வணக்கம் நண்பர்களே,
கடந்த மூன்று நாட்களாக பதிவுலகப்பக்கம் வர
முடியவில்லை.காரணம் கடைசியில் சொல்றேன்!
நம்ம ஊருல இப்ப அப்பப்ப மழைபேயுது.ரமணன் பேச்ச எல்லாம்
கேக்குறது கிடையாது.ஸ்கூல் லீவு விட்டா மழை விட்டுடும்.ஸ்கூல்
வைக்குற அன்னைக்கு மழை கொட்டும்.அத விடுங்க.எதுக்கு
இந்தப்பதிவுன்னா இந்த மழைநேரங்களில் நாம வண்டில போகும் போது
வரும் பிரச்சினைகளைப்பத்தியது.
சாதாரணமாகவே சாலைப்பயணத்தில் இப்போதெல்லாம் பாதுகாப்பு
கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் மழைக்காலத்தில் பயணம் செய்யும்
போது நாம் இன்னும் சற்று கூடுதல் கவனம் கொள்வது
அவசியம்.குறிப்பாக வேகம்,மழை நேரங்களில் சாதாரணமாக நாம்
செல்லும் வேகத்தை விட குறைந்த வேகத்தில் வண்டி ஓட்டுவது மிக
அவசியம்.
பிரேக் பிடிக்கும் போது கூடுதல் கவனம் தேவை.ஈரச்சாலைகள் நிச்சயம்
பிரேக்குக்கு பிடிந்து கொடுக்காது.பிரேக் நாம சொன்ன பேச்ச கேக்காது.டூ
வீலர்ல கூடுமான வரைக்கும் இரண்டு பிரக்குகளையும் பிடிச்சு வண்டியை
நிறுத்த முயற்சி செய்யணும்.முடிஞ்சா வரைக்கும் சடன் பிரேக் பிடிக்கறத
தவிர்க்கணும்.
ரோட்டுல தண்ணி ஓடும் போது வண்டி ஓட்டுறத கண்டிப்பா தவிர்க்குறது
நல்லது.ரோட்டுல பள்ளம் இருந்தா தெரியாது.அப்பறம் டரியல் தான்.நம்ம
ஊரு மழைக்கால ரோடுங்களைப்பத்தி உங்களுக்கு தெரியும் தானே?சில
நேரங்கள்ல ரோட்டோரமா இருக்குற சாக்கடைங்க தண்ணியில
மறைஞ்சுடும்.கொஞ்சம் அசந்தா சாக்கடையில் ஐக்கியமாக
வேண்டியதுதான்.நாம கால் அளவு தண்ணிதான் இருக்குன்னு நினைச்சு
போனா இடுப்பளவு தண்ணி இருக்கும்.வண்டிக்குள்ள தண்ணி போய்
வண்டிக்கும் பிரச்சினை நமக்கும் தான்!
அப்பறம் இன்னொரு பிரச்சினை சேறு.நீரும் செம்புலச்சேறும் கலந்தது
போல,பாட்ட கேக்க நல்லா நல்லா இருந்தாலும் வண்டி ஓட்ட ஆபத்தானது
தான்.டூ வீலர்ல பேலன்ஸ் பண்ண முடியாது.4 வீலர்ல சக்கரங்கள்
சேத்துல மாட்டிக்கும்.சோ அவாய்ட் பண்றது நல்லது.சில இடங்களில் மண்
சரிவு அபாயங்களும் இருக்கிறது.
மழை கொட்டிக்கிட்டு இருக்கும் போது வண்டியில போறது ஒரு
சுகமான,ரசனையான அனுபவம் தான்,ஆனா அதுல நிறைய ஆபத்துக்களும்
இருக்குங்க.அதனால நமது மழைக்கான பயணங்கள் பாதுகாப்பானதாக
இருக்க முன்னெச்சரிக்கையுடன் இருப்போம்.அதிலையும் நம்மாளுங்க
ஒத்த கையில குடைய பிடிச்சுக்கிட்டு இன்னொரு கையில ரிஸ்க்கையும்
எடுத்துக்கிட்டு வண்டி ஓட்டிட்டு போறாங்க!
அப்பறம் பிளாக் பக்கம் வராததுக்கு காரணம் என் வயதொத்த கூட வேலை
பாக்கும் நண்பன் ஒருவன் டூ வீலர்ல கம்பெனிக்கு வரும் போது இது
மாதிரி மழை நேரத்துல பிரேக் புடிச்சு ஸ்லிப்பாகி விழுந்து கையிலும்
கழுத்திலும் கொஞ்சம் அடி.இப்ப பரவால்ல.மருத்துவமனைக்கு போய் வர
நேரிட்டதால் நேரமில்ல.இது போல விபத்துகளை தவிர்க்க கொஞ்சம்
விழிப்புடன் இருப்போம் நண்பர்களே! இருப்போமா?நமது நண்பர்களுக்கும்
விழிப்பை ஏற்படுத்துங்கள்!நன்றி!
தொடர்புடைய பதிவுகள்
ஹெட் லைட்டால் வரும் இருட்டு!!!
வேகத்தடையா?பயணத்தடையா???
| Tweet | ||||||



