Sunday, September 18, 2011

தனிமை கிடைச்சா நீங்க என்ன பண்ணுவீங்க???


நிருபர்-சார்!இப்பல்லாம் கொலை,கொள்ளை அதிமாகிட்டுவருதே இதுக்கு நீங்க என்ன்சொல்ல்றீங்க?
டி.ஐ.ஜி-ப்ளீஸ்!அரசியல் சம்பத்தப்பட்ட கேள்வி எல்லாம் கேக்காதிங்க!!!(நோ கமெண்ட்ஸ்!)


அரசியல்வாதி-என்ன துணிச்சல் இருந்தால் என்னிடம் கணக்கு கேட்பார்கள்?நான்திருப்பி அவர்களிடம் ENGLISH,PHISICS,CHEMISTRY கேட்டால் உங்களால் தாங்க முடியாது என எச்சரிக்கிறேன்!!(யார்கிட்ட)


நாந்தாங்க பணம் சம்பாதிக்க ஆயிரம் வழின்னு புத்தகம் எழுதிவவன்,
அப்பறம் ஏங்க பிச்சை எடுக்குறிங்க?
அதுல மொத வழி இதுதான்!!!(இதுக்கு பேர்தான் தனி வழியா?)


எப்பவாவது தனிமை கிடைச்சா நான் பாட ஆரம்பிச்சுடுவேன்!
அடப்போங்க!நீங்க பாட ஆரம்பிச்சாலே ஆட்டோமேடிக்கா தனிமை கிடைச்சுடுமே???(பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடா)


நம்மாளு-ஏங்க!எனக்கு ஏதாவது தபால் வந்திருக்கா?
தபால்காரர்-உன் பேர் என்னை?
நம்மாளு-அதான் தபால்லையே போட்டுருக்குமே!(படித்தவுடன் கிழித்து விடவும்)


என் ஜாதகப்படி எனக்கு அறிவு ஜாஸ்தியாம்!
இப்ப தெரியுதா?நான் ஏன் ஜோசியத்த நம்பறதில்லன்னு?


அவன்-என் பொண்டாட்டி கார் ட்ரைவரோட ஓடிப்போயிட்டா!
இவன்-அட விடுடா!வேற கார் கார் டிரைவர் கிடைக்காமலா போய்டுவான்!!!(மனைவிக்கு மரியாதை)
__________________________________________________________________________________



அவன்-நான் ஒரு நாளைக்கு ஒரு பொய்தான் சொல்வேன்.
இவன்-அப்ப இன்னைய கோட்டா முடிஞ்சது போல!!



பிச்சைக்காரன்-அய்யா! சாப்ட்டு ஒரு வாரம் ஆச்சுயா நம்மாளு-ஏன்பா ஒரு வாரமா பசிக்கலையா? பிச்சை-!!!!!!!!!!!!!!(அட பிச்சைக்கு பொறந்த பிச்சை)
_________________________________________________________________________


ஒரு ஸ்கூல் பையன் கடையில்-டே!அந்த சாக்லேட் வாங்காத,சாப்டா தல வெடிச்சுடும்.டி.வி.ல பாத்தேன்#சொந்த செலவில் சூன்யம்
_________________________________________________________________________

 படித்ததில் கேட்டதில் ரசித்தவை 


மேலும் வாசிக்க "தனிமை கிடைச்சா நீங்க என்ன பண்ணுவீங்க???"

Saturday, September 17, 2011

I'M NOT IMPRESSED GIMMEE MORE


கடந்த பதிவு எனது ஐம்பதாவது பதிவு(சில மீள்வுகளும் அடக்கம்).ஐம்பதாவது பதிவு பிற பதிவுகளைக் காட்டிலும் கடந்த பதிவு எனக்கு பேருவகையை அளித்தது.காரணங்கள் பல.


முதலில் நான் எழுதுவதை(யும்) வாசித்து  வரும் நண்பர்களுக்கும்,பின்தொடரும் அன்பர்களுக்கும்,கருத்துகள் கூறி என்னை மெருகேற்றுபவர்களுக்கும்(ஆமா!இவுரு பத்தரை மாத்து தங்கம்)வாக்களிக்கும் வாக்காளர் பெருமக்களுக்கும்(காசு வாங்காமலே ஒட்டு போடுறிங்களே!இம்புட்டு நல்லவங்களா இருக்கிங்களே?) அவ்வப்போது ஆலோசனை தந்து வழிகாட்டும் ஆலோசகர்களுக்கும்(கன்சல்டேசன் பீஸ் இல்லாமலே)


என்னை எழுத தூண்டிய நண்பர்களுக்கும்,முக்கியமாக,பையன் ஏதோ பண்ணிக்கிட்டு இருக்கான்(உருப்படியாவா இல்லையான்னு கூட தெரியாமல்)நான் எழுதுகையில் தொந்தரவு செய்யாமலிருக்கும் எனது பெற்றோர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்!
என்னடா இவன் யார் பேரையும் சொல்லாமல் பொத்தம் பொதுவா நன்றி சொல்றான்னு பாக்குறிங்களா?எதுக்குங்க?யாரையாவது விட்டுட்டு அப்பறமா அவங்க வந்து குமுறவா?(உசாரய்யா உசாரு!)அப்படி யாரும் செய்யமாட்டிங்கன்னு தெரியும்.இருந்தாலும் யாரையாவது விட்டுட்டேன்னா எனக்கு கொஞ்சம் கஷ்டமாகிடும் அதான்!(சமாளிபிகேஷன்)


கடந்த பதிவு மகிழ்வளித்ததற்க்கானகாரணங்கள்,முதலில் அணுஉலை எதிர்ப்புக்கான எனது பங்கை வழங்கியதில்,அப்பறம் பல பதிவுலக நண்பர்கள் அந்த பதிவிற்கான லிங்கை தங்கள் தளங்களில் வெளியிட்டிருந்தது.ஒரு விசயத்திற்காக போராடும் போது நமது நண்பர்களின் ஆதரவுக்கரங்கள் உடனடியாக நீள்வது மகிழ்வளிக்கிறது.இந்த ஒரே காரணதிற்க்காகவே நானும் வலைப்பூவில் எழுதுவதில் பெருமைப்படுகிறேன்.


அப்பறம் கடந்த பதிவுக்கு மாற்றுக்கருத்துடன் ஒரு நண்பர் வந்திருந்தார்.இது எனக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது.ஏன்னா எல்லோரும் ஒரு விஷயத்தை ஆதரித்துதான் ஆகணும்ம்னு இல்ல.மாற்றுக்கருத்து இருந்தாதான் நாம ஆதரிக்குற விசயங்களிலும் உள்ள குறைகள் நமக்கு தெரியும்.ஆனா மாற்றுக்கருத்துடன் வந்த நண்பர் தனது ID-ஐ மறைத்து ANNONYMAS-ஆக கருத்தளித்ததுதான் வருத்தமளிக்கிறது.ஒரு வேளை மாற்று கறுத்து கூறுவதால் நான் தவறாக நினைத்து விடுவேன் என நினைத்துவிட்டாரோ என்னவோ?


நண்பர்களே!மாற்றுக்கருத்துகளுடன் வாதம் செய்தால் மட்டுமே  நாம் ஒரு விஷயத்தைப்பற்றி கூறுகையில் அதில் உள்ள முழுமையான நிறை குறைகளை அறிந்து கொள்ளமுடியும்.நிறைய வாதம் எதிர்வாதங்கள் வந்தால்தான் நாம் எழுதுவதற்கு உற்சாக டானிக்கா இருக்கும்.சும்மா ஏனோ தானோன்னு எழுதிடலாம்னு நினைக்க தோணாது.


கடந்த பதிவர் சந்திப்பில் இப்போது எல்லாம் வாதம்,எதிர்வாதங்கள் குறைந்துவிட்டது என லக்கி யுவகிருஷ்ணாவும்,கே.ஆர்.பி.செந்தில்,கேபிள் சங்கர்,போன்றோர் ஆதங்கப்பட்டனர்.இப்படியெல்லாம் நடந்தால் தான் ஆரோக்கியமான பதிவுலக சூழல் இருக்கும் என்பது அவர்களுடைய,என்னுடைய விருப்பமும் கூட.


எனவே நண்பர்களே!என் பதிவுகளில் மட்டுமல்ல எல்லோருடைய பதிவுகளிலும்  சொல்லப்பட்ட கருத்துகளில் மாற்றுக்கருத்து இருப்பின் தயக்கமில்லாமல் எடுத்துச்சொல்லுவோம்.யாரும் தவறா நினைக்கமாட்டாங்க.நானும் தான்!நம்வீட்டிலேயே ஒரு முடிவு எடுக்கும் போது எத்தனை விதமான கருத்துகள் ஆனால் யாரும் யாரையும் மாற்றானாக பார்ப்பதில்லையே!அது போல பதிவுலகமும் நமக்கு ஒரு வீடுதான்.நாமெல்லாம் ஒரு கூட்டுப்பறவைகள் தான்.


என்ன நண்பர்களே!கிளம்பிவிட்டீர்களா வாதம் எதிர்வாதங்களுடன்?நடக்கும் விவாதங்களில் மடிக்கணினிகள் மடிந்து தொங்கட்டும்,மேசைக்கணினிகள் மேசையை விட்டு ஓடட்டும்,மொபைல்கள் மிரண்டு திணரட்டும்.ம்ம்ம் கிளப்புங்கள்!
நான் உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர் பார்க்கிறேன்!
இன்னும் தல பாணியில சொல்லனும்னா...


“I’M NOT IMPRESSED GIMMEE MORE”




அடப்பாவி!நல்லாருந்த கூட்டில குண்டு வச்சுட்டியேடா ன்னு கேக்குறது தெரியுது.ஏதோ நம்மால முடிஞ்சது நாராயண! நாராயண!  
__________________________________________________________________________________

கடந்த பதிவில் விவாதம் நடத்திய நண்பர்களுக்கு நன்றி!
__________________________________________________________________________________

மேலும் வாசிக்க "I'M NOT IMPRESSED GIMMEE MORE"

Tuesday, September 13, 2011

இதற்கு நாம் என்ன செய்ய போகிறோம்?





ஊழலுக்கு எதிரா ஒரு மிகப்பெரிய போராட்டம் அன்னா ஹாசரே அவர்களால் நடைபெற்று நாட்டின் அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு திரண்டிருந்தது.மகிழ்ச்சி!


ஆனா இப்போ நம்ம தமிழ்நாட்டில் மக்களின் உயிருக்கு ஊரு விளைவிக்கும் வகையில் கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள அணுஉலைகளை திறக்கக்கூடாது என போராடத்துவங்கி இன்று 127 பேர் உண்ணாவிரத போரட்டத்தை துவக்கி உள்ளனர்!
இந்த போராட்டத்திற்கு நம்மால் முடிந்த வரை சமூக வலைத்தளங்களில் ஆதரவு திரட்டுவோம்!நம் சக பதிவர் கூடல் பாலா நேரடியாக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்!அவருக்கும் நமது ஆதரவையும்,போராட்டம் வெற்றி பெற நம் பங்களிப்பையும் தருவோம்!


முதலில் ஏன் அணுஉலையை திறக்க்கக்கூடாது  என்பவர்கள் பாலாவின் இந்த பதிவு கள்பதிலளிக்கும்!

கூடங்குளம் அணுமின் நிலையம் :பில்டிங் வீக் ,பேஸ்மென்ட் அதைவிட வீக் !


கூடங்குளம் அணு உலைக்கெதிராக போராட்டம் ஏன் ?நேரடி ரிப்போர்ட் .


இந்த பதிவுகளுக்கு நான்  அளித்த பின்னூட்டத்தை மீண்டும் எனது  கருத்தாக இங்குவைக்கிறேன்!


"ஐயா!மன்மோகன் நல்ல விஷயங்கள்ல மத்த நாடுகளோட போட்டி போடுங்க!இது மாதிரி விஷயங்கள்ல வேண்டாம்!

காமன்வெல்த் பாலம் ரேஞ்சுக்கு அணுஉலைகள் கட்டப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.நம்ம நாமே அணுக்கதிர்களால் தாக்கிக்க சூழலை உருவாக்காதீர்கள்!
முடிஞ்சா பேஸ்மட்டத்த ஸ்ட்ராங்கா போடுங்க இல்லன்னா ஆணியே புடுங்க வேண்டாம்!"








"கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இது போன்ற ஒரு விபத்து நிகழ்ந்தால் மக்களை எப்படி காப்பாற்றுவீர்கள் என்ற கேள்விக்கு எந்த ஒரு அதிகாரியும் இது வரை சரியான பதிலை அளிக்கவில்லை .
//
இந்தியாவில் உள்ள அணுஉலைகள் பாதுகாப்பானது என பிரதமர் சிலநாட்களுக்கு முன் நம் பிரதமர் சொல்லிருந்தார்!
இதற்க்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?
அப்படி இங்கே உள்ள அணு உலைகள் உண்மையிலேயே பாதுகாப்பானது தான் என்றால் விஷயம் தெரிந்த மக்கள் பிரதிநிதிகளை கூட்டி விளக்கமளிக்கவேண்டியதுதானே?
சரி உண்மையிலே பாதுக்காப்பானது என நிரூபித்தாலும் சமீபத்தில் ஜப்பானில் நிகழ்ந்தது போன்று இயற்கைச்சீற்றங்களைத்தாங்கும் சக்தி உள்ளது என்பதற்கு என்னை உத்திரவாதம்.அப்படி நடக்கும் பட்சத்தில் சீற்றத்தால் ஏற்படும் பாதிப்பை விட கதிரியக்கத்தால் ஏற்படும் பாதிப்பே அதிமாகும் அல்லவா?
முதலில் பாதுகாப்பு குறித்த அணைத்து விசயங்களையும் பூர்த்தி செய்துவிட்டு அப்பறம் அணு உலைகளை திறப்பது பற்றி அரசு யோசிக்கட்டும்!
நாங்கள் இருளில் கூட மூழ்கி இருக்கிறோம்(உயிரோடு)."




இன்னுமொரு பதிவுலக நண்பர் சூர்யாஜீவா அவர்களும் தனது ஆதரவு கரத்தை தனது பதிவுகளின் மூலம் நீட்டி உள்ளார்!

கூடும் குலம்,



நான் இதற்க்கு முன்பு கவிதை வடிவில் ஒரு பதிவிட்டுளேன்!

இந்த நிலைமை வரணுமா தமிழ்நாட்டுக்கு?


நான் ஒன்றும்ம் கண் மூடித்தனமாக அணுஉலைகளை மூடச்சொல்லி சொல்லவில்லை.நான் ஒரு வேதியியல் முதுநிலை பட்டதாரி!எனக்கு ஓரளவுஅணு உலைகளால் ஏற்படும் நன்மை பற்றி தெரியும்.அணுக்கதிர் வீச்சால் ஏற்படும் தீமைகளைப்பற்றியும் தெரியும்.கதிர்வீச்சின் பாதிப்பு எவ்வளவு காலம் வரை தொடரும் என்றும் தெரியும்.அதனால் தான் சொல்கிறேன்,அணுஉலைகள் உண்மையிலே யே பாதுகாப்பானதாகஇருந்தால்எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்று மக்களுக்கு உணர்த்திவிட்டு,ஒருவேளை கதிர் வீச்சு ஏற்பட்டால் அப்பகுதி மக்களை எந்த அளவிற்கு பாதுகாப்பாக காப்பாற்றுவீர்கள் என்று செயல் முறையில் காட்டிவிட்டு,மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு எவ்வித இடைஞ்சலும் வராது என உத்திரவாதம் அளித்துவிட்டு அணுஉலைகளை திறப்பதைப்பற்றி யோசியுங்கள்!போராடுபவர்களின் நோக்கமும் இதுதான்!
_________________________________________________________________________________________
நேற்று கூட பிரான்ஸ் நாட்டு செர்நோபில் அணுநிலையத்தில் ஒருவர் 
உயிர்இழந்திருக்கிறார்!உண்மையான காரணத்தை நிர்வாகத்தினர் 
சொன்னதாக தெரியவில்லை.மேலும் கவலை அளிக்குவிஷயமாகவும்,நமக்கு எச்சரிக்கவும்செய்கிறது!
_________________________________________________________________________________________
மேலும் வாசிக்க "இதற்கு நாம் என்ன செய்ய போகிறோம்?"

Monday, September 12, 2011

முத்தமிட வாரீயளா?


யாருக்கு எப்படியோ
இந்த பழக்கம் எனக்கு
எப்படி வந்தது என்று
எனக்கே தெரியவில்லை

அவளது உதடுகளை உரசாமல்
அன்றைய தினம் எனக்கு
அவ்வளவு இனிப்பாய் இருப்பதில்லை

அது என்னவோ தெரியவில்லை
ஒரு நாள் தவறினால் கூட
ஒரு கை இழந்தது போலிருக்கும்

நான் முத்தமிடும் நேரத்தில்
எனக்கு சொந்தமான அந்த உதடுகள்
எஞ்சிய நேரங்களில் வேறு யாருடனோ  
முத்தமிட்டுக்கொண்டிருக்கும்


இதில் எனக்கு  அவமானமோ வருத்தமோ
இம்மியளவும் இருப்பதில்லை
சொல்லப்போனால் இது எனக்கு
சந்தோசத்தையே தருகிறது

ஏனிப்படி சொல்லுகிறேன் என்றால்
இச்சமூகத்தில் நிலவிய
சாதி பாகுபாட்டை
சிறிதளவு குறித்த பெருமை இவளது
உதடுகளையே சேரும்



சிலநேரம் இவளை முத்தமிடும் தருணங்களில் தான்
பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன
அது அரசியலாகட்டும்
அலுவலகமாகட்டும்
ஆனால் பல நேரங்களில்
இததருணங்கள் இக்கட்டில் போய் முடியும்

ஆனாலும் அவளது உதடுகளை
முத்தமிடாமல் என்னாலிருக்கமுடியாது
என்னால் மட்டுமல்ல என்னைப்போல்
பலரும் அவளது உதட்டு சுவைக்கு
அடிமையாகிக்கிடக்கின்றனர்
அப்படிதானே!
இதோ நீங்களும் முத்தமிடுங்கள்
அவளது உதடுகளில்!!!







______________________________________________________________________________
ப்ளாக் ஸ்கூலுக்கு விட்ட லீவு முடிஞ்சு திரும்பி வந்தாச்சு!யாருமே இல்லாத கடையில் டீ ஆத்திக்கிட்டு இருந்தப்ப போட்ட டீய கொஞ்சம் சுட வைச்சு குடுத்திருக்கேன்.குடிச்சிட்டு இருங்க சுட சுட புது டீ போட்டுட்டு வரேன்!எல்லார் கடைலேயும் வந்து டீ குடிக்கிறேன்!வரட்டுமா?
_________________________________________________________________________________


மேலும் வாசிக்க "முத்தமிட வாரீயளா?"

Tuesday, September 6, 2011

ஐயோ!பாவம் நீங்களே கன்பியுஸ் ஆகிட்டிங்க!!!



காதலி-டியர்!எங்கே என் பிறந்த நாள் பரிசு?
காதலன்-அவசரப்படாதே டியர்!அங்கே பார்,ஒரு பி.எம்.டபுள்யூகார் நிக்குதே?
காதலி-வாவ்! அந்த பி.எம்.டபுள்யூகாரா?
காதலன்-ஆமா!அதே கலர்ல நைல் பாலிஷ்!இந்தா!!!!
காதலி-போடாங்!!!!!!!!!!!


ஒரு மென்டலை எப்படி கன்பியுஸ் பண்றது?
பதில்-ஒரு பலாப்பழத்த வைச்சு தான்!

என்ன கன்பியுஸ் ஆகிட்டிங்களா?ஐடியா!வொர்க் ஆகுது!


பாட்டுஎழுதுறவர்  பாடலாசிரியர் ஆகலாம்.
கதை எழுதுறவர் கதாசிரியர் ஆகலாம்
ஆனா பேர் எழுதுறவர் பேராசியர் ஆகா முடியுமா?(கோகுல்,கோகுல்,கோகுல் நானும் இனி பேராசிரியர் அப்பறமென்ன?நீங்களும் ஆக வேண்டியதுதானே?)
__________________________________________________________________________________

நியூட்டனின் ஐந்தாம் விதி-ஒரு பரிட்சை ஹாலில் உள்ள மாணவர்களின் எழுதும் திறன் அந்த ஹாலில் உள்ள அழகிய மாணவிகளின் எண்ணிக்கைக்கு எதிர் விகிதத்தில் இருக்கும்!(நல்ல 
வேள நியூட்டன் இப்ப இல்ல)


அவன்-உங்க கார் எப்டி ஆக்ஸிடெண்ட் ஆச்சு?
இவன்-அதோ!அங்கே ஒரு மரம தெரியுதா?
அவன்-ஆமா!தெரியுது!
இவன்-நேத்து அது எனக்கு தெரியல!(தேங்க்ஸ் டூ வாசன் ஐ கேர்!)

--------------------------------------------------------------------------------------------------------------------------------
சார் !எதுக்கு சார் படிக்கற பையன போட்டு இந்த அடி அடிக்குறிங்க!
அடப்போங்க சார்!பரிட்சைக்கு கூட போகாம உக்காந்து படிச்சுட்டு இருக்கான்!(இந்த ஐடியா நான் படிக்கும் போது தோணாம போய்டுச்சே!)
__________________________________________________________________________________

இப்படி ஒரு லீவ் லட்டர் பாத்து இருக்கிங்களா?

அனுப்புதல்
            நான்தான்,
            உங்க கிளாஸ் தான்,
            உங்க ஸ்கூல் தான்,
            இதே ஊர்தான்.
பெறுதல்
           உங்களுக்கு தான்,
          இதே கிளாஸ் தான்,
          இதே ஸ்கூல் தான்,
          இதே ஊர்தான்.

பொருள்: லீவ் வேணும்.

சார்,
        எனக்கு நாளைக்கு எனக்கு ஸ்கூல் வர பிடிக்கல. உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கங்க,நாளைக்கு நான் ஸ்கூலுக்கு வரமாட்டேன்!


தேதி;இன்னைக்கு தான்.                      தங்கள் கீழ்படிந்த,
இடம்:எங்க வீடு தான்.                       உண்மையான,
                                           இன்னும் பல ந்த,பல ஆன
                                           மறுபடியும் நான்தான்!
________________________________________________________________________________  

அப்பறம் சில பல கல்யாணங்கள் இருப்பதாலும்(எனக்கு இல்லைங்க-நண்பர்களுக்கு) அப்படியே ஒரு டூர் அடிக்கப்போவதாலும்
நானும் ஒரு நாலைஞ்சு நாளைக்கு ப்ளாக் ஸ்கூலுக்கு லீவு.அது வரைக்கும் மேல இருக்கறத படிச்சு சிரிச்சிட்டு இருங்க!தனியா சிரிச்சு வீட்ல, ஆபீஸ்ல யாராவது தப்பா நினைச்சா நான் பொறுப்பல்ல!வரட்டுமா!!சந்திப்போம்!!
__________________________________________________________________________________


எஸ்.எம்.எஸ்அனுப்பியவர்களுக்கு நன்றி!

மேலும் வாசிக்க "ஐயோ!பாவம் நீங்களே கன்பியுஸ் ஆகிட்டிங்க!!!"

Monday, September 5, 2011

மனித நேயம்!!!



                                


                பேருந்தில் ஊனமுற்றோர் நின்றிருந்தாலும்
       பார்காததது போல் அமர்ந்திருக்கும் சிலர்
    
       பாதை கடக்க முடியாமல் திணறும்
       பார்வையற்றோரை பார்க்காமல் ஓடும சிலர்

       யாருக்கேனும் விபத்து நேரிட்டால் கூட
       யாருக்கென்ன என ஓடும் சிலர்
    
       பாதாள சாக்கடை திறந்தே கிடந்தாலும்
       பார்த்துக்கொண்டே போகும் சிலர்

       பொருட்கள் விற்க வீடு தேடி வருவோரை
       பொறுமையின்றி பொறிந்து தள்ளும் சிலர்

       பக்கத்துக்கு வீட்டில் கொலை கொள்ளையே நடந்தாலும்
       நமக்கென்ன என டி.வீ .பார்க்கும் சிலர்

       ஆதரவற்றோருக்கு ஆதரவு கேட்டு வரும்
       அன்பு உள்ளங்களை அவமதிக்கும் சிலர்

       ஏழை மக்கள் சிறுக சேமிக்கும் பணத்தையும்
       ஏப்பம் விடும் சிலர்

       என பலர் இவ்வுலகில் உலவிக்கொண்டிருந்தாலும்
       கொஞ்சமேனும் மழை பெய்கிறதென்றால்
                

      அது உலகின்எங்கோ ஓர் மூலையில்
      மனிதநேயம் வாழ்ந்து கொண்டிருப்பதாலே!! 


"இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட 
ஒரு கை நீட்டி தர்மம் செய் நீதான் கடவுள்"
--அன்னை தெரசா
_________________________________________________________________________________________________________
நேற்று(04.09.11-ஞாயிறு)சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற பதிவர் சந்திப்பில் 
கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி..கலந்து கொண்ட பதிவர்களுக்கும்,சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி!
__________________________________________________________________________________________________________

மேலும் வாசிக்க "மனித நேயம்!!!"

Saturday, September 3, 2011

எங்கே போய் சொல்ல?






பூகம்பத்தில் இடிந்து விழுந்தது
வீடு கட்ட வாஸ்து பார்க்கும்
வாஸ்து நிபுணர் வீடு!

அடுத்தவரின் எதிர்காலத்தை
கணிதுக்கூறும் சோதிடருக்கு
அடுத்த வேளை உணவில்லை!

அம்பாளை பூஜிக்கும் அர்ச்சகர் வீட்டில்
அடுப்பு எரியவில்லை
ஐந்து நாட்களாக!

வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால்
தற்கொலை செய்து கொண்டார்
அதிர்ஷ்டக்கல் வியாபாரி!

பட்டப்பகலில் வீடு புகுந்து
துணிகரக்கொள்ளை
போலிஸ்காரர் வீட்டில்!

எல்லை காத்து நிற்கும்
இராணுவவீரன் வயலில்
வரப்புத் தகராறு!

தவறுகளை மாணவர்களுக்கு
சுட்டிக்காட்ட வேண்டிய ஆசிரியரே
தம் அடித்துக்கொண்டிருக்கிறார்!


எங்கே போய் சொல்ல?


மேலும் வாசிக்க "எங்கே போய் சொல்ல?"

Friday, September 2, 2011

தம் அடிக்கலேன்னு சத்தியம் பண்ணாலும் நம்ப மாட்டேன்!!!


இன்னைக்கு இந்த செய்திய பாத்துட்டு ரொம்ப ஷாக் ஆகிட்டேன்!நாம எந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லாம இருக்கோம்னு தெரியுது. நாமளும் சிகரெட் பிடிக்கலைன்னாலும் அதோட விளைவுகளை தெரிஞ்சோ தெரியாமலோ அனுபவிச்சிட்டு வருகிறோம்.
இனி யாரும் எனக்கு சிகரெட் பழக்கம் இல்லேன்னு சொல்லமுடியாது போலிருக்கு.அந்த செய்தி இதோ!

ஒருகொசுவர்த்தி சுருளின் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்கு சமம் என புதுடில்லியில் நடைபெற்ற மருத்துவ கருத்தரங்கில் டாக்டர் சந்தீப் சால்வி தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை மற்றும் இந்திய மருத்து ஆராய்ச்சிமையம் போன்றவை இணைந்து நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டசெஸ்ட் ரிசர்ச் பவுண்டேசன் இயக்குனர் சந்தீப் சால்வி இதனை தெரிவித்தார்.

மேலும் புதுடில்லியை சேர்ந்த பத்ரா மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் சஞ்சீவ் பகாய் பேசும் போது இந்தியாவில் காற்றினால் ஒலியினால், மாசுவால் மனித உடல் நலத்திற்கு விளையும் கேடு குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றார்.

ஒலி மாசுபாட்டால் ஆண்டு தோறும் ஒரு லட்சம் இந்திய குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும், மரபியல் குறைபாடு உண்டாவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.


செய்தி-தினமலரில் வந்தது.





இந்த கொசுவர்த்தி பண்ற பாட்டுக்கு கொசு படுத்தற பாடு பரவால்ல போலிருக்கே!

இதுக்கு தீர்வு என்னன்னா வலைக்குள்ள போறதுதான்.என்னோட வலைய சொல்லலைங்க கொசுவலை.(கொசுவுக்கு வலை போட்டா வலைக்குள்ள என்ன இருக்கும்னு குசும்புக்கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது!)



பின்குறிப்பு-நீங்க பிளாஷ்பேக் நினைவுகளுக்கு போகும்போது வரும் கொசுவர்த்திச்சுருள் ஆபத்தானது அல்ல.தாராளமாய் நீங்கள் பழைய நினைவுகளை அசை போடலாம்.




மேலும் வாசிக்க "தம் அடிக்கலேன்னு சத்தியம் பண்ணாலும் நம்ப மாட்டேன்!!!"

Thursday, September 1, 2011

முதல்ல கைய குடுங்க அம்மா!!


இது எனது முந்தைய பதிவுக்கு நானே எழுதும் எதிர் பதிவு இது(உனக்கெல்லாம் வேற யார் எதிர்பதிவு போடுவாங்க!நீயே போட்டுகிட்டாதான் உண்டு!உங்க மைன்ட் வாய்ச கேட்ச் பண்ணிட்டேன்!)எனது முந்தைய பதிவில்  இப்படி கைய விரிச்சுட்டீங்களே அம்மா!!!(கிளிக்கவும்)என  தூக்கு தண்டனை விசயத்திலும் இந்த வழக்கைப்பற்றியும் மாறி மாறி பேசி வருவதை சுட்டிக்காட்டியிருந்தேன்.

இந்த முறையும் மாற்றித்தான் பேசியிருக்கிறார்.ஆனால் இது நல்லமாற்றம்!வரவேற்கத்தக்க மாற்றம்!போராடிய அனைவரும் எதிர்பார்த்த மாற்றம்!மனித நேயம் கொண்ட அனைவரும் முகமலர்ந்து போற்றும் மாற்றம்!மாற்றத்திற்கு காரணம் எதுவாய் இருந்தாலும்(உள்ளாட்சி தேர்தலாய் இருந்தாலும்)அதையெல்லாம் ஆராயாமல் எல்லோரும் அம்மாவுக்கு கை கொடுப்போம்!அம்மாவுக்கு ஒரு ராயல் சல்யூட்!



திரும்பவும் வேதாளம் முருங்கை மரத்துல ஏறாம இருந்தா சரி!
ஆனால் அம்மா ஒரே ஒரு உறுத்தல் இந்த முடிவ ஒரு ரெண்டு நாள் முன்னாடி எடுத்திருந்தீங்கன்னா செங்கொடி என்ற துடிப்பான தோழரை இந்த தமிழகம் இழந்திருக்காது!பலரும் சொல்லிவிட்டார்கள்.என்பங்குக்கு நானும் சொல்கிறேன் .தோழர்களே!உணர்வுத்தீயை நெஞ்சில் மட்டும் ஊற்றுவோம்!இன்னொரு முத்துக்குமார்,செங்கொடியின் முடிவை யாரும் எடுக்கவேண்டாம்!
இந்த தண்டனையை எதிர்த்து போராடி,உண்ணாவிரதமிருந்தோர்,சமூக வலைதளங்களில் குரல் கொடுத்தோர்,பிற நாடுகளில் இருந்து ஆதரவு தந்தோர்,, அரசியல் தலைவர்கள் (அரசியல் நோக்கம் உள்ளே இருந்தாலும்,) அனைவருக்கும் நன்றிகள்!


அப்பறம் போன பதிவில், முத்துக்குமார் யார் என்று  ஈ.வி.கே.எஸ்.ஒரு முறை கேட்டிருந்தார்.அது போல செங்கொடி யார் என காங்கிரஸ் காரர்கள் யாரும் கேட்க்க வேண்டாமென வேண்டுகோள் விடுத்திருந்தேன்,ம்ம்ம்ஹூம் இளங்கோவன் இன்னும் திருந்தியிருப்பதாக தெரியவில்லை.புதிய தலைமுறை செய்தி டி.வியில் சொல்றார்.தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருக்கிரதே தவிர நிறுத்தி வைக்கப்படவில்லை.நிச்சயம் தூக்கில் போட்டே ஆகணும் என்று.இவருக்கு தேர்தல்ல போட்டது பத்தாது போல இருக்கு.இவருக்கு இன்னும் நல்லா போடணும்.ஈரோட்டுப்பெரியவருக்கு இருந்ததில் பாதி கூட அவர் பேரனுக்கு  இல்லாமல் போனது தான் வருத்தமளிக்கிறது!
என்ன கேக்குறிங்க கலைஞர் பத்தியா?நோ கமெண்ட்ஸ்!!


இன்னொரு விஷயம்!
பிள்ளையார் சதுர்த்தியை நல்லபடியா கொண்டாடுவோம்!களிமண்ணுல செய்த பிள்ளையாரை மட்டும் வைச்சு வழிபடுவோம்!(என் தலைல இருக்கறதான்னு நீங்க கேக்குறதை வன்மையா கண்டிக்கிறேன்!)பிள்ளையார கடல்ல கரைக்குரேன் பேர்வழின்னு போட்டு டமால் டமால் ன்னு சாத்த வேண்டாம்!பாவம் அவர்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!




புகைப்படம் உதவி-நண்பன் மாதேஷ்(முதல்)&சில இணையங்கள்.



மேலும் வாசிக்க "முதல்ல கைய குடுங்க அம்மா!!"