அன்று ஒரு பேரணி
நடைபெற்று கொண்டிருந்தது
ஆர்வ மிகுதியால் எட்டிப்பார்த்தேன்
என்ன பேரணி என்று
குழந்தை தொழிலாளர்
ஒழிப்பு பேரணியாம்
கோஷம் போட்டார்கள்
குழந்தைகள் வருமானம்
நாட்டிற்கு அவமானம்
பிஞ்சுகளை வெம்ப விடாதிர்
அவை விழுது விட்டு
வேரூன்ற வேண்டியவை என்று
பேரணி முடிந்து
களைத்து அமர்ந்தவர்களுக்கு
குளிர்பானம் விநியோகித்தான்
கந்தன் என்ற பத்து வயது சிறுவன்!!!
மீள்வு!
புகைப்படம் உதவி-நண்பன் மாதேஷ்
மீள்வு!
புகைப்படம் உதவி-நண்பன் மாதேஷ்
Tweet | ||||||
42 comments:
அருமை.. இப்புடி எல்லாம் நடக்குது உண்மையில்
புகைப்படங்கள் என்னை ஏதோ செய்கின்றன.நல்ல சிந்தனை
ம் என்ன செய்ய எல்லாம் வாய் பேச்சோடு போய்விடுகிறது
இது தான் இந்தியா மாப்ள...மாற்றம் வேண்டும் என்றால் ஒவ்வொரு தனி மனிதனும் பொது விஷயங்களில் கலந்து கொள்ள வேண்டும்...பகிர்வுக்கு நன்றி!
ஊருக்குத்தான் உபதேசம்...உண்மைதான்...
பல விடயங்களிலும் இதுதான் நடக்குது
அருமை நண்பா அருமை
உண்மை சாடல்
அருமை.
சென்னையில் பிற மாநிலங்களிலிருந்து வருகிற குழந்தைத்தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. :-(
:(
உண்மை தான் ஊருக்கு தான் உபதேசம்... நாட்டிற்க்கு சொல்லிவிட்டு பாக்கெட்டை நிரப்புவார்கள்.. அருமை நண்பா.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கி
உதவாது அதுபோலத்தான்
இன்றும் எத்தனையோ வீடுகளில்
புழைந்தைகள் வேலை செய்கிறார்கள்
புலவர் சா இராமாநுசம்
ஊருக்குத்தான் உபதேசம்!!!
இனிய மதிய வணக்கம் பாஸ்.
வெளித் தோற்றத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லை என்று பொய்ப் பிரச்சாரம் செய்து, உள்ளூரில் குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் செயற்படுவோருக்குச் சாட்டையடியாக இக் கவிதை அமைந்துள்ளது.
ஆம் இப்படி தான் நாட்டுல நடக்குது
எங்கும் போலிகள்....
நான் ஊர்ல இல்லாத சமயம் கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா பாஸ்!:)
முரண், அதிலும் அன்பாகவும் நடத்தத் மாட்டார்கள்.. அதட்டி மிரட்டி அட போங்கப்பா
அருமையாய் உரைத்துள்ளீர்கள் நண்பரே..
தற்போது உள்ளாட்சித்தேர்தல் பிரச்சாரத்தில் கூட குழந்தைகளை கோஷமிட வைப்பது கண்டிக்க வேண்டியதே..
நன்றி நண்பரே
///
பேரணி முடிந்து
களைத்து அமர்ந்தவர்களுக்கு
குளிர்பானம் விநியோகித்தான்
கந்தன் என்ற பத்து வயது சிறுவன்!!////
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.....என்ன நாசம் இது
உண்மையின் தரிசனம் .இந்த சனங்கள் திருந்த வாய்ப்பே இல்ல சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .....
அன்புநிறை நண்பரே ...
கடந்த ஒருவாரம் கொஞ்சம் வேலைப்பளு காரணமாக வரமுடியவில்லை..
பொறுத்தருள்க...
ஆம் நண்பரே, இன்றும் நடப்பதைத்தான் சொல்லி இருக்கிறீர்கள்.
வேலியே பயிரை மேயும் கதைதான்...
வணக்கம் மாப்பிள..
ஒரு அருமையான பதிவு வாழ்த்துக்கள்.. விக்கி சொல்வதைப்போல ஒவ்வொரு மனிதனும் பொது விசயத்தில் கலந்துகொள்ள வேண்டும் இது யாரோ பெத்த பிள்ளைகள்தானேன்னு விடுவதால்தான் குழந்தைத்தொழிலாலர்கள் அதிகரிக்கிறார்கள் முதலில் குழந்தை தொழிலாலர்களின் உழைப்பில் உருவாகும் எதையுமே புறக்கணிப்போம் ஆரம்பத்தில் அது அவர்களுக்கு சிரமம்தான் என்றாலும் இவர்களை வைத்து பிழைப்பவர்கள் நிலை கேள்விக்குள்ளாகும்போது நன்மையே விளையும்... பகிர்வுக்கு நன்றி
எல்லாமே ஊருக்குத்தான் உபதேசம். நடைமுறையில் எதுவுமில்லே.
தலைப்பிலேயே சொலீட்டீன்களே
இவங்க எப்பயுமே இப்படித்தான்
அருமை கவிதை
கவிதை உண்மை..
டாப்.
உண்மை...
அருமை
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html
பெயருக்குத்தான் பேரணி ஊரணியெல்லாம், நடப்பதோ வேறுமாதிரி இருக்கு என்னத்தை சொல்ல...!!!
ம்ம்ம்..இதுதான் நிஜம்!
அடிப்படை கல்வி இல்லாமலும், வருமையும் இருக்கும் அளவும், குழந்தை தொழிளாலர் நிலை நீடிக்கும். . .
Nanru
இப்படித்தான் அநேக இடங்களில் நடக்குது...
இந்த நிலை மாறணும்
அருமையான கருத்துள்ள கவிதை நண்பா.. வாழ்த்துக்கள்...
வணக்கம் கோகுல், பெரிய செய்தியை ரொம்ப சுருக்கி அருமையாத் தந்திருக்கீங்க.
சமுக அவலத்தின் இருட்டுப் பக்கங்களை உங்கள் கவிதை வரிகள் வெளிச்சமிட்டுக் காண்பிக்கின்றன.
அடிப்படையில் முதல் பஞ்சம் வறுமை ஒளிக்கப்பட வேண்டும். மனித மனதில் திருப்தி வந்தால் குழந்தைகளை ஏன் வேலைக்கு அனுப்புகிறார்கள்?.. இது எனது சிந்தனை கோகுல். நல்ல பதிவு.. பாராட்டுகள்.
வேதா.இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
முரணை அருமையான படைப்பாக்கி இருக்கிறீர்கள்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
முரண்பட்ட கவிதை.
புகைப்படம் - கனக்கும் மனம்.
இது தான் உலகத்தில் நடக்கும் உண்மைநிலை
Post a Comment