சமீப காலமாக நம்மிடையே ஒரு கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. அது என்னன்னா,
நீங்க கூட பாத்திருப்பிங்க, முன்பெல்லாம் கல்யாணம்,காதுகுத்து,வளைகாப்பு,வரவேற்ப்பு இப்படி சுபகாரியங்களின் போது நடக்கும் விருந்துகளில் தண்ணீர் குடிக்க எவர்சில்வர் டம்ளர் வைப்பர்.(சிறு வயதில் நான் இது போன்ற விசேசங்களில் ஜக்கில் தண்ணீர் எடுத்து ஊற்ற அப்போது என் வயது பொடுசுகளோடு போட்டியிட்ட ஞாபகம்)
(யாராவது டம்ளரை திருப்பி தண்ணி ஊத்துங்க )
ஆனா இப்ப என்னை நடக்குது,கொஞ்ச நாள் முன்னாடி வரை சில்வர் தம்ளருக்கு பதில் பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்தினர்,
இப்ப உலகம் ரொம்ப வேகமா சுத்துதோ என்னமோ தெரியலசாப்பிட போறத்துக்கு முன்னாலேயே இலையப்போட்டு எல்லா பதார்த்தங்களையும் வைத்துவிட்டு(நமக்கு பிடிக்குதோ இல்லையோ சாப்பிடுறமோ இல்லையோ.இதில் கொடுமை என்னான்னா குழந்தைகள் உட்காரும் இலைகளிலும் பெரியவர்கள் சாப்பிடும் அளவுக்கு பரிமாறப்பட்டிருக்கும்.ஒக்கே.இதைப்பற்றி இன்னொரு பதிவு போடலாம் இப்ப மேட்டேருக்கு வரேன்)கூடவே தண்ணியை ஒரு பெட் பாட்டிலில் வைத்து விடுகிறார்கள்.நாமும் குடித்துவிட்டு வந்துவிடுகிறோம்.
நாம்குடித்துவிட்டு பாட்டிலை விட்டுவிட்டு வருங்காலத்திற்கு என்னத்த எடுத்து சென்று விடப்போகிறோம்.இது போன்ற பிளாஸ்டிக் குப்பைகளின் கூடாரத்தையா?
சமீபத்தில் ஒரு மண்டபத்தில் ஒராமாக காலியிடத்தில் இது போன்ற பாட்டில்களின் குவியல் இருந்தது.இதை என்னை செய்ய போகிறீர்கள் என்று நிர்வாகிகளிடம் கேட்டேன்.அவர்களிடமிருந்து தெளிவான பதில் இல்லை.(யார் கண்டா அடுத்த கல்யாணத்தில் நீங்கள் முன்பு குடித்த பாட்டிலிலே மீட்டும் தண்ணீர் குடிக்க நேரிடலாம்)
இது இல்லாமல் நாம் சுற்றுலா செல்லும்போது அங்குள்ள இயற்க்கை வளங்களை நம்மால் முடிந்த வரை இந்த பாட்டில்கள் மூலம் அழித்து வருகிறோம்.இந்த பத்திவின் மூள அனைவருக்கும் விடுக்கும் வேண்டுகோள் என்னன்னா அடுத்த முறை நம்ம வீட்லயோ,நண்பர்கள் வீட்லயோ விருந்து நடக்கும் போது இது போன்ற பாட்டில்களை பயன்படுத்த மாட்டோம்னும்,சுற்றுலா செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம்னும் உறுதி எடுத்துக்குவோம்.
சமீபத்துல பெய்த மழையில் வெள்ளம் வடியாமல் அலைகழித்ததில் இது போன்ற பிளாஸ்டிக் குப்பைகளும் பெரும்பங்கு வகித்தன.அதேபோல் ஓரிரு நாட்களுக்கு முன் பேப்பரில் கண்ட விசயத்தை நண்பர் சம்பத்குமார் சொன்னார் ராமேஸ்வரத்தில் பிளாஸ்டிக் கவர்களை தின்று இரு பசுமாடுகள் இறந்து போனதாக.
நாம் வருங்கால சந்ததியினருக்கு விட்டுசெல்லப்போவது எதை?
வசந்ததையா?குப்பைகளின் கூடாரங்களையா?
மீள்வு-சில மாற்றங்களுடன்
படங்கள்-கூகுளில் பிடித்தது.
மீள்வு-சில மாற்றங்களுடன்
படங்கள்-கூகுளில் பிடித்தது.
Tweet | ||||||
29 comments:
சரியாக் கேட்டீங்க நண்பரே?
நாம் நம் சந்ததிக்காக விட்டுச் செல்வது எதை?
இன்று நாம் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் நாளைய
சமுதாயம் அருவடைஎற்கும்...
கவனத்தில் கொள்வோம்
நெகிழியின் பயன்பாடுகளை குறைத்துக்கொள்வோம்...
பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் அதற்கு மாற்று என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும்... Frooti, Maaza போல மற்ற குளிர்பானங்களும், மினரல் வாட்டர்களும் அட்டைப்பெட்டியில் வந்தால் உசிதம்...
இது ஒரு வியாபார உத்தி பிளார்ஸ்ட்டிக்கு மாற்று வழியைத் தேடவேண்டிய நேரம் மீள் சுழற்ட்ச்சியை கையாலமுடியும் காத்திரமான பதிவு சகோ!
சாப்பிட அமரும்முன் எல்லாமே இலையில்...எல்லா இடங்களிலும் அவசரம். பிளாஸ்டிக்கைப் பற்றி இன்னும் நம்மில் பலருக்கு விழிப்புணர்வு இல்லை.
இது பலரும் யோசிக்க வேண்டிய விடயம்.....சிறப்பாக சொல்லியிருக்கீங்க பாஸ்
படங்களுடன் பதிவு மிக மிக அருமை
நிச்சயம் திருமண விருந்தில் அமரும் போது
இந்தப் பதிவு ஒருமுறை மனதிற்குள்
வந்து போகும்
அனைவரையும் ஒருமுறை யோசிக்கச் செய்து போகும்
அருமையான பயனுள்ள பதிவு
வாழ்த்துக்கள்
படங்களுடன் பதிவு மிக மிக அருமை
நிச்சயம் திருமண விருந்தில் அமரும் போது
இந்தப் பதிவு ஒருமுறை மனதிற்குள்
வந்து போகும்
அனைவரையும் ஒருமுறை யோசிக்கச் செய்து போகும்
அருமையான பயனுள்ள பதிவு
வாழ்த்துக்கள்
த.ம 4
விரைவில் விடியல் .பிளாஸ்டிக்கிலிருந்து சக்தி கிடைக்கும் ஆய்வில் இந்திய அறிஞர்கள் முன்னேறியுள்ளனர் .பகிர்வுக்கு நன்றி .வாழ்த்துக்கள் .
சரியாய் சொன்னீர்கள்..நாமதான் தவிர்க்கணும் ...
நல்ல அக்கறை ..
இன்று என் வலையில்
விஜய் Vs அஜித் : யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஒரு மெகா சர்வே
நாமும் ஒவ்வோறு இடத்திலும் படிக்கின்றோம்
ஆன திருந்தமுடியலையே கோகுல்...இனி உங்களுக்காக கண்டிப்பாக பிளாஸ்டிக் பயன்படுத்தமாட்டேன் என்று உறுதிஎடுத்துக்கின்றேன்..
இன்று என் வலையில்
காப்பி பேஸ்ட் பதிவர் மன்னர் மார்த்தாண்டம் VS பிரபல பதிவர்கள் PART -II
வசந்தம் நம்மை விட்டு சென்று ரொம்ப நாள் ஆச்சு... சாக்கடையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.... தமிழ்மணம் 6
பிளாஸ்டிக் தின்று இறக்கும் மாடுகள் மிகக் கொடுமை.. அதற்க்கு எதுவும் செய்ய முடியாது என்று கால்நடை மருத்துவர்கள் சொல்கிறார்கள்... இதில் இன்னும் கொடுமை என்ன என்றால் கால் நடை மருத்துவர்கள் எச்சரிக்கை செய்தே அனுப்புகிறார்கள்... இருந்தாலும் மாடு வைத்திருப்பவர்கள் பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் அவற்றை நகரில் சுற்றி திரிய விட்டு விடுகிறார்கள்... என் நண்பர் ஒருவர் கால்நடை மருத்துவராய் உள்ளார்..
சமூக அக்கரை என்பது ஒவ்வொரு (மனிதன் என்றால்)மனிதனுக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டிய உணர்வு...
பகிர்வுக்கு நன்றி... நண்பா...
கன்னியாகுமரி மாவட்டத்திலும். மும்பையிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடுமையாக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது....!!!
விழிப்புணர்வு பதிவு....!!!
நாம் வருங்கால சந்ததியினருக்கு விட்டுசெல்லப்போவது எதை?
வசந்ததையா?குப்பைகளின் கூடாரங்களையா?// சாட்டையடி கேள்வி..
வணக்கம் நண்பரே..
தேவையான நேரத்தில் அனைவரும் உணர வேண்டிய விழிப்புணர்வு பதிவு..
மாடுகள் இறந்த செய்தி முன்னனி தமிழ் பத்திரிக்கையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளிவந்தது தினமலர் என்று நினைக்கிறேன்..
நன்றி நண்பரே பகிர்விற்க்கு
சரியாச் சொன்னீங்க!அனைவரும் உணர்ந்து நடக்க வேண்டும்.
ஏற்கனவே வாசிச்ச பீல்....but,தேவையான விழிப்புணர்வு பதிவு..
அனைவரும் உணர வேண்டிய விஷயம் தான் நண்பரே
அன்பரே!
ஒரு காலத்திலே அந்த தண்ணிக்கும் பாட்டிலுக்கும்தான்
பொருத்தம்!
என்ன பாட்லா தண்ணியா?
அப்படின்னு கேட்பாங்க கிண்டலா
ஆனாஇப்ப எல்லாமே பாட்டில்
மயந்தான்
எதிர் காலசந்ததி மிகவும்
துன்பப் படும் ஐயமில்லை
புலவர் சா இராமாநுசம்
Nalla vizhippunarvu pathivu.
TM 12.
யூஸ் ஃபுல் போஸ்ட்.. படங்கள் உண்மை யை படீர் என அடிச்சு சொல்லுது
பிளாஸ்டிக்கை தவிர்த்து வருங்கால சந்ததியினருக்கு வசந்தத்தை கொடுக்க முயற்சி செய்வோம்...
அருமையான விழிப்புணர்வுப் பகிர்வு நன்றி சகோ ...
உங்களது ஆதங்கத்திற்கு எனது வணக்கங்கள்.
Post a Comment