எல்லையில் இருந்து கொண்டு
எல்லோரையும் காப்பவரே!
பனியில் உறைந்து வெயிலில் காய்ந்து
பகைவரை அழிப்பவரே!
தூக்கம் தொலைத்து உணவு மறந்து
தேசம் காப்பவரே!
வீட்டு நலம் கருதாமல்
நாட்டுநலம் போற்றுபவரே!
உயிரை துச்சமெனக்கருதி-நாட்டை
உயிரென மதிப்பவரே!
துப்பாக்கி குண்டுகளை எதிர் கொண்டு
துணிந்து நிற்பவரே!
அதோ!
எதிரிகள் கொக்கரிக்கின்றனர்
ஏதோ ஒரு வீரனை கொன்றதற்க்காக!
அதைப்பற்றி கண்டு கொள்ளாதீர்கள்
அவர்களுக்குத்தெரியாது
இங்கே ஒரு வீரனைப்புதைத்தால்
இங்கே ஒரு வீரனைப்புதைத்தால்
ஈராயிரம் வீரர்கள் முளைப்பார்களென்று
ஏனெனில் இது வீரர்களின் விளைநிலம்!
(சில நேரங்களில் இந்த வீரத்தின் விளை நிலத்தில் சில களைகளும் வளர்ந்து விடுவது வருத்தமளிக்கிறது.சமீபத்திய உதாரணம் சிறுவன் தில்சன் சம்பவம்.மேலும் சில நிகழ்வுகள் உங்களுக்கே தெரியும். )
Tweet | ||||||
24 comments:
இனிய காலை வணக்கம் பாஸ்,
நலமா?
தமிழ்மணத்தில் இணைத்திட்டேன்.
ஏனைய தளங்களில் தாங்கள் இணைக்கலையா?
நாட்டிற்காய் தம் வாழ்வை அர்ப்பணித்து நிற்கும், தேசப் புதல்வர்களின் பெருமையினைக் கவிதை அழுத்தமாகச் சொல்லி நிற்கிறது.
அருமை நண்பரே..
களை எங்கும் முளைப்பது சகஜம் தான். ஆனால் நம் தேசத்தை காக்கும் வீரர்களின் தியாகம் மிக பெரிது...கவிதை வரிகளில் தேசத்தின் மீதான பற்று தெரிகிறது. வாழ்த்துக்கள் கோகுல்.
//தூக்கம் தொலைத்து உணவு மறந்து
தேசம் காப்பவரே!
வீட்டு நலம் கருதாமல்
நாட்டுநலம் போற்றுபவரே!
//
100 % உண்மை
பதிவு அருமை....
எனக்கு மாற்று கருத்து உள்ளது, மன்னிக்கவும்..
இங்கே ஒரு வீரனைப்புதைத்தால்
ஈராயிரம் வீரர்கள் முளைப்பார்களென்று
ஏனெனில் இது வீரர்களின் விளைநிலம்!//
உங்கள் தேசப்பற்று புல்லரிக்க செய்கிறது மக்கா கவிதை சூப்பர்ப்...!!!!
பாஸ் நான் படித்த உங்கள் கவிதைகளில் இதைத்தான் சிறப்பானது என்பேன்...மிக அற்புதமாக இருக்கு...சில கருத்துக்களை சொல்லவேண்டும் போல் உள்ளது ஆனால் பல விடயங்கள் தடுக்கின்றது......
உங்கள் கவிதைகளில் இதான் மிக..மிக..சிறந்தது...
ஜீவா அவர்களே உங்களுடைய மாற்று கருத்து சொன்னாதானே தெரியும்..
உண்மை தான் நண்பா.. எனது நண்பர் விடுமுறைக்கு வரும்போழுது அவர்கள் சாதாரணமாக கையாளும் கஷ்டங்களை சொல்வார்... அவருக்கும், அவரப்போன்ற ஏனைய வீரர்களுக்கும் சல்யூட்... பகிர்வுக்கு நன்றி நண்பா.
களை வளராத பூமி எங்கேயாவது இருக்கா?
வீரத்தின் விளை நிலத்தில் சில களைகளும் வளர்ந்து விடுவது வருத்தமளிக்கிறது//
பல நேரங்கில் சில...
சில நேரங்கில் பல...
கவியே...
கவிதையும் படங்கள் இணைப்பும் அருமை/
இரண்டு புதிய திரைப்படங்கள் பற்றி - பிராப்ள பதிவர்களின் விமர்சனம்
வணக்கம் மாப்பிள..
தேசத்தை காப்போரை பெருமைப்படுத்தியிருக்கீங்க வாழ்த்துக்கள்..
களைகளை களையப்படாமல்
இருப்பதுதான் கதிர்களும்
களைகளாக மாறிவிடக் கூடிய
விதை...
சல்யூட்...
இங்கே ஒரு வீரனைப்புதைத்தால்
ஈராயிரம் வீரர்கள் முளைப்பார்களென்று
ஏனெனில் இது வீரர்களின் விளைநிலம்!
அருமை வாழ்த்துக்கள்.
வீரம் விளைநிலத்தில்
கவிபாடி நிற்கிறது....
அருமை அருமை
தேசிய வீரர்களை புகழ்கின்ற கவிதை உங்களின் நாட்டுப்பற்றுக்கு ஒரு சான்று!
இராணுவ வீரர்களின் பெருமை. எடுத்தாளப் பட்ட வரிகள் வாழ்த்துகள்! கோகுல் அருமை...ஒரு சல்யூட்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
கோகுல்,
தோணிக்கு ராணுவத்தில் பதவி கொடுத்திருக்காங்கலாம்...
அவருக்கும் இந்த மரியாதையா?
நல்ல சிந்தனை நண்பரே
என்ன நண்பரே இப்பொழுதெல்லாம் எங்கும் அடிக்கடி காணவில்லையே ,பிஸி ஆகிட்டீங்களா?
“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
ஆகா நாட்டுப்பற்று பொங்குது.
19840715-0001 பசுமையான காமெடி சீன்கள்
Post a Comment