Showing posts with label தண்டவாளம். Show all posts
Showing posts with label தண்டவாளம். Show all posts

Wednesday, October 5, 2011

கரை சேர்த்ததா தண்டவாளம்???





என்ன நண்பர்களே?என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கா?
என்ன ஆச்சுன்னா,ஹாஸ்டல் வார்டன் வந்து காலை ப்ரேக்பாஸ்ட் முடிந்தவுடன் விடுதி மூடப்படும்.எல்லோரும் கிளம்புங்க’ன்னார்.
அப்போ exam-னுவாய தொறந்தான்,நேத்து நோட்ஸ் கேட்டானே அதே பிரகஸ்பதிதான்!எல்லோரும் திரும்பி முறைக்க கமுக்கமானான்!!
சாப்பிட மெஸ்ஸுக்கு போனா நேத்து மதியதுல இருந்து கரண்ட் இல்லாததுனால எதுவும் ரெடி பண்ண முடியல.ஆளுக்கு ரெண்டு தோசைதான்’னு போட்டுட்டு தொரத்தி விட்டுட்டாங்க!university-ல பசங்களுக்கு கிட்டத்தட்ட ஐஞ்சு ஹாஸ்டலும் பொண்ணுங்களுக்கு ரெண்டு ஹாஸ்டலும் இருக்கு.அதுல பசங்க ஹாஸ்டல்க்கு மட்டும் இந்த நிலைமை.

ஊரெல்லாம் தண்ணியா இருந்ததால் கிட்டத்தட்ட எல்லாரும் ஒரு ஷார்ட்ஸ் ,சட்டைன்னு மாட்டிகிட்டு பேக் எதுவும் எடுத்துக்கல.பணம்?ஏ.டி.எம்மும் வொர்க் ஆகல ஆளாளுக்கு இருந்த பணத்த பிரிச்சுகிட்டு கிளம்பினோம்.

வெளியே முழங்கால் அளவிற்கு தண்ணீர். அப்படியே ரெண்டு கி.மீ.நடந்து பஸ்ஸ்டாண்ட் போனா அதிர்ச்சி.நேத்து பசங்க சொன்ன மாதிரி சிதம்பரம் எல்லா வழிகளிலும் துண்டிக்கப்பட்டிருந்தது.அங்கிருந்து மூணு கி.மீ நடந்து போனா கொஞ்ச தூரம் லாரியில கொண்டு போய் விடராங்கலாம்.அப்படியே மாறி மாறி கடலூர் போய்டலாம்’னு சொன்னாங்க!

வழி முழுக்க தண்ணிதான்.குடிசைவாழ் மக்கள் பள்ளிக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டு உணவுப்பொட்டலத்திற்க்காக காத்திருந்தனர்.எங்களுக்கும் கிடைக்காதா என பார்த்தோம்.ரெண்டு தோசை தான சாப்பிட்டோம்.எந்த கடையும் திறந்திருக்கல.வழியில குடிசைங்க மட்டுமல்லாம மாடி வீடுகளும் தரைதளம் பாதி அளவுக்கு மூழ்கி இருந்தது.(சமத்துவம்).


கொஞ்ச தூரம் போனதும் லாரியில லாரில ஏத்திகிட்டு ஒரு பத்து கி.மீ தள்ளி கொண்டு போய் புவனகிரில விட்டாங்க.பத்து ரூவா வாங்கிகிட்டாங்க.(என்ன ஒரு சேவை).அங்கே போனால் அங்கிருந்தும் எந்த ஊருக்கும் தொடர்பில்லையாம்.சரி நடந்தே போயிடலாம்னு பாத்தா நடுவில ரெண்டு இடத்துல பாலம் உடைஞ்சு போச்சு,வேண்ணா ரயில் தண்டவாளத்துலயே நடந்து கடலூர் போயடலாம்னாங்க.(தலைப்புக்கு வந்தாச்சு).அங்கேருந்து ரயில் பாதை ரெண்டு கி.மீ.போறதுக்குள்ள ரொம்ப அவஸ்தை அதுவும் ஒரு இடத்துல இடுப்பளவுக்கு தண்ணி.பாதுகாப்புக்கு கயிறு கட்டி இருந்தாங்கஒருத்தர் பின் ஒருத்தரா போனோம்.


தண்ணியில நிறைய பாம்புங்க அடிச்சுகிட்டு வந்துச்சு.எங்கள அதுங்கள பாத்து நாங்க ஓட எங்களப்பாத்து அதுங்க ஓட ஒரே பீதியாகிடுச்சு.ஒரு வழியா தண்டவாளத்த தொட்டாச்சு!சொன்னா நம்ப மாட்டிங்க தண்டவாளத்தைத்தவிர எல்லா இடத்திலும் தண்ணீர்.தண்ணீர்.அப்படியே நடக்க ஆரம்பிச்சோம்.ஆரம்பிசொம்னா எத்தனை பேர்?கிட்டத்தட்ட ஐஞ்சு ஹாஸ்டலில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள்.கூடவே பொதுமக்களும்.

மழை வேற அப்பப்ப பேஞ்சுது.எங்கயும் ஒதுங்க முடியல(.எரும மாட்டுல மழை பேயஞ்ச மாதிரிங்கற பழமொழிக்கு அன்னைக்கு தான் அர்த்தம் தெரிஞ்சுது).முன்னால் போய்கிட்டு இருந்த சில பசங்களுக்கு வழியில ஒரு இடத்துல பொட்டலம் கிடைச்சுதாம்.வைச்சுருந்து ஷேர் பண்ணி சாப்பிட்டோம்.காலையில 9 மணிக்கு கிளம்பி இப்ப மதியம் ஒரு மணி. ரெண்டு வாய் சோறு கெடைச்ச தெம்புல நடக்க ஆரம்பிச்சோம்.

அங்கே ஒரு ஷாக்!ஒரு இடத்துல தண்டவாளத்துக்கு கீழ மண்ணு அரிச்சுகிட்டு போய் ஒரு முப்பது அடிக்கு சப்போர்ட்டு இல்லாம தொங்குது.கீழ தண்ணியின் வேகமும் அதிகமா இருந்தது.கீழயும் இறங்கி போக முடியாது.ரெண்டு ரெண்டு பேரா தோளை பிடிச்சுகிட்டு தண்டவாளத்துல ஆளுக்கொரு பக்கமா மெதுவா நடந்து தாண்டினோம்(தோள் கொடுப்பான் தோழன்).

வழியில் பல கிராமங்களில் சிக்கிக்கிட்டு இருந்த மக்கள படகுகள்ல போய் மீடுகிட்டு இருந்தாங்க!ஒவ்வொரு தபா மழை பெயும்போதும் வீரானத்துல ஏரி ரொம்பிடுச்சுன்னாதண்ணி தொறந்துடுவாங்க இப்படித்தான் எங்க நெலம’ன்னு ஒரு ரயில் நிலையத்துல தங்கியிருந்த மக்கள் சொன்னாங்க.வழியில ஹெலிகாப்டர்ல யாரோ வெள்ளச்சேதத்த பார்வையிட்டுகிட்டு(?)போனாங்க! ம்ம்ம்.(என்னடா நடக்குதிங்க. நான் மேல வந்துட்டண்டா)


மணி மூணு.பசி களைப்பு ஒரு இடத்துல கொஞ்சம் பனங்கிழங்கு கிடைச்சுது.ஆலப்பாக்கம் ரயில் நிலையம் தாண்டி ஒரு பாலம் கீழே பாத்தா தண்ணி போற வேகத்துல தலை சுத்துது.கீழ பாக்காம நடக்க முடியல.ஏன்னா தண்டவாளத்துல போட்டிருந்த தகரப்பலகைங்க துருப்பிடிச்சிருந்துது.தாண்டறதுக்குள்ள போதும் போதும்னு ஆய்டுச்சு.ஒருத்தன் வாந்தி எடுத்துட்டான்.

இன்னும் எவ்வ....... தூ.....? அது ஒன்னுமில்லைங்க பசி களைப்பு மூச்சு முட்டி நுரைதள்ளிடுச்சு.இன்னும் எவ்வளவு தூரம்னு வழியில கேட்டோம் இன்னும் பத்து கி,மீ’ன்னாங்க.மணி நாலு.நிறைய தேளுங்க,பூரான்,பாம்புங்க அதுங்க பாட்டுக்கு யாரையும் தொந்தரவு பண்ணாம போய் வந்துகிட்டு இருந்துச்சுங்க.இருந்தாலும் மனசுல பயம்,வெளிக்காட்டிக்காம நடந்தோம்.


ஒரு வழியா கடலூர்’க்கு ஐஞ்சு கி.மீ முன்னால வரைக்கும் பஸ் வருதுன்னு கேள்விபட்டு ரோட்டுக்குபோனோம்.ஒரு அரைமணிநேரம் கழிச்சு வந்த பஸ்சுல ஏறி கடலூர் வந்தோம்.மணி இரவு ஏழு!இங்க வந்து பணம் வச்சுருக்க நண்பர்கள் ஏ.டி.எம்.ல பணம் எடுத்து எல்லாருக்கும் கொடுத்தாங்க.சாப்பிட்டுட்டு பஸ் ஏறி அவங்கவங்க ஊருக்கு போனோம்.


இன்னைக்கு நினைசுப்பாத்தா என்ன ஒரு அனுபவம்’டான்னு நினைக்கத்தோணுது.ஆனா ஒரு விஷயம் நண்பர்களே!எப்படிப்பட்ட ரணகளமான பயணமாக இருந்தாலும் நண்பர்களுடன் பயணித்தால் சுகமாகவே முடிகிறது என தெரிந்து கொண்டேன்!(நிச்சயமா ஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்!!)


பொறுமையாக வாசித்தமைக்கு நன்றி நண்பர்களே!





மேலும் வாசிக்க "கரை சேர்த்ததா தண்டவாளம்???"