பத்து நாட்களாக பதிவுலகப்பக்கம் எந்த தொடர்பும் இல்லாமலிருந்து பார்த்தால் பேரதிர்ச்சி காத்திருந்தது.ஏற்கனவே டைப் செய்து வைத்திருந்த ஒரு பதிவை போஸ்ட் செய்து விட்டு நண்பர்களுடைய தளத்தை காணச்செல்கையில் இப்படி ஒரு நிகழ்வை எதிர்பார்க்கவில்லை/.நம் பதிவுலகத்தின் இனிய நண்பர்.மாய உலகம் ராஜேஷ் அவர்களின் இழப்பு.அவருடன் பல முறை சாட் செய்திருக்கிறேன்.இவரது ஊரான ஆத்தூரை கடந்து தான் எனது கிராமத்துக்கு போக வேண்டும்.ஆத்தூரை தாண்டும் போதெல்லாம் இவரது நினைவு வரும்.சமீபத்தில் தொலைபேசி எண் கேட்டு மெயில் அனுப்பியிருந்தேன்.ஆத்தூர் வரும் போது சந்திக்கலாம் எனக்கேட்டு,இனி..........?
நான் பதிவெழுத வந்த ஆரம்ப காலத்திலிருந்தே பின் தொடர்ந்தவர்.பல சந்தேகங்களை தயக்கமின்றி,தீர்த்து வைத்தவர்.தன்னுள் பல சோகங்களை மறைத்துக்கொண்டு நம்மையெல்லாம் சிரிக்க வைத்தாரோ என எண்ண வைத்து விட்டாயே மாயா....ஒரு முறை கற்பனையாக என்னை சந்தித்த மாதிரி ஒரு கற்பனைப்பதிவு போட்டிருந்தார்.அந்த கற்பனை நிஜமாகுமென்று நினைத்திருந்தேன் மாயா,இப்படி ஆகிவிட்டதே. உள்ளம் அழுகிறது.
நண்பர்கள் ராஜ் தளத்தில் இந்த செய்தியை பார்த்து உறைந்து விட்டேன்.கொஞ்ச நேரம் மனம் நம்ப மறுத்தது.கொஞ்சம் கொஞ்சமாக தேற்றிக்கொண்டு இந்த பதிவை எழுதுகிறேன்.
எனக்குள் நான் என்ற தொடர் பதிவை எழுத அழைத்த போது அவர் ஏற்று எழுதிய அவரைப்பற்றிய பதிவை பார்த்து நெகிழ்ந்து போயிருந்தேன்
//// என் நண்பன் என்னிடம் வாழ்க்கையில சாதனைன்னா என்னான்னு கேட்டார்... அதற்கு நான் அது, இது, என லட்சியங்களை அடிக்கி கொண்டே போனேன்... அதற்கு அவர் சிரித்தவாறு.. இறக்கும் பொழுது ரத்தம் சம்பந்தமே இல்லாத ஒரு 100 பேராவது நமது சாவிற்காக கண்ணீர் விட்டு அழவேண்டும் அது தான் சாதனை என்று சொன்னார்... மண்டையில் சுரீர் என்றது.... அவரது கையை இறுகபற்றி கைகொடுத்தேன்.////
இதை எழுதியது ராஜேஷ் தான் எனக்குள் நான் பதிவில்.இதை இந்த பதிவில் சேர்க்கும் போது அழுகை முட்டிக்கொண்டு வருகிறது.
புத்தாண்டுப்பதிவில் பதிவுலகை விட்டுப்போவதாக அறிவித்திருந்தார்.அப்போதே கொஞ்சம் அதிர்ந்து போனேன்.இப்போது பேரதிர்ச்சி கொள்ளச்செய்து விலகிச்சென்று விட்டார்.சகோ அதிரா அக்கா தான் சந்திக்க விரும்புபவர்களில் முதலில் நினைவுக்கு வந்ததாக கூறியது தம்பியான உங்களைத்தான் தான் மாயா,இப்படி பலர் மனம் கவர்ந்த மாய உலகிற்கு சொந்தக்காரர் நீங்கள் தான் ராஜேஷ்.
அவரது சகோதரர் அன்பு உலகம் ரமேஷ்( நண்பரே உங்களுக்கு என்ன சொல்லி ஆறுதல் படுத்துவது என்று தெரியவில்லை) அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளேன்.தொடர்பு கிடைத்தால் நிச்சயம் மாயாவின் வீட்டிற்கு போக எண்ணியுள்ளேன்.
அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.நம் போன்ற பல நண்பர்கள்,சகோதர,சகோதரிகளின் மனதில் என்றென்றும் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள் ராஜேஷ்.நமக்கு பிரியமானவர்கள் பிரியும் போது மறுபிறவியின் மீது நம்பிக்கை வந்து விடுகிறது.மாயா மீண்டும் வருவார் என்று நம்பிக்கையுடன்..........................
இந்த பதிவை திரட்டிகளில் இணைக்கவில்லை நண்பர்களே,சோகத்தை பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே எழுதியிருக்கிறேன்.
Tweet | ||||||
15 comments:
அவர் தம் ஆத்மா சாந்தியடையட்டும்
எதனால்...எப்படி என்கிற விவரம் தெரிய வில்லையே...நம்மை எல்லாம் மீளாத்துயரில் விட்டு விட்டு சென்று விட்டார்
ஏன்,என்ன காரணம் என்று தெரியாமல் பலரும் வருந்துகிறோம்.அவர் நண்பர் சொன்னது ராஜேஷ் அவர்களுக்கு நிகழ்ந்திருக்கிறது,இவ்வளவு விரைவில் நடந்திருக்க வேண்டாம்.
மாயாவின் மறைவை மனம் நம்ப மறுக்கின்றது.மாயாவின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போம்.
:((((((((((((
கோகுல் இப்பொழுதுதான் இபதிவு என் கண்களுக்குத் தெரிந்தது. ஒவ்வொருவரும் எழுதும்போதுதானே தெரிகிறது, மாயா எல்லோருடனும் எப்படியெல்லாம் அன்பாகப் பழகியிருக்கிறார் என.
உண்மையைச் சொல்லப்போனால், மிகக் குறுகிய காலத்தில் வலையுலகில் அனைவர் மனதிலும் இடம்பிடித்த ஒருவர் மாயாதான்...
மனம் கலங்கித்தான் போனது... தேற்றிக்கொண்டு பழைய நிலைமைக்கு வர முயற்சிப்போம்.
இன்னும் என்னால் நம்ப முடியவில்லை கோகுல், திடீர் என்று ஒருநாள் திரும்ப வந்துவிடுவார் என்றே எண்ணத் தோன்றுகிறது. மனதைத் தேற்றிக் கொள்வோம், அவரது குடும்பத்தினரும் விரைவில் மீண்டு சகஜ நிலைக்கு வர ஆறுதல் சொல்வோம்.
நல்லதொரு பதிவர்! மிக வருத்தத்திற்குரிய செய்தி!நண்பரது ஆத்மா சந்தியடைய ஆழ்ந்த பிரார்த்தனைகள்!
ராஜேஷ் ஆன்மா சாந்தி அடையட்டும்.
மிகப்பெரிய இழப்பு... அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்...
கோகுல்,
நானும் சமீபத்தில் ஊருக்குச் சென்று வந்ததில் இருந்து வலைப்பூ பக்கம் சரியாக போக முடியவில்லை. சில நாட்களுக்கு முன் நண்பர்களின் பதிவில் இச்செய்தியைக் கண்டு பேரதிர்ச்சி யடைந்தேன். மாய உலகம் இது.
நமக்கு பிரியமானவர்கள் பிரியும் போது மறுபிறவியின் மீது நம்பிக்கை வந்து விடுகிறது.மாயா மீண்டும் வருவார் என்று நம்பிக்கையுடன்.
அதிர்ச்சியான தகவல் .....நண்பர் ரமேஷ் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள் ....
நானும் ஊர்ல இல்லை கோகுல் .உங்க பதிவின் மூலம்தான் அறிந்தேன் இந்த
அதிர்ச்சி தரும் செய்தியை .அந்த நல்ல நண்பனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் .
ஆழ்ந்த இரங்கல்கள்..
Post a Comment