Showing posts with label தூக்குதண்டனை. Show all posts
Showing posts with label தூக்குதண்டனை. Show all posts

Thursday, September 1, 2011

முதல்ல கைய குடுங்க அம்மா!!


இது எனது முந்தைய பதிவுக்கு நானே எழுதும் எதிர் பதிவு இது(உனக்கெல்லாம் வேற யார் எதிர்பதிவு போடுவாங்க!நீயே போட்டுகிட்டாதான் உண்டு!உங்க மைன்ட் வாய்ச கேட்ச் பண்ணிட்டேன்!)எனது முந்தைய பதிவில்  இப்படி கைய விரிச்சுட்டீங்களே அம்மா!!!(கிளிக்கவும்)என  தூக்கு தண்டனை விசயத்திலும் இந்த வழக்கைப்பற்றியும் மாறி மாறி பேசி வருவதை சுட்டிக்காட்டியிருந்தேன்.

இந்த முறையும் மாற்றித்தான் பேசியிருக்கிறார்.ஆனால் இது நல்லமாற்றம்!வரவேற்கத்தக்க மாற்றம்!போராடிய அனைவரும் எதிர்பார்த்த மாற்றம்!மனித நேயம் கொண்ட அனைவரும் முகமலர்ந்து போற்றும் மாற்றம்!மாற்றத்திற்கு காரணம் எதுவாய் இருந்தாலும்(உள்ளாட்சி தேர்தலாய் இருந்தாலும்)அதையெல்லாம் ஆராயாமல் எல்லோரும் அம்மாவுக்கு கை கொடுப்போம்!அம்மாவுக்கு ஒரு ராயல் சல்யூட்!



திரும்பவும் வேதாளம் முருங்கை மரத்துல ஏறாம இருந்தா சரி!
ஆனால் அம்மா ஒரே ஒரு உறுத்தல் இந்த முடிவ ஒரு ரெண்டு நாள் முன்னாடி எடுத்திருந்தீங்கன்னா செங்கொடி என்ற துடிப்பான தோழரை இந்த தமிழகம் இழந்திருக்காது!பலரும் சொல்லிவிட்டார்கள்.என்பங்குக்கு நானும் சொல்கிறேன் .தோழர்களே!உணர்வுத்தீயை நெஞ்சில் மட்டும் ஊற்றுவோம்!இன்னொரு முத்துக்குமார்,செங்கொடியின் முடிவை யாரும் எடுக்கவேண்டாம்!
இந்த தண்டனையை எதிர்த்து போராடி,உண்ணாவிரதமிருந்தோர்,சமூக வலைதளங்களில் குரல் கொடுத்தோர்,பிற நாடுகளில் இருந்து ஆதரவு தந்தோர்,, அரசியல் தலைவர்கள் (அரசியல் நோக்கம் உள்ளே இருந்தாலும்,) அனைவருக்கும் நன்றிகள்!


அப்பறம் போன பதிவில், முத்துக்குமார் யார் என்று  ஈ.வி.கே.எஸ்.ஒரு முறை கேட்டிருந்தார்.அது போல செங்கொடி யார் என காங்கிரஸ் காரர்கள் யாரும் கேட்க்க வேண்டாமென வேண்டுகோள் விடுத்திருந்தேன்,ம்ம்ம்ஹூம் இளங்கோவன் இன்னும் திருந்தியிருப்பதாக தெரியவில்லை.புதிய தலைமுறை செய்தி டி.வியில் சொல்றார்.தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருக்கிரதே தவிர நிறுத்தி வைக்கப்படவில்லை.நிச்சயம் தூக்கில் போட்டே ஆகணும் என்று.இவருக்கு தேர்தல்ல போட்டது பத்தாது போல இருக்கு.இவருக்கு இன்னும் நல்லா போடணும்.ஈரோட்டுப்பெரியவருக்கு இருந்ததில் பாதி கூட அவர் பேரனுக்கு  இல்லாமல் போனது தான் வருத்தமளிக்கிறது!
என்ன கேக்குறிங்க கலைஞர் பத்தியா?நோ கமெண்ட்ஸ்!!


இன்னொரு விஷயம்!
பிள்ளையார் சதுர்த்தியை நல்லபடியா கொண்டாடுவோம்!களிமண்ணுல செய்த பிள்ளையாரை மட்டும் வைச்சு வழிபடுவோம்!(என் தலைல இருக்கறதான்னு நீங்க கேக்குறதை வன்மையா கண்டிக்கிறேன்!)பிள்ளையார கடல்ல கரைக்குரேன் பேர்வழின்னு போட்டு டமால் டமால் ன்னு சாத்த வேண்டாம்!பாவம் அவர்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!




புகைப்படம் உதவி-நண்பன் மாதேஷ்(முதல்)&சில இணையங்கள்.



மேலும் வாசிக்க "முதல்ல கைய குடுங்க அம்மா!!"

Tuesday, August 30, 2011

இப்படி கைய விரிச்சுட்டீங்களே அம்மா!!!


இப்படி கை விரிச்சுட்டிங்களே அம்மா!
ஊர் கூடி தேர் இழுக்கும் போது சக்கரத்தையே உடைச்சது போல இருக்குது என்னால முடியாது ன்னு நீங்க சொல்றது.ராஜபக்சேவின் அரசுக்கு எதிராக பொருளாதாரத்தடை விதித்து சட்டசவையில் தீர்மானம் நிறைவேற்றிய போது ,ஓஹோ! ஈழம் பற்றிய தன் பழைய நிலையிலிருந்து விடுபட்டு விட்டாரென எண்ணிஇருந்தபோது பழைய குருடி கதவை திறடி என்ற கதையாகஆகிவிட்டதே!.
பிரியங்கா காந்தி சிறையிலிருந்த நளினியை பார்க்கச்சென்றபோது எதிர்த்து அறிக்கை விட்ட இவர் சொன்னது

ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான சோனியா காந்தி. மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்கிறார். இப்படி பொய் பார்க்கலாமா? அது அடுக்குமா? இப்போது நளினி ஏதோ உரிமைக்காக போராடுவதுபோல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது! இது சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்த பிரச்சனை அல்ல. அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. எது ஒரு நாட்டு பிரச்சனை. ஒரு முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. இப்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன்.

இவர் இன்றைக்கு சொன்னது


அரசமைப்புச் சட்டத்தின் பொருத்தமான தன்மைகளைக் கருத்தில் கொண்டு பரிசீலித்த மத்திய அரசு, மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1)-ன்படி கட்டளையிடுகிறது.
இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ, குடியரசுத் தலைவரின் முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு புதியதாக ஒரு மனுவினை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம். குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களும் குடியரசுத் தலைவருக்கு தான் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இது குறித்த நடவடிக்கையை குடியரசுத் தலைவர் தான் எடுப்பார்.
எனவே பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை குடியரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன்.  இந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரசாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.”
சும்மா பேச்சுக்காவது முந்தய ஆட்சியில் கலைஞர் செய்தது போல மைய அரசுக்கு கடிதம் எழுதுகிறோம் என அறிக்கை.விட்டிருக்கவேண்டியதுதானே? எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்ற விளக்கங்கள் தேவையா?.இவர் சொல்கிறார் கலைஞர் ஒன்று தெரியாததுபோல ரெட்டை வேடம் போடுகிராரென்று!ஒன்று புரிகிறது அரசியல்வாதிகள் எல்லாவற்றையுமே அரசியலாகத்தான் பார்க்கிறார்கள்!

இன்னொருவிசயம்!
உணர்வின் வெளிப்பாடும் கோபமும் வெளிப்படும்போது சிந்தனை கண்ணை மறைத்து,ஆதங்கம் இயலாமை,ஆற்றாமை மனதை செலுத்தியதன் விளைவாக உணர்வுத்தீயை உடலில் ஊற்றி கருகியிருக்கிறது ஒரு தளிர்!!
இதை நியாப்படுத்தவில்லை.தயவுசெய்து யாரும் நியாயப்படுத்தவும் வேண்டாம்!
இந்த காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும் ஒரே ஒரு வேண்டுகோள் விடுத்துக்கொள்கிறேன்!தயவுசெய்து செங்கொடி யார் ?என்று மட்டும் கேட்டு விடாதிர்கள்!இதை ஏன் சொல்கிறேன் என்றால்?முத்துக்குமார் யார் என்று கேட்டவர்தான் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
செங்கொடி செய்ததை தியாகமென்று கூற வரவில்லை என்ன செய்வது உயிர் பலி வேண்டாமென்று கூறவே இங்கு உயிர் விட வேண்டியுள்ளது!அந்த உயிருக்கு விலையாகவாது கழுத்தை இருக்கியிருக்கும் கயிற்றைத் தளர்த்த குரல் கொடுப்போம்!


நமது சகோ மதி.சுதாவின் வேண்டுகோள்!





டிஸ்கி-இப்போது கிடைத்த செய்தி .அம்மா சட்டசபையில் தூக்கு தண்டனையை எதிர்த்து தீர்மானம்!(ஆண்டவா!அம்மா மனசு கடைசி வரை மாறாம பாத்துக்க)&நீதிமன்றம் எட்டு வாரம் தடை!(நிரந்தர தடையா மாறனும்)
மேலும் வாசிக்க "இப்படி கைய விரிச்சுட்டீங்களே அம்மா!!!"