
இந்தியா!
பலர் வண்ணமிட்டும்
இன்னும் விழி திறக்கா
ஓவியமாகவே உள்ளது!
காந்தியடிகள் தீட்டிய
அகிம்சை வண்ணம்
அழிந்து விட்டது இன்று!
காமராஜர் இட்ட
நேர்மை வண்ணம்
நெறி கேட்டு விட்டது!
பாரதி வரைந்த
புதுமைப்பெண் வண்ணம்
புலனற்று விட்டது!
விவேகானந்தர் உருவாக்கிய
உழைப்பு வண்ணம்
உறங்கிக்கிடக்கிறது!
அம்பேத்கர் செய்த
தீண்டாமை வண்ணம்
திக்குமுக்காடுகிறது!
தியாக வண்ணம்
தீக்கிறையாகிவிட்டது!
அறிவியலார் செய்த
அறிவியல் வண்ணம்
ஆரோக்கியமற்று விட்டது!
அரசியலார் செய்யும்
ஊழல் வண்ணமோ
ஓவியதையே பாழாக்குகிறது!
அப்துல்கலாம் காணும்
கனவு வண்ணம்
கனவாகவே உள்ளது!
இந்தியா!
பலர் வண்ணமிட்டும்
இன்னும் விழி திறக்கா
ஓவியமாகவே உள்ளது!
விரைவில் விழிதிறக்கும்
என்ற நம்பிக்கையுடன்...........
புகைப்படம் உதவி-நண்பன் மாதேஷ் மற்றும் இணையங்கள்
| Tweet | ||||||




