Sunday, July 31, 2011

துரோணர்கள் தொலைந்துவிட்டார்கள்!!!






அன்று!
விவேகானந்தர் கேட்டார்
நூறு வலிமையான
இளைஞர்களைத்தாருங்கள்
வலிமையான பாரதத்தைப் படைக்கிறேன் என்று!



இன்று!
நூறு லட்சம் இளைஞர்கள் கேட்கிறோம்
ஒரு விவேகானந்தரை காட்டுங்கள்
வலிமையான பாரதத்தை
படைத்துக்காட்டுகிறோம்!





ஆம்!
இன்று ஏகலைவன்களுக்கு
பஞ்சமில்லை துரோணர்கள் தான்
தொலைந்துவிட்டார்கள்!!




13 comments:

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

முதல் மழை

கோகுல் said... Reply to comment

சி.பி.செந்தில்குமார் said...
முதல் மழை\\
வாங்க தல மழை தொடர்ந்து பொழியட்டும்

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

ஆம்!இன்று ஏகலைவன்களுக்கு பஞ்சமில்லை துரோணர்கள் தான் தொலைந்துவிட்டார்கள்!!//

உண்மைதான். தெலைந்தவர்களைத் தேடிப் பிடிப்போம்.

கூடல் பாலா said... Reply to comment

நல்ல ஹைக்கூ ....

கோகுல் said... Reply to comment

இராஜராஜேஸ்வரி said...
ஆம்!இன்று ஏகலைவன்களுக்கு பஞ்சமில்லை துரோணர்கள் தான் தொலைந்துவிட்டார்கள்!!//

உண்மைதான். தெலைந்தவர்களைத் தேடிப் பிடிப்போம்.\\
தேடுவோம்.வருகைக்கு நன்றி

கோகுல் said... Reply to comment

koodal bala said...
நல்ல ஹைக்கூ ....

வருகைக்கு பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ

ஆகுலன் said... Reply to comment

நல்ல அர்த்தமுள்ள வரிகள்...

கோகுல் said... Reply to comment

ஆகுலன் said...
நல்ல அர்த்தமுள்ள வரிகள்...\\
வாங்க வாங்க .நன்றி

மாய உலகம் said... Reply to comment

தேடிப்பிடிப்போம் நண்பரே... ஒரு வேளை நானா இருப்பனோ...யாருய்யா கல் எடுக்கிறது.. நல்ல கேள்விக்கான பகிர்வு நண்பரே நன்றியுடன் வாழ்த்துக்கள்

கோகுல் said... Reply to comment

மாய உலகம் said...
தேடிப்பிடிப்போம் நண்பரே... ஒரு வேளை நானா இருப்பனோ...யாருய்யா கல் எடுக்கிறது.. நல்ல கேள்விக்கான பகிர்வு நண்பரே நன்றியுடன் வாழ்த்துக்கள்\\

கல்ல கீழ போடுங்கப்பா!நண்பர் பயப்படுறார்.

நிரூபன் said... Reply to comment

இன்று!
நூறு லட்சம் இளைஞர்கள் கேட்கிறோம்
ஒரு விவேகானந்தரை காட்டுங்கள்
வலிமையான பாரதத்தை
படைத்துக்காட்டுகிறோம்!//

இவ் வரிகள் என் மனசினைத் தொட்டு விட்டது,
இன்றைய நாட்டு நிலமையினை விளக்கும் அருமையான, பூடகமாகத் தத்துவம் நிரம்பிய கவிதை.

நிரூபன் said... Reply to comment

ஆம்!
இன்று ஏகலைவன்களுக்கு
பஞ்சமில்லை துரோணர்கள் தான்
தொலைந்துவிட்டார்கள்!//

சொற்களால், சோம்பேறி இளைஞர்கள் முதுகிலும், நாட்டின் நலனில் அக்கறை கொள்ளாதோருக்கும் சாட்டை அடி கொடுப்பது போன்ற வரிகள் இவை.

சீனிவாசன் said... Reply to comment

தோழரே, தூரோணர் என்பவர் மிகப்பெரிய ஜாதி வெறியர்.திறமையுள்ள வேடுவ இனத்தை சேர்ந்த ஏகலைவனை, அவன் வேடுவன் என்ற ஒரே காரணத்திற்காக சீடனாக ஏற்றுகொள்ள மறுத்தவர். தன்னுடைய சொந்த முயற்ச்சியினால் ஏகலைவன் வித்தையில் தேறிவந்த பொழுது, தன் சீடன் அர்ஜுனனை விட திறமையுள்ளவனாக உள்ளான் என பொறாமை கொண்டு அவன் வித்தையை வாழ்நாள் முழுதும் பயன்படுத்த முடியாத அளவுக்கு கட்டைவிரலை காணிக்கையாக கேட்ட அயோக்கியன். இந்த சமயம் சார்ந்த கதை அனைவருக்கும் தெரிந்ததுதான், உங்களுக்கும் பின்னூட்டமிட்ட நபர்களுக்கும் தெரியாதது ஆச்சரியமாய் உள்ளது. இன்றும் துரோணர்கள் உங்களின் கட்டைவிரலுக்காக காத்திருக்கின்றனர், கேட்டால் கொடுப்பீர்களா?