முன்பொரு காலத்தில் ஒருவர் கடவுளின் மீது தீவிர பற்று கொண்டவராக இருந்தார்.கடவுளின் புகழையும் பெருமைகளையும் உலகெங்கும் பரப்பி வந்தார்.கடவுளின் நாமத்தையே எந்நேரமும் நினைத்தும்,ஜபித்தும் வந்தார்.இருந்தாலும் அவர் வாழ்க்கையில் சில கஷ்டங்களை அனுபவித்தார்.இது அவருக்கு பெரும் சந்தேகத்தையும் வருத்தத்தையும் தந்தது.எப்பவும் கடவுளை நினைத்துக்கொண்டிருந்தும் ஏன் இவ்வளவு கஷ்டங்கள்?என அலுத்துக்கொண்டார்.
இப்படியிருக்க அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது.மனிதனாய்ப்பிறந்தால் இது இயல்புதானே!இறந்தவுடன் அவரது ஆன்மா(?)கடவுள் இருக்கும் இடத்துக்கு சென்றது.அங்கே கடவுள் அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார்.அவரிடம் போன நமது மதபோதகர் அவரை வணங்கிவிட்டு தனது நீண்ட நாள் ஆதங்கத்தை அவரிடம் உடைத்தார்.
கடவுளே!நான் எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டே தான் இருந்தேன்.எப்போதும் உனது பெயரை சொல்லிக்கொண்டுதான் இருந்தேன்.இருந்தாலும் எனது வாழ்வில் சில தருணங்கள் மிகவும் கஷ்டமாக உணர்ந்தேன்.சில கடினமான நேரங்களை கடந்திருக்கிறேன்.ஏனிப்படி?உன்னையே நினைத்திருந்தவனுக்கு நீ கொடுக்கும் பரிசு இது தானா?என்றார்.
கடவுள் மெல்லிய புன்னகையுடன் டி.வியைப்பார் என்றார்.டி.வியில் ஒரு பாதையும் நான்கு காலடிகளும் வரிசையாக தெரிந்தது.அதைக்காட்டி இதுதான் உனது வாழ்க்கைப்பாதை அதில் முன்னாலிருக்கும் இரு காலடிகள் உன்னுடையது பின் வரும் காலடிகள் என்னுடையது.நான் எப்போதும் உன்னை தொடர்ந்து தான் வந்திருக்கிறேன் என்றார்!
அந்த நேரம் பார்த்து கடவுளின் உதவியாளர் வந்து கோகுல் அடுத்த போஸ்ட் போட்டுட்டார்னு சொல்ல கடவுள் நம்மவரை டி.வி.பார்த்துக்கொண்டிருக்கச்சொல்லிவிட்டு நம்ம பிளாக் பக்கம் வந்துட்டார்.தனியா இப்ப தனியா டி.வி பாத்துக்கிட்டு இருந்த நம்மவர் சில இடங்களைப்பார்த்து அதிர்ச்சி ஆனார்.ஏனெனில்அவர் காட்சிகளில் சில இடங்களில் இரு காலடிகள் மட்டுமே இருந்தது.தனது நினைவாற்றலால் அந்த காலங்களை நினைவு கூர்ந்தார்.அந்த காலங்களே இவர் கஷ்டப்பட்டகாலங்களாய் இருந்தன.இதைக்கண்டு அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார், கடவுள் நாம் கஷ்டம் வரும் காலங்களில் நம்மைப்பின் தொடராமல் போனதால் தான் நாம் துயரை அனுபவித்தோம் என கோபம் கொண்டார்.
கடவுள் திரும்ப வந்தவுடன் அவரிடம் கடிந்து கொண்டார்.இதுதான் உங்கள் நீதியா?கஷ்டப்படும் காலங்களில் பின் தொடராமல் விலகி நிற்பது தான் உங்களை வணங்கி நினைத்துக்கிடப்போர்க்கு நீங்கள் பரிசா?என பொங்கித்தள்ளினார்.
பொறுமையாகக் கேட்டுக்கொண்ட கடவுள் பதிலுரைத்தார்.நீ உனது கஷ்ட காலங்களில் கண்ட இரு காலடிகள் உன்னுடையது அல்ல அவையிரண்டும் என்னுடையது.அப்போது உன்னை நான் எனது தோளில் சுமந்து துயர காலத்தைக்கடக்க வைத்தேன்.இல்லையென்றால் நீ அந்த நேரங்களில் தாங்க முடியா துயரை சந்தித்திருப்பாய் என்றார்.இன்பமும் துன்பமும் இணைந்து வருவதே வாழ்க்கை.துன்ப நேரங்களில் மட்டும் இறைவனை நினைப்பது சில மனிதர்களின் இயல்பு எனவும் துன்பம் என்று ஒன்று வாழ்வில் இல்லாவிடிலும் மனிதனது முயற்சிகளுக்கு வேலையில்லாமல் போய்விடும் என வாழ்வியல் அர்த்தத்தை உணர்த்தினார்.
இதிலிருந்து பெறப்படும் நீதி என்னவெனில் ஒரு விசயத்தில் நம்பிக்கை வைத்தால் எந்த நிலையிலும் அதன் மீதுள்ள நம்பிக்கை இழக்கக்கூடாது.அதேபோல நம்பிக்கை இல்லாவிடிலும் அது கடவுளின் மீதுள்ள நம்பிக்கையாக இருந்தாலும்.(குழப்பமா இருக்கா நம்பின விசயத்த சந்தேகப்படாதிங்க,சந்தேகமான விசயத்த நம்பாதிங்க அவ்வளவுதான்)
(இது ஒரு ஆங்கில ஆசிரியர் சொன்னது,தமிழ்ப்படுத்தி ஒரு நீதியை வைத்து தந்திருக்கிறேன்)
(இது ஒரு ஆங்கில ஆசிரியர் சொன்னது,தமிழ்ப்படுத்தி ஒரு நீதியை வைத்து தந்திருக்கிறேன்)
Tweet | ||||||