பித்தன் said... Reply to comment

அருமை கோகுல்!
”நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை”

சசிகுமார் said... Reply to comment

முதல் இரண்டு வரிகள் நிறைய பார்த்து இருக்கேன்.. அன்னையின் வாக்கு அற்ப்புதம்..

காந்தி பனங்கூர் said... Reply to comment

அன்ன தெரசாவின் கருத்து சரியே. தெரசாவின் கருத்துக்கு ஏற்ப நடக்க முயற்சிப்போம். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

நிரூபன் said... Reply to comment

வணக்கம் பாஸ்,
ஒரு வெவகாரமான மேட்டரைக் கையில் எடுத்து வலையில் பிசியாகிட்டேன் பாஸ்,
அதான் தாமதமாக வந்திருக்கிறேன்,
மன்னிக்கவும்,
இருங்க பதிவைப் படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் said... Reply to comment

பலர் இவ்வுலகில் உலவிக்கொண்டிருந்தாலும்
கொஞ்சமேனும் மழை பெய்கிறதென்றால்

அது உலகின்எங்கோ ஓர் மூலையில்
மனிதநேயம் வாழ்ந்து கொண்டிருப்பதாலே!! //

காத்திரமான வரிகள் பாஸ்,
பல எதிர் மறையான மனிதர்கள் வாழ்ந்தாலும்,
நல்லோர் வாழ்வதால் தான் இந்த உலகில் மழை பெய்கின்றது எனும் உண்மையினை உங்கள் கவிதை உரைத்து நிற்கிறது.

நிரூபன் said... Reply to comment

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை:
எனும் ஒளவையாரின் கூற்றினை உங்கள் கவிதை மெய்பித்து நிற்கிறது.
வாழ்த்துக்கள் நண்பா.