Showing posts with label பயணம்.. Show all posts
Showing posts with label பயணம்.. Show all posts

Friday, September 30, 2011

வேகத்தடையா?பயணத்தடையா???



_________________________________________________________________________________
நான் நேத்து வேலைக்கு(?) பைக்கில் போகும் போது திடீரென்று இரு இடங்களில் வேகத்தடைகள் புதிதாக முளைத்திருந்தன.மிதமான வேகத்தில் சென்றதால் ப்ரேக் பிடித்து சமாளித்து விட்டேன்.இந்த நிகழ்வு நான் பதிவெழுத வந்த புதிதில் எழுதிய ஒரு பதிவு ஞாபகத்துக்கு வந்துச்சு.புதிய folloewrs-க்காக மீண்டும் இங்கே.அப்போது வாசித்தவர்கள் பொறுத்தருள்க!
__________________________________________________________________________________


என்னுடன் பணி புரியும் நண்பர் ஒருவர் திடீரென்று கையில் கட்டுடன் நிறுவனத்துக்கு வந்தார்.என்னங்க நேத்து கூட நல்லாத்தான இருந்தீங்க என வழக்கமான கேள்வியை கேட்டேன்.அதுக்கு அவர் சொன்ன பதில் தான் இந்த பதிவுக்கு மேட்டர்.
வண்டில போய்கிட்டு இருக்கும் போது ஸ்பீட் பிரேக்கர் இருக்கிறது தெரியாமவேகமா போய் ஸ்கிட் ஆகி விழுந்துட்டேன்னார்.ஏங்க நீங்க தினமும் போற ரோடுதான ஸ்பீட் பிரேக்கர் இருக்கறது           தெரியாதா ன்னேன் நான் விவரமா?

அடப்போடா?நான் மதியம் வரும் போது ஸ்பீட் பிரேக்கர் இல்லடா.திரும்பி நைட் போகும்போது ஸ்பீட் பிரேக்கர் போட்டு இருக்காங்கடா னார்.
அப்போது தான் எனக்கு உரைத்தது நம்ம ஊரில் நிறைய வேகத்தடைகள் இருப்பதே தெரிவதில்லை.தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் தொலைவில் வரும் போதே தெரிவதற்காக வெள்ளை, மஞ்சள் நிறத்தில்,வேகத்தடை இருப்பது தெரியும்படி அடையாளமிட்டிருப்பார்கள்.அது போக எச்சரிக்கை பலகையும் வைத்திருப்பார்கள்.

ஆனால் பெரும்பாலானமாநகரச்சாலைகளிலும்.ஊரக, கிராமப்புறச்சாலைகளிலும் உள்ள வேகதடைகளில் இது போல இருப்பதில்லை.

தினமும் ஒரே சாலையில் பயணிப்போரே புதிதாய்ப்போட்ட வேகத்தடை தெரியாமல் விபத்துக்குள்ளாகும் போது புதிதாய் அந்த சாலையில் பயணிப்போரின் கதி???


ஹெல்மட்டை போடுங்க,சீட் பெல்ட போடுங்க,ட்ராபிக் ரூல்ஸ பாலோ பண்ணுங்க அப்படின்னுல்லாம் சொல்லுரவங்க,இதெல்லாம் பாலோ பண்ணியும் இப்படி விபத்து ஏற்படாம தடுக்க,எங்க வேகத்தடை போட்டாலும் தொலைவிலிருந்தே தெரியுற மாதிரியும்,இரவு நேரங்களில் ஒளிருவது போலவும் போட்டீங்கன்னா ரொம்ப புண்ணியமாப்போகும்.

நண்பர்களே அவங்க என்னவோ பண்ணிட்டு போறாங்க நான் உங்களுக்கு சொல்லிக்கறது என்னன்னா அளவோட வேகத்துல வண்டிய ஓட்டுங்க’.
வேகத்தடை பயணத்தடையா மாறாம பாத்துக்கங்க!!!




மேலும் வாசிக்க "வேகத்தடையா?பயணத்தடையா???"

Wednesday, August 10, 2011

டே!ரமேஷ்!! டே சுரேஷ் டெக்னாலஜி எவ்வளவு வளந்துடுச்சு பாத்தியா!!!



ரமேஷ்,சுரேஷ் என்ற இரு என்ஜினீயர் நண்பர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ஸில் S7 கோச்சில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.ஒருத்தன் அப்பர் பெர்த் இன்னொருத்தன் லோயர் பெர்த். .இருவரும் பயணம் போர் அடிக்காமலிருக்க பேசிக்கொண்டே வந்தார்கள்.


ரமேஷ் சொன்னான் டே! சுரேஷ் டெக்னாலஜி இன்னைக்கு எவ்வளவு வளந்துடுச்சு பாத்தியாடா?ஆமாண்டா  ரமேஷ்!இங்கேருந்து உலகத்துல எங்கே வேணா இருக்கவங்க கூடலாம் முகம் பாத்து பேச முடியுது,சாட்டிங் ங்கறாங்க,பிளாக்கிங் ங்கறாங்க,டுவீடிங் ங்கறாங்க.எங்கயோ இருக்கறவர் எனக்கு பேஸ் புக்ல ப்ரண்டுங்கிறான்.டெக்னாலஜி ரொம்பவும்தாண்டா வளந்துடுச்சுன்னான் ரமேஷ்.

பேசிகிட்டே வந்ததுல ரெண்டு பேருக்கும் நல்லபசி.ரெண்டு பெரும் முடிவு பண்ணி அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி சாப்பிடலாம்னு முடிவு பண்ணாங்க!
அடுத்த ஸ்டேஷன் வந்ததும் ரெண்டு பெரும் இறங்கி அங்க இருந்த ஒரு காஃபிடேரியா(CAFETARIA)க்கு சாப்பிட போனாங்க.அங்க போயும் டே! ரமேஷ் இந்த டெக்னாலஜி இன்னைக்கு எவ்வளவு வளந்திருக்கு பாத்தியா?டே!சுரேஷ் ஆமாண்டா!(மறுபடியும் முதல்ல இருந்தா)

இதுக்கு நடுவில என்னாச்சுன்னா இவங்க வந்த ட்ரெயின் கிளம்பிப்போய்விட்டது.
சற்று நேரத்தில் சென்னையிலிருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் அதே பிளாட்பாரத்தில் வந்து நின்றது(யாருப்பா குறுக்க பூந்து லாஜிக் பாக்கிறது).இருவரும் சாப்பிட்டு முடிச்சிட்டு டெல்லி செல்லும் ட்ரெயினில் அதே S7 கோச்சில் ஏறினார்கள்.

அவரவர் பெர்த்துகளில்(என நினைத்துக்கொண்டு)ஏறிகொண்டனர்.கோச்சில் எதோ மாற்றம் இருப்பதை அறிந்த ரமேஷ் டே! சுரேஷ் டெக்னாலஜி எவ்வளவு வளந்திருக்கு பாத்தியாடா!சாப்பிட போயிட்டு வரத்துக்குள்ள கோச்ல என்னன்னவோ மாற்றம் செஞ்சுட்டாங்க. ஆமாடா ரமேஷ்.!
மிடில் பெர்த்தில் இருந்தவரைப்பார்த்து ரமேஷ் கேட்டான் நீங்க எங்க போறீங்கன்னு.அவரு சொன்னாரு நா டெல்லிக்கு போறேன்னு.

டே!சுரேஷ் டெக்னாலஜி எவ்வளவு வளந்து இருக்கு பாத்தியா?அப்பர் பெர்த்தும் லோயர் பெர்த்தும் சென்னைக்குப் போவுது.மிடில் பெர்த் மட்டும் டெல்லிக்கு போவுது.ஆமாடா ரமேஷ் டெக்னாலஜி என்னமா 
வளந்திருக்கு.





மேலும் வாசிக்க "டே!ரமேஷ்!! டே சுரேஷ் டெக்னாலஜி எவ்வளவு வளந்துடுச்சு பாத்தியா!!!"