Showing posts with label பல"சரக்கு"கடை. Show all posts
Showing posts with label பல"சரக்கு"கடை. Show all posts

Wednesday, June 25, 2014

பல"சரக்கு"கடை 16- 26/06/2014

வணக்கம் நண்பர்களே!

                        தானாக ரீஸ்டார்ட் ஆகும் எனது PCயின் பிடிவாதத்தையும் மீறி வரும் பதிவு இது( தீர்வு தெரிந்தவர்கள் பரிந்துரைக்கவும்).அது போக குட்டித்தலைவர்  கூடவே நிறைய நேரம் இருப்பதால்மொபைலில்  facebook-ல் சிலபல statusகளோடும்,FEEDLY APPல் பதிவுகளை மேய்வதொடும் இணைய தாகம் முடிந்து விடுகிறது.இப்போ தலைவர் ஊர்ல இருக்கார்.அதான் கேப்ல கடைய திறந்தாச்சு.
குப்புற கவிழ்ந்தாச்சு முன்னேற முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.
அவனுடைய உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

                                                                      சர்வன் :)
                                                                    
சென்ட்ரல் குண்டுவெடிப்பு & செக்அப்
   என்னா ஒரு ரெண்டு மாசம் ஆகியிருக்குமா?எல்லா சேனல்களும் வரிந்து கட்டிக்கொண்டு குண்டுவெடிப்பை தடுக்க  பாதுகாப்பு இப்படி இருக்கனும் அப்படி இருக்கனும் என்னல்லாம் ஓட்டை அப்படின்னு எல்லாம் பொளந்து கட்டினாங்க.பேட்டி கொடுத்த அதிகாரிகள், நம்ம பொது மக்களையும் சும்மா சொல்லக்கூடாது நல்லா கோ ஆப்பரேட் பண்ணாங்க.அந்த சம்பவத்துக்கு அப்புறம் விழுப்புரத்திலிருந்து சேலத்திற்கு இரண்டு முறையும்,சேலத்திலிருந்து விழுப்புரத்திற்கு ஒருமுறையும் ரயில் பயணம் வாய்த்தது.

எந்த ரயில் சந்திப்பிலும் சோதனை என்பது கமர்சியல் சினிமாவில் லாஜிக்கை பார்ப்பது போலிருந்தது.பயணத்திலும் அதே நிலைமைதான்,சரி யாரும் ரோந்து வரவில்லையே நாமாவது ஒரு ரவுண்டு போவோம் என போய் பார்த்ததில் சட்டம் ஒழுங்கு ஒரு மூலையில் உறங்கிக்கொண்டிருந்தது,பார்த்துவிட்டு வந்துவிட்டேன் சட்டம் ஒழுங்குடன் ஐக்கியமாக.


Survival of the fittest

  கொஞ்ச நாளைக்கு முன்பாக facebookல் இந்த தலைப்பு ஓடிக்கொண்டிருந்தது.என்னைக்கேட்டால் survival of the fittestக்கு ஏகச்சிறந்த (ஏன் ஆகச்சிறந்த தான் வரணுமா?இதுவும் இருந்துவிட்டுப்போகட்டும் விடுங்க) உதாரணம் புதுப்பேட்டை திரைப்படத்தை சொல்வேன்.

படத்தின் பல வசனங்கள் இதைத்தான் உணர்த்தும்.நிச்சயமாகவே ஏய்! நாந்தான் ,நாந்தான் அப்படி ஒரு ஃபீல் வரும் அந்த படத்தை பார்க்கும் போதெல்லாம்.படம் ஜெயா டிவியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் மட்டும் தவிர்த்து விடுங்கள் என்பது எனது அன்பான வேண்டுகோள்.


1/4பந்து அனுபவங்கள்

  மங்களபுரம் அரசுமேல்நிலைப்பள்ளி பள்ளி தான் கால்பந்து எனும் வஸ்துவை என் கண்ணில் காட்டியது.ஆறிலிருந்து எட்டுவரை வாரமிருமுறை வரும் உடற்கல்வி பீரியடில் கொஞ்ச நேர உடற்பயிற்சிக்கு பின்னர் போய் விளையாடுங்க என அனுப்பிவிடுவார்கள்.விளையாட எதுவும் தரமாட்டார்கள்.சும்மானாச்சுக்கும் மைதானத்தை சுத்தி சுத்தி வருவோம் கபடி சிலவேளை களைகட்டும்.ஒன்பதாவதிலிருந்து ஏதாவது விளையாட கொடுப்பார்கள் அது பெரும்பாலும் கால்பந்து ,பெரும்பாலும் என்ன அதை மட்டும்தான் கொடுப்பார்கள் மாணவிகளுக்கு வளைப்பந்து.
     
 வகுப்புக்கு எத்தனை பேர் இருந்தாலும்(குறைந்தது முப்பது,நாற்பது) இருப்பதென்னவோ ஒரே பந்துதான்.விதிமுறைகளெல்லாம் தெரியாது.அணிக்கு எத்தனை பேர் தெரியாது..கோல் என்று  ஒன்று இருப்பதெல்லாம் தெரியாது பந்து யாருக்கு அருகில் வந்தாலும் உதைப்போம்.அவ்ளோதான். லட்சியமெல்லாம் பீரியட் முடிவதற்குள் பந்தை ஒருமுறையாவது உதைத்துவிட வேண்டுமென்பதுதான்
அதற்கெல்லாம் சேர்த்து வாய்ப்பு கிடைத்தது +1ல் அப்போது ஆங்கிலம் தவிர  பிற பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாமலிருந்தனர் சிலநாட்கள்.அந்நாட்களில் மைதானமே குடியாக இருந்தோம்.ஏதாவது புது ஆசிரியர் வந்தால் எங்களை மைதானம் வந்து தான் வகுப்புக்கு அழைக்க வேண்டும்.அத்தைகைய நாட்களில் தான் PET வாத்தியாரை தாஜா செய்து நீண்ட நாள் வெறியை தீர்த்துக்கொண்டோம்.

ஆப் கி பார் 

அமைச்சர்கள் ;ஜி,,இத்தனை மக்கள் நம்மள நம்பி ஓட்டு போட்டு இருக்காங்களே,அவங்களுக்கு நாம என்ன செய்யப்போறோம்?

மோடி; இவ்வளவு நாளா காங்கிரஸ்காரங்க என்ன பண்ணாங்க?

அமைச்சர்கள் ; அவங்க தான் ஒண்ணுமே பண்ணலயே ஜி!

மோடி; நாமலும் அதான் பண்ணப்போறோம் :)


என்மொழி சில

"இட்லியும் பரோட்டாவும் பார்சலுக்கழகு "
"கேக்கறவன் கூமுட்டையா இருந்தாஆண்ட்ராய்டு ஃபோன் சார்ஜ் ஆறு நாள் நிக்கும்னு சொல்லுவாங்க ..,"
"சித்திரமும் கைபழக்கம்"
"செந்தமிழும் நாபழக்கம் "
வரிசையில்

"கியர் வண்டியும் க்ளட்ச் பழக்கம்"
 
அறிவிப்பு  
மாபெரும் குறு - கதைப் போட்டி

சிறு, குறு கதை ஆர்வலர்களே, எழுத்தாளர்களே.. உங்கள் பெயர் உலகமெங்கும் உள்ள தமிழர்களிடம் பிரபலமாக ஒரு மாபெரும் வாய்ப்பு.

“விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்”-ன் 5 -ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ”செல்வமுரளி” மற்றும் ஜோக் எழுத்தாளர் “சேலம் எஸ்கா” இணைந்து நடத்தும் மாபெரும் குறு - கதைப் போட்டி. 
 கதைகள் அனுப்ப கடைசி தேதி : 05.07.2014 
மேலதிக  விபரங்களுக்கு 
http://yeskha.blogspot.in/2014/06/blog-post.html
https://www.facebook.com/yeskha.karthik
கலந்துகொள்ளுங்கள்  நண்பர்களே வாழ்த்துகள்.

நட்புடன்,
ம.கோகுல்

மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை 16- 26/06/2014"

Wednesday, January 8, 2014

பல"சரக்கு"கடை 15- 08/01/2014

வணக்கம் நண்பர்களே,
   சற்று தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள்.வருஷமும்,பிகரும் கடந்து போனா திரும்பி பாக்குறது சகஜம் தானே?லைட்டா ரொம்பவே லைட்டா திரும்பி தான் பாப்பமேன்னு பாத்தேன்,எனக்கான வரையில் திருமணமானதும் கேட்கப்படும் டெம்ப்ளேட் கேள்விக்கான பதிலா இருந்தாலும் ஆமாங்க என்ற பதில் சொன்ன  போது ஒரு குறுகுறுப்பான அனுபவத்தை அளித்த ஆண்டு இதுதான்,அவ்வகையில் மறக்க முடியாத ஆண்டு.(வேற எதுவும் சொல்லிக்குற மாதிரி பண்ணல).
                                                நன்றி-வெங்கட் நாகராஜ் சார்
வலையுலகில்  கடந்த ஆண்டில் ஒன்பது பதிவுகள் மட்டுமே(சோம்பேறித்தனத்தின் உச்சம்).அதிலும் ஒன்று சீனுவினாலும் (காதல் கடிதம்)இன்னொன்று பதிவர் சந்திப்புக்கான அறிவிப்பும்.எப்பவும்,எல்லோரும் சொல்லும் பதிலைப்போலவே "இனிமே அடிக்கடி எழுத முயல்கிறேன்".ஆகஸ்டு புரட்சியில் கலந்து கொண்டது சிலிர்ப்பான அனுபவம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தனிப்பட்ட வாழ்க்கைக்கு அப்புறம் ஒரு காமன்மேன் வாழ்க்கைல அடுத்த இடம் என்னவா இருக்க முடியும்?absolutely சினிமா.

அனுபவித்து பார்த்த படங்கள்-ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,பரதேசி,சூது கவ்வும்,விஸ்வரூபம்
ரசித்து பார்த்த படங்கள்-நேரம்,மூடர்கூடம்,இ.தா.ஆ.பாலகுமாரா,ஆ.கா.செய்வீர்,சென்னையில் ஒரு நாள்

சினிமாவாக மட்டும் பார்த்து ரசித்த படங்கள்-வ.வா.சங்கம்,ஆரம்பம்,சிங்கம்2,பாண்டியநாடு,இவன் வேற மாதிரி,என்றென்றும் புன்னகை
பார்க்க(தவறவிட்ட)  நினைக்கும் படங்கள்-விடியும் முன்,6மெழுகுவர்த்திகள்,ஹரிதாஸ்,தலைமுறைகள்,பிரியாணி,இரண்டாம் உலகம்
நொந்த படங்கள்-வேணாம் விடுங்க பாத்து நொந்ததே போதும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேட்பதற்கு மட்டுமல்லாமல் மேக்கிங்கிலும் அசத்தி திரும்ப திரும்ப பார்க்க வைத்த பாடல்கள் சில,

பார்க்காதே,பார்க்காதே-வ.வா.ச
காதல் என்னுள்ளே -நேரம்
என் வீட்டுல நான் - இ.தா.ஆ.பாலகுமாரா
என் ஃப்யூசும் போச்சே-ஆரம்பம்(இந்த பாட்டு எடுக்கும் போதும் பார்த்தேன் )
இன்னும்  கொஞ்ச நேரம்-மரியான்
உனை காணாத-விஸ்வரூபம்

                              இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்


இதுvise versa லிஸ்ட்

fy fy fy-பாண்டியநாடு(பாடிய வாயும் ஆடிய காலும் ஒன்றாயிருந்திருப்பின் இது முந்தையலிஸ்டில் வந்திருக்கக்கூடும்)
கடல் படத்தின் எல்லா பாடல்கள்
அவத்த  பையா-பரதேசி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

போயிட்டு வாங்க தல


  நான் கிரிக்கெட் பார்க்க,விளையாட தொடங்கியதில் முழு முதல் காரணம் சச்சின்.அந்த வகையில் இந்த விஷயம் நடக்காமலிருந்திருக்கலாம் என உள்ளிருந்து ஒன்று சொல்லிக்கொண்டே இருக்கிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அஞ்சலி


                                                             Peace In Rest


நீங்கள் இந்த மண்ணிற்கு விட்டுச்சென்றதை விட
விதைத்து சென்றவை அதிகம்......,

நம்மை இயற்கையோடு இணைத்து
இயற்கையோடுஇணைந்த இயற்கையை வணங்குவோம்.


மற்றும்  வாலி ,மணிவண்ணன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 அரசியல்
தமிழகத்திலிருந்து புதுவை வாக்காளர் பட்டியலுக்கு மாற்றலாகிவிட்டது,அப்புறமென்ன -அய்யய்யோ நீங்க நினைக்குற மாதிரி இல்ல வர்ற தேர்தலுக்கு ஓட்டு போட்டுற வேண்டியதுதான்.

அடிச்சான் பார்றா மொத பால்லயே சிக்சர் அவார்டு 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

புத்தாண்டுன்னா resolution இல்லாமலா டெப்பனட்லி,
டெப்பனட்லி



                                   ஒரு சில செடிகளுடனாவது இந்த ஆண்டை கடப்போம்.
                                                                வாழ்த்துகள் 2014.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
2014 நிச்சயம் மறக்கவியலாத ஆண்டாக அமையும்,ஆம்,எனக்கான புது உலகம் இன்னும் சில நாட்களில் பிறக்கவிருக்கிறது.நினைத்துப்பார்க்கவே மனம் பரபரக்கிறது சொல்லவியலாத எண்ணங்கள் ,உணர்வுகளுடன் அந்நாளை எதிர்நோக்கியிருக்கிறேன்.பிரசவிக்கப்போவது நானில்லை,போதிலும் அடிவயிற்றில் விறுவிறுக்கிறதெனக்கு.
 சந்திப்போம்!!!
நட்புடன்,
ம.கோகுல் 



மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை 15- 08/01/2014"

Wednesday, October 30, 2013

பல"சரக்கு"கடை 14- 30/10/2013

வணக்கம் நண்பர்களே,

                           இந்த வலைப்பூ வழியே உங்களை சந்தித்து பல நாளாகுது.நேரம் சரி வர ஒத்துழைக்கவில்லை பதிவெழுத முன்பு போல.சோம்பேறித்தனம் வேற.அப்படியே எழுத உட்கார்ந்தாலும் நண்பர்களின் பதிவுகளை படித்தபடியேயும் facebook ல் மேய்ந்தபடியேயும் நேரம் கடந்துவிடுகிறது.நேற்றிரவு ஆரூர் மூனா கனவில் வந்து மிரட்டிய பிறகே எனக்குள் தூங்கிக்கொண்டிருந்த பதிவன் விழித்துக்கொண்டான்.தண்ணீர் தெளிக்காமல் கண்ணை உருட்டியே மிரட்டியதால் மிரண்டபடியே எழுத துவங்கிவிட்டேன்.

எழுதாதபோது ஏதேதோ தோன்றினாலும் டைப்ப உக்காந்தவுடன் பாதி மேட்ச்ல மழை பெஞ்ச மைதானம் மாதிரி வெறுமையா இருக்கு,இருக்கவே இருக்கு நம்மகடை பல "சரக்கு" கடை(அட!தே,,,,,,,,,னட!) இதோ திறந்தாச்சு.

**************************************************************************************************************

கடந்த  இரண்டு மாதம், மூன்று சம்பவங்கள் மூன்றும் ஸ்லிப் ஆன சிதறியிருப்ப  இரகம்.

சம்பவம் ஒன்று-பைக்கில் போய்க்கொண்டிருக்கிறேன்,ஒரு குறுக்குச்சந்திலிருந்து ஒரு புது மாப்பிள்ளை  பைக்ல ரோட்டுக்கு விருட்டுன்னு வந்தார்,அதுவும் சனத்திலிருந்து நேரா பாதி ரோட்டுக்கு வந்து லெப்ட்ல திரும்பி போயிட்டே இருந்தார் ,மழை பெய்து முடிந்திருந்தால் நாற்பதில் பிரேக் அடித்தும் டயர் லேசாக இழுத்துக்கொண்டு போய் எப்படியோ நடு ரோட்டில்  சில்லறை பொறுக்க விடாமல் காப்பாற்றியது.

சம்பவம் இரண்டு-பைக்கில் போய்க்கொண்டிருக்கிறேன்,முன்னால் ஒரு புது மாப்பிள்ளை போய்க்கொண்டிருக்கிறார் கிட்டத்தட்ட ஒரு கி.மீ தூரம் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அவரை பின்தொடர்ந்தே போய்க்கொண்டிருக்கிறேன் திடீரென அவரது வண்டி வலப்பக்கம் பாதி ரோட்டைக்கடந்து போனது,சரி வலப்பக்கம் கடந்து போவாரென வேகம் குறைத்து இடது பக்கம் ஒதுங்கி போனால் பக்கி திடீரென இடம் திரும்பி குறுக்குச்சந்துக்குள் கரைந்து போனது.இம்முறையும் க்ரீரீரீரீரீச்.......திரும்பிப்பார்த்ததில் இரண்டடி தூரத்துக்கு டயர் தடம்,டயரின் ஆயுளில் சில நூறு கி.மீ தூரம் குறைவது நிச்சயம்.

சம்பவம் மூன்று-அதேதாங்க,பைக்கில் போய்க்கொண்டிருக்கிறேன் இது அதிகாலை ஐந்தரை மணி ஷிப்ட்க்கு போகும்போது எதிரில் வந்த ஒரு வண்டியின் ஹெட்லைட் ஹெல்மெட் க்ளாசில் பட்டு தெறிக்க ஒரு கையால் கிளாஸை தூக்கிவிட்டதும் அதிர்ந்தேன் பத்தடி தூரத்தில் திருட்டு மணல் மாட்டுவண்டி.அதிகாலை இருட்டில் எதிரே வந்த ஹெட்லைட் வெளிச்சத்தில் வண்டி இருந்தது தெரியவே இல்லை,மாட்டுவண்டியில் reflect sticker கூட ஒட்டியிருக்கவில்லை.இந்த தடவை கொஞ்சம் அதீத க்ரீரீரீரீரீச்.....thanks to my bike Tyre.தாண்டிப்போய் மாட்டுக்கிட்ட மணல தான் கொள்ளையடிக்குற ,எங்க உயிர ஏன் எடுக்குற ஸ்டிக்கர் ஒட்டிட்டு  ரோட்டுக்கு வான்னு சொல்லிட்டு போனேன்.மாட்டுக்கு ஒரச்சு இருக்குமா தெரியல. # நிறைய விபத்துகள் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாததால் நிகழ்கிறது.
***********************************************************************************************************
பிழை
 நானொன்றும் பிழையில்லாமல் எழுதுபவனல்ல,என் பதிவுகளில் உள்ள பிழைகளை என்னாலே கண்டுபிடிக்க முடியாது(தெரியாது)என் கண்களுக்கே பிழை என்று பட்டது இரு இடங்களில்.பிழைதானா?
1.ஒரு செய்தி சேனலில் மாடு முட்டி முதியோர் பலி .
2.இங்கு ஆவின் பால்கள் கிடைக்கும் 
*********************************************************************************************************
Bye bye brothers
    சச்சின்,ட்ராவிட் இருவரின் இறுதி  20-20 போட்டி என்பதால் மெனக்கெட்டு சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி பார்த்தேன்.இருவருமே க்ளீன் போல்ட் ஆகி ஆட்டமிழந்தது எனக்கு என்னமோ  மனநமகலபம(என்னாது)நெருடுதுங்க,சச்சினாவது  இரண்டு அற்புதமான பவுண்டரிகள் அடித்தார் ,அதில் ஒன்றை அடித்து விட்டு பந்து எல்லையை தொடும் வரை அடித்த பந்தை பார்த்துக்கொண்டே ஷாட் அடித்த போஸிலே நின்றார் பாருங்கள் கண்ணுலே நிக்குது ,


definitely we will miss you a lot sachin.

தொடரில் அவ்வளவாக பேட்டிங்கில் சோபிக்காவிட்டாலும் கேப்டனாக சூதாட்ட மேகங்கள் சூழ்ந்த அணியை இறுதிவரை இழுத்து வந்து வியக்க வைத்தார் .miss you dravid.பலரின் விருப்பம் என்னோடதும் ட்ராவிட்டும் இந்தியாவில் ஒரு டெஸ்ட் விளையாடிவிட்டு ஓய்வு பெற்றிக்கலாம்.that would be a great tribute to the great wall of indian cricket.
 ************************************************************************************************************
நெஞ்சுக்கு நீதி
   குறும்பட காய்ச்சல் பதிவுலகில் பரவி வருவது ஆரோக்கியமான வெளிப்பாடு.கலக்கப்போகும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.நலன் குமாரசாமியின் இந்த குறும்படத்தின் இறுதியில் வரும் வெடிசிரிப்பை அடக்கமுடியவில்லை.
https://www.youtube.com/watch?v=b98kF_qxcLk
*********************************************************************************
Facebook updates
ரஷ்யா சென்ற பிரதமர் மன்மோகன்சிங் அங்கு அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கூடங்குளம் 3, 4வது அணு உலைகள் அமைத்தல் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.# ஒருத்தனுக்கு எழுந்து நிக்கவே தெம்பில்லையாம் அவைக்கு ஒன்பது பொண்டாட்டியாம்
******************************************************************************* ***
கூகுள்ல தேடினாலும் கண்டுபுடிக்க முடியாது ஆனா நம்மாளுங்க கண்டுபுடிச்சுடறாங்கப்பா -எல்லா ஸ்பீட் ப்ரேக்கர்லயும் பைக் ஸ்பீட் குறைக்காம போறதுக்கு துக்குளியூண்டு இடம்.
**************************************************************************************
எண்ணெய் இல்லனா மயிறு கூட மதிக்காது போலிருக்கு
***************************************************************************************
எனக்கு தெரிந்து கம்யூனிசத்தை சரியாக உணர்ந்தவர்கள் பேருந்தில் தனது சைனா மொபைலில் பாட்டு கேட்பவரே!!! 
****************************************************************************************
 அப்புறம் இந்த சமூகம் கிளம்புது.நண்பர்கள்,குடும்பத்தார் அனைவருக்கும் தீபாவளி&விடுமுறை தின வாழ்த்துகள்.புது மொபைல் வாங்கணும் 10,000 மதிப்பில் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.(xoloq700 or q800 நினைத்துள்ளேன்).சனி முதல் ஆறு நாள் வரை அலுவலுக்கு விடுப்பு,நிறைய ஊர் சுற்ற வேண்டியிருக்கிறது,திருப்பூரில் ஒரு திருமணம்,முடிந்தால் சந்திப்போம் வீடு மாம்ஸ்.புது மொபைல் வாங்கிவிட்டால் இணையசேவை தொடரும்.சந்திப்போம் நண்பர்களே!
*****************************************************************************************
 நட்புடன்,
ம.கோகுல்
 

மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை 14- 30/10/2013"

Tuesday, July 9, 2013

பல"சரக்கு"கடை 13- 09/07/2013




நோ கமெண்ட்ஸ்

இந்த படத்திற்கு வசனம் தேவை இல்லை என சில பழைய சஞ்சிகைகளில் துணுக்குறும் புகைப்படங்கள் இருக்கும்.அந்த வகையில் நோ கமெண்ட்ஸ் சொல்ல வைக்கும் சமீபத்திய செய்திகள் சில.

                                                           [ இதுக்கும் நோ கமெண்ட்ஸ்]

#மன்மோகன் சிங் போனை அமெரிக்க உளவுதுறை ஒட்டு கேட்டனர்.

# எங்கள் கட்சியின் வாக்குகளை வீணாக்க விரும்பவில்லை. அதனால் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்-மனித நேய மக்கள் கட்சி&டாக்டர் கிருஷ்ணசாமி.

# 3900 ஏழைகளுக்கு போய் சேர வேண்டிய உதவிகள் போகவில்லை. அது ஒன்றுதான் எனக்கு மனதளவில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது-விஜய்


எரிகிற வீட்டில்...

எந்த மாதிரியான சூழலில் வாழ்கிறோம் நாம் என நிறைய பேர் கேட்பதுண்டு,இந்த கேள்வி கடந்த சில நாட்களாக இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்ட உத்ராகண்ட்டில் நிகழ்ந்த,அது தொடர்பான  சம்பவங்களை பார்க்கும் போது சற்று சத்தமாகவே கேட்கிறது.உட்சம்-சில ஆந்திர மக்களை மீட்டு அழைத்து செல்வதில் தெலுங்கு தேசத்துக்கும் ஆந்திர காங்கிரசுக்கும் குடுமிப்பிடி சண்டை.அதிர வைக்கும் உணவு,தண்ணீர் விலை,கொள்ளை,பாலிய; துன்புறுத்தல்கள் என ஊடகங்களில் வந்து கொண்டிருக்கையில் உரக்க கத்தி கேட்டுக்கொள்ளுங்கள் அந்த கேள்வியை
எந்த மாதிரியான சூழலில் வாழ்கிறோம் நாம்????????????????

டாக்டர்  பட்டம் தேடிப்பாத்து.............,

"டாக்டர் பட்டமா?எனக்கா? நான் என்னத்த பண்ணிட்டேன்னு என்கிட்டே வந்திருக்கீங்க.நாட்டுல எத்தனையோ விஞ்ஞானிகள்,அறிவாளிகள்,படிப்பாளிகள் இருக்காங்க அவங்களுக்கு பொய் கொடுங்க.எனக்கு குடுக்க நான் ஒத்துக்கவே மாட்டேன்"-காமராஜர்

# நீங்க யாரையாவது நினைச்சு படிச்சா நான் பொறுப்பேற்க முடியாது.

 
விளையாட்டா.....


பெடரர்,நடால்,ஷரபோவா,செரீனா ஆரம்ப சுற்றுகளிலே நடை கட்ட எதிர்பார்ப்பு சற்று குறைவாகத்தான் இருந்தது,ஜோகோவிச்சும்,லிசிக்கியும் அவ்வப்போது பார்க்க வைத்தார்கள்,இறுதியில் நான் எதிர்பார்த்திருந்த இருவரும் கோட்டை விட்டனர்,.இந்த நேரத்தில் எனக்கு சட்டென்று நினைவில் வந்தது ஆஸ்திரேலிய ஓபன்-2010 இறுதியில் அவர் தோற்றபோது பேச இயலா தருணம்,

https://www.youtube.com/watch?v=ZuSzqcdJkeM

அதற்கு முந்தைய ஆஸ்திரேலிய ஓபன்-2009-ல் பெடரர் தோற்றிருப்பார் அவரது தருணத்தையும் நினைவு கூர்ந்து ஜோகர் பேசியிருப்பார். நெகிழ்வான தருணங்கள்.,
https://www.youtube.com/watch?v=dCjw0Unm8OY
நேரமிருந்தால்  பாருங்கள்.


*கிரிக்கெட்  நான் பார்க்க ஆரம்பித்த காலங்களில் இந்திய அணியில்சிலர் முரட்டு மீசையுடன்இருப்பார்கள்,மீசையுடன் ஸ்ரீநாத்,கும்ப்ளே பந்து
,வீசுவதும்,அசாருதீன் பேட்டிங்( இதை டைப் செய்யும் போது பெட்டிங்னு தான் வந்தது முதலில்-காரணம் நானறியேன் பராபரமே) செய்வதும் நம்ம அப்பா,மாமா,சித்தப்பா விளாட்ற மாதிரி ஒரு ஃபீலிங் குடுக்கும்,அப்றமா ரொம்ப நாள் மீசை வழித்த அங்கிள்ஸ் விளையாடும் காலத்தில் மீசை முறுக்கி வந்திருக்கிறார்கள் ஷிகர் தவானும்(இப்போ இவர் இந்தியா டீம்ல ஸ்டிக்கர் தவான்),ரவீந்தர் ஜடேஜாவும்(மன்னிக்கவும்) சர்-ஐமறந்துவிட்டேன்.Take care that your mustache from soil( no bad words).

எனது ஆலோசனை

பதிவர் சந்திப்பு-2013ற்காக  ஆலோசனக்கூட்டங்கள் ஆர்வமாக முழுமூச்சில் நடந்து வருகின்றன,தூரம் காரணமாக கலந்து கொள்ள முடிவதில்லை.எனது யோசனை ஒன்று-வாய்ப்பிருந்தால் பரிசீலிக்கவும்.கடந்த வருடம் மூத்த  பதிவர்களுக்கு விருதளித்து பெருமைப்படுத்தியது போல,இவ்வருடம் அவர்களோடு சேர்த்து சிறந்த இளம்பதிவர் (அ) பதிவர்கள் விருது(கள்) வழங்கலாம் என்பதே அது.கடந்த வருடம் யூத் பதிவர் சந்திப்பில் எனக்கு வழங்கினார்கள்.இந்த வருடம் அது போல் இதுவரை யூத் பதிவர் சந்திப்பு நிகலாததால் இது எனக்கு தோன்றியது.பதிவுலகில் பதிவுகள் குறைந்து வரும் நேரத்தில் இளம் பதிவர்கள் தொடர்ந்து எழுத ஊக்கமாக இருக்கும் என நினைக்கிறேன்.

Facebook-ல் பகிர்ந்தவை

# நாம இந்த உலகத்துக்கு ஏதாவது சொல்ல நினைக்கும் போது இந்த உலகம் நம்மைப்பாத்து சொல்வது எல்லாந்தெரியும் மூடிட்டு படுங்கடா நொன்னைங்களா

# மகளைப் பெற்ற அப்பாவுக்குத்தான் தெரியும் பல்டியில் எத்தனை வகை உள்ளது என்று.

போத்தீஸ் மாதிரியான கடைகளில் இப்போ அன்பளிப்பா(?) மரக்கன்றுகள் கொடுத்துட்டு வராங்க,நல்ல விசயம் தான்,ஏதாவது குறை சொல்லலைன்னா நமக்குத்தான் தூக்கம் வராதே,

                                                              [நம்ம வீட்டு தக்காளி]

குறை என்னான்னா,இப்படி ஏப்ரல்,மே,ஜூன்ல கத்திரி வெயில் பட்டய கிளப்புற காலங்களில் கொடுக்காம மழை கண்ணைக்காட்டும் காலங்களில் கொடுத்தால் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.ஏன் சொல்றேன்னா வீட்ல இருக்க செடிங்களே ஒரு ரெண்டு நாள் ஊருக்கு போயிடு வந்து பாத்தா வள்ளலாரை நியாபகப்படுத்துதுங்க.இதுல புதுசா வைக்குற செடி தாக்குப்பிடிக்கும் வாய்ப்பு கொஞ்சம் கம்மிதான்.அதனாலதான்....‎#அப்பாடா இன்னிக்கு நிம்மதியா தூங்கலாம்.( இப்போ மழை பெய்யுது இவங்க ஆடி,ஆவணினு அவங்க வேலைய பாக்க ஆரம்பிச்சுட்டாங்க)



நட்புடன்
ம.கோகுல் 

மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை 13- 09/07/2013"

Monday, April 9, 2012

பல"சரக்கு"கடை-6(09/04/12)


சம்சாரம் அது மின்சாரம்



அது அப்போ மின்சாரமே இப்போ மின்சாரம்.மின்சாரம் இருக்கும் போது தான் ஷாக் அடிக்கும்,இப்போ இல்லாமலே ஷாக் அடிக்கப் போகுது.மக்கள் எல்லாம் அம்மா,தாயே எங்களுக்கு இலவசம் எதுவும் வேணாம்னு கை எடுத்துக்கும்பிடும் வரை அம்மாவின் அதிரடி விலைஉயர்வு அறிவிப்பு தொடரும் என தமிழகம் முழுவதும் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.வடிவேலு பாணியில் சொல்லனும்னா ஆணியே புடுங்க வேணாம்னு எல்லோரும் பேசிக்குறாங்களாம்.

வாக்கிங்கா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தி.மு.க வினருக்கும் நடைப்பயிற்சிக்கும் அப்படி என்ன ஏழாம் பொருத்தமோ தெரியல.ஆலடி அருணா,கு.ப.கிருஷ்ணன் வரிசைல இப்போ திருச்சி ராமஜெயம்.இனி தி.மு.க. பிரமுகர்கள் நடைப்பெயற்சி செய்ய தயங்குவார்கள்.

மல்யுத்த மகாராணி



ஒலிம்பிக் பந்தயங்களில் மல்யுத்தத்தில் இதுவரை மகளிர் பிரிவில் பங்கேற்றதில்லை.தந்த குறையை போக்கியிருக்கிறார் சகோதரி.கீதா.இதற்கான தகுதிச்சுற்றில் தங்கம் வென்று தனது ஒலிம்பிக் பயணத்திற்கு முதல் அடி எடுத்து வைத்துள்ளார்.அவரது பயணம் வெற்றிகரமாக அமைந்து பதக்கப்பட்டியலில் இவரது பங்கு இடம்பெற வாழ்த்துவோம்.

கொசுவர்த்தி சுருள்

துவங்கியாச்சு பத்தாவதுக்கு பரிட்சை.நான் முதல் முதல்ல பாஸ்போர்ட் போட்டோ எடுத்தது பத்தாவது பப்ளிக் எக்ஸாம் ஹால்டிக்கெட்டுக்காக தான்.அந்த நினைவுகள் வந்து போகுது.அதிலும் ஒரு நண்பன் சாக்பீஸ் தூளை திருநீறாக வைத்துக்கொண்டது கொசுவர்த்தி சுருள் சுழன்றதில் வந்து போனது.அப்புறம் ஏதோ IPLலாம்,அதுவும் பத்தாவது பரிட்சை தொடங்குன அன்னிக்கே தொடங்கியிருக்காம்..

புரட்சிப்போராட்டம்



மக்களையெல்லாம் புரட்சிப்போராட்டம் நடத்தச்சொல்லி விழிப்புணர்வு(?)போராட்டம் நடத்தி வந்த நகைக்கடை அதிபர்களையே புரட்சிப்போராட்டம் நடத்த வைத்திருக்கிறது மத்திய அரசு.புரட்சி(!)போராட்டத்தின் பலனாக அரசு கொஞ்சம் பணிந்து வந்திருக்கிறதாம்,புரட்சியும் கொஞ்சம் தணிந்திருக்கிறது.

நம்ம தலைவர் பாணியில் ஒரு ட்வீட்

                    [ஒரு பூ பத்தாதே சகோதரி]

உயிர் தோழியே,உடன் பிறவா சகோதரியே,நீங்கள் என்னை வீட்டை விட்டு தூக்கிப்போட்டாலும் நான் உங்கள் காலடியிலேயே விழுந்து கிடப்பேன்,நீங்கள் என்னை முழுமையாக நம்பலாம்.


மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை-6(09/04/12)"

Friday, March 23, 2012

பல"சரக்கு"கடை - 5(23/03/2012)

மௌனம் “கலை”த்”தாயே”
                      

கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது தங்கத்தாரகை,தமிழகத்தின்,விடி(!)வெள்ளி இப்படி சொன்னதில் ஆச்சர்யமில்லை.இவர் இப்படித்தான் என்ற எண்ணத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.அது மட்டுமல்லாமல் அதை அவ்வப்ப்போதும் நிரூபித்தும் வருகிறார்.ஆனால் ஒவ்வொன்றையும் சொல்வதற்கு இவருக்கு ஒரு தேர்தல் தேவைப்படுகிறது.பால்,பஸ் கட்டண உயர்வுக்கு உள்ளாட்சி தேர்தல்,இப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தல்.இடிந்தகரையில் கேரளா போலிஸ் உலவுகிறதாம்.அந்த பகுதியை கேரளாவுடன் இணைத்து விட்டார்களா என்ன?தமிழக மக்களே,இனி நீங்கள் இருளில்,இரவு வெக்கையில் வியர்த்து வழிய தேவையில்லை,இதோ கூடங்குளம் திறந்த உடன் கிடைக்கப்போகிறது தடையில்லா மின்சாரம்,அனுபவியுங்கள்.( இன்னும் என்னென்னவெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கோ).பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவாங்க,தாயே(?),தொட்டிலை ஆட்டிவிட்டு பிள்ளையை கிள்ளி விட்டுடீங்க.,நடத்துங்க.




தியாகிகள் தினம்

                  
அரசியல்வாதினாலே தியாகிகள் தானே அப்படின்னு ஆகிடுச்சு இன்றைய நிலைமை.வரும் காலங்களில் தியாகிகள் என்றால் இன்றைய அரசியல்வாதிகளை சுட்டிக்காட்டக்கூடும் வரலாறு.நாமறிந்தவரையாவது உண்மை தியாகிகளை நினைவு கூர்வோம்.இன்று தியாகிகள் தினம்(மார்ச் 23)பகத்சிங்,ராஜகுரு சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று.அப்போது பகத்சிங்கிற்கு வயது 24.



காதல் மன்னனுக்கு நினைவஞ்சலிகள்

தமிழ் சினிமாவின் முதல்(!)காதல் மன்னனுக்கு இன்று (22.03.12) ஏழாம் ஆண்டு நினைவுதினம்.பழைய படங்களில் காதலில் கசிந்துருகியிய பல பாடல்கள் இன்றைக்கும் இனிமையானவை.நான் ரொம்ப ரசித்தது வளர்ந்த கலை மறந்துவிட்டாய் கண்ணா ,பாடலின் இறுதியில் ஊடல் முடிந்த கூடல் அழகு. ( அந்த ஊடல் தீர்க்கும் சிறுவன் காதல் இளவரசனா?).அவ்வை சண்முகியில் கமல்,நாகேஷ் கூட்டணியில் ஐக்கியமாகி அசத்தியிருப்பார்.

யாருடா புள்ளப்பூச்சி?

புள்ளப்பூச்சிக்கேல்லாம் கொடுக்கு முளைக்காதுன்னு நினைத்திருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு திடீரென கொடுக்கு இல்லை கொம்பே முளைத்து விட்டது.நானும் ஆசியா காரன் தாண்டா என சிலிர்த்து விளையாடி இந்தியா,இலங்கையை புற முதுகிடச்செய்து பாகிஸ்தானையும் கிட்டத்தட்ட கிலி பிடிக்க செய்து,இறுதிப்போட்டியில் இறுதிப்பந்து வரை வெற்றிக்காகப்போராடி நாங்கள் புள்ளப்பூச்சியோ,கிள்ளுக்கீரைகளோ அல்ல என சொல்லியிருக்கிறார்கள்.



என்னா ஒரு ஒத்தும?

                     
அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல,ஏறக்குறைய எல்லா கட்சிகளும் ஆதரிக்க வேண்டிய விசயத்துக்கு தேவையான நேரத்தில் குரல் கொடுக்காமல் மௌனம் காத்துவிட்டு,ஆதரிக்க யோசிக்கவேண்டிய விசயத்துக்கு போட்டி போட்டுக்கொண்டு ஆதரிப்பது என்னே உங்க ஒற்றுமை என புல்லரிக்க வைக்கிறது.ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது.கையறு நிலை அப்படின்னு சொல்வாங்களே அந்த நிலைல தான் நாம இருக்கோம்னு நல்லா புரிய வைக்குறாங்க.,(இதை டைப்பும் போது இந்தியா ஒரு ஜனநாயக நாடுன்னு  நினைவுக்கு வந்து தொலையுது)


கவிதை சொல்றாராம்

போற வர பெண்ணைஎல்லாம்
ஏற இறங்க பார்ப்பதால் 
என்னை பெண் பித்தன் எனச்சொல்லி 
பிணங்கிச்சென்றாய்
நான் உன் பித்தனாய் மாறியதால் 
காணும் எல்லா பெண்களும் நீயாய் 
தெரிகிறாய் என எப்படி புரிய வைப்பேன். 
.
.
.

# எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு



இது ட்வீட்டாமாம்

சம்பளம் வந்து விட்டதா என smsகாக காத்திருக்கும் போது forward msgசெய்யும் நண்பனும் எதிரியாகிறான் #மவனே நீ மட்டும் இப்ப என் கையில கெடைச்ச......

போடுங்க வாய்ப்பூட்டு
               

மேல இருக்கறதை யாராவது கீழ இருக்கவர் வாயில யாராவது போட்டு வுடுங்க என்னாமா பேசுது ,ஒருத்தரு பேசாம கொல்றாரு,இவரு அவருக்கும் சேத்து பேசி கொல்றாரு

                
                      

தன்னிலை விளக்கம்

கொஞ்ச நாட்களாக எந்தப்பக்கமும் தலை காட்ட முடியவில்லை.என் பக்கமே தலை காட்ட முடியவில்லை.இப்போ கொஞ்சம் பரவாயில்லை தலைவாழை இலை போட்டு வைங்க வந்துட்டே இருக்கேன். 


மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை - 5(23/03/2012)"

Tuesday, March 13, 2012

பல"சரக்கு"கடை-4(13/03/12)





ஏன் எரியுது

 
கோடையில் காட்டுத்தீ அடிக்கடி பரவுமே அது போல இப்போது பெரிய்ய,முக்கிய கட்டிடங்களில் தீ பற்றுகிறது,கொஞ்ச நாளைக்கு முன்ன கொல்கத்தா மருத்துவமனை,போன மாசம்,சென்னை எழிலகம்,போன வாரத்துல பாரிஸ் கார்னர்ல இருக்குற ஒரு எல்.ஐ.சி. பில்டிங்.சொல்லி வைத்தார் போல மின்கசிவு தான் நிச்சயமாக காரணமாக இருக்கும்.இது மாதிரி இடங்களில் fire extingusher  போன்ற தீத்தடுப்பு சாதனங்கள் இருந்தாலும் அவை இருக்கும் இடம் அவசரத்தில் தொடர்பு கொள்ளும் எல்லையில் இருப்பதில்லை,அங்கே இருப்பவர்களுக்கு அவற்றை கையாள போதிய பயிற்சியும் இருப்பதில்லை.இது போன்ற சில விசயங்களை செய்ததால் தீப்பற்றியது ஆரம்பத்திலே கண்டுபிடிக்கப்பட்டால் நிலைமை மோசமாகாமல் தடுக்கலாம்.fire alarm,smoke detector போன்றவற்றை பொருத்தலாம்.இதெல்லாம் எல்லாருக்கும் தெரியும் தான் ம்ம்ம்.என்ன பண்றது?

மூணு சீட்டு

இது அந்த மூணு சீட்டு இல்ல.பஸ்ல மூணு சீட்ல உக்காந்துட்டு போற அனுபவம் இருக்கே ஸ்ஸ்ஸ்ஸ்பா.இதுக்கு மேல உடம்ப என்னால குறைக்க முடியாதுபா.முதல்ல உக்கார்றவருக்கு அந்த சீட்டு ஏகபோக உரிமம்தான்.ஏதோ போனா போகுதுன்னு அடுத்தவங்கள உட்கார வைக்குற மாதிரி ஒரு லுக்,அவங்களே பத்தி சீட்டை வலுக்கட்டாயமா ஆக்கிரமிப்பு பண்ணிக்குறாங்க.அம்மா போட்ட சட்டம்இந்த ஆக்கிரமிப்புக்கெல்லாம் செல்லாதா?கடைசியா உக்கார்ரவரு பாடு கூட பரவால்ல,கால வெளியில வைச்சுக்கலாம்,நடுவில இருக்கறவர் மத்தளம் தான்,


சுவர் இல்லாத சித்திரம்

    
டிராவிட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தது இன்னும் கூட நம்ப முடியவில்லை.டெஸ்ட் அணியில் அவர் இடத்துக்கு நெருக்கடி இல்லாத நிலையில்,அதுவும் நன்றாக விளையாடிக்கொண்டிருக்கும் போது இப்படி அறிவித்தது அதிர்ச்சிதான்.இன்னும் வருத்தம் என்னன்னா ஒரு போட்டியிலாவது விளையாடி ஓய்வு பெற்றிருக்கலாம்.பல போட்டிகளில் பெருமை தேடித்தந்த இவர் ஒரு போட்டியில் கவுரப்படுத்தப்பட்டு வழியனுப்பப்பட்டிருக்கலாம்.சச்சினும் ஆசிய கோப்பை முடிந்து அறிவிக்கலாம் (அ)இந்தியாவில் ஒரு தொடர் விளாடிவிட்டு) ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அறிவிப்பார் என பட்சி சொல்கிறது.


ஒலிஇல்லா யூடியூப்

ட்விட்டரில் ஏற்கனவே இணைந்திருக்கும் பிரதமர் அலுவலகம் இப்போது யூடியூபிலும் இணைந்திருக்கிறதாம்.பார்க்கும் எல்லோரும் வீடியோ வெறும் மௌனமாக ஓடுவதால் தங்களது ஸ்பீக்கர்களையும்,காதுகளையும் ஆராய்ந்து வருவதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது.


ஒகேனக்கல்-பைசா வசூல்



ரெண்டு நாளைக்கு முன்னால ஒகேனக்கல் போயிருந்தேன்.கையில பைசா பாக்கி வைக்காம வசூல் பண்ணிப்புட்டாங்க வசூல்.பரிசல்ல போக நிர்ணய கட்டணம் இல்ல.ஒருவருக்கு 100-160 வசூலிக்கிறார்கள்.life jacket படகுபயனங்களில் கட்டாயம் கொடுக்க வேண்டும் ஆனால் அஞ்சு ரூபா குடுத்தா(மட்டும்) தான் குடுக்குறாங்க.தொட்டதுக்கெல்லாம் காசுன்னு சொல்லுவாங்களே(பழமொழிங்க) அதை எங்காவது சுற்றுலா தலங்களுக்கு போகும் போது உணர முடியுது.எல்லா பொருட்களும் எல்லா கடைகளிலும் அதிக விலைக்கே விற்கப்படுகின்றன.வேறு வழியில்லாமல் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.


மாங்கல்யம் தந்துனானே



என் பேச்சிலர் விரதம் கலையும் நாள் முடிவாகி விட்டது.ஜூன் 7.நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில்.வரவேற்பு புதுவையில்,தயாராக இருங்கள்,விபரங்களுடன் விரைவில் அழைக்கிறேன். விஷயம் அறிந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.




மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை-4(13/03/12)"

Monday, February 27, 2012

பல"சரக்கு"கடை - 3(27/02/2012)

டமாலுக்கா அடி டுமீலுக்கா... 

                          
                                              அம்பதுரூவா புல்லட் அதுவும் என் செலவுல முடிஞ்சுடுச்சு.

வங்கிக்கொள்ளையர்களின் என்கவுண்டர் சம்பவம் அஞ்சாதே பட கிளைமாக்ஸ் காட்சியை நினைவூட்டியது.இதைப்பார்த்து கொள்ளையர்கள் கொஞ்ச நாளைக்காவது டர்ர்ராகிப்போவார்கள் என்பதில் சந்தேகமில்லை.கொள்ளையர்களைக் கண்டுபிடிப்பதும் பணத்தை மீட்பதும் நோக்கம் என்றால் எல்லோரையும் சுட்டுக்கொன்றதால் அடுத்தகட்ட விசாரணையில் தொய்வு ஏற்படுமா?வீரப்பன் என்கவுண்டரில் அவிலா முடிச்சுகளைப்போலவே இங்கும்.


பூனையை மிரட்டி புலியாக்கும் முயற்சியா? 

                                           
தமிழகத்தையே ஆண்டுகொண்டிருக்கும் மின்வெட்டு மக்கள் மனதில் கூடங்குளம் கூடங்குளம் அணுமின் நிலையம் திறந்தால் தான் மின்வெட்டு குறையும் என்று மாயத்தோற்றத்தை உண்டாக்கியிருக்கிறது(அ)உண்டாக்கப்பட்டிருக்கிறது.திருப்பூரில் நடந்த அனைத்து வணிகர்களின் கடையடைப்பு நிகழ்வுகள்,ஆதரவு எதிர்ப்பு இல்லாத நடுத்தரதினர் ஆதரவுப்பக்கம் வருவதை பார்க்க முடிகிறது.


பொங்கி வழிந்த சேரன்

மெருகேற்றிய கர்ணன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சேரனின் சிவாஜிகாதல் ரொம்பவே பொங்கி வழிந்தது.ரீமேக் படங்களின் மீதான கோபம் தெறித்தது.தில் இருந்தா ஏதாவது சிவாஜிப்படத்தை ரீமேக் பண்ணிப்பாருங்கன்னு சவால் விட்டிருக்கார்.அவரது பேச்சில்.தமிழ் திரையுலகுக்கு சிவாஜி நடிப்புப்பிச்சை போட்டிருக்கார்.ஆனா நடிக்கனுமே,என கேட்டிருக்கிறார்.நடிங்கப்பா,அட சினிமாவுலப்பா.


சக்தே இந்தியா

                     
கடந்த ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தகுதி பெறாமலே வெளியேறி பணால் ஆனா இந்திய ஹாக்கி அணி இந்த முறை இதுவரை நடந்த தகுத்திச்சுற்றுப்போட்டிகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்று எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று எழுச்சி கண்டுள்ளது மகிழ்ச்சி.32 ஆண்டு கால கனவினை நனவாக்க நமது வாழ்த்துகளை சொல்லி வைப்போம்.ஒரு சின்ன வருத்தம் நமது மகளிரணி ஒலிம்பிக்கில் தகுதி பெற முடியாமல் போனது.ஆனால் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.(சிவகுமார் அண்ணனின் பதிவை பார்க்க )

லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி!!





 மரணமாக அரேங்கேறிய ஒத்திகை   
                               
                                     
பெங்களூருவில் ஒரு தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த தீ தடுப்பு ஒத்திகை நடத்திய தீயணைப்புத்துறையினர் அந்நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு இளம்பெண் அதிகாரியை மாடியில் தீயில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி என  demo காட்ட இணையும்படி அழைத்திருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் demoவுக்கு பயன்படுத்திய கயிறு அறுந்து கீழே விழுந்து அவர் மரணமடைந்திருக்கிறார்.மரணத்தை தடுக்க வேண்டிய ஒத்திகை மரணம் ஏற்படுத்தியிருப்பதும்,தீயணைப்புத்துறை இந்த அளவுக்கு இத்துப்போன உபகரங்களை பயன்படுத்துவதும் அதிர்ச்சியளிக்கிறது.

பார்லிமென்ட் விஞ்ஞானி

டெல்லியில் சமீபத்தில் குண்டு வெடித்தது பற்றி நமது உள்துறை அமைச்சரின் ஸ்டேட்மெண்ட்."டெல்லியில் குண்டு வைத்தவன் நன்கு பயிற்சி பெற்றவன்.அவன் பயங்கர தீவிரவாதியாக இருப்பான்.இதற்க்கு டிவிட்டரில் எனது கமெண்ட்# அவன் கருப்பா பயங்கரமா இருப்பான்.இன்னுமொரு டிவிட்டர் நண்பரின் கமெண்ட் நச்சுன்னு இருந்தது.அது" 
  • ·
#சேட்டு கடையில அடகு வைத்தவன் பயங்கர ஏழையா இருப்பான். போயா யோவ்!




மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை - 3(27/02/2012)"