நான் ரெண்டாங்கிளாசோ,மூணாங்கிளாசோ படிக்கும் போது
(நீ இன்னைக்கு வரைக்கும் அத தான படிச்சிருக்கன்னு சொல்லக்கூடாது)
எங்க ஆசிரியர் சொன்ன கதை. இல்ல,இல்ல,ஒரு சம்பவம் ம்ம்ம்!ஒரு சம்பவம் கலந்த கதை!
(அட ஏதோ ஒண்ணு மேட்டருக்கு வாடா!)ஓகே ஓகே இதோ வரேன்!
ரெண்டாப்பு,மூணாப்புல தான ஓரளவுக்கு தமிழ எழுத்து கூட்டி படிக்க ஆரமிப்போம்.
(இங்கிலிபீசு இன்னைக்கு வரைக்கும் தவிடு திங்குது)
சரியா எழுத்துக்கூட்டி,வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டு படிக்கலன்னா
அர்த்தன்கெட்டுப்போயிடும்.அதுவுமில்லாமநடைமுறை வாழ்கையில
பல சிக்கல்களையும் சந்திக்கவேண்டிக்க இருக்கும் ன்னு ஆரம்பிச்சார்.
ஒரு தாத்தா தன் பேரன கூட்டிகிட்டு டவுனுக்கு போனார்..போனாரா போய் என்ன பண்ணுனார்?நல்லா ஊரெல்லாம் சுத்திட்டு வாங்க வேண்டியதெல்லாம் வாங்கிட்டார்.நல்லா சுத்துனதுல ரெண்டு பேருக்கும் நல்ல பசி.
நம்ம தாத்தாக்கு எழுத படிக்க தெரியாது.பேரனபாத்து பேராண்டி! இங்க எங்கியாவது சாப்பாட்டு கடை இருக்கான்னு போர்ட பாத்து சொல்லுடான்னார்!
பக்கத்துல ஒரு கடை போர்ட்ல சாப்பாடு போடப்படும் னு போட்டுஇருந்தது.பேராண்டி படிச்சான்! தாத்தா! இங்க சாப்பா டுபப்போ டப்பா டும் னு போட்டுருக்கு தாத்தா!ன்னான்(என் இனமடா நீ!).சரி வாடா வேற கடைக்கு போலாம்ம்னு கூட்டிட்டு போனார்.பாவம் எல்லா கடைலேயும் சாப்பா டுப்போ டப்பா டும் னு தான் இருந்தது!
அடப்போடா! இந்த பட்டணத்துல சப்பாட்டுக்கடையே இல்லன்னு பட்டினியோடு ஊர் திரும்பினர்!
நீதி படிக்கற காலத்துல ஒழுங்கா சரியா படிக்கறது மட்டுமில்ல ஒழுங்கா புரிஞ்சு படிக்கலன்னா வருங்காலத்துல பட்டினிதான் மிஞ்சும்!
“
கற்ககசடறக்கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” தகுக
| Tweet | ||||||





