அட இதுக்குப்போய் ஏங்க பீல் பண்றீங்க?வாங்க நான் வாங்கித்தரேன்’நீங்க கூப்பிடறது புரியுது.உங்க அன்புக்கு நன்றி.ஆனா இத சொன்னது நான் இல்லைங்க நம்ம நாட்டு தேசிய விளையாட்டான ஹாக்கி(அடிக்கடி ஞாபகப்படுதுங்கப்பா!)அணியின் முன்னால் கேப்டனும் அதிரடி வீரருமான தன்ராஜ்பிள்ளை மனம் நொந்து சொன்னதுதான் இது.
அவர் இப்படி சொன்னதுக்கு காரணம் இருக்குங்க.ஒரு மேட்ச் ஆட இந்திய தேசிய ஹாக்கி சம்மேளனம் இவங்களுக்கு கொடுக்கும் அலவன்சே 900 ரூபாதானாம்!ஆனா ரூம் மட்டும் ஏதாவது நட்சத்திர ஹோட்டல்கள்ல போட்டு கொடுத்துடுவாங்கலாம்.
யாராவது நண்பர்கள்,உறவினர்கள் ஹோட்டல்ல பாக்க வந்தா ஒரு டீ கூட வாங்கி கொடுக்க முடியாத நிலையில் தான் நாங்கள் இருந்திருக்கிறோம் என நொந்திருக்கிறார் இவர்.
இன்னொரு கொடுமை கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் ஹாக்கி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய போட்டியில் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊக்கத்தொகை 25,000 ஆயிரமாம்.அடேங்கப்பா!எவ்வளவு தாராள மனசு!
இப்ப நடந்துகொண்டிருக்கும் கொண்டிருக்கும் CLT20 –ல் சாம்பியனாகப்போகும் அணிக்கு கிடைக்கப்போகும் தொகை ரூ.28 கோடியாம்!(ஏன் இவ்வளவு கஞ்சத்தனம் இன்னும் கொஞ்சம் கொடுக்கலாம்).இது கூடப்பரவால்ல.ஐந்திளுருந்து பத்தாவது இடம் வரையுள்ள அணிகளுக்கு தலா ரூ.95 லட்சம் வரை வழங்கப்படுமாம்.(அடங்கோ!மொத்தமே பத்து அணிகள்தான்)
அவங்களச்சொல்லி என்னங்க பண்றது ஒரே நேரத்துல ஒரு கிரிக்கெட் மேட்சும்,ஒரு ஹாக்கி மேட்சும் நேரடி ஒளிபரப்பானா நாம என்ன பண்ணுவோம்?நான் நாம நாம’ன்னு சொல்றது என்னையும் சேர்த்துதான்.கிர்ரிக்கேட்டைபாத்துட்டு பிடிச்ச அணி ஜெயிச்சா நாம யாருன்னு காட்டிடோம்ல’ன்னும்,தோத்துட்டா இவங்க எப்பவுமே இப்படித்தான்’ன்னு நொந்துக்கிட்டு சரி ஹாக்கியில நம்மாளுங்க என்ன பண்ணியிருக்காங்கன்னு ஏதாவது செய்தி சானல் பாத்துட்டு இருப்போம் ஜெயிச்சுருந்தா நம்ம தேசிய விளையாட்டுனா சும்மாவான்னு மார் தட்டிக்கறோம்.அதுலயும் தோத்துடுசுன்னா இவங்களையும் நம்ப முடியலப்பா’ன்னு சொல்லிட்டு அடுத்த கிரிக்கெட் மேட்ச் என்னைக்குன்னு பாக்க ஆரம்பிச்சுடுவோம்!
அதனால நான் என்ன சொல்ல வரன்னா நாம என்ன பண்ணனும்னா மொதல்ல நாம நம்மள மாத்திக்கணும்,இப்பவும் நாம’ல நானும் இருக்கேன்.கொஞ்சம் கொஞ்சமா கிரிக்கெட்டையும் சேர்த்து பிற விளையாட்டுகளுக்கும் ஆதரவு கொடுக்கணும்.அப்பறமா அரசாங்கத்த ஆதரவு கொடுக்க வைக்கணும்.எதுவும் செய்யாம, ம்ம்க்கூம்!நூத்தி பத்து கோடி பேர் இருந்துட்டு ஒலிம்பிக்க்ல ஒரு பதக்கம் வாங்கவே முக்குறோம்னு வியாக்யானம் பேசிட்டு இருந்தா கடைசி வரைக்கு பேசிட்டே இருக்க வேண்டியதுதான்!
| Tweet | ||||||

