செல் அடித்தது
எதிர்முனையில் -கோகுல் நீங்க இப்டி பண்ணுவீங்கன்னு எதிர் பாக்கலைங்க!
நான் - நான் ஒன்னும் பண்ணலைங்க!!
எதிர்முனை- அதே தான் நானும் சொல்றேன்.
என்னவாயிருக்கும்னு கையில இருந்த பிஸ்கட்ட உடைச்சுக்கிட்டே
(ஏன் மண்டையத்தான் உடைசுக்கனுமா?) யோசிச்சும் பிடிபடல .,
****************************************************************************************
மறுபடியும் மறுநாள் இன்னொரு அழைப்பு
எதிர்முனை - கோகுல் நீங்களா இப்படி?
நான்- எப்படிங்க?
எதிர்முனை- நான் நினைச்சுக்கூட பாக்கலைங்க
நான் - நான் ஒன்னும் பண்ணலைங்க!!
எதிர்முனை - அதே தான் நானும் சொல்றேன்.
இப்போது வேர்க்கடலையை உடைத்து வாயில் போட்டுக்கொண்டே ( ஏங்க மறுபடியும் ஏன் மண்டைலயே குறியா இருக்கீங்க) யோசிசும் புரியல.
#########################################################################################
அன்று மாலை சாட்டில்.,
நண்பர் - கோகுல் நான் உங்கள என்னவோ நினைச்சிருந்தேன்.,
நான் - ஏங்க அப்டி சொல்றீங்க?
நண்பர் - பின்ன இப்டி பண்றீங்க?
நான் - நான் ஒன்னும் பண்ணலைங்க!!
நண்பர் - அதே தான் நானும் சொல்றேன்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அடுத்தநாள் காலை ஒரு மெயில்
மெயில்--""அன்புள்ள நண்பருக்கு வணக்கம் ,
நான் உங்களிடம் நிறைய எதிர்பார்த்திருந்தேன்,ஏமாற்றமாக இருக்கிறது.""
எனது ரிப்ளை-- "" நண்பரே எனக்கு ஒன்றும் புரியவில்லை,நான் ஒன்னும் பண்ணலைங்க!!
அவரது ரிப்ளை -- அதே தான் நானும் சொல்றேன்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இப்போ நீங்க நினைச்சது நடந்துடுச்சுங்க,ஆமாம் இம்முறை மண்டையை உடைத்துக்கொண்டு யோசித்ததில் கிடைத்துவிட்டது ஒவ்வொருவரும் நான் ஒன்னும் பண்ணலைன்னு சொல்லும் போது ,ஆமாம் அதே தான் நானும் சொல்றேன் அப்டின்னு சொல்றாங்க அப்டின்னா என்னவா இருக்கும்னு மண்டை உடைந்தவுடன் தான் தெரிந்தது.அனைவரும் கேட்டது அடே மடையா பதிவர் சந்திப்பு முடிஞ்சு ஒரு வாரம் ஆகுது இன்னும் அதப்பத்தி ஒரு பதிவு கூட போடலன்னா நீயெல்லாம் ஒரு பதிவரா?
அந்த பேச்சுக்கெல்லாம் நான் ஆளாக விரும்பாமல் இதோ,
[ நீங்க இன்னும் வளரனும் என கேபிளை தட்டிகொடுக்கும் மெட்ராஸ்பவன் சிவா ]
[ நிகழ்ச்சிக்கு முன் தீவிர டிஸ்கசன்]
[ திடங்கொண்டு போராடும் சீனுவுடன் குடந்தையூர் சரவணன் ]
[ தம்பி இப்போ நான் என்ன சொல்டேன்னு இப்டி சிரிக்குற
போவண்டோக்கு சைட்டிஷ்ஷா போண்டா சாப்டா இப்டிதான் ]
[ ஒரு வாசகம் சொன்னாலும் ஒரு வாசகம் சொன்ன பிரபா- ஸ்பெல்லிங் மிஸ்டேக்லாம் இல்லைங்க ]
[ ஏன் சார் இப்டி குறு குறுனு பாத்தா எப்டி பேச்சு வரும்? ]
ம்ம்ம்.,வளைச்சு வளைச்சு கேட்டீங்க இல்ல அதுக்குள்ள முடிஞ்சுடுமா என்னே?
| Tweet | ||||||





