Friday, August 19, 2011

பேச்சைக்குறை!!



மே மாத இறுதியில் உலக சுகாதார அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டது. செல்போன் அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப் புற்றுநோய் வரும் என்பதுதான் அந்தத் தகவல்.(எனக்கு தான் மூளையே இல்லையேன்னு ல்லாம் சொல்லக்கூடாது) புற்றுநோய் அபாயப் பொருள் பட்டியலில் 2பி ( 2ஜி அல்ல. அது அரசியல் புற்றுநோய்) என்ற இடத்தில் இப்போது செல்போன் இடம்பெறத் தொடங்கியுள்ளது.




 புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய (கார்சினோஜெனிக்) 2பி பட்டியலில் வாகனப்புகை, குளோரோபாம், காரீயம், பூச்சிக்கொல்லி மருந்து, சில ஊறுகாய் வகைகளும்கூட இடம்பெற்றுள்ளன. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தப் பட்டியலில் இப்போது செல்போன் சேர்வதால் என்ன நேர்ந்துவிடப்போகிறது என்று நினைக்கத் தோன்றும். ஆனால், விஷயம் அப்படியாகக் கவலைப்படாமல் விட்டுத்தள்ளக்கூடியதாக இல்லை. ஏனென்றால், மற்ற விஷயங்களை ஒருவர் தவிர்த்துவிட முடியும். ஆனால், செல்போன் ஒரு மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.
 14 நாடுகளில் 31 அறிவியல் அறிஞர்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு- செல்போனில் வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையின் நரம்புச் செல்களைச் சுற்றியுள்ள கிளையல் செல் எனப்படும் செல்களைத் தாக்கி, புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது. அதாவது தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு, ஒரு நாளைக்குச் சராசரியாக அரைமணி நேரம் செல்போனில் பேசுபவர்களில் 40 விழுக்காட்டினருக்கு மூளைப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பு. இந்தியாவில் நாம் தினமும் எவ்வளவு நேரம் செல்போனில் பேசுகிறோம் என்பதைக் கணக்கெடுத்து, அவரவர்களே தங்கள் மூளையைச் சோதித்துக் கொள்ளலாம்.
 இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகமிக அதிகமாக உயர்ந்துவிட்டது. உயர்ந்துகொண்டும் வருகிறது. 2004 மார்ச் மாதம் 35.62 மில்லியனாக இருந்த செல்போன் இணைப்புகள், 2010 அக்டோபர் மாதம் 706.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது 1884 விழுக்காடு அதிகம்! ஆனால், லேண்ட்லைன் எனப்படும் கம்பிவழித் தொலைபேசிகள் குறைந்து வருகின்றன. 2004-ம் ஆண்டு 40.9 மில்லியனாக இருந்தது, 2010 அக்டோபரில் 35.4 மில்லியனாகக் குறைந்துவிட்டது. அதாவது 13.4 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது.
 இதுபோதாதென்று, ஒவ்வொரு போனிலும் இரண்டு சிம்கார்டுகள் வைத்துக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்து வருகிறார்கள். அதாவது ஒவ்வொரு நபரும் இரண்டு, மூன்று சிம் கார்டு வாங்கிப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வணிகம் இது. இதனால் அவர்களுக்கு லாபம். எல்லா சிம் கார்டையும் பயன்படுத்திப் பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். மூளைப் புற்றுநோய் வந்தால், அந்த நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் போய் பணத்தைக் கொட்டி சிகிச்சை பெறலாம்!


 உலக சுகாதார நிறுவனத்தின் இந்தத் தகவலை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள். எக்ஸ்-ரே, புறஊதாக் கதிர்கள் உடலில் உள்ள செல்களைத் தாக்கி, பாதிக்கச் செய்யும் தன்மையுள்ளவை (அயோனைசிங் ரேடியேஷன்) என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவ்வாறு நம் உடலின் செல்களைப் பாதிக்காத கதிர்வீச்சுகள் (நான்-அயோனைசிங் ரேடியேஷன்) என்றுதான் ரேடியோ அலைகள் அறியப்பட்டுள்ளன. அந்த வகையைச் சேர்ந்த மின்காந்த அலைகளால் இயங்கும் செல்போன், எவ்வாறு மூளையின் செல்களைப் பாதிக்கும் என்பது இதுவரை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது உண்மையே என்றாலும், செல்போன் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என்று உறுதிப்படச் சொல்வதற்கு யாராலும் முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
 செல்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது என்பது இனிமேல் இயலாத காரியம். ஆனால், அதன் பயன்பாட்டை தேவை இருந்தால் மட்டுமே பயன்படுத்துவது என்பது எல்லோராலும் இயலக்கூடியது.
 அதிகநேரம் செல்போன் பயன்படுத்துவோரின் காதுகளுக்குக் கேட்புத்திறன் குறையத் தொடங்குகிறது என்று ஏற்கெனவே ஓர் ஆய்வறிக்கை வெளியானது. இப்போது அதைவிடவும் ஆபத்தானது என்று அறிக்கை சொல்கிறது. இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. குறிப்பாகக் குழந்தைகள் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் செய்யலாம்.
 இப்போதெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு - ஏன், மழலையர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும்கூட-செல்போன் கொடுக்கிறார்கள். கேட்டால், ""பள்ளி முடிந்தவுடன் என் குழந்தை என்னிடம் பேசி, ஆட்டோ வந்தது ஏறிவிட்டேன் என்று சொன்னாலொழிய என்னால் நிம்மதியாக அலுவலகத்தில் இருக்க முடியாது'' என்று சொல்லும் பெற்றோரின் கவலை புரிகிறது. ஆனால், உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மட்டும் பேசினால் அது தகவல் தொழில்நுட்பத்தை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்று பொருள். உங்கள் குழந்தை மற்ற மாணவர்களுடன்- ஆட்டோவில் ஏறியது முதல் நீங்கள் வீடு திரும்பும்வரை- பேசிக்கொண்டே இருக்குமானால் அதை எப்படித் தடுக்க முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும்.


 உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் ஆய்வறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அறிவுரையாக எடுத்துக்கொள்ளலாம். அந்த அறிவுரை இதுதான்: "பேச்சைக் குறை' .


நன்றி--தினமணி நாளிதழ்.






அன்பே சிவம் பாணியில் தொடங்கிய ஒரு பயணம்!
மேலும் வாசிக்க "பேச்சைக்குறை!!"

அன்பே சிவம் பாணியில் தொடங்கிய ஒரு பயணம்!



வணக்கம் நண்பர்களே!கடந்த 14,15,16 மூன்று நாட்கள் நிறுவனம் விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தேன்.வருண பகவானின் புண்ணியத்தால் பிளான் கேன்சல்.அதனால நாமக்கல்ல இருக்கும் அக்கா வீட்டிற்கு செல்ல முடிவு செய்து புறப்பட்டேன்.பயணத்தில் யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையம்.(நல்லா கிளப்புராங்கடா பீதிய!)

சனி இரவு பத்து இருக்கும்.வீட்டிலிருந்து கிளம்பி மெயின் ரோட்டை வந்தடைந்தேன்.ஆரம்பமே அளப்பறையா இருந்தது.அவ்ளோ கூட்டம்.திரும்பி வீட்டுக்கு போயிட்டு விடியற்காலையில் நேரமா எழுந்துபோலாமானு நினைச்சேன்.சரி போய்த்தான் பாப்போம்னு காத்திருந்தேன் புதுவையிலிருந்து விழுப்புரம் செல்லும் பேருந்துக்காக திருபுவனையில்(புதுவையிலிருந்து 25கி.மீ).வரும் பேருந்துகளெல்லாம் நிறை மாத கர்ப்பிணிகளாய் நிற்காமலே சென்றது.கிட்டத்தட்ட ஒரு மணிநேர காத்திருப்புக்குப்பின் ஒரு பஸ் நின்னுது அதுலயும் செம கூட்டம்.கண்டக்டர் எல்லாம் டாப்புல ஏறிக்கங்கன்னார்.கொஞ்சம் பயம்தான் சரி இதையும் அனுபவிச்சுதான் பாப்பமேன்னும்,வாழ்க்கையில தான் டாப்புக்கு போக முடியல,பஸ்ஸுலயாவதுபோவோம்ன்னு டாப்புல ஏறிக்கிட்டேன்.என்னுடன் ஒரு பத்து பதினைந்து பேர்.மனத்துக்குள் ஏல மச்சி!மச்சின்னு பாடிக்கொண்டேன்.

புதுவையில் மூன்று நாட்கள் விடுமுறையாதலால் புதுவையே காலியாகிக்கொண்டிருந்தது.அனைவரும் கூட்டம் கூட்டமாக சுற்றுலாவுக்கு போய்க்கொண்டிருந்த்தனர்.சுற்றுலா பேருந்துகளும் வேன்களுமாக கூக்குரலும் விசிலுமாக கை காட்டிக்கொண்டே முந்திச்சென்றார்கள்(நாமளும் போயிருக்கலாமோ!).
டாப்பில் பயணிப்பது புதுமையான அனுபவமாக இருந்தது.ரோலர் கோஸ்டரில் பயணிப்பதைப்போன்று!முன்னால் உக்காந்திருந்த ஒருத்தர் பீடி வலிக்க ஆரம்பிச்சுட்டார்.எனக்கு அன்பே சிவம் மாதவன் படும் பாடு ஞாபகம் வந்தது(வாங்கி ரெண்டு வலி வலிச்சியான்னு கேக்குறீங்களா!ஹிஹி!)
வழியில் ஒரு ஊரில் நல்லதங்காளோ,ஆரவல்லி சூரவல்லியோ அரங்கேற்றிக்கொண்டிருந்தனர்.ஒரு பத்து பதினைந்து பேர் அமர்ந்திருந்தனர்.சிறு வயதில்(இப்பவும் சிறு வயது தான்)ஊரில் விடிய விடிய உட்க்கார்ந்து தெருக்கூத்து பார்த்த ஞாபகம் வந்தது.அழிந்து வரும் கலை-லேசாக நெருடியது.


பேருந்து விழுப்புரத்தை நெருங்கியது.வழக்கமாக விழுப்புரம் முழுவதும் ப்ளெக்ஸ் போர்டில் சிரிக்கும் பொன்முடியார் இம்முறை மிஸ்ஸிங்(கொஞ்சம் சுத்தமாய் இருந்தது ஊர்).ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் சி.வி.சண்முகத்தார் புண்ணியத்தால் அம்மா சிரித்துக்கொண்டிருந்தார்.


வழக்கமான ட்ரேட் மார்க் மூத்திர வாசனை(!)யுடன் விழுப்புரம் பேருந்து நிலையம் வரவேற்றது.பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு இறங்க தயாரானேன்.கீழே பார்க்க கொஞ்சம் கால் நடுங்கியது.ஒரு பேக்கை வைத்துக்கொண்டே இறங்க பயமா இருக்கு நமக்கு,சுமை ஏற்றி இறக்குபவர்களை எண்ணி மரியாதையுடன் வியந்தேன்.ஒரு வழியா கீழ இறங்கியாச்சு அப்பறம் விழுப்புரத்திலிருந்து நாமக்கல் பயணம் அடுத்த பதிவில்!!!!
மேலும் வாசிக்க "அன்பே சிவம் பாணியில் தொடங்கிய ஒரு பயணம்!"

Wednesday, August 17, 2011

பலே விவசாயி-பாவம் டாக்டர்!!

எல்லோருக்கும் வணக்கம்,விடுமுறையில் வெளியூர் சென்றுவிட்டதால் ஒரு சின்ன கேப்.கடந்த பதிவிற்கு பின்னூட்டமிட்டவர்களுக்கும்,வாக்களித்தவர்களுக்கும் நன்றி.
அப்பறம்,இது நான் ஏற்கனவே பகிர்ந்து கொண்ட பதிவு மீண்டும் உங்களுக்காக(பயணக்களைப்பு!!).நன்றி!




ஒரு விவசாயி ஆபத்தான நிலையிலிருந்த தன்
மனைவியை ஒரு பெரிய தனியார் மருத்துவமனைக்கு
அழைத்து சென்றார்.
அவரது தோற்றத்தை பார்த்த மருத்துவர்
அவர் மனைவிக்கு சிகிச்சை அளிக்க மறுத்தார்.
இதனை அறிந்து கொண்ட அந்த விவசாயி
ஐயா! நீங்கள் என் பொண்டாட்டியை காப்பாத்துனாலும் சரி,
சாகடிச்சாலும் சரி,எவ்ளோ செலவாகுதோ அதை நான் கட்டுறேன்னு
சொன்னார்.


மருத்துவரும் அவர் பேச்சை நம்பி சிகிச்சையை ஆரம்பித்தார்.
அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் விவசாயியின் மனைவியை
அவரால் காப்பாற்ற முடியவில்லை.
இடிந்துபோனார் விவசாயி.


சிறிது நேரம் கழித்து விவசாயி தன் மனைவியின் உடலை
எடுத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேற முற்பட்டார்.
அவரை தடுத்த மருத்துவர் எங்கே பணம் என கேட்டார்.
விவசாயியோ நான் ஏன் உங்களுக்கு பணம் கட்ட வேண்டும் என்றார்.


நீ முன்பு என்ன சொன்னாய் ஐயா! நீங்கள் என் பொண்டாட்டியை காப்பாத்துனாலும் சரி,
சாகடிச்சாலும் சரி,எவ்ளோ செலவாகுதோ அதை நான் கட்டுறேன்னு 
சொல்லிட்டு இப்போ பணம் கொடுக்காம போற என்றார்

அந்த விவசாயி சொன்ன பதிலில் மருத்துவர் வாயடைத்து நின்றார்.
அவர் கேட்டது-நீங்கள் ஏன் மனைவியை காப்பாற்றினிர்களா?
மருத்துவர்;இல்லை!
நீங்கள் ஏன் மனைவியை சாகடிதீர்களா ?
மருத்துவர்:இல்லை!
பிறகு ஏன் நான் பணம் கட்ட வேண்டுமென்று மனைவியின் உடலை எடுத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.

டாக்டருக்கு பேச வார்தைகள் வரவில்லை.


மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு!!!!!

மேலும் வாசிக்க "பலே விவசாயி-பாவம் டாக்டர்!!"

Friday, August 12, 2011

லவ் பண்ணுங்க சார் லைப் நல்லா இருக்கும்.


கொஞ்சம் நில்லுங்க!நில்லுங்க! உடனே மைனா !மைனா நெஞ்சுக்குள்ளன்னு டூயட் பாட கிளம்பிடாதீங்க! சொல்ல வரதை முழுசா கேளுங்க.

நீங்க லவ் பண்ணா உங்க லவ்வர கூட்டிட்டு பைக்ல சுத்த நெறைய பெட்ரோல் போடுவீங்க. சோ! பெட்ரோல் பங்க் காரர் லைப் நல்லாருக்கும்.

நிறையா கிப்ட்,கிரீட்டிங் கார்டு வாங்கிகுடுப்பிங்க,கடைக்காரர் லைப் நல்லாருக்கும்.

செல்லுல மணிக்கணக்கா பேசுவீங்க,நெட்வொர்க் காரங்க,ரீசார்ஜ் 
கடைக்காரங்க லைப் நல்லா இருக்கும்.

பீச்சுக்கு போய் கடலை போடுவீங்க கடலை விக்கறவர் லைப் நல்லாருக்கும்.

கோவிலுக்கு (?) கூட்டிட்டுப்போய் பூ வாங்கிக்குடுத்து மங்களகரமா லவ் 
பண்ணுவீங்க,பூக்காரம்மா லைப் நல்லாருக்கும்.

தியேட்டருக்கு கூட்டிட்டுப்போய் தினுசு தினுசா லவ் பண்ணுவீங்க,தியேட்டர் ஓனர் லைப் நல்லாருக்கும்.

இன்டர்வெல்லுல ஐஸ்க்ரீம் சாப்பிட்டுகிட்டு உருக,உருக,லவ் பண்ணுவீங்க,காண்டீன்காரர் லைப் நல்லாருக்கும்.

அவங்களுக்கு பர்த்டே ன்னு சொல்லி பிரண்ட்ஸ் எல்லாருக்கும் டாஸ்மாக்ல ட்ரீட் வைப்பீங்க.இந்த ஸ்டேட்டே நல்லாருக்கும்.



இப்பவும் சொல்றேன் லவ் பண்ணுங்க சார்!லைப் நல்லாருக்கும்!!


என்ன கேக்குறீங்க? உங்க லைஃபா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!!! 


மேலும் வாசிக்க "லவ் பண்ணுங்க சார் லைப் நல்லா இருக்கும்."

Thursday, August 11, 2011

கவிதைக்கனவுகள்





                    அது முன்னிரவா நள்ளிரவா
                    நேரம் தெரியவில்லை
                    நெடுநேரமாக முயன்றேன்
                    உறக்கத்தை விழிகளில் அமர்த்த
                    உறக்கம் வரவில்லை என்றால்
                    வற்புறுத்தாதீர்கள்
                    வரும் போது அரவணைத்து கொள்ளுங்கள்
                    அது வரை வேறு எதையாவது
                    செய்துகொண்டோ
                    சிந்தித்து கொண்டோ இருங்கள் என்று
                    எங்கோ படித்தோ கேட்டோ ஞாபகம்
                    என்ன செய்யலாம்
                    எழுந்து காலாற நடக்கலாமா என்றால்
                    கடும்குளிர் வீசுது வெளியில்
                    புத்தகம் படிக்கலாமா என்றால்
                    விளக்கை போட்டால்
                    விழித்து கொள்வர் அனைவரும்
                    வேறென்ன செய்யலாம்
                    ஒரு கவிதை சிந்திக்கலாமா
                   
                    சரி
                   எதை பற்றி எழுதுவது
                  புதுக்கவிதையா மரபுக்கவிதையா
                  காதலின் களிவை பற்றியா
                  நட்பின் நல்லிணக்கம் பற்றியா
                  பெண்மை,தாய்மையின் மகத்துவமா
                  இயற்கை எழிலா,மனிதரின் மாண்பா
                  சமூக அக்கறையா
                  அரசியல் அவலமா
                  எந்த வார்த்தைகளை பயன்படுத்தலாம்
                  எதுகை மோனையை எங்கே போடலாம்
                  என்றெல்லாம் எண்ணிக்கொண்டே
                  உறங்கிப்போனேன்
                  கவிதைக்கனவுகளோடு .......
                     
                          (அப்பறம் ட்ரெயின் வரத்துகுள்ள யாராவது இவர எழுப்பிட்டுப்போங்க)








நன்றி-http://www.beencaughtsleeping.comஇணையம் for photos.







மேலும் வாசிக்க "கவிதைக்கனவுகள்"

Wednesday, August 10, 2011

டே!ரமேஷ்!! டே சுரேஷ் டெக்னாலஜி எவ்வளவு வளந்துடுச்சு பாத்தியா!!!



ரமேஷ்,சுரேஷ் என்ற இரு என்ஜினீயர் நண்பர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ஸில் S7 கோச்சில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.ஒருத்தன் அப்பர் பெர்த் இன்னொருத்தன் லோயர் பெர்த். .இருவரும் பயணம் போர் அடிக்காமலிருக்க பேசிக்கொண்டே வந்தார்கள்.


ரமேஷ் சொன்னான் டே! சுரேஷ் டெக்னாலஜி இன்னைக்கு எவ்வளவு வளந்துடுச்சு பாத்தியாடா?ஆமாண்டா  ரமேஷ்!இங்கேருந்து உலகத்துல எங்கே வேணா இருக்கவங்க கூடலாம் முகம் பாத்து பேச முடியுது,சாட்டிங் ங்கறாங்க,பிளாக்கிங் ங்கறாங்க,டுவீடிங் ங்கறாங்க.எங்கயோ இருக்கறவர் எனக்கு பேஸ் புக்ல ப்ரண்டுங்கிறான்.டெக்னாலஜி ரொம்பவும்தாண்டா வளந்துடுச்சுன்னான் ரமேஷ்.

பேசிகிட்டே வந்ததுல ரெண்டு பேருக்கும் நல்லபசி.ரெண்டு பெரும் முடிவு பண்ணி அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி சாப்பிடலாம்னு முடிவு பண்ணாங்க!
அடுத்த ஸ்டேஷன் வந்ததும் ரெண்டு பெரும் இறங்கி அங்க இருந்த ஒரு காஃபிடேரியா(CAFETARIA)க்கு சாப்பிட போனாங்க.அங்க போயும் டே! ரமேஷ் இந்த டெக்னாலஜி இன்னைக்கு எவ்வளவு வளந்திருக்கு பாத்தியா?டே!சுரேஷ் ஆமாண்டா!(மறுபடியும் முதல்ல இருந்தா)

இதுக்கு நடுவில என்னாச்சுன்னா இவங்க வந்த ட்ரெயின் கிளம்பிப்போய்விட்டது.
சற்று நேரத்தில் சென்னையிலிருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் அதே பிளாட்பாரத்தில் வந்து நின்றது(யாருப்பா குறுக்க பூந்து லாஜிக் பாக்கிறது).இருவரும் சாப்பிட்டு முடிச்சிட்டு டெல்லி செல்லும் ட்ரெயினில் அதே S7 கோச்சில் ஏறினார்கள்.

அவரவர் பெர்த்துகளில்(என நினைத்துக்கொண்டு)ஏறிகொண்டனர்.கோச்சில் எதோ மாற்றம் இருப்பதை அறிந்த ரமேஷ் டே! சுரேஷ் டெக்னாலஜி எவ்வளவு வளந்திருக்கு பாத்தியாடா!சாப்பிட போயிட்டு வரத்துக்குள்ள கோச்ல என்னன்னவோ மாற்றம் செஞ்சுட்டாங்க. ஆமாடா ரமேஷ்.!
மிடில் பெர்த்தில் இருந்தவரைப்பார்த்து ரமேஷ் கேட்டான் நீங்க எங்க போறீங்கன்னு.அவரு சொன்னாரு நா டெல்லிக்கு போறேன்னு.

டே!சுரேஷ் டெக்னாலஜி எவ்வளவு வளந்து இருக்கு பாத்தியா?அப்பர் பெர்த்தும் லோயர் பெர்த்தும் சென்னைக்குப் போவுது.மிடில் பெர்த் மட்டும் டெல்லிக்கு போவுது.ஆமாடா ரமேஷ் டெக்னாலஜி என்னமா 
வளந்திருக்கு.





மேலும் வாசிக்க "டே!ரமேஷ்!! டே சுரேஷ் டெக்னாலஜி எவ்வளவு வளந்துடுச்சு பாத்தியா!!!"

Monday, August 8, 2011

உங்களுக்கு தைராக்சின் அதிகமா சுரக்குதா?





மொத்த பட்டு உற்பத்தியில் சீனா எழுபது சதம் பூர்த்தி செய்கிறதாம்  (பட்டுத்தொடரும் சீனப்பாரம்பரியம்)


இணையத்தின் தந்தை –விண்டன் செர்ப் (கும்பிட்டுகறேங்க)




ஜேம்ஸ் புக்கனன் அமெரிக்காவின் ஒரே பிரம்மச்சாரி அதிபர் (நிறைய பேச்சலர் பார்ட்டிக்கு போவாரோ?}


இலங்கையின் தேசிய விளையாட்டு கைப்பந்தாம் (அவர்கள் பந்தாய் பயன்படுத்துவது என் தமிழ் மக்களைத்தான் எனும் போது தான் எரிகிறது)


இந்தியா கேட்டோட(டெல்லி) உயரம் -42 அடியாம் (உங்க வீட்டு கேட் உயரம் தெரியுமான்னுல்லாம் கேக்ககூடாது?)


அமெரிக்காவை விட சீனாவில் இங்கிலீஷ் பேசுறவங்க அதிகம்(அப்ப அங்க பாதி பேர் பீட்டர் தானா?}


ஜப்பானிய ஹோட்டல்களில் டிப்ஸ் பழக்கம் கிடையாதாம் (இந்திய ஹோட்டல் சர்வர்ஸ் முறைக்காதிங்கப்பா}


தைரோக்சின் எனும் ஹார்மோனே உடலின் வெப்ப உற்பத்திக்கு காரணம்(பிகரை பாக்கும் போது சூடு கிளம்பறதுக்கேல்லாம் இது காரணம் இல்லீங்க)


சீன நாட்டின் பாராளுமன்றம் மற்றும் நாணயம் இரண்டின் பெயரும் யுவான் (கங் சிங் புங்-நல்லாருக்குன்னு சீன மொழியில் சொன்னேங்க ஹிஹி )


மனிதனுக்கு முடி ௦.425cm வளருதாம் ஒரு நாளைக்கு (என்ன கேட்டீங்க மூளையா?காமெடி பண்ணாதீங்க!)


பிரெஞ்சு படங்களுக்கு சென்சார் கிடையாதாம் (அட எங்க ஓடறீங்க நில்லுங்க)




நன்றி-இணையங்கள்-புகைப்படம்.



மேலும் வாசிக்க "உங்களுக்கு தைராக்சின் அதிகமா சுரக்குதா?"

Saturday, August 6, 2011

நட்பைப் போல செய்து கொள்வதற்கு.....



துரோகம் செய்தல்
துன்பம் கொடுத்தல்
மறைத்துப்பேசுதல்
முகம் கோணுதல்
புறம பேசுதல்
புண்படுத்துதல்
குத்திக்காட்டல்
குறைகூறுதல்
மன்னிப்புகேட்டல்
நன்றி நவில்தல்
இவையேதுமறியாத


தொட்டணைத்தல்
தோள்கொடுத்தல்
தட்டிக்கொடுத்தல்
விட்டுக்கொடுத்தல்
பகிர்ந்துகொள்ளல்
மனம்திறத்தல்
மடிபுதைந்தழுதல்
சண்டையிடல்-மறுநிமிடம்
சமாதானமடைதல்
செல்லமாய் சீண்டுதல்
பொய்யாய் கோபித்தல்



இவைமட்டுமே அறிந்த நட்புலகமே
வள்ளுவன் சொன்னது உண்மைதான்
நட்பைப்போல
செய்து கொள்வதற்கு
சிறந்த பொருள் ஏதுமில்லை இவ்வுலகில்!!


நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!


மேலும் வாசிக்க "நட்பைப் போல செய்து கொள்வதற்கு....."

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்!!!


கோபமாக பேசினால் குணத்தை இழப்பீர்!
சத்தமாக பேசினால் சந்தோசத்தை இழப்பீர்!
வேகமாக பேசினால் விவேகத்தை இழப்பீர்!
அதட்டி பேசினால் அன்பை இழப்பீர்!



உதாசீனப்படுத்தி பேசினால் உறவை இழப்பீர்!
கர்வமாக பேசினால் கருத்தை இழப்பீர்!
மட்டம் தட்டிப்பேசினால் மதிப்பை இழப்பீர்!
புறம் பேசி திரிந்தால் பெருமை இழப்பீர்!



சிரித்து பேசுங்கள் சிறப்பை பெறுவீர்!
சிந்தித்து பேசுங்கள் சிறப்பைப் பெறுவீர்!
பொறுமையாக பேசுங்கள் பெருமை பெறுவீர்!
அன்பாய் பேசுங்கள் அனைத்தையும் பெறுவீர்!



டிஸ்கி—வேற எப்படித்தான் பேசறதுங்கறிங்களா?எப்பிடி வேணா பேசுங்க ஆனா பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்(அப்படா தலைப்பை மேட்ச் பண்ணியாச்சு)






நன்றி-இணையங்கள்,புகைப்படங்களுக்கு.

மேலும் வாசிக்க "பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்!!!"

Thursday, August 4, 2011

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்!!!


ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்(உங்க புள்ள சந்தேகப்ப்படும்னுசொல்லக்கூடாது சொல்லக்கூடாது).



“ஊரான பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும்”அப்படிங்கறது நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருக்கும் பழமொழி.இதன் உண்மையான பொருள் நமது சுற்றத்திலும்,அருகிலும்,உள்ள ஏழைக்குழந்தைகளுக்கு உணவிட்டு வந்தால் நம் குழந்தை அந்த புண்ணியத்தில் எந்த குறையுமின்றி வளரும் என்பதுதான்.




இன்றைய சூழலில் இது போல நிறைய பேருக்கு உதவ முடியலைன்னாலும் நம்ம வீட்டுக்கு வந்த ஊரான் வீட்டு(இன்னொர் வீட்டிலிருந்து வந்த)மருமகளை நல்ல மதிப்பளித்து நல்லமுறையில் கவனித்துக்கொண்டாலே நம் பிள்ளை (அவள் வயிற்றில் வளரும்) நம் வாரிசு நல்ல முறையில் எந்த குறையுமின்றி வளரும்.
இந்த பழமொழியின் அர்த்தம் எதுவாக இருந்தாலும் நம்ம பிள்ளை,அடுத்தவங்க பிள்ளை என பார்க்காமல் அனைவரிடமும் அன்பு காட்டி வளர்ப்போம்.


நன்றி—பாடம் புகட்டும் பழமொழிகள் புத்தகம்(கவிஞர் த.துரைசிங்கம்)


பின்குறிப்பு—இதை செயல்படுத்தி குடும்பச்சண்டையோ மாமியார் மருமகள் சண்டையோ வந்தால் எனது வலைநிர்வாகம் பொறுப்பேற்காது.



புகைப்படம் உதவி-நண்பன் மாதேஷ்.



மேலும் வாசிக்க "ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்!!!"

Tuesday, August 2, 2011

இவங்கல்லாம் இப்படித்தான் தூங்குறாங்க



வாத்துக்கள் தண்ணீரில் வட்டமிட்டு கொண்டே தூங்கும் 
(வாத்துக்கள் தண்ணீரில் வட்டமிடுகின்றன நம்ம மக்கள் தண்ணி அடித்து வட்டமிடுகின்றனர் )




 ராபின் எனும் பறவை பாடிக்கொண்டே  தூங்கும் 
(இதையே நான் செய்தால் உளர்றேன்றாங்க -என்ன கொடுமை ராபின் இது )




பாம்புகள் கண் திறந்தே  தூங்கும் 
(அட போங்க பாஸ் நாங்க கூடதான் கிளாஸ் ரூம்ல பல தடவை  இப்படி தூங்குனோம் )




மனிதனால் மட்டும் முதுகு தரையில் படும் படி தூங்க முடியும்
(மனுசனா பொறந்து என்ன சாதிச்சன்னு என்னை பார்த்து கேட்பவர்களுக்கு என் பதில் இது)




டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் திறந்து கொண்டு தூங்கும்
(ஒரிஜினல் அலெர்ட் ஆறுமுகம் போல)




வரிக்குதிரை யும் கோழியும் நின்று கொண்டே  தூங்கும் 
(நம்ம சென்னை மாநகர பேருந்து&சிட்டி ட்ரெயினில் பல பேர் இதைதான் செய்கிறார்கள் )




மனிதனால் பாதி கண்களை திறந்து கொண்டு தூங்க முடியாது
(இதைத்தான் நம்ப முடியல )




குரங்குகள் மரத்தில் தொங்கியபடியே தூங்கும் 
(கிட்டத்தட்ட இதுவும் பேருந்திலும் ட்ரெயின்லயும் கம்பிய புடிச்சுகிட்டு தூங்குற மாதிரித்தான் -உண்மைதான் குரங்கிலிருந்து தான் மனிதன் பிறந்திருக்கிறான் )


இவங்கள விடுங்க நீங்க எப்படி தூங்குறீங்க?


மேலும் வாசிக்க "இவங்கல்லாம் இப்படித்தான் தூங்குறாங்க"

Sunday, July 31, 2011

தீப்பெட்டி எங்கேடா




மூன்று பேரை குற்றம் செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க 
உத்தரவிட்டார் ஒரு அரசர்

 சலுகையாக அவர்கள் விரும்பும் ஒன்றை 10 வருடம் தேவையான அளவிற்கு 
கொடுப்பதாகவும் சொன்னார்.
ஒருவர்  10 வருடம் தேவையான அளவிற்கு மது கேட்டார்.
இரண்டாமவர்  10 வருடம் தேவையான அளவிற்கு நல்ல சாப்பாடு கேட்டார்.
மூன்றாமவர்  10 வருடம் தேவையான அளவிற்கு சிகரெட் கேட்டார்
அனைத்தும் அளிக்கப்பட்டது

பத்து ஆண்டு கழித்து மூவரையும் அரசர் பார்த்து நீங்கள் விரும்பியதை வைத்து 
இவ்வளவு நாள் சந்தோசமாக இருந்தீர்களா என கேட்டார்


மூன்றாமவர்-- போடாங்கொய்யால சிகரெட் கொடுத்தியே தீப்பெட்டி எங்கேடா?




பி.கு-இது ஒரு ரீமேக் பதிவு(என்னுதுதான்)
மேலும் வாசிக்க "தீப்பெட்டி எங்கேடா"

துரோணர்கள் தொலைந்துவிட்டார்கள்!!!






அன்று!
விவேகானந்தர் கேட்டார்
நூறு வலிமையான
இளைஞர்களைத்தாருங்கள்
வலிமையான பாரதத்தைப் படைக்கிறேன் என்று!



இன்று!
நூறு லட்சம் இளைஞர்கள் கேட்கிறோம்
ஒரு விவேகானந்தரை காட்டுங்கள்
வலிமையான பாரதத்தை
படைத்துக்காட்டுகிறோம்!





ஆம்!
இன்று ஏகலைவன்களுக்கு
பஞ்சமில்லை துரோணர்கள் தான்
தொலைந்துவிட்டார்கள்!!




மேலும் வாசிக்க "துரோணர்கள் தொலைந்துவிட்டார்கள்!!!"