வணக்கம் நண்பர்களே,
கடந்த மூன்று நாட்களாக பதிவுலகப்பக்கம் வர
முடியவில்லை.காரணம் கடைசியில் சொல்றேன்!
நம்ம ஊருல இப்ப அப்பப்ப மழைபேயுது.ரமணன் பேச்ச எல்லாம்
கேக்குறது கிடையாது.ஸ்கூல் லீவு விட்டா மழை விட்டுடும்.ஸ்கூல்
வைக்குற அன்னைக்கு மழை கொட்டும்.அத விடுங்க.எதுக்கு
இந்தப்பதிவுன்னா இந்த மழைநேரங்களில் நாம வண்டில போகும் போது
வரும் பிரச்சினைகளைப்பத்தியது.
சாதாரணமாகவே சாலைப்பயணத்தில் இப்போதெல்லாம் பாதுகாப்பு
கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் மழைக்காலத்தில் பயணம் செய்யும்
போது நாம் இன்னும் சற்று கூடுதல் கவனம் கொள்வது
அவசியம்.குறிப்பாக வேகம்,மழை நேரங்களில் சாதாரணமாக நாம்
செல்லும் வேகத்தை விட குறைந்த வேகத்தில் வண்டி ஓட்டுவது மிக
அவசியம்.
பிரேக் பிடிக்கும் போது கூடுதல் கவனம் தேவை.ஈரச்சாலைகள் நிச்சயம்
பிரேக்குக்கு பிடிந்து கொடுக்காது.பிரேக் நாம சொன்ன பேச்ச கேக்காது.டூ
வீலர்ல கூடுமான வரைக்கும் இரண்டு பிரக்குகளையும் பிடிச்சு வண்டியை
நிறுத்த முயற்சி செய்யணும்.முடிஞ்சா வரைக்கும் சடன் பிரேக் பிடிக்கறத
தவிர்க்கணும்.
ரோட்டுல தண்ணி ஓடும் போது வண்டி ஓட்டுறத கண்டிப்பா தவிர்க்குறது
நல்லது.ரோட்டுல பள்ளம் இருந்தா தெரியாது.அப்பறம் டரியல் தான்.நம்ம
ஊரு மழைக்கால ரோடுங்களைப்பத்தி உங்களுக்கு தெரியும் தானே?சில
நேரங்கள்ல ரோட்டோரமா இருக்குற சாக்கடைங்க தண்ணியில
மறைஞ்சுடும்.கொஞ்சம் அசந்தா சாக்கடையில் ஐக்கியமாக
வேண்டியதுதான்.நாம கால் அளவு தண்ணிதான் இருக்குன்னு நினைச்சு
போனா இடுப்பளவு தண்ணி இருக்கும்.வண்டிக்குள்ள தண்ணி போய்
வண்டிக்கும் பிரச்சினை நமக்கும் தான்!
அப்பறம் இன்னொரு பிரச்சினை சேறு.நீரும் செம்புலச்சேறும் கலந்தது
போல,பாட்ட கேக்க நல்லா நல்லா இருந்தாலும் வண்டி ஓட்ட ஆபத்தானது
தான்.டூ வீலர்ல பேலன்ஸ் பண்ண முடியாது.4 வீலர்ல சக்கரங்கள்
சேத்துல மாட்டிக்கும்.சோ அவாய்ட் பண்றது நல்லது.சில இடங்களில் மண்
சரிவு அபாயங்களும் இருக்கிறது.
மழை கொட்டிக்கிட்டு இருக்கும் போது வண்டியில போறது ஒரு
சுகமான,ரசனையான அனுபவம் தான்,ஆனா அதுல நிறைய ஆபத்துக்களும்
இருக்குங்க.அதனால நமது மழைக்கான பயணங்கள் பாதுகாப்பானதாக
இருக்க முன்னெச்சரிக்கையுடன் இருப்போம்.அதிலையும் நம்மாளுங்க
ஒத்த கையில குடைய பிடிச்சுக்கிட்டு இன்னொரு கையில ரிஸ்க்கையும்
எடுத்துக்கிட்டு வண்டி ஓட்டிட்டு போறாங்க!
அப்பறம் பிளாக் பக்கம் வராததுக்கு காரணம் என் வயதொத்த கூட வேலை
பாக்கும் நண்பன் ஒருவன் டூ வீலர்ல கம்பெனிக்கு வரும் போது இது
மாதிரி மழை நேரத்துல பிரேக் புடிச்சு ஸ்லிப்பாகி விழுந்து கையிலும்
கழுத்திலும் கொஞ்சம் அடி.இப்ப பரவால்ல.மருத்துவமனைக்கு போய் வர
நேரிட்டதால் நேரமில்ல.இது போல விபத்துகளை தவிர்க்க கொஞ்சம்
விழிப்புடன் இருப்போம் நண்பர்களே! இருப்போமா?நமது நண்பர்களுக்கும்
விழிப்பை ஏற்படுத்துங்கள்!நன்றி!
தொடர்புடைய பதிவுகள்
ஹெட் லைட்டால் வரும் இருட்டு!!!
வேகத்தடையா?பயணத்தடையா???
Tweet | ||||||
37 comments:
வருமுன் காப்போம்....நல்ல எச்சரிக்கை பதிவு..
வணக்கம் கோகுல் பாஸ்,
நலமா?
மழையில் வண்டி ஓட்டும் போது நாம் கவனிக்க வேண்டிய விடயங்களை மனதில் படியும் வண்ணம் தொகுத்து தந்திருக்கிறீங்க.
நல்ல பதிவு.
பதிவுலகப் பக்கம் வராட்டி என்னங்க.
உங்கள் நண்பர் குணமாகி வீடு வந்தாலே போதும் பாஸ்.
நல்ல விழிப்புணர்வூட்டும் பதிவு:மழைன்ன உடனே மழைப்பாட்டு நினைப்புக்கு வருது!எதையோ நினைக்க எதுவோ நினைவில வர்ற மாதிரி இருக்கு!ஹி!ஹி!ஹி!!!
அந்த பஸ்ஸே மழை நீரில மூழ்கிடுச்சா....!
நல்ல விழிப்புணர்வு பகிர்வு கோகுல்... பகிர்வுக்கு நன்றி
விழிப்புடன் இருப்போம் நண்பர்களே!
உங்க நண்பர் நலம்பெற்றுவர பிரார்த்தனைகள்...
///ரோட்டுல தண்ணி ஓடும் போது வண்டி ஓட்டுறத கண்டிப்பா தவிர்க்குறது
நல்லது.ரோட்டுல பள்ளம் இருந்தா தெரியாது////அப்புறம் அருகில வெள்ளையுடுப்போட யாரும் வந்த கலர் உடுப்போட தான் வீடு போய் சேருவினம்...))
அருமை கோகுல், நல்ல போஸ்ட்... கரெக்ட் டைமிங்....!
nalla seithi pakkuvamaa solli irukkingka.. nanban kunamadaiya vendukiren..vaalththukkal
அருமையான விழிப்புணர்வு பதிவு... உங்கள் நண்பர் நலமடைய வேண்டுகிறோம்....
வணக்கம் மாப்பிள நல்லதொரு விளிப்புணர்வு பதிவு சரியான நேரத்தில் வந்திருக்கிறது வாழ்த்துக்கள்..
கோகுல்,
விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் அதே வேளையில்,
நம் அரசாங்கம் சாலை பராமரிப்பில் சற்றும் கவனம் செலுத்தாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கும் தன்மையும் பாராட்டுக்குரியது.
//மழை கொட்டிக்கிட்டு இருக்கும் போது வண்டியில போறது ஒரு
சுகமான,ரசனையான அனுபவம் தான்,ஆனா அதுல நிறைய ஆபத்துக்களும்
இருக்குங்க.அதனால நமது மழைக்கான பயணங்கள் பாதுகாப்பானதாக
இருக்க முன்னெச்சரிக்கையுடன் இருப்போம்.//
ஆம் நண்பரே வருமுன் காப்பதே நலம் .
நல்லதொரு சமூக விழிப்புணச்சிப் பார்வை நண்பரே..
அழகாம ஓரு விழிப்புணர்வு பதிவு பாஸ்
எல்லாம் போன பின்
ஐயோ போச்சே என்று புலம்புவதை விட
வருமுன் காப்பது நலமே
என அருமையா சொல்லியிருகீங்க..
சாலை விதிகளை மதித்து
உயிரின் விலைமதிப்பை தெரிந்து
பாதுகாப்புடன் நடந்துகொள்ளுதல்
அவசியம்.
தங்களின் நண்பர் நல்ல
பூரண நலமடைய இறைவனை
இறைஞ்சுகிறேன்.
அழகான விழிப்புணர்வு மிக்க பதிவு! வாழ்த்துக்கள் கோகுல்!
ஸ்பார்க் பிளக் அடப்டேரில் சில நேரங்களில் நீர் புகுந்து வண்டி ஸ்டார்ட் செய்ய மக்கர் செய்யும்... அது போன்ற நேரங்களில் அடப்டேரை கழட்டி இரண்டு பக்கங்களிலும் நீரை ஊத்தி வெளியே எடுத்து விட்டு திரும்பவும் போட்டு ஸ்டார்ட் செய்தால் வண்டி அருமையாக ஓடும்.. நண்பர் அடிபட்டார்னு நீங்க சொல்றது மீசையில் மண் ஒட்டல கணக்கா இருக்கும்னு ஒரு யூகம்... அடிபட்டது உங்களுக்கு தானே...
நானும் மும்பையில் மழை நேரத்துல சடன் பிரேக் போட்டு சுத்தியடிச்சி விழுந்துருக்கேன், நல்ல பதிவு மக்கா...!!!
நல்லா பிரேக் போட்டிங்க போங்க
இனி கவனமா போவம் அடி பட்டா பிறகு ஜோசிக்க கூடாது
நல்ல விழிப்புணர்வு பகிர்வு... நண்பா...
இப்ப உடல்நிலை தேவலாமா??? உங்க நண்பருக்கு...
மழையில் குடை பிடிக்கலாம்.
ஆனால் வண்டி ஓட்டும் போது கூடாது...
கலைஞர் டூ வீலர்ல போறதை மனசுல வச்சி இந்தப்பதிவா?
அவசியமான எச்சரிக்கை பதிவு கோகுல் .
இதுக்குத்தான் நான் டூ-வீலரே வாங்கலை... நாங்க ரொம்ப வெவரமான ஆளுங்க...
பயனுள்ள எச்சரிக்கைப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஆமாம் நண்பரே நல்லது தான்
நேத்து கூட ஒரு பைக்காரன் எங்க ஊரு ஆற்றுல கப்பல் ஓட்டினான் ,பைக்கால ,ஆனா பாவம் மூழ்கிய பின் நீந்தி போனான் ,
நல்ல பைக் இருந்தாலும்..நம்ம ரோடு மோசம். நம்மல நாமதான் பாதுகாத்துக்கணும்.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு கோகுல்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Safety First....
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
நல்ல விழிப்புணர்வுப்பார்வை/பகிர்வு கோகுல்...
மழைகாலத்தில் வண்டி ஓடுபவர்களின் கவனத்திற்கு நல்ல விடயங்களை தந்துள்ளீர்கள் நன்றிங்க
சரியான நேரத்தில் பகிரப்பட்ட எச்சரிக்கை பதிவுக்கு நன்றிகள்.
உங்கள் நண்பர் விரைவில் குணமாகி வீடு திரும்ப என் பிராத்தனைகள்.
டைமிங்க்லி ஷேர்டு வார்னிங்க் போஸ்ட்
அட இனி மழை வரும்போது இந்தக் கோகுலும் நினைவிற்கு
வருவாரோ!........பயனுள்ள விழிப்புணர்வுப் பகிர்வு .வாழ்த்துக்கள்
சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .........ஓட்டெல்லாம் போட்டாச்சு .
அன்பின் கோகுல் - மற்றொரு விழிப்புணர்வுப் பதிவு - கடைப்பிடிக்க வேண்டியவற்றைச் சரிவர கடைப்பிடிக்க வேண்டும். நல்ல்தொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment