Wednesday, October 5, 2011

கரை சேர்த்த தண்டவாளம்!!!என்னடா இது படகோ, பரிசலோ தான கரையேத்தும்,இவன் என்னவோ தண்டவாளம் 

கரையேத்துதுன்னு ஏதோ பாண்டிச்சேரி சரக்க போட்டுட்டு உளர்ரான்னு நினைக்க 

வேண்டாம்!நான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துல படிக்கும் போது 

அனுபவிச்ச ஒரு சம்பவத்த தான் இப்படி சொல்றேன்.ஆஹா!ஆரம்பிசுட்டாண்டா இவன் 

சுயபுராணத்தன்னு ஓடிடாதிங்க!வந்தது வந்துட்டிங்க!எப்படி கரை ஏறினேன்’னு பாத்துட்டு 

போய்ங்கோ!ஓவர் டூ சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்!!
அது நவம்பர் மாதம் 2005, அந்த நேரங்கள்ல வடகிழக்கோ,தென்மேற்கோ(பூகோளத்துல நாம 

ரொம்பவே வீக்)பருவமழை பெய்யும்.அதுவும் கடலூர் மாவட்டத்துல கேக்கவே வேணாம் 

வெளுத்து வாங்கும்!இந்த மாதிரி நேரத்துல தான் அப்ப செமஸ்டர் தேர்வுகள் நடந்துகிட்டு 

இருந்துச்சு!மொத தேர்வ நல்லா நனஞ்சுகிட்டே போய் எழுதிட்டு வந்தோம்(படிச்சதெல்லாம் 

கரைஞ்சு போச்சு).வரும் போதும் மழை.பல்கலைகழக வளாகத்த சுத்தி நிறைய குளம் 

குட்டைங்க இருக்கும்,அதுல இருந்து தண்ணி வழிய ஆரம்பிச்சு ரோட்டுல ஓடிகிட்டு 

இருந்துச்சு!தன்னில விளையாடிகிட்டே விடுதிக்கு வந்து சேர்ந்தோம்,அடுத்த நாள் தேர்வுக்கு 

படிக்க ஆரம்பிச்சிட்டோம்!அட ஆமாங்க!நம்புங்க,படிக்கறதே அன்னைக்கு ஒரு நாள்தான்).

கொஞ்ச நேரம் கழிச்சு ஒருத்தன் வந்து சொன்னான் மச்சான்,லைப்ரரிக்கு தண்ணி 

வந்துடுசுடா மச்சான்னு!அப்பறமென்ன படிப்புக்கு வேளை?லைப்ரரிய போய்ப்பாத்தா 

முழங்கால் அளவுக்கு தண்ணி.அப்பாவும் விளையாடத்தான் தோணுச்சு!நடக்கப்போவது 

தெரியாமல்.தண்ணீர் பல்கலைகழகம் முழுக்க புகுந்ததால் மின்சாரத்தடை!அங்கே அணைத்து மின்சார 

கேபிள்களும் தரையில் புதைக்கப்பட்டு இருக்கும்.ஒரு வகையில் சந்தோசம் பின்னே அடுத்த 

நாள் பரிட்சை வைச்சுக்கிட்டு கரண்ட் இல்லேன்னா அத விட சந்தோசம் இல்லேன்னா 

எப்படி?இப்ப லைப்ரரிய சுதியிருந்த தண்ணி அப்படியே அட்மினி கட்டடத்தையும் 

சூழ்ந்துகிச்சு.அப்படியே சாயங்காலம் ஆச்சு.எங்க எல்லாருக்கும் ஒரே குழப்பம்.இவ்வளவு களேபரம்(சரியா எழுதி 

இருக்கேனா?)நடந்துட்டு இருக்கு ஒருத்தன் வந்து கேட்டான் மச்சான் என்கிட்டே ஒரு யூனிட் 

நோட்ஸ் இல்ல இந்த நேரம் பாத்து கரண்ட் இல்ல எப்படிடா ஜெராக்ஸ் எடுக்கறதுன்னு?

யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற’எப்படியும் நாளைக்கு எக்ஸாம் 

கேன்சல் ஆகிடும்;னு அவன சமாதானப்படுதிக்கிட்டு ஹாஸ்டல் கூட்டிட்டு 

போனோம்.ஆனால் நைட்டு வரைக்கும் அடுத்த நாள் எக்ஸாம்பற்றி எந்த தகவலும் 

இல்லை.இரவு முழுக்க கரண்டும் இல்லை.HOD-ஐ போன் பண்ணி கேட்டா எனக்கும் இது 

வரைக்கும் எந்த தகவலும் வரலேங்கறார்.

இது இப்படியிருக்க daysscholar பசங்ககிட்ட இருந்து இன்னொரு தகவல் சிதம்பரத்துக்கு எந்த 

ஊர்ல இருந்தும் பஸ் வரல,எல்லா எல்லா வழியிலயும் தண்ணி ஓடுதாம்.வீராணம்  

ஏரியில் இருந்து தண்ணி திறந்து விட்டுடாங்கலாம்

அப்படின்னு.வயித்துல புளிகரைக்க ஆரம்பிச்சது!படிக்கவும் முடியாம(அத விடுங்க அதுக்கு 

யாரு கவலைப்பட்டா?)தூங்கவும் முடியாம(அது!)செம அவஸ்த!அப்படியே 

ஹாஸ்டலுக்குள்ளையும் தண்ணி வர ஆரம்பிச்சுடுச்சு!வராண்டாவ விட்டு கீழ இறங்குனா 

தன்னில தான் கால வைக்கணும்!எப்படியோ நைட்ட பேசிக்கிட்டும் உலாவிகிட்டும் கொஞ்ச 

நேரம் தூங்கிகிட்டும் ஓட்டிட்டோம்!ஆனால் விடிய விடிய மழை நசநசத்துக்கொண்டிருந்தது.

விடிந்தது!அதிர வைத்த பல்கலைகழக நிர்வாகம்!என்ன நடந்தது?

இந்த பதிவுக்கும் தண்டவாளத்துக்கும் என்ன சம்பந்தம்?பதிவின் நீளம்கருதி 


அடுத்தபதிவில்!(அப்பாடா அடுத்த பதிவுக்கு மேட்டர் ரெடி)46 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said... Reply to comment

மழையும் அதுவா நல்லா ஸ்ட்ராங்கா டீ குடிச்சிருப்பீங்களே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said... Reply to comment

///////நான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துல படிக்கும் போது
அனுபவிச்ச ஒரு சம்பவத்த தான் இப்படி சொல்றேன்.///////

அடங்கொன்னியா......

tamilvaasi said... Reply to comment

கடைசில தொடரும்....????

செங்கோவி said... Reply to comment

பரிட்சை வச்சுட்டாங்களா?

//களேரபம்//

அது களேபரம்.

Angel said... Reply to comment

இன்டரஸ்டிங்கா போகும்போது சஸ்பென்ஸ் .
எனக்கு எக்ஸாம் என்ன ஆச்சின்னு தெரியனும் நாளைக்கு வரேன் .

மாய உலகம் said... Reply to comment

சிதம்பர ரகசியம்... நாளைக்கு அம்பலம்

Unknown said... Reply to comment

முடிப்பீங்கன்னு பாத்தா இப்படி சொதப்பிட்டீங்களே

Unknown said... Reply to comment

மாப்ள என்னமோ சொல்ற சர்தான்...ஆனாலும் தண்ணி வந்துருச்சின்னு சொல்றியே...அப்போ உங்களுக்கு அந்த தண்ணி(!) ஞாபகம் வரல போல ஹிஹி!

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said... Reply to comment

என்னமா சஸ்பென்ஸ் வக்கிறாரு.. புல் தண்ணியில எக்ஸாம், எழுதினீங்களா இல்லியா???

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

ம் ...

கோகுல் said... Reply to comment

@பன்னிக்குட்டி ராம்சாமி

ஆமாங்க எப்படி கண்டுபுடிசிங்க?


அடங்கொன்னியா......

ஏங்க என்னாச்சு?

கோகுல் said... Reply to comment

தமிழ்வாசி - Prakash said...
கடைசில தொடரும்....????
//
அங்கதான் கதையில ஒரு ட்விஸ்ட்டு!

Anonymous said... Reply to comment

டே என்னடா இது உன்னோட சுய புராணம் படுற யாருடா நி எதோ பெரிய பில்கேட் மாதிரி ரில் விடுற நி எடுக்குற இந்த ஜந்து பத்து பிச்சைக்கு (ஒட்டு )உனக்கு இந்த விளம்பரம் தேவை தான !

கோகுல் said... Reply to comment

செங்கோவி said...
பரிட்சை வச்சுட்டாங்களா?

//களேரபம்//

அது களேபரம்.
//

இதுக்குத்தான் சந்தேகமாவே எழுதினேன்.இப்ப திருத்திட்டேன்!

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

சஸ்பென்ஸ் `

கோகுல் said... Reply to comment

angelin said...
இன்டரஸ்டிங்கா போகும்போது சஸ்பென்ஸ் .
எனக்கு எக்ஸாம் என்ன ஆச்சின்னு தெரியனும் நாளைக்கு வரேன் .
//

நிச்சயம் வாங்க!

SURYAJEEVA said... Reply to comment

யோவ் இது ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்... சரி சரி, படிச்சு முடிச்சு கடுப்பில எழுதுறேன்... அது வடகிழக்கோ தென்மேற்க்கோ இல்லை... கண்டிப்பா வடகிழக்கு தான்... அந்த நேரத்தில் புயல் ஒன்னு உங்க ஊற நோக்கி தான் வந்துகிட்டு இருந்துச்சு, அப்புறமா என்ன நடந்துச்சுன்னு அடுத்த பதிவுல பின்னூட்டம் போடுறேன்... அப்பாடா அடுத்த பதிவுக்கு பின்னூட்டம் தேத்தியாச்சா... இப்ப எப்படி இருக்கு?

கோகுல் said... Reply to comment

விக்கியுலகம் said...
மாப்ள என்னமோ சொல்ற சர்தான்...ஆனாலும் தண்ணி வந்துருச்சின்னு சொல்றியே...அப்போ உங்களுக்கு அந்த தண்ணி(!) ஞாபகம் வரல போல ஹிஹி!
//

Dr. Butti Paul said...
என்னமா சஸ்பென்ஸ் வக்கிறாரு.. புல் தண்ணியில எக்ஸாம், எழுதினீங்களா இல்லியா???//

மாம்ஸ் &dr buttipaul நான் பாண்டிச்சேரியில் இருந்தாலும் தண்ணி ஞாபகம் வராதவன்!(வைப்பு கிடைக்க மாட்டேன்குதுப்பா அவ்வ்வ்வ்)

கோகுல் said... Reply to comment

மாய உலகம் said...
சிதம்பர ரகசியம்... நாளைக்கு அம்பலம்

//
வைரை சதிஷ் said...
முடிப்பீங்கன்னு பாத்தா இப்படி சொதப்பிட்டீங்களே
//

ஒரு நாள் காத்திருங்க!

கோகுல் said... Reply to comment

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ம் ...

//

ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கிங்க!பிசியோ?

கோகுல் said... Reply to comment

Anonymous said...
டே என்னடா இது உன்னோட சுய புராணம் படுற யாருடா நி எதோ பெரிய பில்கேட் மாதிரி ரில் விடுற நி எடுக்குற இந்த ஜந்து பத்து பிச்சைக்கு (ஒட்டு )உனக்கு இந்த விளம்பரம் தேவை தான !
//

ஏதோ என்னால் ஆனதுங்க!

கோகுல் said... Reply to comment

suryajeeva said...
யோவ் இது ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்... சரி சரி, படிச்சு முடிச்சு கடுப்பில எழுதுறேன்... அது வடகிழக்கோ தென்மேற்க்கோ இல்லை... கண்டிப்பா வடகிழக்கு தான்... அந்த நேரத்தில் புயல் ஒன்னு உங்க ஊற நோக்கி தான் வந்துகிட்டு இருந்துச்சு, அப்புறமா என்ன நடந்துச்சுன்னு அடுத்த பதிவுல பின்னூட்டம் போடுறேன்... அப்பாடா அடுத்த பதிவுக்கு பின்னூட்டம் தேத்தியாச்சா... இப்ப எப்படி இருக்கு?//

ஐயா செம கடுப்பாகிட்டார் போலருக்கு.அடுத்த பின்னூட்டதிர்க்கு நீங்களும் தயாராகிடிங்களா?

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

>>அடுத்தபதிவில்!(அப்பாடா அடுத்த பதிவுக்கு மேட்டர் ரெடி)


ஹி ஹி ஹி நீங்க நல்லவர்னு நினைச்சேன்

கோகுல் said... Reply to comment

@சி.பி.செந்தில்குமார்

ஏன் திடீர்னு இப்படி ஒரு முடிவு?

Mathuran said... Reply to comment

எக்ஸாம் நடந்திச்சா இல்லையா..

நீங்களும் தொடர் பதிவா

சசிகுமார் said... Reply to comment

தண்டவாளத்துல நடந்தே ஊர் வந்து சேர்ந்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன் ஹீ ஹீ

கோகுல் said... Reply to comment

@மதுரன்
ஒரு முயற்சிதான்!

கோகுல் said... Reply to comment

@சசிகுமார்
நல்ல யூகம் !பதில் அடுத்த பதிவில்!

Unknown said... Reply to comment

என்ன எல்லோரும் பாஸ் ன்னு சொல்லீட்டாங்களா? ஹா ஹா

cheena (சீனா) said... Reply to comment

அன்பின் கோகுல் - அடுத்த பகுடியும் வரட்டும் - சேத்து மறுமொழி போட்டுடறேன் = சரியா - நல்வாழ்த்துகள் கோகுல் - நட்புடன் சீனா

காட்டான் said... Reply to comment

வணக்கம் மாப்பிள ஏதோ நீங்களும் படிச்சிருக்கீங்கன்னு சொல்லீட்டீங்க ரெம்ப சந்தோஷம்..!!!ஹி ஹி

என்னையா இப்ப எல்லா இடத்திலேயும் தொடர் சீஸன்பொல..?  நீ வெளித்துவாங்கு  நாம இப்போவே அடுத்த பதிவுக்கு  பின்னூட்டத்த எழுதி வைச்சிடுறேன்யா..!!

மகேந்திரன் said... Reply to comment

அதைதானே நாங்க எதிர்பார்த்தது
அதை நாளைக்கு சொல்றேன் னு சொல்லிடீங்களே...
சரி சரி காத்திருக்கோம்...

M.R said... Reply to comment

நல்ல அனுபவம் (ஹா ஹா எனக்கு படிக்க )

தொடர்ச்சியை படிக்க வருகிறேன்

M.R said... Reply to comment
This comment has been removed by the author.
shanmugavel said... Reply to comment

கடைசீல சஸ்பென்ஸ் வெச்சிட்டீங்களே!

ரிஷபன் said... Reply to comment

நேஷனல் காலேஜ் வாசல்ல கூட்டம் நின்னுச்சின்னா ஸ்ட்ரைக்னு அர்த்தம்.. நண்பா.. இன்னிக்கு காலேஜ் இல்லன்னு பிளாசால படம் பார்க்கப் போலாம்னு பாதி வழில திரும்பிருவோம்.

உங்களால் அந்த பழைய நினைவுகள்.

நிரூபன் said... Reply to comment

இனிய மாலை வணக்கம் பாஸ்,
ஒரு அவலப் பதிவிலும் மொக்கை கலந்து சுவையாக எழுதியிருக்கிறீங்களே..
அடுத்த பாகத்தைப் படிக்கும் ஆவலைத் கிரைம் தொடர் ரேஞ்சில கொடுத்திருக்கிறீங்க.

அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

நிரூபன் said... Reply to comment

ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் பாஸ்!

சத்ரியன் said... Reply to comment

கோகுல்,

தண்ணி மேட்டர் மட்டும் இருக்கு. “தண்ணி” மேட்டர காணமே!

ராஜா MVS said... Reply to comment

சரிரிரி.......

அடுத்த பதிவில் முடிஞ்சிடும்ல....

ஏன்னா தண்டவாளம் நீளம் பொருக்காம யாராவது குண்டு வச்சிட போராங்க... நண்பா...

Unknown said... Reply to comment

அண்ணே! தொடர்ந்து வர தொடர்கதை போடறாப்புலயா?!

Anonymous said... Reply to comment

சிதம்பர ரகசியம்...நாளை அம்பலம்...WAITING...

அம்பலத்தார் said... Reply to comment

யாருமே இல்லா..த கடையில யாருக்குடா டீ ஆத்துற

ஹா ஹா

அம்பலத்தார் said... Reply to comment

என்ன கோகுல் சட்டென்று
திரையை இழுத்துமூடி தொடரும் போட்டால்.................. பிச்சுக்க மண்டையில முடிகூட இல்லாம தவிக்கிறேன்

Unknown said... Reply to comment

அடுத்த பதிவை எதிர்பார்த்து ஆவலுடன்.

Unknown said... Reply to comment

அடுத்தப் பதிவை நோக்கி ஆர்வத்துடன். நன்றிகள் நண்பரே!