காஷ்மீர் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்
பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு
காவிரியில் தண்ணீர் விட முடியாது
கர்நாடக முதல்வர் திட்டவட்டம்!
அறவே ஒழித்து கட்டுவோம் தீவிரவாதத்தை
அமெரிக்க அதிபர் பேட்டி!
இந்தியா வல்லரசாகப்போவது உறுதி
பாராளுமன்றத்தில் பிரதமர் பேச்சு!
நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேறும்
உள்துறை அமைச்சர் உறுதி!
மேலும் ஒரு போலிச்சாமியார்
மோசடி வழக்கில் கைது!
நிதி நிறுவன அதிபர் தலைமறைவு
பணம் கட்டியவர்கள் கதறல்!
நாங்கள் நட்பாகத்தான் பழகுகிறோம்
பிரபல நடிகை விளக்கம்!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டே இருக்காது
எதிர்க்கட்சித்தலைவர் அறைகூவல்!
அந்த ஊழலுக்கும் எங்களுக்கு சம்பந்தமே இல்லை
ஆளும்கட்சி அமைச்சர் திட்டவட்டம்!
தமிழ் சினிலாவுல இப்படி ஒரு கதை வந்ததில்ல
அறிமுக இயக்குனர் அதிரடி பேட்டி!
;
;
;
;
அந்த ஊழலுக்கும் எங்களுக்கு சம்பந்தமே இல்லை
ஆளும்கட்சி அமைச்சர் திட்டவட்டம்!
தமிழ் சினிலாவுல இப்படி ஒரு கதை வந்ததில்ல
அறிமுக இயக்குனர் அதிரடி பேட்டி!
;
;
;
;
நாளை புத்தாண்டு(2050)
தலைவர்கள் வாழ்த்து!!!!(உங்களுக்கும் இப்பவே புத்தாண்டு வாழ்த்துங்கோ!)
_____________________________________________________________________________________________
கடந்த பதிவை தவற விட்டவர்களுக்கு;
வாச்சாத்தி-வன்மத்தின் உச்சம்,வலியின் எச்சம்
______________________________________________________________________________________________
Tweet | ||||||
36 comments:
2050 லும் இதே பல்லவிதான் என்று சொல்ல வரீங்களா !
@M.R
அப்படிதான் தோணுது!
உங்களுக்கு கருநாக்காய் இல்லாமலிருக்க கடவ.... -:)
@ரெவெரி
இல்லாம இருந்திட்டா பரவால்ல தான்!
ஆகா மாப்பிள ஒரு முடிவோடதான் கிளம்பீற்றார்பொல..
இலங்கையில் இனப்பிரச்சனைய தீர்ப்போம் புதிய ஜனாதிபதி உறுதி எப்ப?எப்பயுமே???????????????
@காட்டான்
ஆமா!மாம்ஸ்!எங்களுக்கு இப்ப ஒரு பேச்சு,அப்பறம் ஒரு பேச்சு கிடையாது!
மச்சி முக்கிய செய்திகளை சொல்லிட்டீங்க... அப்ப முக்காத செய்திகள்...
வருங்காலத்திலும் இதே நிலைமைதான் என்பதை நெத்தியடியாய் பகிர்ந்த விதம் அருமை.
கலக்கல் செய்திகள்..
பகிர்வில் உள்ள உண்மைகள் உறைக்கத்தான் செய்கிறது நண்பரே
நட்புடன்
சம்பத்குமார்
@மாய உலகம்
420 கேசுல ஆத்தூர்ல முக்கிய பிரமுகர் கைதுன்னு கேள்வி பட்டேன் அது நீங்க தானா?ஹிஹி!
பன்னிக்குட்டி அண்ணன் வந்து சொல்வார்-
அப்ப சேலத்துல முக்கினா கைது பண்ண மாட்டாங்களா?
ஹா!ஹா!
முக்காத செய்திகள் விரைவில் !!
அட...
இதுவும் நல்லா இருக்கே!!
//தமிழ் சினிலாவுல இப்படி ஒரு கதை வந்ததில்ல
அறிமுக இயக்குனர் அதிரடி பேட்டி!///
கண்டிப்பா அது 2047ல வந்த அந்த ஆங்கில படத்தின் மொக்க காப்பியாதான் இருக்கும்? எவ்வளவு பெட்?
கலக்கல்...
2050லயும் இப்படித் தான் கமெண்ட் போடுவாங்க நம்ம மக்கள்.
2-G ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதி மாறனின் மகன் 183வது குற்றவாளியாக சேர்க்கபட்டாருன்னு ஒரு நியூஸ் இருந்துச்சே நீங்க பார்க்கலையா??
2050 புத்தாண்டு வாழ்த்துக்கள்..
அட.. நாதாரித்தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்றீங்களே.. நல்லாத்தான் இருக்கு..
செங்கோவி said...
//கலக்கல்...
2050லயும் இப்படித் தான் கமெண்ட் போடுவாங்க நம்ம மக்கள்.//
அண்ணனுக்கு ஏன் இந்த கொலை வெறி?
ஹீ ஹீ
கலக்கலா இருக்கு நன்பா...
இது எல்லாம் நடக்காட்டித்தானே ஆச்சரியம் :))
பிரபல எதிர்வு கூறல் மன்னன் கோகுல் அப்ப இப்படித்தான் வரலாறு உங்களைச்சொல்லும் ஏன் என்றால் கண்டிபாக இது மாறாது அப்பவும் இப்படித்தான் இருக்கும்
2050 இலயும் இதே நிலைதான் என்று சொல்லவாறீங்களா
Kalakkal. . . .
ஏன் இந்த கொல வெறி ? கொஞ்சம் கூட மாறாதா? நாம நினைச்சா மாத்த முடியாதா?
இந்த ஆண்டின் மிகச் சிறந்த
செய்தித் தலைப்புகள்
தந்துள்ள கோகுலுக்கு
பாராட்டுக்கள்
வந்து குவிகின்றன
விரைவில் எண்ணி எண்ணிக்கை
தலைப்புச் செய்தியாக வரும்
புலவர் சா இராமாநுசம்
நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது எப்படா திருந்த போறீங்கன்னு தானே
நாங்க எல்லாம் திரிந்தீட்டா உங்க லைப் உங்களுக்கு போர் ஆயிடும் ஹா ஹா
வருங்காலத்திலும் இதே நிலமைதான் நீடிக்கும்னு சொல்ல வரீங்களா?
இந்த நிலைமை மாறவே போரது இல்லை சகா. . .
நகைச்சுவையாக இருந்தாலும், நாம் மாறப்போவதில்லை என்பதை உணர்த்துகிறது..
ஏன் இந்த கொல வெறி?இந்த நிலமை மாறவே மாறாதா?
சூப்பர் கோகுல் இவனுங்க திருந்தவே மாட்டானுங்க இந்த நிலைமை இப்படியே தான் இருக்குமோ...
ஒரு முடிவோடதான் இருக்கீங்க...போல..
கலக்கிட்டீங்க! நிச்சயமா இது மாறும்னு தோணலை.
கோகுல் நாசுக்கான நறுக்... வாழ்த்துகள் நண்பரே
ஹா,ஹா!இதெல்லாம் மாறப்போவதேஇல்லை என்பதை அழகாய்ச் சொன்னீர்கள்!
இனிய இரவு வணக்கம் கோகுல் பாஸ்,
காலங்கள் மாறினாலும், காட்சிகள் மாறப் போவதில்லை என்பதனை முக்கிய செய்திகள் சிறப்பாகச் சொல்லி நிற்கின்றன.
புது மிக்சி... புது கிரைண்டர்.... அரைங்கைய்யா அரைங்க....
அரைச்ச மாவையே அரைங்க...
இவனுங்கள என்னிக்கித்தான் அறையப்போகிறோமோ...
சிந்திக்க வைக்கக்கூடிய பதிவு...
முக்கிய செய்திகள் அருமை... இவைகள் இல்லாமல் போனால் தான் நமது ரிபோர்டர்களுக்கு வேலை வந்திடுமே...
நன்றி..
செம்ம கலக்கல் பாஸ்! :-)
Post a Comment