Showing posts with label தளபதி. Show all posts
Showing posts with label தளபதி. Show all posts

Thursday, February 23, 2012

தளபதி,கேப்டன்,ஜூனியர் ப.சி. நடுவானில் களேபரம்


ஸ்டாலினும்,விஜயகாந்தும்,கார்த்தி சிதம்பரமும் கடந்த வாரம் விமானப்பயணத்தில் சந்தித்த போது நடுவானில் நடந்தது என்ன?ஒரு கற்பனை ரிப்போர்ட்......

                       
விமானப்பணிப்பெண் ஜூனியர் ப.சி.யிடம்(கார்த்தி சிதம்பரம்) வந்து,சார் இதே பிளைட்ல தளபதியும் வந்திருக்காரு அப்படின்னாங்க.இளைய தளபதியா,புரட்சிதளபதியா இல்ல சின்ன தளபதியா எந்த தளபதி அப்படின்னு கேட்டாரு நம்ம ஜூனியர் ப.சி.ஜெர்க்கான பணிப்பெண்(இவரு சின்ன பகவதி க்ரூப் போல அப்படின்னு நெனைச்சுக்கிட்டு)சார் கலைஞரின் இளைஞன், திமுக இளைஞரணி(!) பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் வந்திருக்காரு சார் அப்படின்னாங்க.

ஓ!அப்ப நிச்சயமா அவர சந்திச்சே ஆகணுமே அப்படின்னு கிளம்புறாரு.(கண்டிப்பா இத்தனை வயசுலயும் இளைஞரணியில் இருப்பது பற்றி கேட்டு தெளிவு பெற்றுவிட வேண்டுமென்று முடிவுடன்.பின்னே நம்ம இளைய தளபதிக்கே நோ சொல்லிட்டாரே ராகுல்ஜி)

ஜூ.ப.சி—வணக்கம் தளபதி,நலமா?

தளபதி – (யாரு இவரு வாண்டடா வந்து என்ட்ரி ஆகுறாரு,ஒரு வேளை இளைஞரணி பொறுப்பு கேட்டு பாலோ பண்றரோன்னு நினைச்சுக்கிட்டு)இளைஞரணி பொறுப்பாளர் பேர் தெரியுமா?இளைஞரணியில் சேர எத்தனை வயதுக்குள் இருக்க வேண்டும்?

ஜூ.ப.சி—சார்,சார் என்னை தெரியலையா நான் தான் கார்த்தி.

தளபதி-ஓ!வாங்க கார்த்தி,நல்லாயிருக்கீங்களா?அண்ணன் சூர்யா,அப்பா சிவகுமார் எல்லாம் எப்படி இருக்காங்க?கேட்டதா சொல்லுங்க.அப்புறம் போன படத்துல பாத்தத விட கொஞ்சம் வெயிட் போட்டுட்ட மாதிரி இருக்கு.அடுத்த படத்துக்காகவா?

ஜூ.ப.சி.—(கிழிஞ்சது)தளபதி நான் கார்த்தி சிதம்பரம்.மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் மைந்தன்.

தளபதி—ஹா,ஹா, வாங்க தம்பி,நல்லாருக்கீங்களா?அப்பா எப்படியிருக்காரு?டெல்லியில குண்டு வெடிச்சதை யாரோ திட்டமிட்டு செய்த சதின்னும் குண்டு  வைச்சது நன்கு பயிற்சி பெற்ற பயங்கர தீவிரவாதியா இருப்பார்னு கண்டுபிடிச்சிட்டாராமே?எப்படி இப்படியெல்லாம்?பெரிய விஞ்ஞானியா இருப்பாரு போல,அவருக்கு என் வாழ்த்தை சொல்லிடுங்க.
இருவரும் பேசிக்கொண்டிருக்க பணிப்பெண் இவர்களிடம் வந்து சார்,ரெண்டு சீட் தள்ளி கேப்டன் உக்காந்து இருக்காரு அப்படின்னாங்க(ஜூ.பசி.ஏதோ சொல்ல வாயெடுக்க ஐயோ சார் கேப்டன் தோனி இல்ல கேப்டன் விஜயகாந்த் அப்படின்னு தெளிவா சொல்லிட்டாங்க)இருவரும் கேப்டன் இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள்

கேப்டன் அங்கே நாக்கைத்துறுத்தி,கையை நீட்டி,மடக்கி கையில் வைத்திருந்த பேப்பரில் இருந்த வசனங்களை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.இருவரும் டரியலாகி பதுங்க பார்த்து விடுகிறார் கேப்டன்.
                      

கேப்டன்-யார்ரா அது அங்கே,புயலடிச்சுகூட பொழச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சு பொழச்சவன் கிடையாது வாங்க இங்கே,

இருவரும்-கேப்டன் நாங்கதான்,சட்டமன்றத்தில் உங்க அரங்கேற்றத்தை பார்த்து பிரமிச்சு போய் பாராட்டு சொல்ல வந்தோம்.

கேப்டன்- வாங்க வாங்க,நானும் நாகர்கோவில் சட்டமன்ற இடைதேர்தல் கூட்டணி பத்தி உங்களை சந்திச்சு பேசனும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்,வந்துட்டீங்க.(கார்த்தி கேப்டன் அது நாகர்கோவில் அல்ல சங்கரன் கோவில்னு சொல்லவர தளபதி அவரது தொடையில் கிள்ளி எச்சரிக்கிறார்..கேப்டனின் வேட்பாளர் நிலைமை நினைவுக்கு வர கமுக்கமாகிறார் கார்த்தி )

தளபதி-போன சட்டமன்ற தேர்தல்ல அம்மா தயவால தான் உங்களுக்கு இத்தனை சீட்டு ஜெயிச்சிங்கன்னு சொல்லியிருக்காங்களே?
கேப்டன்-மக்கலு(!)க்கு தெரியும் யார் தயவால யார் ஜெயிச்சாங்கன்னு.என்னோட பிரச்சார யுக்தியை பார்த்த வாக்காளர்கள் எங்கள் கூட்டணியை ஜெயிக்க வைத்தார்கள் இதை தவிர வேறு காரணமில்லை.

ஜூ.ப.சி-வர்ற நாடாளுமன்ற இடைதேர்தல்ல(தளபதி-ஐயோ பாவம் இவரும் கன்பியூஸ் ஆகிட்டாரே)பொது வேட்பாளர் நிறுத்துவது பத்தி உங்க கருத்து என்ன?

கேப்டன்- அதெல்லாம் முடியாது,யாருடனும் இனி கூட்டணி இல்லை நான் ஆரம்பத்தில் சொன்னது போல மக்கலுடன் தான் இனி கூட்டணி.வேண்டுமானால்,யாருக்காவது திராணிஇருந்தால் ஒபாமாவின் ஆட்சியை இங்கே கொண்டு வர சொல்லுங்கள் அப்போது காட்டுகிறேன் நான் யாரென்று.....
                           
மறுபடியும் கேப்டனின் கண்கள் சிவக்க ஆரமிக்கிறது,நாக்கைத்துருத்த ஆரம்பிக்கிறார் கையைத்தூக்கி ஏதோ சொல்ல ஆரமிக்க விமான நிலையம் வந்துவிடுகிறது.விழுந்தடித்து ஓடுகிறார்கள் தளபதியும்,ஜூனியர்.ப.சியும்......

மேலும் வாசிக்க "தளபதி,கேப்டன்,ஜூனியர் ப.சி. நடுவானில் களேபரம்"

Wednesday, November 9, 2011

தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?



பதிவின் ஆரம்பத்திலே சொல்லி விடுகிறேன் நான் தல ரசிகனோ தளபதி ரசிகனோ 

கிடையாது.இது வரை நான் யாருடைய ரசிகன் என எனக்கே தெரிந்ததில்லை.மொத்தத்தில் 

ஒரு சினிமா ரசிகன் அவ்வளவுதான்(அப்பாடா நடுநிலை விளக்கம் கொடுத்தாச்சு)



தமிழ் சினிமாவுல யாருதான் தோல்விப்படம் கொடுக்கல?நம்ம சூப்பர்ஸ்டாரே தோல்வி 

கண்டிருக்கிறார்.அப்பறம் ஏன் விஜய் மட்டும் எஸ்.எம்.எஸ்களிலும், facebook,twitter,blog 

இன்னும் என்னென்ன இருக்கிறதோ எல்லாவற்றிலும் கண்ணாபின்னாவென்று கலாய்க்கப்பட 

என்ன காரணம்?அப்படி கலாய்ப்பவர்கள் தல ரசிகர்களா?அப்படினா தல படம் வரும் போது 

தளபதி ரசிகர்களால் படாத பாடு படனுமே?படுது ஆனா ரொம்ப கம்மியாத்தான்.அப்படின்னா 

தளபதி ரசிகர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகையை ரசிக்கும் 

கண்ணியம்(கடமை,கட்டுப்பாடு இல்லையான்னு கேக்காதீங்க) மிக்கவர்களா?என்ன தான் 

நடக்கிறது?



தல அப்படியென்ன சாதனை செஞ்சுட்டார்? கொஞ்ச நாள் கழித்து திரும்பிப்பார்க்கும் போது 

தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்று என்று இவரது படம் ஏதாவது இருக்குமா?

இல்லை தளபதியைவிட அதிக ஹிட் கொடுத்து விட்டாரா?எனக்குத்தெரிந்து தளபதியை 

விட இவரே அதிக பிளாப்பை கொடுத்திருக்கிறார் என நினைக்கிறேன். 

ஜனா,ராஜா,ஆழ்வார்,ரெட்,ஆஞ்சநேயா,ஜீ போன்றவை உதா”ரணங்கள்”.அவ்வளவா தமிழ் 

சினிமாவின் பெரிய இயக்குனர்கள்  என சொல்லப்படும் இயக்குனர்களின் படங்களிலும் 

நடித்ததில்லை.



நம்ம தளபதி என்ன செய்திருக்கார்?ஆ”ரம்ப” காலங்களில் சங்கவி,சுவாதி போன்றோருடன் 

அவரது அப்பா(டேக்கர்)வின் படங்களில் நடித்து(!) தமிழ் சினிமாவில் தனது இடத்தை தக்க 

வைத்துக்கொண்டார்.அவரை பலருக்கும் எடுத்துச்சென்ற படம் 'லாலா' புகழ் விக்ரமனின் 

பூவே உனக்காக.அப்பறம் காதலுக்கு மரியாதை மூலமாக இளைஞர்களின் குறிப்பாக 

காதலர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.அதன் பிறகு ரஜினி வழியை ,எம்.ஜி.ஆர் வழியை 

பின் பற்றுகிறேன் என்று ஐஞ்சு பாட்டு,நாலு பைட்டு,பார்முலாவில் குதித்து அதையே இன்று 

வரை தொடர்கிறார்.ஆனால் ரஜினி நடுநடுவே பார்முலாவில் இருந்து விலகி நடித்த 

படங்களையும் ஆரம்ப காலங்களில் தர மான படங்களில் நடித்து தன்னை திரையுலகில் 

நிலை நாட்டியதையும் மறந்து விட்டார்(முள்ளும் மலரும்,ஜானி,போன்ற சில படங்கள்).



 தல நடித்(டந்)ததில் அவரை ரசிகர்களிடம் அதிகம் கொண்டு சேர்த்தது 

வாலி,அமர்க்களம்,தீனா போன்றவை.ஆனா பாருங்க இதுல எல்லாமே அவரு நெகடிவ் 

ரோல்ல நடிசிருப்பாரு.(பல காலமா நம்ம சினிமாவுல ஹீரோ வில்லன் ரெண்டு பேரும் 

ஒரே வேலைய தான செய்யுறாங்க).இதுல தீனா தல’க்கு ஒரு மாஸ் படம்.அப்படி ஒரு படம் 

தளபதிக்கு கில்லி,அப்பறம் போக்கிரி புண்ணியத்துல ரொம்ப நாள் கழிச்சு தான் கிடைச்சது.




நாலு பைட்டு,ஐஞ்சு பாட்டு பார்முலாவில் இருவருமே இருந்தாலும் அந்த பாட்டுக்கும் 

பைட்டுக்கும் இருக்கும் இடைவெளியில் உள்ள விஷயங்கள்தான் இங்கே 

முக்கியம்.தளபதியாரின் படங்களில் அவை எல்லா 

படங்களிலும்(சிவகாசி,திருப்பாச்சி,குருவி,வேட்டைக்காரன்,சுறா,வில்லு,ஆதி) ஒரே மாதிரி 

வருவது,பைட்டுகளில் அளவுக்கதிகமா தாவிக்குதிக்கறது,அப்பறம் 

அரசியல் ஆர்வம்(அதனாலதான அணில்?),அவங்க அப்பாவோட பேட்டிகள்,டாகுடர் பட்டம் இதெல்லாம் அவரோட 

இமேஜை நடுநிலை ரசிகர்கள் மத்தியில் டேமேஜ் ஆகிடுச்சு.இவர் இடைக்காலங்களில் 

நடித்த து.ம.துள்ளும்,குஷி,பிரண்ட்ஸ் போல தொடர்ந்திருந்தால் கூட இந்த அளவுக்கு ஆகி 

இருக்கிறது என நினைக்கிறேன்.



இந்த ஐஞ்சு பாட்டு நாலு பைட்டுக்கு நடுவுல தல படத்துல ஏதோ கொஞ்சம் 

வித்தியாசத்தை(முகவரி,க.கொ க.கொ,சிட்டிசன்,வரலாறு,வில்லன்,பில்லா,மங்காத்தா)காட்டி 

வருவது,அரசியலில் ‘தல’யிடாதது ஆதரவின்றி திரையுலகில் தடம் பதித்த திறமை,ரசிகர் 

மன்றத்தை கலைத்த அதிரடி,ஒளிவு மறைவில்லா பேச்சு போன்ற சில ஆரோக்கியமான 

விஷயங்கள் இவரை கலாய்க்க யோசிக்க வைக்கிறது.



கவனிக்க பெரும்பாலும் கலாய்ப்பது நடுநிலை ரசிகர்களே.அப்பறம் தளபதி புதிய 

வெற்றியின் மேல நம்பிக்கையில்லாம அதிகம் ரீமேக் பண்றதும் ஒரு 

காரணமாயிருக்கலாம்.இப்ப கொஞ்சம் மாற்றம் இருக்காப்புல தெரியுது தளபதியோட 

மூவ்ல.ஷங்கர்,முருகதாஸ்,கெளதம்மேனன்,விஜய்,சீமான் படங்கள்ல அடுத்தடுத்து 

நடிக்கப்போறதா இருக்கு இது ஒரு நல்ல மாற்றம் போல தெரியுது.பாப்போம்.அப்படி நல்ல 

மாற்றங்கள் வந்தும் தொடர்ந்து கலாய்ப்புகள் தொடர்ந்தா அது நடுநிலை ரசிகர்கள் அல்ல 

என்பது நிச்சயம்.


டிஸ்கி-மீண்டும் ஒரு முறை ஆரம்ப வரிகளைப்படிக்க.   


மேலும் வாசிக்க "தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?"