பிறந்த போது
பேருவகை அடைந்த
தந்தையை
எத்தனையோ இரவுகளில்
தூங்க விடாமல்
தவழ்ந்து நடக்கையில்
அசந்த சமயங்களில்
அடிக்கடி சாலைக்கு ஓடி
பிள்ளையை பத்திரமா பாத்துக்குங்க
என பலரையும் பேச வைத்து
ஓடி விளையாடுகையில்
அக்கம் பக்கம்
வீடுகளின்
கண்ணாடிகளை உடைத்து
என்னய்யா பிள்ளை வளத்துருக்க
என எல்லோரையும்
ஏச வைத்து
சரியாப்படிக்கல என
ஆசிரியர் புகார் கூற
அடுத்த தேர்விலே
முதலாவதா வந்து
அவராலே
பாராட்டப்பெற்று
கல்லூரிக்காலங்களில்
கனவுகளில்
சுற்றித்திரிந்து
கேளிக்கைகளில் கலந்து
மனம் கலங்கச்செய்து
படித்து முடித்து
பணிக்கு என்ன செய்வாயோ
என்றெண்ணிய போது
ஏதோ எனக்கு புரியாத
வேலை ஒன்றை சொல்லி
கை நிறைய சம்பளம்
சொந்தக்காலில் நிற்கும் தைரியம்
வந்ததாக சொல்லி
திருமணத்திற்கு
பொருத்தமான இணை
தேடி அலைய
உங்களுக்கேன் சிரமம்
நானே பார்த்து விட்டேன்
என சொல்லி
இப்படியெல்லாம் எனக்கு
நன்றி செய்தாய்
நாளை நான்
படுத்த படுக்கையாக
கிடக்கையில்
மருந்து
வாங்கி வரச்சொன்னால்
பிசியா இருக்கேன்
மறந்துட்டேன்னு
சொல்லி
நன்றி காட்டுவாயோ?
புகைப்படங்கள் உதவி-நண்பன் -மாதேஷ்!
________________________________________________________________________________
பின் குறிப்பு--
கடந்த எனக்குள் நான் பதிவை தொடர் பதிவாக எழுத அழைக்கலாம் என நண்பர்கள் கேட்டிருந்தால் நண்பர் சம்பத்குமாரையும்(தமிழ் பேரன்ட்ஸ்), பதிவுலகப்புயல் நாஞ்சில் மனோ அவர்களையும்,மாயம் புரியும் மாயஉலகம் ராஜேஷ் அவர்களையும் அன்போடு அழைக்கிறேன்.நிச்சயம் இசைந்து கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு.நன்றி!
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
Tweet | ||||||
34 comments:
தவமாய் தவமிருந்து....
வார்த்தை கோர்வைகளில் சிக்குண்டு...
//நாளை நான்
படுத்த படுக்கையாக
கிடக்கையில்
மருந்து
வாங்கி வரச்சொன்னால்
பிசியா இருக்கேன்
மறந்துட்டேன்னு
சொல்லி
நன்றி காட்டுவாயோ?
//
இப்படி சொல்லும் பிள்ளைகள் உள்ளனர்
நல்ல கவிதை
வணக்கத்துடன் :
ராஜா
விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..
கசப்பானதுதான் ஆயினும் யதார்த்த நிலையை
மிக நேர்த்தியாகச் சொல்லிப் போகும் அருமையான பதிவு
மனம் கவர்ந்த பதிவைத் தந்தமைக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்
த.ம 1
அருமை.
அருமையா இருக்கு கோகுல்
ஒரு அப்பனோட ஞாயமான கேள்வி, இதை படிக்கும் போது எனக்கு உறுத்தல் இல்லை, ஏன்னா நான் அப்படி தவிக்க விட்டது இல்லையே..
6 மாதத்தில் தொடங்கி 60 வயதில் முடிகிறது...
முதுமைக்கு மதிப்பளிக்க கற்றுக்கொண்டால் இந்த சமூகம் வளம்பெறும்...
அழகிய கவிதை
வார்த்தைகளின் உபயோகம் மிக சிறப்பு ...
கவிதை உணர்த்தும் கருத்து வலிமை ...
முத்துக்கு முத்தாக...
//நாளை நான்
படுத்த படுக்கையாக
கிடக்கையில்
மருந்து
வாங்கி வரச்சொன்னால்
பிசியா இருக்கேன்
மறந்துட்டேன்னு
சொல்லி
நன்றி காட்டுவாயோ? //
நெத்தியடி கேள்வி நண்பரே..
தொடர்பதிவிற்க்கு அழைத்தமைக்கு நன்றி..நானும் முயற்சிக்கிறேன்
ஓஹோ தொடர்பதிவா.. அப்ப எல்லாரிடமும் உண்மைய வாங்கிடலாம்...
நல்ல கவிதை
தினமலத்திற்கு விளம்பரம் பிடித்து கொடுக்கும் முகவர்கள் இவர்கள்..
Dinamalar is the leading Tamil News Paper in Tamilnadu. The following is the list of Advertising Agencies in Chennai:
1. Adayar / Thiruvanmiyur: Navshin Nihaal Advertising - 9444222876, 42114843
2. Pammal / Pallavaram: Jairam Associates - 9444206790
3. Virugambakkam: Sri Ramajayam Enterprises - 23765244, 9282111595
4. Anna Nagar East: Orbiter Marketing Consultancy - 26205133, 26205233, 9840650404
5. Saidapet: Arunmozhi Ads: 23813041, 9840469615
6. T.Nagar / Nungambakkam: Navshin Nihaal Advertising - 9941915015, 42867223
7. Ambattur: Vijay Advertising: 23862461, 9789871469
8. Arumbakkam / Mogappair: ABC Ads: 24762918, 9445110310
9. Nandanam / Teynampet: Sri Pathuga Advertising: 24322574, 9884722785
10. T.Nagar: Kasthuri Agency: 9940162286, 45544154
11. Guindy / Velachery: Raj Publicities: 24321637, 9381466467
12. Mylapore: Sri Balaji Associates: 24670563, 9840992586
13. Perambur: T.G. Associates: 25501951, 9283186435
14. Thirunagar / Ramapuram: Bright Star Computers: 24863039, 9841613595
15. Poonamalee: Vijay Advertising: 24768567, 9789871469
16. Royapettah: The Rams Advertising Agency: 65210661, 9282232934
17. Purasawalkam: Dhanalakshmi Ads: 65374099, 9600173399
18. Valasaravakkam / Porur: K.S.V. Agencies: 9282111595, 9444032679
19. Villivakkam: Synergy Advertising: 25502174, 9884717779, 9884717778
20. Vadapalani: Dhanvanthri Advertising: 9600087808, 9600093456
21. Tambaram: Adhilakshmi Ads: 9381828833, 22266350
22. Broadway: Sruthi Advertising: 42620518, 9840810516
கவிதை படிக்கும்பொழுது குற்ற உணர்வே மிஞ்சி நிற்கிறது... மிக அருமையான கவிதை நண்பா... பெற்றோர்களை என்றும் மதிப்போம்.. உணர்த்தியமைக்கு நன்றி நண்பா...
தொடர் பதிவு எழுத சொன்னமைக்கு மிக்க நன்றி நண்பா...
இன்றைய நடைமுறை உலகில்
நீங்கள் சொல்வது போல் பெரும்
பாலான பிள்ளைகள் இருந்தாலும்
பத்து சதவிகிதமாவது நல்ல பிள்ளை
கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை!
பந்த பாசமெல்லாம் அருகித்
தான் வருகிறது
த ம 6
புலவர் சா இராமாநுசம்
தாயில் சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமும் இல்லை, அப்பிடின்னு சொல்லலாம் கவிதை "சுறீர்"....!!!!
என்னையும் தொடர்பதிவுக்கு கோர்த்து விட்டுடாங்களே, நான் போலீஸ்ல புகார் குடுக்கப்போறேன் ஹி ஹி.....
----திங்கள் கிழமை "எனக்குள் நான்"---
நாளை நான்
படுத்த படுக்கையாக
கிடக்கையில்
மருந்து
வாங்கி வரச்சொன்னால்
பிசியா இருக்கேன்
மறந்துட்டேன்னு
சொல்லி
நன்றி காட்டுவாயோ?
இதுதானையா இன்றைய சமூகம் .
இப்பவே கோகுலுக்கு அந்தப் பயம்
வந்துவிட்டதோ!..நல்ல உருக்கமான கவிதை .வாழ்த்துக்கள் சகோ .
மீதிக்கு என் தளத்தில் வந்து அழுங்க சகோ..
அருமையான கவிதை அண்ணா.. வாழ்த்துக்கள்
ஒரு அப்பாவின் நியாயமான கேள்விகள் . நல்லா சொல்லி இருக்கீங்க.
கவிதை மிக அருமை...! படிக்கும் அப்பா என்னும் ”அற்புத மனிதரின்” ஏக்கம் தெரிகிறது...!
அருமையான கவிதை வடித்தமைக்கு வாழ்த்துகள்...!
//சரியாப்படிக்கல என
ஆசிரியர் புகார் கூற
அடுத்த தேர்விலே
முதலாவதா வந்து
அவராலே
பாராட்டப்பெற்று//
நீங்க ரொம்ப நல்லவரா பாஸ்... ;);)
இப்படியும் நடக்கவே செய்கிறது..
இப்படியெல்லாம் எனக்கு
நன்றி செய்தாய்
நன்றிக்கு இலக்கணமே!!!!???????????
சாரி பாஸ் கொஞ்சம் லேட்டாகிடுச்சி...
மனதை வருடும் கவிதை தாய்,தந்தை என்றும் போற்றுதலுக்குறியவர்கள்
அப்பா பற்றி...
கவிஞர் கோகுல் ......
வாழ்த்துக்கள்.
தாய் தந்தையை வணங்காமல் உலகில் உயர்வு இல்லை
அன்பு கலந்த வணக்கம் நண்பரே இன்று நான் இந்த வலையுலகம் என்னும் கடலில் நீந்த வந்திருக்கின்றேன்..உங்கள் ஆதரவையும் தாறுங்கள்
அருமை.
அசத்தல்.
அருமை
பெற்றோரின் அருமை உணர்த்தும் கவிதை..... ரெம்ப அழகு பாஸ்.
உங்கள் தொடர் பதிவு பார்த்தேன்.... வித்தியாசமான முயற்சி.
வணக்கம் பாஸ்,
நல்லா இருக்கிறீங்களா?
தந்தை மகற்கு ஆற்றும் உதவிகளையும்,
இன்றைய பிள்ளைகளின் கல் மன நெஞ்சத்தையும் அழகிய கவிதை மூலம் தந்திருக்கிறீங்க.
பெற்ற மனம் பித்து!
பிள்ளை மனம் கல்லு என்பதனை விட,
எளிமையாக உங்கள் கவிதை
இக் காலப் பிள்ளைகளின் கடமை உணர்ச்சியினை எள்ளி நகைத்திருக்கிறது.
Super Thambi!
கடமையை செய்.பலனை எதிர்பார்க்காதே என அப்பாவுக்குச் சொல்லிவிட வேண்டியது தான்.
என்னவளே
என்னை அடையாளப்படுத்தும்
எத்தனையோ வாய்ப்புகளை
உருவாக்கினார் என் தந்தை!
அடடா
இன்னாரின் மகனென்று
அறிமுகப்படுத்தும் நிலையிலேயே
இப்போது வரைக்கும் நான்!
அன்பின் கோகுல் - அருமையான கவிதை - பெற்ற தந்தையை முதிய வயதில் மனம் வருந்த வைக்கும் பிள்ளகள் எண்ணிக்கை அதிகமாகிறது. அவர் படும் பாட்டினையும் இறுதிக் காலத்தில் அவரது வேண்டுகோளையும் விளக்கும் கவிதை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment