Tuesday, October 25, 2011

சந்தோஷத் தீபாவளி!!!வெடிக்கும் பட்டாசுகளையும்
பொறியும் மத்தாப்புகளையும்
பார்த்து நாம் மகிழ்கிறோம்
நம்மை மகிழச்செய்த
பட்டாசுதொழிலாளர்கள்?

பட்டாடை மினுமினுக்க
புத்தாடை ஜொலிஜொலிக்க
நாமுடுத்தி மகிழ
உருவாக்கி தந்த
மில் தொழிலாளர்கள்?


வீட்டில் நுழைந்தவுடன்
வாலாட்டி குலைந்து கொண்டு
நன்றியுடன் காவல் காத்து
நடைப்பயிற்சிக்கு உடன் வரும்
செல்லப்பிராணிகளுக்கு?


எல்லையின்றி திரிந்து
சிறகு விரித்துப்பறந்து
கீச்சுக்குரலில் பாடி
நம் மனதை மயக்கும்
பறவையினங்களுக்கு?


உறவுகளைப் பாக்கணும்
ஊர்ப்போய்ச் சேரனும்
நட்புக்களுடன் நகைக்கணும்
கொண்டு சேர்க்கும்
போக்குவரத்துத்துறையினருக்கு?


பட்டாசின் மிச்சம்
புதுத்துணிகளில் சுற்றப்பட்ட
இனிப்பு காரம் செய்ய வாங்கிய
பிளாஸ்டிக் குப்பைகளை
அடுத்த நாள் சுத்தம் செய்யும்
துப்புரவாளர்களுக்கு?


இந்த நன்னாளில்
எந்த வித அசம்பாவிதங்களும்
நிகழக்கூடாது என
தங்கள் வயிற்றில் நெருப்பைக்கட்டி
தயார் நிலையில் இருக்கும்
தீயனைப்புப்படையினருக்கு?


This diwali will enlighten us with sweets and crackers

இது போல ஒரு பண்டிகையை
நம்மை கொண்டாட வைக்கும்
இவர்களைப் போன்றவர்களுக்கு
இது சந்தோசத்தீபாவளியா என்றால்
என்னைப்பொருத்த வரை கேள்விக்குறியே
நம்மால் இயன்ற வரை இந்நாளில்
இவர்களைப்பார்க்க நேரிடுகையில்
வாழ்த்து சொல்லி கை கொடுப்போம்.
நிச்சயம் சந்தோஷத்தீபாவளியாய் உணர்வார்கள்!


அனைத்து நண்பர்களுக்கும்,குடும்பத்தார்க்கும்
பாதுகாப்பான இனிய,தீபஒளித்திருநாள் வாழ்த்துக்கள்!

44 comments:

அம்பாளடியாள் said... Reply to comment

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
பகிர்வுக்கு ........

மதுரை சரவணன் said... Reply to comment

//இந்த நன்னாளில்
எந்த வித அசம்பாவிதங்களும்
நிகழக்கூடாது என
தங்கள் வயிற்றில் நெருப்பைக்கட்டி
தயார் நிலையில் இருக்கும்
தீயனைப்புப்படையினருக்கு?//

ithu pola anaivarukkum theepaavali nal vaalththukkal... kavithai arumai.

Mahan.Thamesh said... Reply to comment

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

tamilvaasi said... Reply to comment

கோகுல் அருமையான சிந்தனை கவிதை....

தீபாவளி வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said... Reply to comment

சிந்திக்க வைக்கும் கருத்துக்கள், நல்ல கவிதை. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Ramesh said... Reply to comment

//தங்கள் வயிற்றில் நெருப்பைக்கட்டி
தயார் நிலையில் இருக்கும்
தீயனைப்புப்படையினருக்கு?//

//நம்மை கொண்டாட வைக்கும் இவர்களைப் போன்றவர்களுக்கு
இது சந்தோசத்தீபாவளியா என்றால்
என்னைப்பொருத்த வரை கேள்விக்குறியே//

எனக்கு பிடித்த வரிகள், நல்ல கவிதை. வாழ்த்துக்கள்

Anonymous said... Reply to comment

அருமையான கவிதை...

கோகுல்...என் தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும்...

Philosophy Prabhakaran said... Reply to comment

இவ்வளவு மேட்டரையும் சொல்லிட்டு கடைசியா தீவாளி வாழ்த்துக்களும் சொல்றீங்களே... உங்களுக்கே அநியாயமா தெரியலையா...

கவி அழகன் said... Reply to comment

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பா

கவிதை உருக்கம் கருத்து காரம்

vetha (kovaikkavi) said... Reply to comment

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Vetha.Elangathilakam.
http://www,kovaikkavi.wordpress.com

Angel said... Reply to comment

//நம்மால் இயன்ற வரை இந்நாளில்
இவர்களைப்பார்க்க நேரிடுகையில்
வாழ்த்து சொல்லி கை கொடுப்போம்.
நிச்சயம் சந்தோஷத்தீபாவளியாய் உணர்வார்கள்!//
repeat

எல்லா வரிகளும் மனதை தொட்டன .அருமை . இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் .

Yaathoramani.blogspot.com said... Reply to comment

அருமையான மனம் நெகிழச் செய்த படைப்பு
நாம் சிறப்பாக தீபாவளிக் கொண்டாட
காரணமாக இருப்பவர்களை மிக அழகாக
நினைவு கூர்ந்து படைப்பாக்கி கொடுத்தமைக்கு
வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள்

மாணவன் said... Reply to comment

உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் எனதினிய தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பரே!

சம்பத்குமார் said... Reply to comment

இனிய காலை வண்க்கம் சகோ..

புதிய கோணத்தில் தீபாவளி சந்தோஷம்..

அருமை.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்

மகேந்திரன் said... Reply to comment

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே.

Unknown said... Reply to comment

நல்லதொரு கவிதை..இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... உங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் வளமும் பெருகட்டும்...

சத்ரியன் said... Reply to comment

சிந்திக்க வைக்கும் தீபாவளி, கோகுல்.

பாராட்டுக்களுடன்,

தீபாவளி நல்வாழ்த்துக்களும்!

மாய உலகம் said... Reply to comment

தீபாவளி கொண்டாடும் பலபேரும் நீங்கள் சொன்னவர்களின் துயரை மனதில் கொண்டு கொண்டாட்டும்.. உங்களுக்கும், உங்களது குடும்பத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் கோகுல்....

கூடல் பாலா said... Reply to comment

புதுமையான சிந்தனை ! தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

K.s.s.Rajh said... Reply to comment

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் பாஸ்

நிரூபன் said... Reply to comment

இனிய காலை வணக்கம் பாஸ்,
நலமா?

எங்கள் மனச்சாட்சியினைத் தொட்டுக் கேள்வி கேட்டிருக்கிறது இக் கவிதை.

நாம் அனைவரும் நமது சந்தோசங்களைப் பற்றிக் கரிசனை கொள்வதைத் தவிர்த்து, நமக்காக பாடுபடும் தொழிலாளர்களையும் நினைத்துப் பார்த்தால் இன்னமும் மகிழ்ச்சி கிட்டுமே எனும் செய்தியினைச் சொல்லாமற் சொல்லி நிற்கிறது இப் பதிவு.

நிரூபன் said... Reply to comment

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய இன்பத் தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

M.R said... Reply to comment

நண்பர் கோகுல்,

உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Unknown said... Reply to comment

கோகுல் எப்படி இருக்கீங்க?
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

///பட்டாசின் மிச்சம்
புதுத்துணிகளில் சுற்றப்பட்ட
இனிப்பு காரம் செய்ய வாங்கிய
பிளாஸ்டிக் குப்பைகளை
அடுத்த நாள் சுத்தம் செய்யும்
துப்புரவாளர்களுக்கு///

உண்மைதான் உண்மை சுடுகின்றது

Unknown said... Reply to comment

நல்ல கவிதை!
நயமான ஆனால் நியாமான
கேள்விகள் அனைத்தும் வாழ்த்துக்கு
உரியன!

புலவர் சா இராமாநுசம்

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

அனைத்து நண்பர்களுக்கும்,குடும்பத்தார்க்கும்
பாதுகாப்பான இனிய,தீபஒளித்திருநாள் வாழ்த்துக்கள்

காந்தி பனங்கூர் said... Reply to comment

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கோகுல்.

காந்தி பனங்கூர் said... Reply to comment

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கோகுல்.

kousalya raj said... Reply to comment

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் said... Reply to comment

nice.,

அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

சசிகுமார் said... Reply to comment

தங்களுக்கும் தங்கள் குடும்பதாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

Unknown said... Reply to comment

அருமை கோகுல்
நல்ல கவிதை
தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

rajamelaiyur said... Reply to comment

தீபாவளி வாழ்த்துகள்

rajamelaiyur said... Reply to comment

இன்று என் வலையில்
இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.

SURYAJEEVA said... Reply to comment

கோகுல் நீங்க எழுதியதா இது? அருமை அருமை அருமை என்பதை தவிர வேறு எதுவும் சொல்ல தோணவில்லை.. மன்னித்து கொள்ளுங்கள்

ராஜா MVS said... Reply to comment

கவிதை அருமை... நண்பா...

உங்களுக்கும், உங்களது குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்... கோகுல்....

செவிலியன் said... Reply to comment

நல்ல வெடி வைத்துள்ளீர்கள்...வெடிக்கட்டும்....
ஒவ்வருவரும் சிந்திக்கவேண்டியது,...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

! சிவகுமார் ! said... Reply to comment

தீபாவளி வாழ்த்துகள் தம்பி!!

Unknown said... Reply to comment

வாழ்த்துக்கள் கோகுல்

Anonymous said... Reply to comment

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

shanmugavel said... Reply to comment

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் கோகுல்

sarujan said... Reply to comment

Happy dewali

Unknown said... Reply to comment

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

அம்பலத்தார் said... Reply to comment

வணக்கம், தங்களுக்கும், தங்களது குடும்பஉறவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!