Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Tuesday, January 3, 2012

"தானே" உணர்த்தியது இதைத்தானோ?




தானே! கடந்த நான்கு நாட்களாக பாண்டிச்சேரி,கடலூர்,சிதம்பரம் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளை புரட்டிப்போட்ட வார்த்தை.இது ஆண்பாலா பெண்பாலா தெரியவில்லை ஆனால் இந்த பகுதிகளில் உள்ள பெரும்பாலானவர்களின் இயல்பு வாழ்க்கையை பாழ் பண்ணிப்போய்விட்டது.வழக்கமாக செய்தித்தாள்களில் மட்டுமே பலத்த காற்றுடல் மழை,புயல் கரையைக்கடந்தது என்பதை பார்த்து வந்தவர்களுக்கு,நான் இப்படித்தான் இருப்பேன் என தன் கோர முகத்தைக்காட்டி உணர்த்திச்சென்றது தானே புயல்.

புயல் குறித்து முன்பே எச்சரிக்கப்பட்டதால் 29.12.2011வியாழன் மதியத்திலிருந்தே கரண்ட் கட்.சாயங்காலம் லேசா மழை ஆரமிச்சது.ராத்திரி ஆக ஆக மழை கொஞ்சம் அதிகமானது.பதினோறு பணிக்கு மேல காத்து கொஞ்சமா வீச ஆரமிச்சு நேரம் ஆக ஆக நெடுஞ்சாலையில் டாப் கியரில் போகும் காரின் வேகமெடுத்தது.வார்த்தைகளில் அளவிட முடியா வேகம்.வீட்டைச்சுற்றியிருந்த தென்னை மரங்களிலிருந்து மட்டைகளும் தேங்காயும் தொபீர்,தொபீரென விழுந்துகிட்டே இருந்துச்சு.ஜன்னல்களை சாத்தியிருந்தும் காற்று இடுக்குகளில் புகுந்து என்னென்னவோ சத்தம் போட்டு பயமுறுத்தியது.இரவு முழுக்க தூக்கமில்லை.இரைச்சல் பேரிரைச்சல்......

வெளிச்சம் வந்ததும் வெளிய வந்து பார்த்தால் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தது மரமெல்லாம்.எதிரில் ஒரு வீட்டின் மாடியிலிருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை பெயர்த்துக்கொண்டு மூன்று வீடு தாண்டி விழுந்தது.சின்டெக்ஸ் டாங்குகள் பல தெருக்கள் தாண்டி கிடந்தன.பெரிய மரம,சின்ன மரம் பாகுபாடு இல்லாம எல்லா மரங்களும் ரோட்டுல ,சிலது வீட்டு மேல,வண்டிங்க மேல முறிஞ்சு விழுந்தது.மொபைல் போன் சிக்னல்கள் கட் ஆகிடுச்சு.கிட்டத்தட்ட மதியம் பன்னெண்டு மணிக்கப்பறம் தான் காத்து நின்னுச்சு.

சரி கொஞ்சம் வெளிய போய் பாத்துட்டு வரலாம்னு போனா,வரலாறு காணாத அளவு சேதம்,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது ன்னு பேப்பர்ல படிச்சதெல்லாம் நேரில் பாத்தேன்.டூ வீலர்ல கொஞ்ச தூரத்துக்கு மேல போக முடியல ரோட்டுல அவ்வளவு மரம்.காற்றடிச்சி ஓய்ஞ்ச பின் மழை பெய்தது,இதனால மீட்பு பணிகளுக்கு தாமதமானது.கடைகள்ல(ஒண்ணு ரெண்டு தான் திறந்திருந்தது) மெழுகுவர்த்தி,பால்,ரவை,நூடுல்ஸ்'க்கெல்லாம் நல்ல கிராக்கி.மெழுகுவர்த்தி பத்து ரூபாய் வரைக்கும் வித்தது(சின்னது தாங்க சாதாரணநாள்ல ரெண்டு அல்லது மூணு ரூவா தான்).கிட்டத்தட்ட புதுவையே முடங்கியிருந்தது பேருந்து,மின்சாரம்,குடிநீர்,தகவல் தொடர்பு எதுவுமில்லாமல் வெள்ளியன்று துண்டிக்கப்படிருந்தது.

சனி காலை விழுப்புரம்-புதுவை,கடலூர்-புதுவை போக்குவரத்து மட்டும் தொடங்கியது.மின்சாரம் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு தலையெடுக்க தொடங்கியது.அருகிலிருந்த தொழிற்சாலைகள் சில தங்கள் நிறுவனத்திலிருந்து ஜெனேரேட்டர் மூலம் குடிநீர் விநியோகித்தன.ATM கள் எங்கும் இயங்கவில்லை.பல இடங்களில் செல்போன் தவர்களும் விழுந்ததால் சிக்னல் கிடைப்பதில் பிரச்னை மூன்றாவது நாளாக கரண்ட் இல்லாததால் செல்போனில் சார்ஜூம் இல்லை பலருக்கு.

ஞாயிறு-புத்தாண்டு எந்தவித ஆர்ப்பாடமுமில்லாமல் தானேவின் புண்ணியத்தில் கடந்தோடியது.பட்டாசு இல்லை,டி.வி.சிறப்புநிகழ்ச்சி இல்லை,செல்போனில் ஹேப்பி நியூ இயர் இல்லை.
சில இடங்களில் நிவாரணம் வரவில்லை என சிலர் நடத்திய சாலை மறியல்களால் நிவாரணம் இன்னும் சற்று தாமதமானதென்னவோ உண்மை.அதிலும் விழுந்திருக்கும் மின் கம்பங்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது.சேதம் எங்கெங்கே என்று அறிவதற்கே சில நாட்கள் பிடிக்கும்.ஆங்காங்கே சரி செய்து மின்சாரம் தருகிறார்கள் எங்கள் பகுதிக்கு ஐந்து நாட்களுக்கு பிறகு நேற்று இரவு மின்சாரம் வந்தது(இதையே அதியசமாக பார்த்தோம்,பத்து நாளாவது ஆகுமென நினைத்தோம்).இவ்வளவும் போதாதென்று நேற்று அதிகாலை நிலநடுக்கம் வருதென மக்கள் நடுத்தெருவில் வந்து நின்றார்கள்.யார் கிளப்பி விட்டார்களோ?


விரைந்து பணியாற்றிய மின் ஊழியர்களுக்கும்,பொதுத்துறை ஊழியர்களுக்கும்,குறிப்பாக அந்தந்த பகுதி மக்களின் உதவிக்கும்,தொண்டு நிறுவனங்களுக்கும் மிக்க நன்றிகளும் பாராட்டுகளும்.
இந்த தானே புயல் மூலம் இயற்கை தானாக ஏதோ சொல்லிச்செல்வது போல தெரிகிறது.நான் கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தமாதிரி எல்லோரும் தண்ணீரை சொட்டு சொட்டாக பார்த்து பார்த்து செலவு செய்ததையும்,மின்வெட்டே இல்லாத புதுவையில் ஐந்து நாளாக மின்சாரம் இல்லாமல் மக்கள் வாழப்பழகியதையும் பார்க்க முடிந்தது.ஒரு வேளை இயற்கை உணர்த்தி சென்றது இது போன்ற நிகழ்வுகளைதானோ???  


புகைப்படங்கள்-http://thegreenogre.blogspot.com,http://kottakuppam.wordpress.com,தினமலர்.
மேலும் வாசிக்க ""தானே" உணர்த்தியது இதைத்தானோ?"

Saturday, October 22, 2011

மழையில் பயணமா?


வணக்கம் நண்பர்களே,
                      கடந்த மூன்று நாட்களாக பதிவுலகப்பக்கம் வர 

முடியவில்லை.காரணம் கடைசியில் சொல்றேன்!

நம்ம ஊருல இப்ப அப்பப்ப மழைபேயுது.ரமணன் பேச்ச எல்லாம் 

கேக்குறது கிடையாது.ஸ்கூல் லீவு விட்டா மழை விட்டுடும்.ஸ்கூல் 

வைக்குற அன்னைக்கு மழை கொட்டும்.அத விடுங்க.எதுக்கு 

இந்தப்பதிவுன்னா இந்த மழைநேரங்களில் நாம வண்டில போகும் போது 

வரும் பிரச்சினைகளைப்பத்தியது.


சாதாரணமாகவே சாலைப்பயணத்தில் இப்போதெல்லாம் பாதுகாப்பு 

கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் மழைக்காலத்தில் பயணம் செய்யும் 

போது நாம் இன்னும் சற்று கூடுதல் கவனம் கொள்வது 

அவசியம்.குறிப்பாக வேகம்,மழை நேரங்களில் சாதாரணமாக நாம் 

செல்லும் வேகத்தை விட குறைந்த வேகத்தில் வண்டி ஓட்டுவது மிக 

அவசியம்.


பிரேக் பிடிக்கும் போது கூடுதல் கவனம் தேவை.ஈரச்சாலைகள் நிச்சயம் 

பிரேக்குக்கு பிடிந்து கொடுக்காது.பிரேக் நாம சொன்ன பேச்ச கேக்காது.டூ 

வீலர்ல கூடுமான வரைக்கும் இரண்டு பிரக்குகளையும் பிடிச்சு வண்டியை 

நிறுத்த முயற்சி செய்யணும்.முடிஞ்சா வரைக்கும் சடன் பிரேக் பிடிக்கறத 

தவிர்க்கணும்.



ரோட்டுல தண்ணி ஓடும் போது வண்டி ஓட்டுறத கண்டிப்பா தவிர்க்குறது 

நல்லது.ரோட்டுல பள்ளம் இருந்தா தெரியாது.அப்பறம் டரியல் தான்.நம்ம 

ஊரு மழைக்கால ரோடுங்களைப்பத்தி உங்களுக்கு தெரியும் தானே?சில 

நேரங்கள்ல ரோட்டோரமா இருக்குற சாக்கடைங்க தண்ணியில 

மறைஞ்சுடும்.கொஞ்சம் அசந்தா சாக்கடையில் ஐக்கியமாக 

வேண்டியதுதான்.நாம கால் அளவு தண்ணிதான் இருக்குன்னு நினைச்சு 

போனா இடுப்பளவு தண்ணி இருக்கும்.வண்டிக்குள்ள தண்ணி போய் 

வண்டிக்கும் பிரச்சினை நமக்கும் தான்!








அப்பறம் இன்னொரு பிரச்சினை சேறு.நீரும் செம்புலச்சேறும் கலந்தது 

போல,பாட்ட கேக்க நல்லா நல்லா இருந்தாலும் வண்டி ஓட்ட ஆபத்தானது 

தான்.டூ வீலர்ல பேலன்ஸ் பண்ண முடியாது.4 வீலர்ல சக்கரங்கள் 

சேத்துல மாட்டிக்கும்.சோ அவாய்ட் பண்றது நல்லது.சில இடங்களில் மண் 

சரிவு அபாயங்களும் இருக்கிறது.



மழை கொட்டிக்கிட்டு இருக்கும் போது வண்டியில போறது ஒரு 

சுகமான,ரசனையான அனுபவம் தான்,ஆனா அதுல நிறைய ஆபத்துக்களும் 

இருக்குங்க.அதனால நமது மழைக்கான பயணங்கள் பாதுகாப்பானதாக 

இருக்க முன்னெச்சரிக்கையுடன் இருப்போம்.அதிலையும் நம்மாளுங்க 

ஒத்த கையில குடைய பிடிச்சுக்கிட்டு இன்னொரு கையில ரிஸ்க்கையும் 

எடுத்துக்கிட்டு வண்டி ஓட்டிட்டு போறாங்க!






அப்பறம் பிளாக் பக்கம் வராததுக்கு காரணம் என் வயதொத்த கூட வேலை 

பாக்கும் நண்பன் ஒருவன் டூ வீலர்ல கம்பெனிக்கு வரும் போது இது 
மாதிரி மழை நேரத்துல பிரேக் புடிச்சு ஸ்லிப்பாகி விழுந்து கையிலும் 
கழுத்திலும் கொஞ்சம் அடி.இப்ப பரவால்ல.மருத்துவமனைக்கு போய் வர 
நேரிட்டதால் நேரமில்ல.இது போல விபத்துகளை தவிர்க்க கொஞ்சம் 
விழிப்புடன் இருப்போம் நண்பர்களே! இருப்போமா?நமது நண்பர்களுக்கும் 
விழிப்பை ஏற்படுத்துங்கள்!நன்றி!




தொடர்புடைய பதிவுகள்


ஹெட் லைட்டால் வரும் இருட்டு!!!


வேகத்தடையா?பயணத்தடையா???



மேலும் வாசிக்க "மழையில் பயணமா?"

Wednesday, October 5, 2011

கரை சேர்த்ததா தண்டவாளம்???





என்ன நண்பர்களே?என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கா?
என்ன ஆச்சுன்னா,ஹாஸ்டல் வார்டன் வந்து காலை ப்ரேக்பாஸ்ட் முடிந்தவுடன் விடுதி மூடப்படும்.எல்லோரும் கிளம்புங்க’ன்னார்.
அப்போ exam-னுவாய தொறந்தான்,நேத்து நோட்ஸ் கேட்டானே அதே பிரகஸ்பதிதான்!எல்லோரும் திரும்பி முறைக்க கமுக்கமானான்!!
சாப்பிட மெஸ்ஸுக்கு போனா நேத்து மதியதுல இருந்து கரண்ட் இல்லாததுனால எதுவும் ரெடி பண்ண முடியல.ஆளுக்கு ரெண்டு தோசைதான்’னு போட்டுட்டு தொரத்தி விட்டுட்டாங்க!university-ல பசங்களுக்கு கிட்டத்தட்ட ஐஞ்சு ஹாஸ்டலும் பொண்ணுங்களுக்கு ரெண்டு ஹாஸ்டலும் இருக்கு.அதுல பசங்க ஹாஸ்டல்க்கு மட்டும் இந்த நிலைமை.

ஊரெல்லாம் தண்ணியா இருந்ததால் கிட்டத்தட்ட எல்லாரும் ஒரு ஷார்ட்ஸ் ,சட்டைன்னு மாட்டிகிட்டு பேக் எதுவும் எடுத்துக்கல.பணம்?ஏ.டி.எம்மும் வொர்க் ஆகல ஆளாளுக்கு இருந்த பணத்த பிரிச்சுகிட்டு கிளம்பினோம்.

வெளியே முழங்கால் அளவிற்கு தண்ணீர். அப்படியே ரெண்டு கி.மீ.நடந்து பஸ்ஸ்டாண்ட் போனா அதிர்ச்சி.நேத்து பசங்க சொன்ன மாதிரி சிதம்பரம் எல்லா வழிகளிலும் துண்டிக்கப்பட்டிருந்தது.அங்கிருந்து மூணு கி.மீ நடந்து போனா கொஞ்ச தூரம் லாரியில கொண்டு போய் விடராங்கலாம்.அப்படியே மாறி மாறி கடலூர் போய்டலாம்’னு சொன்னாங்க!

வழி முழுக்க தண்ணிதான்.குடிசைவாழ் மக்கள் பள்ளிக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டு உணவுப்பொட்டலத்திற்க்காக காத்திருந்தனர்.எங்களுக்கும் கிடைக்காதா என பார்த்தோம்.ரெண்டு தோசை தான சாப்பிட்டோம்.எந்த கடையும் திறந்திருக்கல.வழியில குடிசைங்க மட்டுமல்லாம மாடி வீடுகளும் தரைதளம் பாதி அளவுக்கு மூழ்கி இருந்தது.(சமத்துவம்).


கொஞ்ச தூரம் போனதும் லாரியில லாரில ஏத்திகிட்டு ஒரு பத்து கி.மீ தள்ளி கொண்டு போய் புவனகிரில விட்டாங்க.பத்து ரூவா வாங்கிகிட்டாங்க.(என்ன ஒரு சேவை).அங்கே போனால் அங்கிருந்தும் எந்த ஊருக்கும் தொடர்பில்லையாம்.சரி நடந்தே போயிடலாம்னு பாத்தா நடுவில ரெண்டு இடத்துல பாலம் உடைஞ்சு போச்சு,வேண்ணா ரயில் தண்டவாளத்துலயே நடந்து கடலூர் போயடலாம்னாங்க.(தலைப்புக்கு வந்தாச்சு).அங்கேருந்து ரயில் பாதை ரெண்டு கி.மீ.போறதுக்குள்ள ரொம்ப அவஸ்தை அதுவும் ஒரு இடத்துல இடுப்பளவுக்கு தண்ணி.பாதுகாப்புக்கு கயிறு கட்டி இருந்தாங்கஒருத்தர் பின் ஒருத்தரா போனோம்.


தண்ணியில நிறைய பாம்புங்க அடிச்சுகிட்டு வந்துச்சு.எங்கள அதுங்கள பாத்து நாங்க ஓட எங்களப்பாத்து அதுங்க ஓட ஒரே பீதியாகிடுச்சு.ஒரு வழியா தண்டவாளத்த தொட்டாச்சு!சொன்னா நம்ப மாட்டிங்க தண்டவாளத்தைத்தவிர எல்லா இடத்திலும் தண்ணீர்.தண்ணீர்.அப்படியே நடக்க ஆரம்பிச்சோம்.ஆரம்பிசொம்னா எத்தனை பேர்?கிட்டத்தட்ட ஐஞ்சு ஹாஸ்டலில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள்.கூடவே பொதுமக்களும்.

மழை வேற அப்பப்ப பேஞ்சுது.எங்கயும் ஒதுங்க முடியல(.எரும மாட்டுல மழை பேயஞ்ச மாதிரிங்கற பழமொழிக்கு அன்னைக்கு தான் அர்த்தம் தெரிஞ்சுது).முன்னால் போய்கிட்டு இருந்த சில பசங்களுக்கு வழியில ஒரு இடத்துல பொட்டலம் கிடைச்சுதாம்.வைச்சுருந்து ஷேர் பண்ணி சாப்பிட்டோம்.காலையில 9 மணிக்கு கிளம்பி இப்ப மதியம் ஒரு மணி. ரெண்டு வாய் சோறு கெடைச்ச தெம்புல நடக்க ஆரம்பிச்சோம்.

அங்கே ஒரு ஷாக்!ஒரு இடத்துல தண்டவாளத்துக்கு கீழ மண்ணு அரிச்சுகிட்டு போய் ஒரு முப்பது அடிக்கு சப்போர்ட்டு இல்லாம தொங்குது.கீழ தண்ணியின் வேகமும் அதிகமா இருந்தது.கீழயும் இறங்கி போக முடியாது.ரெண்டு ரெண்டு பேரா தோளை பிடிச்சுகிட்டு தண்டவாளத்துல ஆளுக்கொரு பக்கமா மெதுவா நடந்து தாண்டினோம்(தோள் கொடுப்பான் தோழன்).

வழியில் பல கிராமங்களில் சிக்கிக்கிட்டு இருந்த மக்கள படகுகள்ல போய் மீடுகிட்டு இருந்தாங்க!ஒவ்வொரு தபா மழை பெயும்போதும் வீரானத்துல ஏரி ரொம்பிடுச்சுன்னாதண்ணி தொறந்துடுவாங்க இப்படித்தான் எங்க நெலம’ன்னு ஒரு ரயில் நிலையத்துல தங்கியிருந்த மக்கள் சொன்னாங்க.வழியில ஹெலிகாப்டர்ல யாரோ வெள்ளச்சேதத்த பார்வையிட்டுகிட்டு(?)போனாங்க! ம்ம்ம்.(என்னடா நடக்குதிங்க. நான் மேல வந்துட்டண்டா)


மணி மூணு.பசி களைப்பு ஒரு இடத்துல கொஞ்சம் பனங்கிழங்கு கிடைச்சுது.ஆலப்பாக்கம் ரயில் நிலையம் தாண்டி ஒரு பாலம் கீழே பாத்தா தண்ணி போற வேகத்துல தலை சுத்துது.கீழ பாக்காம நடக்க முடியல.ஏன்னா தண்டவாளத்துல போட்டிருந்த தகரப்பலகைங்க துருப்பிடிச்சிருந்துது.தாண்டறதுக்குள்ள போதும் போதும்னு ஆய்டுச்சு.ஒருத்தன் வாந்தி எடுத்துட்டான்.

இன்னும் எவ்வ....... தூ.....? அது ஒன்னுமில்லைங்க பசி களைப்பு மூச்சு முட்டி நுரைதள்ளிடுச்சு.இன்னும் எவ்வளவு தூரம்னு வழியில கேட்டோம் இன்னும் பத்து கி,மீ’ன்னாங்க.மணி நாலு.நிறைய தேளுங்க,பூரான்,பாம்புங்க அதுங்க பாட்டுக்கு யாரையும் தொந்தரவு பண்ணாம போய் வந்துகிட்டு இருந்துச்சுங்க.இருந்தாலும் மனசுல பயம்,வெளிக்காட்டிக்காம நடந்தோம்.


ஒரு வழியா கடலூர்’க்கு ஐஞ்சு கி.மீ முன்னால வரைக்கும் பஸ் வருதுன்னு கேள்விபட்டு ரோட்டுக்குபோனோம்.ஒரு அரைமணிநேரம் கழிச்சு வந்த பஸ்சுல ஏறி கடலூர் வந்தோம்.மணி இரவு ஏழு!இங்க வந்து பணம் வச்சுருக்க நண்பர்கள் ஏ.டி.எம்.ல பணம் எடுத்து எல்லாருக்கும் கொடுத்தாங்க.சாப்பிட்டுட்டு பஸ் ஏறி அவங்கவங்க ஊருக்கு போனோம்.


இன்னைக்கு நினைசுப்பாத்தா என்ன ஒரு அனுபவம்’டான்னு நினைக்கத்தோணுது.ஆனா ஒரு விஷயம் நண்பர்களே!எப்படிப்பட்ட ரணகளமான பயணமாக இருந்தாலும் நண்பர்களுடன் பயணித்தால் சுகமாகவே முடிகிறது என தெரிந்து கொண்டேன்!(நிச்சயமா ஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்!!)


பொறுமையாக வாசித்தமைக்கு நன்றி நண்பர்களே!





மேலும் வாசிக்க "கரை சேர்த்ததா தண்டவாளம்???"

கரை சேர்த்த தண்டவாளம்!!!



என்னடா இது படகோ, பரிசலோ தான கரையேத்தும்,இவன் என்னவோ தண்டவாளம் 

கரையேத்துதுன்னு ஏதோ பாண்டிச்சேரி சரக்க போட்டுட்டு உளர்ரான்னு நினைக்க 

வேண்டாம்!நான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துல படிக்கும் போது 

அனுபவிச்ச ஒரு சம்பவத்த தான் இப்படி சொல்றேன்.ஆஹா!ஆரம்பிசுட்டாண்டா இவன் 

சுயபுராணத்தன்னு ஓடிடாதிங்க!வந்தது வந்துட்டிங்க!எப்படி கரை ஏறினேன்’னு பாத்துட்டு 

போய்ங்கோ!ஓவர் டூ சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்!!




அது நவம்பர் மாதம் 2005, அந்த நேரங்கள்ல வடகிழக்கோ,தென்மேற்கோ(பூகோளத்துல நாம 

ரொம்பவே வீக்)பருவமழை பெய்யும்.அதுவும் கடலூர் மாவட்டத்துல கேக்கவே வேணாம் 

வெளுத்து வாங்கும்!இந்த மாதிரி நேரத்துல தான் அப்ப செமஸ்டர் தேர்வுகள் நடந்துகிட்டு 

இருந்துச்சு!மொத தேர்வ நல்லா நனஞ்சுகிட்டே போய் எழுதிட்டு வந்தோம்(படிச்சதெல்லாம் 

கரைஞ்சு போச்சு).வரும் போதும் மழை.பல்கலைகழக வளாகத்த சுத்தி நிறைய குளம் 

குட்டைங்க இருக்கும்,அதுல இருந்து தண்ணி வழிய ஆரம்பிச்சு ரோட்டுல ஓடிகிட்டு 

இருந்துச்சு!தன்னில விளையாடிகிட்டே விடுதிக்கு வந்து சேர்ந்தோம்,அடுத்த நாள் தேர்வுக்கு 

படிக்க ஆரம்பிச்சிட்டோம்!அட ஆமாங்க!நம்புங்க,படிக்கறதே அன்னைக்கு ஒரு நாள்தான்).





கொஞ்ச நேரம் கழிச்சு ஒருத்தன் வந்து சொன்னான் மச்சான்,லைப்ரரிக்கு தண்ணி 

வந்துடுசுடா மச்சான்னு!அப்பறமென்ன படிப்புக்கு வேளை?லைப்ரரிய போய்ப்பாத்தா 

முழங்கால் அளவுக்கு தண்ணி.அப்பாவும் விளையாடத்தான் தோணுச்சு!நடக்கப்போவது 

தெரியாமல்.



தண்ணீர் பல்கலைகழகம் முழுக்க புகுந்ததால் மின்சாரத்தடை!அங்கே அணைத்து மின்சார 

கேபிள்களும் தரையில் புதைக்கப்பட்டு இருக்கும்.ஒரு வகையில் சந்தோசம் பின்னே அடுத்த 

நாள் பரிட்சை வைச்சுக்கிட்டு கரண்ட் இல்லேன்னா அத விட சந்தோசம் இல்லேன்னா 

எப்படி?இப்ப லைப்ரரிய சுதியிருந்த தண்ணி அப்படியே அட்மினி கட்டடத்தையும் 

சூழ்ந்துகிச்சு.அப்படியே சாயங்காலம் ஆச்சு.



எங்க எல்லாருக்கும் ஒரே குழப்பம்.இவ்வளவு களேபரம்(சரியா எழுதி 

இருக்கேனா?)நடந்துட்டு இருக்கு ஒருத்தன் வந்து கேட்டான் மச்சான் என்கிட்டே ஒரு யூனிட் 

நோட்ஸ் இல்ல இந்த நேரம் பாத்து கரண்ட் இல்ல எப்படிடா ஜெராக்ஸ் எடுக்கறதுன்னு?

யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற’எப்படியும் நாளைக்கு எக்ஸாம் 

கேன்சல் ஆகிடும்;னு அவன சமாதானப்படுதிக்கிட்டு ஹாஸ்டல் கூட்டிட்டு 

போனோம்.ஆனால் நைட்டு வரைக்கும் அடுத்த நாள் எக்ஸாம்பற்றி எந்த தகவலும் 

இல்லை.இரவு முழுக்க கரண்டும் இல்லை.HOD-ஐ போன் பண்ணி கேட்டா எனக்கும் இது 

வரைக்கும் எந்த தகவலும் வரலேங்கறார்.





இது இப்படியிருக்க daysscholar பசங்ககிட்ட இருந்து இன்னொரு தகவல் சிதம்பரத்துக்கு எந்த 

ஊர்ல இருந்தும் பஸ் வரல,எல்லா எல்லா வழியிலயும் தண்ணி ஓடுதாம்.வீராணம்  

ஏரியில் இருந்து தண்ணி திறந்து விட்டுடாங்கலாம்

அப்படின்னு.வயித்துல புளிகரைக்க ஆரம்பிச்சது!படிக்கவும் முடியாம(அத விடுங்க அதுக்கு 

யாரு கவலைப்பட்டா?)தூங்கவும் முடியாம(அது!)செம அவஸ்த!அப்படியே 

ஹாஸ்டலுக்குள்ளையும் தண்ணி வர ஆரம்பிச்சுடுச்சு!வராண்டாவ விட்டு கீழ இறங்குனா 

தன்னில தான் கால வைக்கணும்!எப்படியோ நைட்ட பேசிக்கிட்டும் உலாவிகிட்டும் கொஞ்ச 

நேரம் தூங்கிகிட்டும் ஓட்டிட்டோம்!ஆனால் விடிய விடிய மழை நசநசத்துக்கொண்டிருந்தது.





விடிந்தது!அதிர வைத்த பல்கலைகழக நிர்வாகம்!என்ன நடந்தது?

இந்த பதிவுக்கும் தண்டவாளத்துக்கும் என்ன சம்பந்தம்?பதிவின் நீளம்கருதி 


அடுத்தபதிவில்!(அப்பாடா அடுத்த பதிவுக்கு மேட்டர் ரெடி)







மேலும் வாசிக்க "கரை சேர்த்த தண்டவாளம்!!!"