கலைஞர் தமிழுக்கும் தமிழர்க்கும் எவ்வளவோ செய்திருக்கார்(?)நான்
எதைப்பத்தி சொல்லப்போறேன்னு கேக்குறிங்களா?இந்த பதிவுக்கும்
கலைஞருக்கும் சம்பந்தம் இல்ல.அப்புறம் எதுக்கு தலைப்பு இப்படி
வைச்சேன்னு ரொம்ப யோசிக்காதிங்க.
போன வாரம் கலைஞர் தொலைக்காட்சியில ஒரு நிகழ்ச்சி போட்டாங்க.பேரு
தில்,தில்,மனதில்’லாம்.ரொம்ப தில்லான காரியம் செய்பவர்களின் திறமையை
உலகுக்கு கொண்டு செல்வது இந்நிகழ்ச்சியின் நோக்கமாம்.மகிழ்ச்சிதான்.பல
வெளியில் தெரியாத திறமைகளை கொண்டுள்ளவர்கள் அறிமுகமாகிறார்கள்
சந்தோஷம்.
ஆனால் இதில் தில்லான செயல் என சில அபத்தங்களையும் ஒளிபரப்பி
ஊக்குவிப்பதாக எனக்குப்படுகிறது.உதாரணமா நான் பார்த்த போது ஒருத்தர்
பைக் ஒட்டுறாரு.எப்படி?ஹாண்டில் பார்ல ஒக்காந்துகிட்டு,அப்புறம்
இன்னொருத்தரு இவருக்கும் மேல ஓடுற பைக்குல இருவதோ முப்பதோ
வகையான யோகா செய்யுறாரு.
இதுல என்ன தப்பு இருக்கு?அவங்களுக்கு திறமை இருக்கு செய்யுறாங்கன்னு
சொல்றிங்களா?எனக்கொரு சந்தேகம்.எனக்கு தெரிந்தவரை யோகா
சொல்லிதரவங்க,செய்யுரவங்க யாரும் இப்படி செஞ்சு
பாத்ததில்லை.அதுக்குன்னு சில விதிமுறைகள் இருக்கறதாவே
எனக்குப்படுது.
அதெல்லாம் விடுங்க இந்த சாதனையை(?)ஏதாவது ஒரு மைதானத்திலோ
யாருமில்லா சாலையிலோ செய்திருந்தால் பரவாயில்லை.நான்
பார்த்தஇரண்டுமே போக்குவரத்து மிகுந்த சாலையில்
நிகழ்த்தப்பட்டது.அரசு,தனியார் பேருந்துகள்,கார்கள், பக்கமாகவும்,எதிரிலும்
போய் வருகின்றன.காவல்துறையின எப்படி அனுமதித்தார்கள் என
தெரியவில்லை.கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் வண்டி ஒட்டியதாக
காட்டினார்கள்.என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும்
சாலையில் செல்லும் பிற ஓட்டுனர்களுக்கு கவனம் சிதற நிறைய
வாய்ப்பிருக்கு.
அது மட்டுமில்லாம நிகழ்ச்சியை பார்க்கும் சிலரும் இது போல செய்து பார்க்க
வாய்ப்புள்ளது.அவங்க என்னதான் நீங்க இது போல செய்து பாக்காதிங்க இது
ஆபத்தானதுன்னு அறிவிப்பு செஞ்சாலும் சக்திமான் காப்பாத்துவார்னு செத்து
போனவர்கள் எத்தனை பேர் இருக்காங்க இங்கே.இல்ல சிகரெட்
அட்டையில்,மது பாட்டில்ல உயிருக்கு கேடுன்னு போட்டிருக்கறதால யாரும்
அதை தொடுரதில்லையா?
என்ன நண்பர்களே!திறமையை வெளிக்கொண்டு வரேன் பேர்வழினு சில
தொலைக்காட்சிகள் இது போன்றவற்றை ஒளிபரப்புவது எனக்கு
அபத்தமாகபடுகிறது.இல்ல இது போன்ற சாதனைகள் வெளியே
கொண்டுவரத்தான் வேண்டுமா? உங்க கருத்துகளை சொல்லுங்க.
நட்புடன்,
ம.கோகுல்.
| Tweet | ||||||


