Showing posts with label பேருந்து. Show all posts
Showing posts with label பேருந்து. Show all posts

Sunday, August 21, 2011

அன்பே சிவம் பாணியில் தொடங்கிய ஒரு பயணம்! பாகம்-2


( பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு இறங்க தயாரானேன்.கீழே பார்க்க கொஞ்சம் கால் நடுங்கியது.ஒரு பேக்கை வைத்துக்கொண்டே இறங்க பயமா இருக்கு நமக்கு,சுமை ஏற்றி இறக்குபவர்களை எண்ணி மரியாதையுடன் வியந்தேன்.ஒரு வழியா கீழ இறங்கியாச்சு.)


வணக்கம்!நண்பர்களே!என்ன ரொம்ப நேரமா விழுப்புரத்திலேயே காக்க வைச்சிட்டனா?சரி வாங்க பயணத்தை தொடருவோம்.

சனிக்கிழமை (14.08.11) இரவு 11.30.விழுப்புரம் பேருந்து நிலையமே தீபாவளி நேர ரெங்கநாதன் தெரு போல இருந்தது.இன்னைக்கு இங்கயே விடிஞ்சுடும் போல ன்னு நினைச்சுக்கிட்டேன்.நான் நாமக்கல் போகனும்ன்கரதுனால சேலம் இல்லேன்னா திருச்சிக்கு போற எந்த பேருந்துன்னாலும் பரவால்லன்னு கும்பலோடு கும்பலா ஐக்கியமானேன்.
13 ம் தேதி பௌர்ணமிங்கறதுனால அண்ணாமலையார் அழைப்பின் பேரில் விழுப்புரம் பணிமனையிலிருந்த பேருந்துகள் திருவண்ணாமலைக்கு திருப்பி விடப்பட்டிருந்தன.அதனால சென்னையிருந்து வரும் பேருந்துதான் கதி.பேருந்து நிலையத்தை சுத்தி சுத்தி ஒரு ரெண்டு மணிநேரம் மூச்சு திணற திணற(வேறன்ன அதான் சொன்னனே!மூத்திரவாசனை(?)).நடந்தேன்.திருவண்ணாமலை போகாமலே கிரிவலம்.அன்னாமலையாருக்கு அரோகரா!


ஒரு வழியாக நுழைவாயிலிலேய காத்திருந்து ஒரு கள்ளக்குறிச்சி பேருந்து வந்தது.சரி அங்கிருந்து மாறிக்கொள்ளலாம் என்று ஏறிக்கொண்டேன்(நள்ளிரவு 1.45).இருவர் சீட்டில் ஒருவர் சுருட்டி மடக்கி தூங்கிக்கொண்டிருந்தார்.அந்த ஒரு இருக்கை மட்டும் இருந்ததால் அவர எழுப்பிவிட்டு உக்காந்துகிட்டேன்.நிச்சயமா மனசுக்குள்ள திட்டியிருப்பார்.என்ன  பண்றது?

டிக்கெட் வாங்கியவுடன் பஸ்ஸ்டாண்ட் வலம் வந்த களைப்பில் கண்ணயர்ந்தேன்.கனவு! ஊரில் இறங்கியதும் கேரளா கெண்டை மேளமுழங்க வரவேற்பது போல்.விழித்தேன் சாமி ஊர்வலம்(உனக்கு இது தேவையாடா).ஆனா செம தாள நயம் அதுக்கப்பறம் தூக்கம் வரல.கள்ளக்குறிச்சியை 3.45க்கு சென்றேன்.பஸ்ஸ்டாண்டிலிருந்த டீக்கடையில் விசாரித்தேன்.நாமக்கலுக்கே நாலேகாலுக்கு பஸ்சாம்.ஒரு டீ சொன்னேன்.அருமையான டீங்க!இஞ்சி போட்டு அந்த காலை வேளையில்.ஐந்தே ரூபாய்தானாம்.ஆச்சர்யம்!இதில் முக்கியமான விஷயம் காகித கப்பில் கொடுத்தார்கள்.குடித்துவிட்டு காத்திருந்தேன்.

பேருந்து வந்தது பணிமனையிலே காத்திருந்து எல்லாரும் ஏறிக்கொண்டனராம்.நொந்து கொண்டே ஏறி நின்று கொண்டேன்.வழியில் அப்போதுதான் சூடிய குண்டுமல்லியோடு ஒரு பெண் ஏறினாள்.பேருந்து முழுக்க வாசனை.சிரித்தாள்!(என்னைப்பார்த்து அல்ல)தெற்றுப்பல்!அழகு!அதற்க்கு மேல் ரசிக்கமுடியவில்லை அலுப்பில்.ஒரு வழியாக ஆத்தூர் வந்ததும் உட்கார இடம்கிடைதது.ஆத்தூரை கடக்கையில் நம்ம மாயஉலகம்ராஜேஷ் நினைவுக்கு வந்தார்.சொந்த ஊர் என சொல்லிருந்தார்.அதற்க்கு மேல் வலுக்கட்டாயமாக தூக்கம்துரத்தியது.


ரொம்ப நேரம் கழித்து விழித்தேன்.அது காளப்பநாயக்கன்பட்டிஎனும் ஊர்.கொல்லிமலை அடிவாரம்.கொல்லிமலையின் அழகை தூரத்திலிருந்தபடி ரசித்தேன்.நாமக்கல்லை காலை ஒன்பது மணிக்கு அடைந்தேன்.சாதாரணமாக ஆறு மணி நேரத்தில் முடியும் பயணம் பத்து மணி நேரம் ஆனது.ஸ்அப்பா! முடியல!

அக்க வீட்டுக்கு போனதும் ஒன்றரை வயது அக்கா பொண்ணு மம்மா! என்றாள் என்ன ஆச்சர்யம்!அலுப்பும் களைப்பும் தொலைந்தே போனது.சும்மாவா சொன்னார் வள்ளுவர்
   
    “”குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
       மழலைச்சொல் கேளா தவர் “” என்று.


கூடவே பயணித்ததற்க்கு நன்றி நண்பர்களே!!



மேலும் வாசிக்க "அன்பே சிவம் பாணியில் தொடங்கிய ஒரு பயணம்! பாகம்-2"

Friday, August 19, 2011

அன்பே சிவம் பாணியில் தொடங்கிய ஒரு பயணம்!



வணக்கம் நண்பர்களே!கடந்த 14,15,16 மூன்று நாட்கள் நிறுவனம் விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தேன்.வருண பகவானின் புண்ணியத்தால் பிளான் கேன்சல்.அதனால நாமக்கல்ல இருக்கும் அக்கா வீட்டிற்கு செல்ல முடிவு செய்து புறப்பட்டேன்.பயணத்தில் யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையம்.(நல்லா கிளப்புராங்கடா பீதிய!)

சனி இரவு பத்து இருக்கும்.வீட்டிலிருந்து கிளம்பி மெயின் ரோட்டை வந்தடைந்தேன்.ஆரம்பமே அளப்பறையா இருந்தது.அவ்ளோ கூட்டம்.திரும்பி வீட்டுக்கு போயிட்டு விடியற்காலையில் நேரமா எழுந்துபோலாமானு நினைச்சேன்.சரி போய்த்தான் பாப்போம்னு காத்திருந்தேன் புதுவையிலிருந்து விழுப்புரம் செல்லும் பேருந்துக்காக திருபுவனையில்(புதுவையிலிருந்து 25கி.மீ).வரும் பேருந்துகளெல்லாம் நிறை மாத கர்ப்பிணிகளாய் நிற்காமலே சென்றது.கிட்டத்தட்ட ஒரு மணிநேர காத்திருப்புக்குப்பின் ஒரு பஸ் நின்னுது அதுலயும் செம கூட்டம்.கண்டக்டர் எல்லாம் டாப்புல ஏறிக்கங்கன்னார்.கொஞ்சம் பயம்தான் சரி இதையும் அனுபவிச்சுதான் பாப்பமேன்னும்,வாழ்க்கையில தான் டாப்புக்கு போக முடியல,பஸ்ஸுலயாவதுபோவோம்ன்னு டாப்புல ஏறிக்கிட்டேன்.என்னுடன் ஒரு பத்து பதினைந்து பேர்.மனத்துக்குள் ஏல மச்சி!மச்சின்னு பாடிக்கொண்டேன்.

புதுவையில் மூன்று நாட்கள் விடுமுறையாதலால் புதுவையே காலியாகிக்கொண்டிருந்தது.அனைவரும் கூட்டம் கூட்டமாக சுற்றுலாவுக்கு போய்க்கொண்டிருந்த்தனர்.சுற்றுலா பேருந்துகளும் வேன்களுமாக கூக்குரலும் விசிலுமாக கை காட்டிக்கொண்டே முந்திச்சென்றார்கள்(நாமளும் போயிருக்கலாமோ!).
டாப்பில் பயணிப்பது புதுமையான அனுபவமாக இருந்தது.ரோலர் கோஸ்டரில் பயணிப்பதைப்போன்று!முன்னால் உக்காந்திருந்த ஒருத்தர் பீடி வலிக்க ஆரம்பிச்சுட்டார்.எனக்கு அன்பே சிவம் மாதவன் படும் பாடு ஞாபகம் வந்தது(வாங்கி ரெண்டு வலி வலிச்சியான்னு கேக்குறீங்களா!ஹிஹி!)
வழியில் ஒரு ஊரில் நல்லதங்காளோ,ஆரவல்லி சூரவல்லியோ அரங்கேற்றிக்கொண்டிருந்தனர்.ஒரு பத்து பதினைந்து பேர் அமர்ந்திருந்தனர்.சிறு வயதில்(இப்பவும் சிறு வயது தான்)ஊரில் விடிய விடிய உட்க்கார்ந்து தெருக்கூத்து பார்த்த ஞாபகம் வந்தது.அழிந்து வரும் கலை-லேசாக நெருடியது.


பேருந்து விழுப்புரத்தை நெருங்கியது.வழக்கமாக விழுப்புரம் முழுவதும் ப்ளெக்ஸ் போர்டில் சிரிக்கும் பொன்முடியார் இம்முறை மிஸ்ஸிங்(கொஞ்சம் சுத்தமாய் இருந்தது ஊர்).ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் சி.வி.சண்முகத்தார் புண்ணியத்தால் அம்மா சிரித்துக்கொண்டிருந்தார்.


வழக்கமான ட்ரேட் மார்க் மூத்திர வாசனை(!)யுடன் விழுப்புரம் பேருந்து நிலையம் வரவேற்றது.பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு இறங்க தயாரானேன்.கீழே பார்க்க கொஞ்சம் கால் நடுங்கியது.ஒரு பேக்கை வைத்துக்கொண்டே இறங்க பயமா இருக்கு நமக்கு,சுமை ஏற்றி இறக்குபவர்களை எண்ணி மரியாதையுடன் வியந்தேன்.ஒரு வழியா கீழ இறங்கியாச்சு அப்பறம் விழுப்புரத்திலிருந்து நாமக்கல் பயணம் அடுத்த பதிவில்!!!!
மேலும் வாசிக்க "அன்பே சிவம் பாணியில் தொடங்கிய ஒரு பயணம்!"