Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

Friday, June 15, 2012

திருமண வரவேற்பு விழா - ஜூன் 17 அன்புடன் அழைக்கிறேன்

வணக்கம் நட்புறவுகளே,

அனைவரது மனமார்ந்த வாழ்த்துகளால் இனிதே நடந்தேறியது எனது திருமணவிழா.வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்.



திருமண வரவேற்பு வரும் ஞாயிற்றுக்கிழமை
( ஜூன் பதினேழு ) மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை, புதுவை மாநிலம் மதகடிப்பட்டு ஸ்ரீ அமிர்தேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.அனைவரும் வந்திருந்து வாழ்த்த அன்புடன் அழைக்கிறேன்.

*********************************************************************************

புதுவை- விழுப்புரம் சாலையில் புதுவையிலிருந்தும் விழுப்புரத்திலிருந்தும் சுமார் 2௦ கி.மீ தூரத்தில் மதகடிப்பட்டு உள்ளது.

*********************************************************************************
தொடர்பு கொள்ள
9486146881 & 9791280127

புதுவையில் உள்ள நண்பர் ஜெய் அவர்களின் எண்
8682959115
*********************************************************************************
மேலும் வாசிக்க "திருமண வரவேற்பு விழா - ஜூன் 17 அன்புடன் அழைக்கிறேன்"

Friday, May 11, 2012

வாழ்த்த அழைக்கிறேன் ,வருக,வருக!

வணக்கம் வலையுலக நட்புகளே,

நான் பதிவெழுத வந்தது யதேச்சையிலும் யதேச்சை , ஏதோ மனசில தோன்றத எழுத ஆரம்பிச்சேன்,என்னடா நாம பாட்டுக்கு கைக்கு 
வந்தத எழுதறமே அப்டின்னு நினைச்சப்போ அட மடையா இது தாண்டா பிளாக்கிங்,இதுக்கு தாண்டா பிளாக் 
அப்டின்னு சொல்லி நீங்க கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி.

பதிவெழுத வந்ததுக்கு அப்புறம் நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்கீங்க.எல்லா நண்பர்களுக்கும் 
சொந்த ஊர் விட்டு வேலை காரணமா புது ஊர் வந்து நல்ல நண்பர்கள் இல்லாம 
இருந்தப்போ வலையுலகம் மூலமா இணைந்த நீங்க தான் எனக்கு நண்பர்கள் இல்லாத 
 தாக்கத்தை குறைச்சது நீங்கதான் .
                           

 இப்போ என் வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்வு,
 எத்தனை உறவுகள் இருந்தாலும் நமக்கான உறவு நம்மை மட்டுமே நம்பி வந்த உறவு 
என நாம் பெருமிதம் கொள்ளக்கூடிய உறவு மனைவி எனும் உறவு ( இப்ப இப்டி தான் தோணும் ,அப்புறம் பாக்கலாம்).
மனைவி எனும் உறவுடன் நான் கை கோர்த்து இல்லறம் காணும்
 நாளிற்கு  உங்கள் அனைவரது வருகையையும்,வாழ்த்துகளையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

இந்த பதிவை அழைப்பிதழாக கருத வேண்டுகிறேன்.முடிந்தவரை எல்லோரையும் ,தொலைபேசியில்,மெயில் மூலம் தொடர்பு கொள்கிறேன்.
 ( மே -20 சென்னை யூத் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளவிருக்கிறேன்
பலரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் )





திருமண நாள் : ஜூன் 7,வியாழக்கிழமை 
மண இடம் : ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருமண மண்டபம்,
இராசிபுரம்,(நாமக்கல் -DT)
LANDMARK : புதிய பேருந்து நிலையம் எதிரில்,
வேல்முருகன் ஹோட்டல் பின்புறம்)




 வரவேற்பு : ஜூன் 17 ,ஞாயிற்றுகிழமை
இடம் ; ஸ்ரீ அமிர்தேஸ்வரி திருமண மண்டபம்,
மதகடிப்பட்டு(திருக்கனூர் ரோடு) ,புதுச்சேரி 

 (புதுவை - விழுப்புரம் சாலையில் புதுவையிலிருந்தும் ,விழுப்புரத்திலிருந்தும் 
முப்பது நிமிட பேருந்துப்பயணம் -25
கி.மீ மதகடிப்பட்டிற்க்கு)


பதிவுலகம் ஒரு குடும்பம் என பலர் சொல்ல கேட்டிருக்கிறேன் ,எனது திருமணத்தை நமது குடும்ப விழாவாக நினைத்து அனைவரும் கலந்து கொள்ள 
அழைக்கிறேன்.நன்றி .
 தொடர்புக்கு 
9486146881
9791280127




மேலும் வாசிக்க "வாழ்த்த அழைக்கிறேன் ,வருக,வருக!"

Thursday, March 8, 2012

கலையும் பேச்சிலர் விரதம்...


வணக்கம் ,

செய்திகள் தொடர்கின்றன...

கோகுல் மனதில் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் கோகுல் தனது பேச்சிலர் விரதத்தை கலைக்கப்போவதாக வந்த தகவலை அடுத்து நாங்கள் உண்மை நிலவரத்தை அறிய எங்கள் குழுவுடன் விபரம் அறிய புறப்பட்டோம்.விசாரித்ததில் கோகுலின் பெற்றோர் பார்த்த ஒரு பெண்ணை மணமுடிக்க சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.அப்போ திரிசா வாழ்க்கை என்னாகுறது எனக்கேட்ட நண்பர்களிடம் திரிசா கிடைக்குலன்னா திவ்யா  என சொன்னதாக தெரிகிறது.ஆனால் பெண்ணின் பெயர் திவ்யா இல்லை என்பதால் அவரின் மேல் சின்ன சந்தேகம் எழுகிறது.

                   
ஜூன் முதல் வாரத்தில் திருமணம் என பரவலாக பேச்சு.எல்லாம் செய்யும் இந்த காதல் என அனுபவிக்காமலே எழுதிய இவர் இந்த இடைப்பட்ட காலங்களில் காதலை அனுபவித்து வெல்வாரா?இல்லை இல்லை சொதப்புவாரா?பொறுத்திருந்து பார்ப்போம்.

இது குறித்து கோகுல் என்ன கூறுகிறார்?அவரிடமே கேட்போம்.

எனக்கே இது எதிர்பாராத அதிர்ச்சியாதாங்க இருக்கு, டக்கு டக்குனு திரும்பி பாக்கறதுக்குள்ள என்னென்னமோ நடந்துடுச்சு.ஒரே ஒரு பொண்ணை பார்த்து அந்த பொண்ணையே ஓகே சொல்லிட்டதுல கொஞ்சம்,இல்ல இல்ல நிறையவே வருத்தம் இருக்கத்தாங்க செய்யுது.(செய்தியாளர் மனசுக்குள்- அந்த பொண்ணு தான வருத்தப்படணும்).அப்புறம் எங்கேயோ கேட்ட டயலாக் ஞாபகம் வந்துச்சு ஃபோன்,பைக்,கல்யாணதுக்கு வரன் இதெல்லாம் செலக்ட் பண்ணிட்டு கொஞ்ச நாள் கழிச்சு இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாமோனு தோணுவதை தடுக்கவே முடியாது.`அதை மனசில வைச்சிக்கிட்டு மனசை தேத்திக்கிட்டேன்ங்க.

அப்புறம் நம்மளையும் ஒரு பொண்ணு ஓகே சொல்லிடுச்சேனு ரொம்ப சந்தோசமா இருக்கு.என்ன இது வரைக்கும் காதலை வேறு பக்கங்களில் திசை திருப்பி விட்டிருந்தேன்.இப்ப கொஞ்சம்,இல்ல,இல்ல நிறையவே திசை திருப்பனும்.காதலில் சொதப்புவது எப்படின்னு படம் எடுத்தவங்க,கல்யாணம் வரை சொதப்புவது எப்படின்னு படம் எடுத்திருந்தாங்கன்னா எனக்கு கொஞ்சம் யூஸ் புல்லா இருந்திருக்கும்.பாப்போம்ங்க.நடப்பதெல்லாம் நல்லதுக்கேன்னு மனசை தேத்தி வைச்சிருக்கேன்.

                    

இது குறித்து அவரது மனசாட்சி சொல்வது என்ன கேட்போம் வாருங்கள்.


வாழ்க்கை ஒரு வட்டம்னு இளைய தளபதி சொன்னதை இப்ப இவன் நல்லா அனுபவிக்க போறான்.கூட இருக்குற பிரண்ட்ஸ்,லவ் பண்ணும போது அப்படி என்னடா இவ்வளவு நேரம் போன்ல பேசுறிங்க,இப்பதாண்டா மணிக்கணக்குல பேசுனிங்க அதுக்குள்ளே லொட்டு லொட்டுனு எஸ்.எம்.எஸ் அனுப்புறிங்கன்னு ஏகத்துக்கு ஓட்டிட்டு இருந்தான் இப்போ அவங்க டர்ன்.உங்களுக்கெல்லாம் ஒரு உண்மை சொல்றேன் இப்ப இவன் எல்லா ரீசார்ஜ் கடைலயும் போய் பாஸ் (எ) பாஸ்கரன் படத்துல வர்ற ஆர்யா மாதிரி ரெண்டு பேரு பேசணும்,கேப் விடாம 24 மணிநேரமும் பேசணும்,ஆனா ஃப்ரீயா பேசணும் அதுக்கு ஏதாவது ஸ்கீம் இருக்கானு நச்சரித்து கொண்டிருக்கிறான்.அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்கனு கடைக்காரர்கள் துரத்தியடிக்காத குறைதான்.

                      
இனி இவனது மொபைல்க்கு வரும் கால்கள் எல்லாம் வெயிட்டிங்கில் இருக்கும் எனவும்,இன்பாக்ஸ்,சென்ட்பாக்ஸ் நிரம்பி வழியும் எனவும் எதிர்பார்க்கிறேன்.ஐயோ பாவம் யார் பெத்த புள்ளையோ இப்படி புலம்பிக்கிட்டு திரியுதேன்னு பல பேர்க்கிட்ட பேர் வாங்க போறான்.அதெல்லாம் போகட்டும்ங்க இவனுக்கு வரப்போகும் இந்த புதிய உறவுகளும்,வாழ்க்கையும் சிறப்பாக அமையட்டும்னு வாழ்த்தறேன்ங்க..
நேயர்களே,
                    

கோகுலும்,அவரது மனசாட்சியும் நாம் கேள்விப்பட்ட செய்தியை உறுதி செய்து விட்டார்கள்.இதுவரை பேச்சிலர் விரதம் பூண்டிருந்த கோகுல் விரதம் கலைக்கப்போவது உறுதியாகிவிட்டது.அவருக்கு நமது வாழ்த்துகளை சொல்லி விடைபெறுவோம் நன்றி. 

படங்கள்-கூகுள் தேடலில்.....


மேலும் வாசிக்க "கலையும் பேச்சிலர் விரதம்..."