Tuesday, August 30, 2011

இப்படி கைய விரிச்சுட்டீங்களே அம்மா!!!


இப்படி கை விரிச்சுட்டிங்களே அம்மா!
ஊர் கூடி தேர் இழுக்கும் போது சக்கரத்தையே உடைச்சது போல இருக்குது என்னால முடியாது ன்னு நீங்க சொல்றது.ராஜபக்சேவின் அரசுக்கு எதிராக பொருளாதாரத்தடை விதித்து சட்டசவையில் தீர்மானம் நிறைவேற்றிய போது ,ஓஹோ! ஈழம் பற்றிய தன் பழைய நிலையிலிருந்து விடுபட்டு விட்டாரென எண்ணிஇருந்தபோது பழைய குருடி கதவை திறடி என்ற கதையாகஆகிவிட்டதே!.
பிரியங்கா காந்தி சிறையிலிருந்த நளினியை பார்க்கச்சென்றபோது எதிர்த்து அறிக்கை விட்ட இவர் சொன்னது

ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான சோனியா காந்தி. மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்கிறார். இப்படி பொய் பார்க்கலாமா? அது அடுக்குமா? இப்போது நளினி ஏதோ உரிமைக்காக போராடுவதுபோல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது! இது சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்த பிரச்சனை அல்ல. அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. எது ஒரு நாட்டு பிரச்சனை. ஒரு முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. இப்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன்.

இவர் இன்றைக்கு சொன்னது


அரசமைப்புச் சட்டத்தின் பொருத்தமான தன்மைகளைக் கருத்தில் கொண்டு பரிசீலித்த மத்திய அரசு, மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1)-ன்படி கட்டளையிடுகிறது.
இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ, குடியரசுத் தலைவரின் முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு புதியதாக ஒரு மனுவினை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம். குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களும் குடியரசுத் தலைவருக்கு தான் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இது குறித்த நடவடிக்கையை குடியரசுத் தலைவர் தான் எடுப்பார்.
எனவே பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை குடியரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன்.  இந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரசாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.”
சும்மா பேச்சுக்காவது முந்தய ஆட்சியில் கலைஞர் செய்தது போல மைய அரசுக்கு கடிதம் எழுதுகிறோம் என அறிக்கை.விட்டிருக்கவேண்டியதுதானே? எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்ற விளக்கங்கள் தேவையா?.இவர் சொல்கிறார் கலைஞர் ஒன்று தெரியாததுபோல ரெட்டை வேடம் போடுகிராரென்று!ஒன்று புரிகிறது அரசியல்வாதிகள் எல்லாவற்றையுமே அரசியலாகத்தான் பார்க்கிறார்கள்!

இன்னொருவிசயம்!
உணர்வின் வெளிப்பாடும் கோபமும் வெளிப்படும்போது சிந்தனை கண்ணை மறைத்து,ஆதங்கம் இயலாமை,ஆற்றாமை மனதை செலுத்தியதன் விளைவாக உணர்வுத்தீயை உடலில் ஊற்றி கருகியிருக்கிறது ஒரு தளிர்!!
இதை நியாப்படுத்தவில்லை.தயவுசெய்து யாரும் நியாயப்படுத்தவும் வேண்டாம்!
இந்த காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும் ஒரே ஒரு வேண்டுகோள் விடுத்துக்கொள்கிறேன்!தயவுசெய்து செங்கொடி யார் ?என்று மட்டும் கேட்டு விடாதிர்கள்!இதை ஏன் சொல்கிறேன் என்றால்?முத்துக்குமார் யார் என்று கேட்டவர்தான் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
செங்கொடி செய்ததை தியாகமென்று கூற வரவில்லை என்ன செய்வது உயிர் பலி வேண்டாமென்று கூறவே இங்கு உயிர் விட வேண்டியுள்ளது!அந்த உயிருக்கு விலையாகவாது கழுத்தை இருக்கியிருக்கும் கயிற்றைத் தளர்த்த குரல் கொடுப்போம்!


நமது சகோ மதி.சுதாவின் வேண்டுகோள்!





டிஸ்கி-இப்போது கிடைத்த செய்தி .அம்மா சட்டசபையில் தூக்கு தண்டனையை எதிர்த்து தீர்மானம்!(ஆண்டவா!அம்மா மனசு கடைசி வரை மாறாம பாத்துக்க)&நீதிமன்றம் எட்டு வாரம் தடை!(நிரந்தர தடையா மாறனும்)
மேலும் வாசிக்க "இப்படி கைய விரிச்சுட்டீங்களே அம்மா!!!"

Sunday, August 28, 2011

வண்ணமிட்டும் விழி திறக்கா ஓவியம்!!!












இந்தியா!
பலர் வண்ணமிட்டும்
இன்னும் விழி திறக்கா
ஓவியமாகவே உள்ளது!

 காந்தியடிகள் தீட்டிய
அகிம்சை வண்ணம்
அழிந்து விட்டது இன்று!

காமராஜர் இட்ட
நேர்மை வண்ணம்
நெறி கேட்டு விட்டது!

பாரதி வரைந்த
புதுமைப்பெண் வண்ணம்
புலனற்று விட்டது!

விவேகானந்தர் உருவாக்கிய
உழைப்பு வண்ணம்
உறங்கிக்கிடக்கிறது!

அம்பேத்கர் செய்த
தீண்டாமை வண்ணம்
திக்குமுக்காடுகிறது!

தியாகிகள் சிந்திய
தியாக வண்ணம்
தீக்கிறையாகிவிட்டது!

அறிவியலார் செய்த
அறிவியல் வண்ணம்
ஆரோக்கியமற்று விட்டது!

அரசியலார் செய்யும்
ஊழல் வண்ணமோ
ஓவியதையே பாழாக்குகிறது!


அப்துல்கலாம் காணும்
கனவு வண்ணம்
கனவாகவே உள்ளது!


இந்தியா!
பலர் வண்ணமிட்டும்
இன்னும் விழி திறக்கா
ஓவியமாகவே உள்ளது!




                     


விரைவில் விழிதிறக்கும் 
என்ற நம்பிக்கையுடன்...........


புகைப்படம் உதவி-நண்பன் மாதேஷ் மற்றும் இணையங்கள்                    
மேலும் வாசிக்க "வண்ணமிட்டும் விழி திறக்கா ஓவியம்!!!"

Saturday, August 27, 2011

இந்த நிலைமை வரணுமா தமிழ்நாட்டுக்கு?



ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய
அணுகுண்டில் அடிபட்டு
மருத்துவமனையில் கிடந்தவன்
மயக்கம் தெளிந்து கேட்டான்
நான் எங்கிருக்கிறேன் என்று
நர்ஸ் சொன்னாள்
நாகசாகி என்று!



மேலும் வாசிக்க "இந்த நிலைமை வரணுமா தமிழ்நாட்டுக்கு?"

Thursday, August 25, 2011

அம்மாவே போதும்!!( இது அரசியல் பதிவு அல்ல)




எப்போதும் என்னைப்பற்றி எண்ணியிருப்பாள்!
இப்போதாவது நான் அவளைப்பற்றி!!

ஒன்றுமே இல்லாத எனக்கு
உரு கொடுத்தவள்

ஒன்றும் புரியாமலிருந்த எனக்கு
உலகம் புரிய வைத்தவள்

நான் காயப்பட்டால்
தான் அழுபவள்

வறட்சியை தான் ஏற்றுக்கொண்டு
வசந்தத்தை எனக்கு தருபவள்

புயலை எதிர் கொண்டு தென்றலாய்
என் மீது வீசுபவள்

புறப்படும்போது
புன்னகைத்திருப்பாள்

திரும்பி வரும் வரை
துடித்திருப்பாள்

முள்ளை தாங்கிக்கொண்டு
என் பாதையில் பூ தூவுபவள்

நான் தோல்வியுறும் போது
தோள் கொடுப்பவள்

எனது வெற்றியில்
என்னை விட புளங்காகிதம் கொள்பவள்


இன்னும் என்ன சொன்னாலும் தகும்
உன்னைப்பற்றி என்றால்

அடப்போடா!அம்மா என்று சொல்
அதுவே போதும் என்கிறாய்!






பி.கு-இது ஒரு ரிப்பீட்டு பதிவு.ஏற்கனவே வாசித்து சென்றவர்கள் வைய வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்!







மேலும் வாசிக்க "அம்மாவே போதும்!!( இது அரசியல் பதிவு அல்ல)"

Wednesday, August 24, 2011

ஒழுங்கா படிக்கலேன்னா பட்டினிதான்!!!







நான் ரெண்டாங்கிளாசோ,மூணாங்கிளாசோ படிக்கும் போது
(நீ இன்னைக்கு வரைக்கும் அத தான படிச்சிருக்கன்னு சொல்லக்கூடாது)
எங்க ஆசிரியர் சொன்ன கதை. இல்ல,இல்ல,ஒரு சம்பவம் ம்ம்ம்!ஒரு சம்பவம் கலந்த கதை!
(அட ஏதோ ஒண்ணு மேட்டருக்கு வாடா!)ஓகே ஓகே இதோ வரேன்!  


ரெண்டாப்பு,மூணாப்புல தான ஓரளவுக்கு தமிழ எழுத்து கூட்டி படிக்க ஆரமிப்போம்.
(இங்கிலிபீசு இன்னைக்கு வரைக்கும் தவிடு திங்குது)
சரியா எழுத்துக்கூட்டி,வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டு படிக்கலன்னா
 அர்த்தன்கெட்டுப்போயிடும்.அதுவுமில்லாமநடைமுறை வாழ்கையில 
பல சிக்கல்களையும் சந்திக்கவேண்டிக்க இருக்கும் ன்னு ஆரம்பிச்சார்.


 ஒரு தாத்தா தன் பேரன கூட்டிகிட்டு டவுனுக்கு போனார்..போனாரா போய் என்ன  பண்ணுனார்?நல்லா ஊரெல்லாம் சுத்திட்டு வாங்க வேண்டியதெல்லாம் வாங்கிட்டார்.நல்லா சுத்துனதுல ரெண்டு பேருக்கும் நல்ல பசி.
நம்ம தாத்தாக்கு எழுத படிக்க தெரியாது.பேரனபாத்து பேராண்டி! இங்க எங்கியாவது சாப்பாட்டு கடை இருக்கான்னு போர்ட பாத்து சொல்லுடான்னார்!
பக்கத்துல ஒரு கடை போர்ட்ல சாப்பாடு போடப்படும் னு போட்டுஇருந்தது.பேராண்டி படிச்சான்! தாத்தா! இங்க  சாப்பா டுபப்போ டப்பா டும் னு போட்டுருக்கு தாத்தா!ன்னான்(என் இனமடா நீ!).சரி வாடா வேற கடைக்கு போலாம்ம்னு கூட்டிட்டு போனார்.பாவம் எல்லா கடைலேயும் சாப்பா டுப்போ டப்பா டும் னு தான் இருந்தது!
அடப்போடா! இந்த பட்டணத்துல சப்பாட்டுக்கடையே இல்லன்னு பட்டினியோடு ஊர் திரும்பினர்!




நீதி படிக்கற காலத்துல ஒழுங்கா சரியா படிக்கறது மட்டுமில்ல ஒழுங்கா புரிஞ்சு படிக்கலன்னா வருங்காலத்துல பட்டினிதான் மிஞ்சும்!



கற்ககசடறக்கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”   தகுக


புகைப்பட உதவி-நண்பன் மாதேஷ் முதலும் கடைசியும்)

மேலும் வாசிக்க "ஒழுங்கா படிக்கலேன்னா பட்டினிதான்!!!"

Tuesday, August 23, 2011

ஏன் பொறிந்து தள்ளுகிறாய்?


கோபம்




சமைப்பவர் மேல்
என்னகோபம்
இப்படி பொறிகிறாய் அப்பளமே!
__________________________________


அஹிம்சை






போராட்டத்தில் வன்முறை
போலீஸ் தடியடி
காந்தி சிலை முன்!
__________________________




தீர்க்க தரிசனம்




நாளை திருவிழா
அழுதது ஆடு!

____________




அணுவும் பிளாஸ்டிக்கும் ஒண்ணு!


பிளாஸ்டிக்கை ஒழிப்போம்
பிரச்சாரம் செய்தனர்
ஃபிளக்ஸ் போர்டில்!


(சின்ன வித்தியாசம்அணுவஆக்க,அழிக்க முடியாது,பிளாஸ்டிக்க ஆக்க முடியும் அழிக்க முடியாது)
______________________________________________________________________________



புகைப்படம் உதவி-நண்பன் மாதேஷ்.



மேலும் வாசிக்க "ஏன் பொறிந்து தள்ளுகிறாய்?"

Monday, August 22, 2011

எனக்குத் தான் தெரியும் நீ எவ்ளோ பெரிய டுபாக்கூர்ன்னு!!




ஒரு விமான நிறுவனம் ஒரு சலுகையை அறிவித்தது அதாவது
பிஸினஸ் கிளாஸ்-ல் பயணம் செய்பவர்கள் இலவசமாக தங்கள்
மனைவியை அழைத்து செல்லலாம் என்று....

இச்சலுகை மிகுந்த வரவேற்பை பெற்றது

சில நாட்களுக்கு பிறகு விமான நிறுவனம் பயணம் செய்தவர்களின்
மனைவிகளுக்கு கடிதம் எழுதி பயண அனுபவம் பற்றி கேட்டது

எல்ல்லா மனைவிகளின் பதில்

 எந்த பயணம்?? என்ன சலுகை? எப்போ???


-------------------------------------------------------------------------------------------------------------

பரிட்சை ஹாலில் ஒரு சுவாரஸ்யம்

ஒரு மாணவன் என்ன எழுதுவதென்றே தெரியாமல் விழித்து கொண்டிருக்க
அவனிடம் வந்த மேற்பார்வையாளர்

ஆன்செர் ஷீட்டை மறைத்து வைத்து எழுது என்றாராம்//////////
 ----------------------------------------------------------------------------------------------------




மைந்தன் சிவா-பட்டாம் பூச்சிக்கு தெரியாது அதன் சிறகின் வண்ணமும்,அழகும்
அது மனிதனின் கண்ணுக்கு மட்டுமே தெரியும்
நிரூபன்--இப்ப என்னடா சொல்ல வர்ற?
மைந்தன் சிவா-அதே மாதிரி உன்னைப்பற்றி உனக்கு தெரியாது எனக்கு தான் தெரியும் நீ எவ்வளவு பெரிய டுபாக்கூர்னு!!(ஹா ஹா 
தொப்பி,     தொப்பி)
----------------------------------------------------------------------------------------------------
மனைவி-எங்க சொர்கத்துல கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ முடியாதாமே?
கணவன்-அதனாலதாண்டி அது சொர்க்கம்(மனைவி அமைவதெல்லாம் -பாட்ட மாத்துங்கப்பா)
---------------------------------------------------------------------------------------------------

அனகோண்டாவுக்கும் அலுமினிய குண்டாவுக்கும் என்ன வித்தியாசம்?
தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா !
உள்ள தண்ணி இருந்தாஅது அலுமினிய குண்டா(நீ சொன்னத அப்பிடியே தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி வை பின்னால வர்ற 
சந்ததிகள் படிச்சு தெரிஞ்சுக்கட்டும்)
----------------------------------------------------------------------------------------------------
உங்கள் சுய கட்டுப்பாட்டை(self control)பரிசோதனை செய்ய
ஒரு சவால் !
முதலிரவில் உங்களால் தூங்க முடியுமா?(அடப்பாவி நீயெல்லாம் உருப்படுவியா)
-------------------------------------------------------------------------------------------------------------------------
பாய் ப்ரெண்ட்க்கும் கேர்ள் பிரென்ட்க்கும் என்னை வித்தியாசம்?
நீ ஹாஸ்பிடல்ல இருக்கும் போது உடம்பு எப்டி இருக்குன்னு கேட்கிறவ
கேர்ள் பிரென்ட் !நர்ஸ் எப்டி இருக்கான்னு கேட்குறவன் பாய் ப்ரெண்ட்
(பசங்களா திருந்துங்கப்பா)
----------------------------------------------------------------------------------------------------

ஒரு வேலைய நான் செய்யல்லன்னா நான் சோம்பேறியாம்!


அதையே என் பாஸ் செய்யலைன்னா அவரு பிஸியாம்!!(என்ன வாழ்க்கடா)

-----------------------------------------------------------------------------------------------------------------------------
நிரூ&மைந்தன் சிவா மன்னிக்க 
மேலும் வாசிக்க "எனக்குத் தான் தெரியும் நீ எவ்ளோ பெரிய டுபாக்கூர்ன்னு!!"

Sunday, August 21, 2011

அன்பே சிவம் பாணியில் தொடங்கிய ஒரு பயணம்! பாகம்-2


( பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு இறங்க தயாரானேன்.கீழே பார்க்க கொஞ்சம் கால் நடுங்கியது.ஒரு பேக்கை வைத்துக்கொண்டே இறங்க பயமா இருக்கு நமக்கு,சுமை ஏற்றி இறக்குபவர்களை எண்ணி மரியாதையுடன் வியந்தேன்.ஒரு வழியா கீழ இறங்கியாச்சு.)


வணக்கம்!நண்பர்களே!என்ன ரொம்ப நேரமா விழுப்புரத்திலேயே காக்க வைச்சிட்டனா?சரி வாங்க பயணத்தை தொடருவோம்.

சனிக்கிழமை (14.08.11) இரவு 11.30.விழுப்புரம் பேருந்து நிலையமே தீபாவளி நேர ரெங்கநாதன் தெரு போல இருந்தது.இன்னைக்கு இங்கயே விடிஞ்சுடும் போல ன்னு நினைச்சுக்கிட்டேன்.நான் நாமக்கல் போகனும்ன்கரதுனால சேலம் இல்லேன்னா திருச்சிக்கு போற எந்த பேருந்துன்னாலும் பரவால்லன்னு கும்பலோடு கும்பலா ஐக்கியமானேன்.
13 ம் தேதி பௌர்ணமிங்கறதுனால அண்ணாமலையார் அழைப்பின் பேரில் விழுப்புரம் பணிமனையிலிருந்த பேருந்துகள் திருவண்ணாமலைக்கு திருப்பி விடப்பட்டிருந்தன.அதனால சென்னையிருந்து வரும் பேருந்துதான் கதி.பேருந்து நிலையத்தை சுத்தி சுத்தி ஒரு ரெண்டு மணிநேரம் மூச்சு திணற திணற(வேறன்ன அதான் சொன்னனே!மூத்திரவாசனை(?)).நடந்தேன்.திருவண்ணாமலை போகாமலே கிரிவலம்.அன்னாமலையாருக்கு அரோகரா!


ஒரு வழியாக நுழைவாயிலிலேய காத்திருந்து ஒரு கள்ளக்குறிச்சி பேருந்து வந்தது.சரி அங்கிருந்து மாறிக்கொள்ளலாம் என்று ஏறிக்கொண்டேன்(நள்ளிரவு 1.45).இருவர் சீட்டில் ஒருவர் சுருட்டி மடக்கி தூங்கிக்கொண்டிருந்தார்.அந்த ஒரு இருக்கை மட்டும் இருந்ததால் அவர எழுப்பிவிட்டு உக்காந்துகிட்டேன்.நிச்சயமா மனசுக்குள்ள திட்டியிருப்பார்.என்ன  பண்றது?

டிக்கெட் வாங்கியவுடன் பஸ்ஸ்டாண்ட் வலம் வந்த களைப்பில் கண்ணயர்ந்தேன்.கனவு! ஊரில் இறங்கியதும் கேரளா கெண்டை மேளமுழங்க வரவேற்பது போல்.விழித்தேன் சாமி ஊர்வலம்(உனக்கு இது தேவையாடா).ஆனா செம தாள நயம் அதுக்கப்பறம் தூக்கம் வரல.கள்ளக்குறிச்சியை 3.45க்கு சென்றேன்.பஸ்ஸ்டாண்டிலிருந்த டீக்கடையில் விசாரித்தேன்.நாமக்கலுக்கே நாலேகாலுக்கு பஸ்சாம்.ஒரு டீ சொன்னேன்.அருமையான டீங்க!இஞ்சி போட்டு அந்த காலை வேளையில்.ஐந்தே ரூபாய்தானாம்.ஆச்சர்யம்!இதில் முக்கியமான விஷயம் காகித கப்பில் கொடுத்தார்கள்.குடித்துவிட்டு காத்திருந்தேன்.

பேருந்து வந்தது பணிமனையிலே காத்திருந்து எல்லாரும் ஏறிக்கொண்டனராம்.நொந்து கொண்டே ஏறி நின்று கொண்டேன்.வழியில் அப்போதுதான் சூடிய குண்டுமல்லியோடு ஒரு பெண் ஏறினாள்.பேருந்து முழுக்க வாசனை.சிரித்தாள்!(என்னைப்பார்த்து அல்ல)தெற்றுப்பல்!அழகு!அதற்க்கு மேல் ரசிக்கமுடியவில்லை அலுப்பில்.ஒரு வழியாக ஆத்தூர் வந்ததும் உட்கார இடம்கிடைதது.ஆத்தூரை கடக்கையில் நம்ம மாயஉலகம்ராஜேஷ் நினைவுக்கு வந்தார்.சொந்த ஊர் என சொல்லிருந்தார்.அதற்க்கு மேல் வலுக்கட்டாயமாக தூக்கம்துரத்தியது.


ரொம்ப நேரம் கழித்து விழித்தேன்.அது காளப்பநாயக்கன்பட்டிஎனும் ஊர்.கொல்லிமலை அடிவாரம்.கொல்லிமலையின் அழகை தூரத்திலிருந்தபடி ரசித்தேன்.நாமக்கல்லை காலை ஒன்பது மணிக்கு அடைந்தேன்.சாதாரணமாக ஆறு மணி நேரத்தில் முடியும் பயணம் பத்து மணி நேரம் ஆனது.ஸ்அப்பா! முடியல!

அக்க வீட்டுக்கு போனதும் ஒன்றரை வயது அக்கா பொண்ணு மம்மா! என்றாள் என்ன ஆச்சர்யம்!அலுப்பும் களைப்பும் தொலைந்தே போனது.சும்மாவா சொன்னார் வள்ளுவர்
   
    “”குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
       மழலைச்சொல் கேளா தவர் “” என்று.


கூடவே பயணித்ததற்க்கு நன்றி நண்பர்களே!!



மேலும் வாசிக்க "அன்பே சிவம் பாணியில் தொடங்கிய ஒரு பயணம்! பாகம்-2"