டீ மாஸ்டர்-இப்ப போட்ட வடை சார் (எப்ப கேட்டாலும்)
மெடிக்கல் ஷாப் ஓனர்- அதே மருந்து தான் சார்,கம்பெனி தான் வேற
(டாக்டர்ட காட்டினா நான் போக சொன்ன மெடிக்கல்தான் ஆனா மருந்துதான் வேறங்கறார்)
ஸ்கூல் பையன் –அம்மா இன்னைக்கு வயிறு வலிக்குதும்மா (நீ கொழந்தையா இருக்கச்ச இததான் சொல்லுவன்னு அம்மா சொன்னாங்க)
ரியல் எஸ்டேட் காரர்- சைட்டுல இருந்து பத்து நிமிஷத்துல மெயின் ரோடு வந்துடும் (இந்த சைட்டுல இருந்துன்னு’ன்னு சொன்னமா?)
காய்கடைக்காரர்- காலைல வந்ததுதாம்மா (என்னைக்கு காலைலன்னு சொன்னமா?)
சேல்ஸ் மேன்- இந்த ஆபர்(offer) இந்த மாசம் கடைசியோட முடியுது (போன மாசமும் இதயே தான் சொன்னீங்க?)
துணிக்கடைக்காரர்- இந்தத்துணி சாயம் போகவே போகாது (வெள்ளைத்துணியை காட்டினாலும் இதே டயலாக் தான்)
கண்டக்டர்- பஸ் நடுவில எங்கேயும் நிக்காது பாய்ன்ட் டூ பாய்ன்ட் (நடுவில எத்தனை பாய்ன்ட் இருக்குன்னு சொன்னமா?)
பேங்க்ல லோன் தர்றவர்- இருக்கற பேங்க்’லேயே எங்க பேங்க்’லதான் இன்ட்ரஸ்ட் கம்மி (கடன் தர்ரதுல இன்ட்ரஸ்ட் கம்மியா?)
பரிட்சைக்கு போகும் கேர்ள்- எல்லாம் படிச்சாச்சா?ஐயோ!ஒன்னுமே படிக்கலையே! (படிக்காமாலே பாஸாகும் வித்தைய எங்களுக்கும் சொல்லக்கூடாதா?)
இன்சூரன்ஸ்- இந்த பாலிசி எடுத்திங்கன்னா வாழ்க்கை ஓஹோன்னு இருக்கும் (யாரு வாழ்க்கைன்னு சொன்னமா/)
அரசியல்வாதி- அந்த ஊழலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்ல(ஏன்னா என் பேரு சம்பந்தம் இல்லன்னு கிரேசி மோகன் டயலாக் மாதிரி இல்ல இருக்கு)
பரிட்சைக்கு போகும் பையன் – எல்லாம் படிச்சாச்சா?இன்னைக்கு எக்ஸாமா மச்சான்?
கடைசியா சொன்னவரு தான் சரியா சொன்னாருன்னு நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்குறிங்க?
Tweet | ||||||
34 comments:
ஆமா கடைசியா சொன்னவருதான் கரெக்ட்டா சொல்லி இருக்காரு....
அதே அதே அதே
//பரிட்சைக்கு போகும் கேர்ள்- எல்லாம் படிச்சாச்சா?ஐயோ!ஒன்னுமே படிக்கலையே//
நான் எக்சாம் போகும்போது இந்த பதில தானே சொன்னேன்
அப்ப எல்லாருமே அதேமாதிரிதான் சொல்றாங்களா ???
நல்லாதான்யா இருக்கு அதிலும் இந்த பெண்கள் எப்படிதான்யா படிக்காமா ஆண்களை விட முன்னனியில நிக்கிறாங்க...!!!??
இவங்க இப்படித்தான் சொல்வாங்க. எப்பவுமே இப்படித்தான் சொல்வாங்க. இது ஒரு பிழைக்கும் தந்திரம் .யாராலும் மாற்ற முடியாது என்று எண்ணுகிறேன். இல்லையா!.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
அவங்க பாவம் சும்மா ஒரு பேச்சிற்கு சொன்னதையெல்லாம் இப்படிப்போட்டு வாங்கிட்டிங்களே கோகுல்
இதையெல்லாம் சொல்லி உங்களை அடிக்கடி கடுப்பேத்திட்டாங்களோ?
இவங்க எப்பவுமே இப்படி தான் பாஸூ... அதுவும் அந்த விளம்பர போர்டு ஸ்டில் நச்.. கலக்கல்
/பரிட்சைக்கு போகும் கேர்ள்- எல்லாம் படிச்சாச்சா?ஐயோ!ஒன்னுமே படிக்கலையே! (படிக்காமாலே பாஸாகும் வித்தைய எங்களுக்கும் சொல்லக்கூடாதா?)/
சிலர் இரவிரவாக படித்துவிட்டு நான் ஒண்ணுமே படிக்கல என்பார்களே.அவர்கள்தான் இவர்களோ????
நல்லாயிருக்கு உங்க பதிவு.
பாராட்டுக்கள் சகோ.
கடைசியா சொன்னவரு கோகுல்...-:)
அருமை.
///கண்டக்டர்- பஸ் நடுவில எங்கேயும் நிக்காது பாய்ன்ட் டூ பாய்ன்ட் (நடுவில எத்தனை பாய்ன்ட் இருக்குன்னு சொன்னமா?)//////
சூப்பருங்கோ அசத்தலுங்கோ
ஆமா கடைசியா சொன்னவருதான் கரெக்ட்டா சொல்லி இருக்காரு....
கலக்கல் மக்கா....
இன்ட்லி எனக்கு வேலை செய்யுதில்ல,404 எரேர் வருது..
வடை அனைத்துமே சூப்பர் நண்பா அதிலும் பாய்ண்ட் டு பாய்ண்ட் பஸ்
வாழ்த்துக்கள்
நட்புடன்
சம்பத்குமார்
அனைத்தும் உண்மை என்பதால் சிரிப்பு வரவில்லை
Super post . . '
Sema comedy boss
கடைசியா சொன்னவர் நீங்களா ?
ஹா ஹா ஹா
எல்லாமே அருமை
கோகுல் மனதிலே என்ன
இருக்குன்னு இப்ப தெரிஞ்சி
போச்சி!
நன்றி!சகோ!
புலவர் சா இராமாநுசம்
இன்னைக்கு எக்ஸாமா மச்சான்?
சிரிப்பு அடக்க முடியல மச்சி
அத்தனையும் சூப்பர் கோகுல்.....
தமிழ்மணம் 10
அருமை
இவங்க இப்படித்தான் சொல்வாங்க பாஸ்!!"/
நம்பாதீங்க!!...
உன்ர பிளக்கு வறலவுக்கு எனக்கு மன தையிரியம் இன்னும் வரேல உன்ர பிளக் ஆ பலோ பண்ணிய வங்கள் எல்லாம் ஆஸ்பத்திரியல இருக்குரங்கலம் உண்மையோ யாருக்காவது தட்கொலை பண்ணுற ஜடிய இருந்தால் இவன்ர பிளக்கு வங்க ஜந்து நிமிடத்தில கொன்னே போட்டுடுவான் சாவுகிராக்கி
@Anonymous
ரொம்ப நொந்ந்துட்டிங்க போல!
தல....வித்தியாசமா சிந்திக்கிற மனிதர்களோட உணர்வுகளை- எதிர்மறையான எண்ணங்களைக் கலந்து பகிர்ந்திருக்கிறீங்க.
யார் சொன்னது கரெக்ட் என்பதில் தான் எனக்கு குழப்பம் இருக்கு.
ஹா, ஹா, ஹா, நல்லா இருக்கு.
ஹா ஹா - நல்லாவே இருக்கு கோகுல் - வி.வி.சி = நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அந்த கடைசி டயலாக் சொன்னவர் கோகுல் தானே?
சரியாத்தான் தெரியுது!
அந்த ஆட்டா ஆஃபர் தாண்ணே சூப்பர்!
சரியா சொன்னீங்க, ஆமா இன்னிக்கு எக்சாமா?
கடைசியில் சொன்னவர் தான் சரியாக சொல்லி இருக்கார்!
Post a Comment