Showing posts with label எனக்குள் நான். Show all posts
Showing posts with label எனக்குள் நான். Show all posts

Thursday, November 24, 2011

எனக்குள் நான் ! (ஒரு பயங்கர டேட்டா !!! )





வணக்கம் நண்பர்களே!இந்த எனக்குள் நான் நான் கல்லூரியில் படிக்கும் போது வாங்கிய ஆட்டோகிராப் நோட்டில் என்னைப்பற்றி கிறுக்கியது.சில மாற்றங்களுடன் இப்போது .




நான் -                சொன்னா தெரியுற அளவுக்கு பிரபலம் கிடையாது       
தெரிஞ்சவங்களுக்கு கோகுல்    தெரியாதவங்களுக்கும் கோகுல்.
இன்னும் சொல்லனும்னா ,அப்பா அம்மாவுக்கு        மகன்,அக்காக்களுக்கு தம்பி,நட்புகளுக்கு நண்பன்
 பணிபுரியும் நிறுவனத்துக்கு ஊழியன்அதுக்கு மேல
 தெரியல(முடியல).

சந்தோசத்தருணங்கள் – மாலைநேர மழை,மழலைச்சிரிப்பு,பேருந்தில்
  இசைப்பயணம்(இரைச்சலல்ல),பனிக்கால   
  போர்வைத்தூக்கம்.


மறக்க முடியாதது  -   பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள்.

வாழ்க்கை –            என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.

காதல் –                சந்திக்கவும் இல்லை,சிந்திக்கவும் இல்லை.


நட்பு –                 மனம் பார்க்கும் கண்ணாடி.

மரணம் –              வரும்போது வரட்டும்.அது வரை வாழ்க்கையை   
                       அனுபவி.

சோகம் –               கும்பகோண சீரழிவு,சுனாமியின் 
  பேரழிவு,இன்னும்பல

கோபம் –               அது தான் வர மாட்டேங்குது.ரௌத்திரம்
  “பழக”முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்!


நினைப்பது –           முடிந்தவரை முடியாதவர்களுக்கு உதவ

கவர்ந்த வரிகள்-       உலகின் வாயைத்தைப்பது கடினம்!
                        உந்தன் செவிகளை மூடுவது சுலபம்
                        (வைரமுத்துவோடது)


ஓய்வு கிடைத்தால்-     தோன்றுவதை எழுதுவது,பிடிப்பதை(கிடைப்பதை) 
                         படிப்பது,இசை கேட்பது,இணையத்தில் உலவுவது.   

பலம்-                  சொல்லுங்க +பண்ணிக்கறேன்.

பலவீனம்-              சொல்லுங்க – பண்ணிக்கறேன்.


கல்லூரியில் நண்பர்களிடம் பகிர்ந்தது,உங்களிடமும் பகிரனும்னு தோணுச்சு. 
படங்கள் கூகுள் தேடலில்(முதலாவது என்னை நானே எடுத்தது)


நட்புடன்
ம.கோகுல்



மேலும் வாசிக்க "எனக்குள் நான் ! (ஒரு பயங்கர டேட்டா !!! )"