என்ன நண்பர்களே?என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கா?
என்ன ஆச்சுன்னா,ஹாஸ்டல் வார்டன் வந்து காலை ப்ரேக்பாஸ்ட் முடிந்தவுடன் விடுதி மூடப்படும்.எல்லோரும் கிளம்புங்க’ன்னார்.
அப்போ exam-னுவாய தொறந்தான்,நேத்து நோட்ஸ் கேட்டானே அதே பிரகஸ்பதிதான்!எல்லோரும் திரும்பி முறைக்க கமுக்கமானான்!!
சாப்பிட மெஸ்ஸுக்கு போனா நேத்து மதியதுல இருந்து கரண்ட் இல்லாததுனால எதுவும் ரெடி பண்ண முடியல.ஆளுக்கு ரெண்டு தோசைதான்’னு போட்டுட்டு தொரத்தி விட்டுட்டாங்க!university-ல பசங்களுக்கு கிட்டத்தட்ட ஐஞ்சு ஹாஸ்டலும் பொண்ணுங்களுக்கு ரெண்டு ஹாஸ்டலும் இருக்கு.அதுல பசங்க ஹாஸ்டல்க்கு மட்டும் இந்த நிலைமை.
ஊரெல்லாம் தண்ணியா இருந்ததால் கிட்டத்தட்ட எல்லாரும் ஒரு ஷார்ட்ஸ் ,சட்டைன்னு மாட்டிகிட்டு பேக் எதுவும் எடுத்துக்கல.பணம்?ஏ.டி.எம்மும் வொர்க் ஆகல ஆளாளுக்கு இருந்த பணத்த பிரிச்சுகிட்டு கிளம்பினோம்.
வெளியே முழங்கால் அளவிற்கு தண்ணீர். அப்படியே ரெண்டு கி.மீ.நடந்து பஸ்ஸ்டாண்ட் போனா அதிர்ச்சி.நேத்து பசங்க சொன்ன மாதிரி சிதம்பரம் எல்லா வழிகளிலும் துண்டிக்கப்பட்டிருந்தது.அங்கிருந்து மூணு கி.மீ நடந்து போனா கொஞ்ச தூரம் லாரியில கொண்டு போய் விடராங்கலாம்.அப்படியே மாறி மாறி கடலூர் போய்டலாம்’னு சொன்னாங்க!
வழி முழுக்க தண்ணிதான்.குடிசைவாழ் மக்கள் பள்ளிக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டு உணவுப்பொட்டலத்திற்க்காக காத்திருந்தனர்.எங்களுக்கும் கிடைக்காதா என பார்த்தோம்.ரெண்டு தோசை தான சாப்பிட்டோம்.எந்த கடையும் திறந்திருக்கல.வழியில குடிசைங்க மட்டுமல்லாம மாடி வீடுகளும் தரைதளம் பாதி அளவுக்கு மூழ்கி இருந்தது.(சமத்துவம்).
கொஞ்ச தூரம் போனதும் லாரியில லாரில ஏத்திகிட்டு ஒரு பத்து கி.மீ தள்ளி கொண்டு போய் புவனகிரில விட்டாங்க.பத்து ரூவா வாங்கிகிட்டாங்க.(என்ன ஒரு சேவை).அங்கே போனால் அங்கிருந்தும் எந்த ஊருக்கும் தொடர்பில்லையாம்.சரி நடந்தே போயிடலாம்னு பாத்தா நடுவில ரெண்டு இடத்துல பாலம் உடைஞ்சு போச்சு,வேண்ணா ரயில் தண்டவாளத்துலயே நடந்து கடலூர் போயடலாம்னாங்க.(தலைப்புக்கு வந்தாச்சு).அங்கேருந்து ரயில் பாதை ரெண்டு கி.மீ.போறதுக்குள்ள ரொம்ப அவஸ்தை அதுவும் ஒரு இடத்துல இடுப்பளவுக்கு தண்ணி.பாதுகாப்புக்கு கயிறு கட்டி இருந்தாங்கஒருத்தர் பின் ஒருத்தரா போனோம்.
தண்ணியில நிறைய பாம்புங்க அடிச்சுகிட்டு வந்துச்சு.எங்கள அதுங்கள பாத்து நாங்க ஓட எங்களப்பாத்து அதுங்க ஓட ஒரே பீதியாகிடுச்சு.ஒரு வழியா தண்டவாளத்த தொட்டாச்சு!சொன்னா நம்ப மாட்டிங்க தண்டவாளத்தைத்தவிர எல்லா இடத்திலும் தண்ணீர்.தண்ணீர்.அப்படியே நடக்க ஆரம்பிச்சோம்.ஆரம்பிசொம்னா எத்தனை பேர்?கிட்டத்தட்ட ஐஞ்சு ஹாஸ்டலில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள்.கூடவே பொதுமக்களும்.
மழை வேற அப்பப்ப பேஞ்சுது.எங்கயும் ஒதுங்க முடியல(.எரும மாட்டுல மழை பேயஞ்ச மாதிரிங்கற பழமொழிக்கு அன்னைக்கு தான் அர்த்தம் தெரிஞ்சுது).முன்னால் போய்கிட்டு இருந்த சில பசங்களுக்கு வழியில ஒரு இடத்துல பொட்டலம் கிடைச்சுதாம்.வைச்சுருந்து ஷேர் பண்ணி சாப்பிட்டோம்.காலையில 9 மணிக்கு கிளம்பி இப்ப மதியம் ஒரு மணி. ரெண்டு வாய் சோறு கெடைச்ச தெம்புல நடக்க ஆரம்பிச்சோம்.
அங்கே ஒரு ஷாக்!ஒரு இடத்துல தண்டவாளத்துக்கு கீழ மண்ணு அரிச்சுகிட்டு போய் ஒரு முப்பது அடிக்கு சப்போர்ட்டு இல்லாம தொங்குது.கீழ தண்ணியின் வேகமும் அதிகமா இருந்தது.கீழயும் இறங்கி போக முடியாது.ரெண்டு ரெண்டு பேரா தோளை பிடிச்சுகிட்டு தண்டவாளத்துல ஆளுக்கொரு பக்கமா மெதுவா நடந்து தாண்டினோம்(தோள் கொடுப்பான் தோழன்).
வழியில் பல கிராமங்களில் சிக்கிக்கிட்டு இருந்த மக்கள படகுகள்ல போய் மீடுகிட்டு இருந்தாங்க!ஒவ்வொரு தபா மழை பெயும்போதும் வீரானத்துல ஏரி ரொம்பிடுச்சுன்னாதண்ணி தொறந்துடுவாங்க இப்படித்தான் எங்க நெலம’ன்னு ஒரு ரயில் நிலையத்துல தங்கியிருந்த மக்கள் சொன்னாங்க.வழியில ஹெலிகாப்டர்ல யாரோ வெள்ளச்சேதத்த பார்வையிட்டுகிட்டு(?)போனாங்க! ம்ம்ம்.(என்னடா நடக்குதிங்க. நான் மேல வந்துட்டண்டா)
மணி மூணு.பசி களைப்பு ஒரு இடத்துல கொஞ்சம் பனங்கிழங்கு கிடைச்சுது.ஆலப்பாக்கம் ரயில் நிலையம் தாண்டி ஒரு பாலம் கீழே பாத்தா தண்ணி போற வேகத்துல தலை சுத்துது.கீழ பாக்காம நடக்க முடியல.ஏன்னா தண்டவாளத்துல போட்டிருந்த தகரப்பலகைங்க துருப்பிடிச்சிருந்துது.தாண்டறதுக்குள்ள போதும் போதும்னு ஆய்டுச்சு.ஒருத்தன் வாந்தி எடுத்துட்டான்.
இன்னும் எவ்வ....... தூ.....? அது ஒன்னுமில்லைங்க பசி களைப்பு மூச்சு முட்டி நுரைதள்ளிடுச்சு.இன்னும் எவ்வளவு தூரம்னு வழியில கேட்டோம் இன்னும் பத்து கி,மீ’ன்னாங்க.மணி நாலு.நிறைய தேளுங்க,பூரான்,பாம்புங்க அதுங்க பாட்டுக்கு யாரையும் தொந்தரவு பண்ணாம போய் வந்துகிட்டு இருந்துச்சுங்க.இருந்தாலும் மனசுல பயம்,வெளிக்காட்டிக்காம நடந்தோம்.
ஒரு வழியா கடலூர்’க்கு ஐஞ்சு கி.மீ முன்னால வரைக்கும் பஸ் வருதுன்னு கேள்விபட்டு ரோட்டுக்குபோனோம்.ஒரு அரைமணிநேரம் கழிச்சு வந்த பஸ்சுல ஏறி கடலூர் வந்தோம்.மணி இரவு ஏழு!இங்க வந்து பணம் வச்சுருக்க நண்பர்கள் ஏ.டி.எம்.ல பணம் எடுத்து எல்லாருக்கும் கொடுத்தாங்க.சாப்பிட்டுட்டு பஸ் ஏறி அவங்கவங்க ஊருக்கு போனோம்.
இன்னைக்கு நினைசுப்பாத்தா என்ன ஒரு அனுபவம்’டான்னு நினைக்கத்தோணுது.ஆனா ஒரு விஷயம் நண்பர்களே!எப்படிப்பட்ட ரணகளமான பயணமாக இருந்தாலும் நண்பர்களுடன் பயணித்தால் சுகமாகவே முடிகிறது என தெரிந்து கொண்டேன்!(நிச்சயமா ஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்!!)
பொறுமையாக வாசித்தமைக்கு நன்றி நண்பர்களே!
Tweet | ||||||
53 comments:
ஹாஸ்டல் மூடினதுதான் உங்களுக்கு அதிர்ச்சியா? உங்கள் அனுபவம் அழகாகவே இருக்கு. எத்தனை துன்பம் வந்தாலும் அதை மறக்கடித்துவிடும் நட்பு.
@Dr. Butti Paul
ரெண்டே தோசை போட்டுட்டு போங்கடான்னு சொன்னா அதிர்ச்சியா இருக்காதா?
த்ரில்லிங் அனுபவம் தான் கோகுல்...
படங்கள் ஈஸியா புரிய வைத்தன...
@ரெவெரிநன்றி!தேடிக்கண்டுபுடிச்சேன்!
மாப்பிள இரண்டு பகுதிகளையும் இரசித்து வாசித்தேன் அருமையாக இருக்கையா அதுவும் நன்பர்களோடு இக்கட்டான நேரத்தில செய்த பயணம்.. இப்போ யோசித்து பாக்கிறேன் உங்களுக்கு"தண்ணி"பட்ட பாடுதான்யா.. ஹி ஹி உங்களோட சேர்ந்த குற்றத்திற்காக எல்லாவற்றுக்கும் ஓட்டு போட்டாச்சையா..!!!))
@காட்டான்என்ன பண்றது மாம்ஸ்!தண்ணி போடாமலே தள்ளாடிட்டோம் அன்னைக்கு!
செம த்ரில்லிங் அனுபவம்...
நல்ல வர்ணனை கோகுல்.
அந்தச் சூழலிலும் உங்களால் எப்படி உங்களால்
இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிப்பது போன்ற
மன நிலையில் இருக்க முடிந்தது
படமும் பதிவும் அந்தச் சூழலை அப்படியே
கண் முன் நிறுத்தியது
த.ம 6
நல்ல அனுபவம் பாஸ்...த்ரிங்கா இருந்துச்சி
நல்ல அனுபவம் .அருமையாக தொகுத்து இருக்கிறீர்கள்
!(நிச்சயமா ஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்!!)
அழகாச் சொன்னீங்க நண்பா.
நல்ல நண்பர்கள் கடவுள் கொடுக்கும் வரம் ...
ஒரு மனிதன் சாகும் போது தன நண்பனுக்கும் தன் GIRL FRIEND க்கும் மெசேஜ் கொடுத்தானாம் " நான் போகிறேன்"
GIRL FRIEND பதில் கொடுத்தாளாம் " என் மொபைலுக்கு சார்ஜ் ஏற்றிவிட்டு போ " என்று.
நண்பன் பத்தி கொடுத்தானாம் " முட்டாளே ... கொஞ்சம் பொறு .. நானும் வருகிறேன் ..."
தீடீரென்று நட்பை வாசித்தவுடன் எழுத தோன்றியது
நல்லதோர் அனுபவப் பகிர்வு .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ................
எல்லா ஓட்டும் போட்டாச்சு சகோ .........
உங்கள் ஊர நோக்கி புயல் வந்துகிட்டு இருந்துச்சுன்னு சொன்னேன் இல்லையா? அது நேரா வந்து கிட்டு இருந்துச்சு, அந்த நேரம் பார்த்து அது சென்னைய பாத்திருக்கு.. அங்க அம்மாவ பாத்துச்சா, டேய் நம்மள விட பயங்கரமான புயல் இங்க இருக்குடான்னு சொல்லி, பயந்து போய் அப்படியே ஆந்திரா போயிடுச்சு... இப்ப புரியுதா ஏன் எந்த புயலும் தமிழகம் மட்டும் வரமாட்டேங்குதுன்னு... அம்மான்னா சும்மா இல்லீங்கோ
அப்பப்பா என்ன பயங்கரமான
பயணம்
அப்படியும் அதைப்
படமாக எடுத்தது வியப்பே
இவ்வாறு மாணவரை அந்த
நிலையில் வெளியேற்றியது
பல்கலைக் கழகமல்ல அது
ஒரு கொல்கலைக் கழகம்
புலவர் சா இராமாநுசம்
(நிச்சயமா ஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்!!) கண்டிப்பா ஒவ்வொரு நல்ல பிரண்டும் தேவை மச்சான்...
பயண பதிவுகள் ஒவ்வொன்றும் படிக்கும்போது நீங்கள் ஒரு பயண விரும்பிங்குறது தெரியுது... கஷ்டத்தையும் இஷ்டமாக ரசிச்சு கலக்கலாக சொல்லிருக்க கோகுல்...
நல்ல அனுபவம் நண்பா.படம் இன்னும் எளிதாக புரிய வைத்தது
நண்பர்களே இன்று பதிவு திருட்டு பற்றி ஒரு பதிவு போட்டுருக்கேன்.வந்து பாருங்க
பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?
ஹி..ஹி.. நல்ல அனுபவம்...
//ரணகளமான பயணமாக இருந்தாலும் நண்பர்களுடன் பயணித்தால் சுகமாகவே முடிகிறது என தெரிந்து கொண்டேன்!(நிச்சயமா ஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்!!)//
அருமை.
கோகுல் முடிந்தால் என்னை தொலைபேசியிலோ அல்லது மெயிலிலோ தொடர்பு கொள்ளவும்.
நண்பர்களோடு பயணிப்பது என்பது ஒரு தனி ஜாலி தான்...நண்பா...
உங்களின் அனுபவத்தை ரொம்ப அருமையா பகிர்ந்துள்ளீர்கள்...
கண்டிப்பா நட்பு தேவைதான். நீங்க உங்க அனுபவங்களை எங்க எல்லாருடனும் பகிர்ந்து கொண்டது நாங்களும் உங்க கூடவே பயணம் செய்தமாதிரியே இருந்தது. நல்லா ரசித்து சொல்லி இருக்கீங்க.
நல்ல அனுபவ பயணம் .ஆமா இதுவும் அனுபவம் தானே .இருந்தாலும் அந்தநேரம் மணம் பட்ட அவஸ்தை கஷ்டம தான் நண்பா ,பகிர்வுக்கு நன்றி
அருமையான பயணக் கட்டுரை எழுதியிருக்கீங்க!சபாஷ்!!!!!
நடந்ததைக் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்!
என்ன இது, படிக்க படிக்க சுவாரஸ்யம்(எனோட வருத்தம் உங்களுக்கு சுவாரஸ்யமா என்றெல்லாம் கேட்கப்படா:)))... ஒரு காலத்தில யாழ் மக்களின் திடீர் இடம்பெயர்வை இப்பதிவு ஞாபகப்படுத்திவிட்டது.
இது இப்போதான் நடந்ததா? இப்பூடி மழை நம்பமுடியாமல் இருக்கு.
அதிலயும் பாம்பு பூரான் கடவுளே நினைக்கவே உதறுது, ஆனா இப்படிப் பிரச்சனை வரும்போது மனதில் ஒரு துணிவு வந்திடுவது இயற்கை...
அற நனைஞ்சவருக்கு குளிரென்ன கூதலென்ன என்றாகிடும்.
செங்கோவி said...
செம த்ரில்லிங் அனுபவம்...
நல்ல வர்ணனை கோகுல்.
//
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ரைட்டு.
//
Ramani said...
அந்தச் சூழலிலும் உங்களால் எப்படி உங்களால்
இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிப்பது போன்ற
மன நிலையில் இருக்க முடிந்தது
படமும் பதிவும் அந்தச் சூழலை அப்படியே
கண் முன் நிறுத்தியது
த.ம 6//
வந்து வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி!
ரெயின் வராதா தண்ட வாளத்தில்?.. வந்திருந்தா என்ன செய்திருப்பீங்க, கரை ஏதும் இல்லையே ஒதுங்க?.
இப்போ வெள்ளம் வடிந்துவிட்டதா?.
K.s.s.Rajh said...
நல்ல அனுபவம் பாஸ்...த்ரிங்கா இருந்துச்சி
//
kobiraj said...
நல்ல அனுபவம் .அருமையாக தொகுத்து இருக்கிறீர்கள்
//
முனைவர்.இரா.குணசீலன் said...
!(நிச்சயமா ஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்!!)
அழகாச் சொன்னீங்க நண்பா.
//
உங்கள் ஊக்கமே எனது உற்சாகம் நன்றி நண்பர்களே!
உங்கள் நண்பன் said...
நல்ல நண்பர்கள் கடவுள் கொடுக்கும் வரம் ...
ஒரு மனிதன் சாகும் போது தன நண்பனுக்கும் தன் GIRL FRIEND க்கும் மெசேஜ் கொடுத்தானாம் " நான் போகிறேன்"
GIRL FRIEND பதில் கொடுத்தாளாம் " என் மொபைலுக்கு சார்ஜ் ஏற்றிவிட்டு போ " என்று.
நண்பன் பத்தி கொடுத்தானாம் " முட்டாளே ... கொஞ்சம் பொறு .. நானும் வருகிறேன் ..."
தீடீரென்று நட்பை வாசித்தவுடன் எழுத தோன்றியது//
//
ஹாஹா!அருமை
கடேசியா ஒரே ஒரு லாஸ்ட் குவெஷ்ஷன்......
நீங்க மட்டுமா தப்பி வந்தீங்க? கேர்ள்சின் நிலைமை என்னாச்சு? அவர்களுக்கு நீங்க உதவி செய்ய முன் வரேல்லையோ..?:))))))... சீயா மீயா.
suryajeeva said...
உங்கள் ஊர நோக்கி புயல் வந்துகிட்டு இருந்துச்சுன்னு சொன்னேன் இல்லையா? அது நேரா வந்து கிட்டு இருந்துச்சு, அந்த நேரம் பார்த்து அது சென்னைய பாத்திருக்கு.. அங்க அம்மாவ பாத்துச்சா, டேய் நம்மள விட பயங்கரமான புயல் இங்க இருக்குடான்னு சொல்லி, பயந்து போய் அப்படியே ஆந்திரா போயிடுச்சு... இப்ப புரியுதா ஏன் எந்த புயலும் தமிழகம் மட்டும் வரமாட்டேங்குதுன்னு... அம்மான்னா சும்மா இல்லீங்கோ//
ஆமாங்கோ!
புலவர் சா இராமாநுசம் said...
அப்பப்பா என்ன பயங்கரமான
பயணம்
அப்படியும் அதைப்
படமாக எடுத்தது வியப்பே
இவ்வாறு மாணவரை அந்த
நிலையில் வெளியேற்றியது
பல்கலைக் கழகமல்ல அது
ஒரு கொல்கலைக் கழகம்
புலவர் சா இராமாநுசம்
//
ஆமாங்கய்யா அனுபவிச்ச எல்லாரும் இதைதான் சொன்னாங்க!
@athira
இது நடந்தது 2005-la இது ரெண்டாவது பாகம்!
ரெயின் வராதா தண்ட வாளத்தில்?.. வந்திருந்தா என்ன செய்திருப்பீங்க, கரை ஏதும் இல்லையே ஒதுங்க?.
இப்போ வெள்ளம் வடிந்துவிட்டதா?.//
தண்டவாளத்த பாத்திங்கல்ல?ட்ரெயின் றது பண்ணிட்டாங்க!
கடந்த பதிவை பாருங்க!இது 2005-ல் நடந்தது
athira said...
கடேசியா ஒரே ஒரு லாஸ்ட் குவெஷ்ஷன்......
நீங்க மட்டுமா தப்பி வந்தீங்க? கேர்ள்சின் நிலைமை என்னாச்சு? அவர்களுக்கு நீங்க உதவி செய்ய முன் வரேல்லையோ..?:))))))... சீயா மீயா.//
அவங்கள எல்லாம் சேஃபா ரெண்டு நாள் ஹாஸ்டல்ல யே தங்க வச்சிருந்து ரெண்டு நாள் கழிச்சு அனுப்பினாங்க!
நாங்க தான் பாவம்!
தமிழ்வாசி - Prakash said...
ஹி..ஹி.. நல்ல அனுபவம்...
//
என்ன சிரிப்பு நம்ம அனுபவம் உங்களுக்கு சிரிப்பு!ம்ம்ம்
பரவால்ல
இப்ப நினைச்சா எனக்கே சிரிப்பாதான் வருது!
@கோகுல்
ஹா..ஹா..ஹா... எங்கோ கேட்ட ஒரு உண்மைச்சம்பவம்...
பஸ்சில ஒருவர் (சீட்டில்) இருந்தார், ஒரு பெண் ஏறினா, அவவுக்கு ஆரும் எழுந்து இடம் கொடுக்கவில்லை, நின்ற ஒருவர் சீட்டில் இருந்தவரைப் பார்த்துச் சொன்னார், பெண் நிற்கிறாவே எழுந்து இடம் கொடுக்கலாமே, பெண் என்றால் பேயும் இரங்குமே என, அதுக்கு சீட்டில் இருந்தவர் சொன்னார்...
அது பேய்தான் இரங்கும், நான் இரங்கமாட்டேன் என:))))))))).
க.(தலைப்புக்கு வந்தாச்சு)//
அடிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்
ஓவர் மொக்கையாப் போடுறீங்களே. ஒரு நொந்த அனுபவத்தை வைச்சு.
இனிய இரவு வணக்கம் பாஸ்,
நொந்த அனுபவத்தை சீரியஸ் இல்லாம மொக்க்கையா ரசிக்கும் வண்ணம் எழுதியிருக்கிறீங்க.
வெள்ளப் புயலில் சிக்கி வெந்த அனுபவத்தினை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீங்க.
நினைக நினைக்க சுகம் தரும் என்றாலும், நமக்கெல்லாம் இனிமேல் இப்படி ஓர் கோடூர மழை வேண்டாம் என்றே உங்கள் பதிவினைப் படிக்கையில் தோன்றுகிறது.
வித்தியாசமான நல்ல அனுபவம்! நீங்க சொல்றது மாதிரி, நண்பர்கள் முக்கியம்தான் நண்பா!
ஆமாம்யா மாப்ள...அனுபவங்களே நமக்கு நல்ல நண்பர்களையும் கொடுக்கிறது...அதுவும் நீங்க சொன்ன யத்தார்த்தம் அழகு நன்றி!
நடந்த நிகழ்வை அருமையாக எழுதியுள்ளீர்கள்!
எங்கே பாலத்திற்குள் யாராவது விழுந்து அடித்துச் செல்லப் பட்டு இருப்பார்களோ என்ற அச்சத்தோடு வாசித்தேன்... இளங்கன்று பயமறியாது என்பார்கள்.... அப்படி பயணிக்கும் பொது பேராபத்து நிகழவும் வழி இருக்கிறதல்லவா! ஒருவேளை உண்மையிலே பெரும் தடை இடையில் வந்திருந்தாள் எப்படி வந்த வழியே திரும்பி இருப்பீர்கள் என்று நினைத்துப் பார்த்தால் எப்படி இருக்கும் நண்பரே!
சுவாரஷ்யமாக இருந்தது.
பாதையும் பயணமும் எழுத்தும் வசப்படுகிறது.. வாழ்த்துக்கள்.
இன்று என் வலைத்தளத்தை அவசியம் பாருங்கள் சகோ .........
அடப்பாவி மக்கா... இவ்ளோ தூரமா நடந்து போனீங்க நான் என்னவோ ஒரு 2 கிமீ நடந்து போய் இருப்பீங்கன்னு நெனச்சேன்.
எனக்கும் இதுபோன்ற அனுபவம் உண்டு. 2009 ஆண்டு பெய்த கனமழையில் இதே போன்ற விடுதியில் நண்பர்களுடன் வெளியேறிய நிகழ்ச்சி... சாலையில் (ஒரத்தநாடு)குறிப்பிட தூரம் நீந்தி வந்தோம் என்றால் பாருங்கள். உண்மைதான்...நிச்சயமா ஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்!!
காவிரி டெல்டா பகுதி காவிரி,கொள்ளிடம் ஆறுகள்,மற்றும் கிளை நதிகள்,கால்வாய்களின் கடைமடைபகுதி சிதம்பரம்,சீர்காழி போன்ற பகுதிகள் என்பதால் பருவமழை தீவிரமாக பெய்தால் அந்த பகுதிகள் கடுமையாக, பதிவில் சொன்னது போல மக்களை பாதிக்கும்,வெள்ளத்தில் தத்தளிப்பது வழமையே சுவாரசியமான பதிவுக்கு நன்றி.
திகில் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி..
”துன்பத்திலும் தோள் கொடுப்பான் தோழன்” இது என்னுடைய அசைக்கமுடியாத கருத்து நண்பரே..
உங்களின் உரைநடையும் அதைவிட படக்கோர்வை சூப்பரோ சூப்பர் நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
அன்பின் கோகுல் - 2005லா - இப்ப நடந்த தானேயாக்கும்னு நினைச்சேன் -படங்கள் பயமா இருக்கு - நண்பர்கள் - நட்பின் பெருமையை பறை சாற்றினார்களா ? நல்ல பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment