காந்தி பிறந்த மண் –இன்று
கலவரத்திற்கு தத்துக்கொடுக்கப்பட்டது.
மதத்தின் பெயரால்
மனித மிருகங்கள் சில
மதங்கொண்டு
மனிதரையே மாய்க்கின்றன!
இதயமே இல்லாமல்
இரயில் பெட்டிகளை எரித்து
இரக்கமே இல்லாமல்
ஏதுமறியாதோரை கொல்கின்றன!
பதவிக்காக
பணயம் வைக்கப்படுகின்றன-விலை
மதிப்பேயில்லாத
மனித உயிர்கள்!
நாற்காலிக்காக
நசுக்கப்படும்
அப்பிராணிகள்
அப்பாவி மக்கள்!
கடவுளின் பெயரால்
கற்பழிப்பு!
கொலை!!
கொள்ளை!!!
ஆம்!
காந்தி பிறந்த மண்-இன்று
கலவரதிற்க்காக தத்துக்கொடுக்கப்பட்டது.
கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் எறிந்த போது ஏன் மனம் எரிந்து எழுதியது.
இப்போது ஏனோ நினைவுக்கு வந்ததால் பதிவிடுகிறேன்! ஏன்னு கேக்காதிங்க சொல்லிப்புட்டேன்!ஆமா!
| Tweet | ||||||

