மாண்புமிகு முன்னாள் குடியரசுதலைவர்,இந்தியர் பலரின் கனவு நாயகன்
கூடங்குளம் அணுஉலையை ஆய்வு(!)செய்து அணுஉலை பாதுகாப்பானது
என தனது(?)முடிவை விளக்கியுள்ளார்.கூடங்குளம் மட்டுமல்ல எல்லா
அணுஉலைகளும் அணுஉலைக்கழிவினைப்பற்றி யாரும்
கவலைப்படுவதாக தெரியவில்லை!
அணுஉலை மின் உற்பத்தியில் அனல்மின் திட்டதைப்போல சுற்றுச்சூழலை
மாசுபடுத்தாது,நீர்மின் திட்டங்களைப்போல வாழும் மக்களின்
வாழ்வாதாரத்தை(இடம் பெயர வேண்டிய சூழல்) அழிக்கும் பிரச்சினைகள்
கிடையாது.எல்லாம் சரிதான்.அணுமின உற்பத்தியில் உற்பத்திக்குப்பின்
வெளியாகும் அணுக்கழிவுகளை அழிக்கப்போவது எப்படி?அழிக்க முடியுமா?
அழிக்க முடியாவிடில் பாதுகாப்பது எப்படி?
சாத்தியமான வழி அணுக்கழிவுகளை பாதுகாப்பாக ஒரு பெட்டகத்தில்
போட்டு காத்துக்கொண்டிருக்க வேண்டியது தான்.சரி,எவ்வளவு நாளைக்கு
பாதுகாப்பது?யுரேனியம்-235 என்ற அணுஉலையில் பயன்படுத்தப்படும்
எரிபொருளின் கதிரியக்கம் பாதியாக(half-life period) குறைய ரொம்ப
இல்லைங்க சுமார் 700 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.கவனிக்கவும்
பாதியாகக்குறைய.
அவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கூடிய பாதுகாப்புப்பெட்டகம் உள்ளதா
தெரியவில்லை.அப்படியே இருந்தாலும் நண்பர் ராஜாMVS தனது ஒரு பதிவில்
கேட்டது போல மனிதக்கழிவுகளையே சரியாக காக்க தெரியாத நாம்
எப்படி இதனை ஆண்டுகளுக்கு அணுக்கழிவுகளை காக்கப்போகிறோம்?ஐயா
நான் ஒன்றும் நமது தேசத்த கொசைப்படுத்துனும்னோ,நம்ம நாட்டுக்கு
அந்த அளவுக்கு சக்தி இல்லேன்னோ சொல்லல,ஒரு உதாரணம் சமீபத்துல
டெல்லி பல்கலைக்கழகத்துல இருந்து ஆராய்ச்சிக்காகபயன்படுத்தப்படும்
கதிரியக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு கருவி மார்கெட்டுக்கு வந்தது
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
பல்கலைக்கழகத்துல அந்த அளவுக்கு பாதுகாப்பு இல்லே அதனால
வந்துடுச்சு.ஆனா இந்த விஷயம் அப்படியான்னு கேக்குரிங்களா?ஒரு
வேளை வந்துடுச்சுன்னா?ரோட்டுல போகும் போது கூட தான் விபத்து
நேரலாம் அதுக்காக ரோட்டுலையே போகாமையா இருக்குறோம்
அப்படின்னு கேக்குறிங்களா?ரோட்டுல போகும் போது அடி பட்டா அது
நம்மளோட முடிஞ்சுடும் ஆனா இந்த விஷயம் அப்படியா?
பூகம்பத்தால் விழும் என நினைத்தா தஞ்சை பெரிய
கோவிலையும்,கல்லணையையும் கட்டினார்கள் என திரு கலாம் அவர்கள்
கேட்டிருக்கிறார்.ஐயா அப்படியே பூகம்பத்தில் இவைஎல்லால் அழிய
நேரிட்டால் பாதிப்பு எத்தனை பேருக்கு?எத்தனை நாளைக்கு?ஆனால் இந்த
விஷயம் அப்படியா?
2005 வரைக்கும் அமேரிக்கா உருவாக்கியுள்ள அணுக்கழிவுகள் மொத்தம்
சுமார் ஐம்பதாயிரம் டன்.அவையெல்லாம் பாதுகாப்பாகத்தானே இருக்கிறது?
ஆமாம் இருக்கிறது. இன்றைக்கு
வரும்காலத்தில்?அட அதைப்பற்றி நமக்கென்ன கவலை அது வரை
நாமென்ன இருக்கப்போகிறோமா?
கீற்று கட்டுரை
Tweet | ||||||
43 comments:
விஞ்ஞானத்துக்கும் வாழ்வுக்கும் இடையிலான போராட்டம்... கூடிய சீக்கிரம் நல்ல முடிவு வரணும்
"700- பில்லியன் ஆண்டுகள்,முடியுமா?"
பகிர்வுக்கு நன்றிகள்..
Well said... அணு உலைக்கழிவுகள் பற்றிய மேட்டரை இன்றுதான் தெரிந்துக்கொண்டேன்...
//பூகம்பத்தால் விழும் என நினைத்தா தஞ்சை பெரிய
கோவிலையும்,கல்லணையையும் கட்டினார்கள் என திரு கலாம் அவர்கள்
கேட்டிருக்கிறார்.ஐயா அப்படியே பூகம்பத்தில் இவைஎல்லால் அழிய
நேரிட்டால் பாதிப்பு எத்தனை பேருக்கு?எத்தனை நாளைக்கு?ஆனால் இந்த
விஷயம் அப்படியா?//
மிகச் சரியான கேள்வி நண்பரே..
ஏற்கனவே உள்ள எலக்ட்ரானிக் கழிவுகளால் ஒவ்வொரு நாடும் திண்டாடி வருகிறது
வருங்காலத் தலைமுறைகளுக்கு கழிவுகளை விட்டுச் செல்ல போகிறோமா ?
அருமையான விழிப்புணர்வு பகிர்வு.
அவரை நினைத்து அழவா சிரிக்கவா தெரியவில்லை...
என்னை ஏமாற்றிய பிரபலங்கள் தர வரிசையில் இவர் உச்சியில் சென்று குத்த வைத்துள்ளார்...
காசுக்கு மாரடிக்கும் கூலி நினைப்பு தான் வருகிறது...
2005 வரைக்கும் அமேரிக்கா உருவாக்கியுள்ள அணுக்கழிவுகள் மொத்தம்
சுமார் ஐம்பதாயிரம் டன்.அவையெல்லாம் பாதுகாப்பாகத்தானே இருக்கிறது?
ஆமாம் இருக்கிறது. இன்றைக்கு
வரும்காலத்தில்?அட அதைப்பற்றி நமக்கென்ன கவலை அது வரை
நாமென்ன இருக்கப்போகிறோமா?////
நாம் யோசிக்க வேண்டிய நேரம் இது.... நமக்கென்ன என்று இருந்துவிடாமல் விரைந்து செயல் பட வேண்டும்..
நிறைய தெரியா விடையங்களை தெரிந்து கொண்டேன் .... தேங்க்ஸ் பாஸ்
நான் அறிந்தவரை யுரானியத்தின் அரை ஆயுள் காலம் நாலரை பில்லியன் வருடங்கள். அதுவே மிக நீண்ட காலம். அணு சக்தி விவாதம் என்பது என்றைக்கும் முடியாத ஒன்று என்றே தோன்றுகிறது. நன்மையும் தீமையும் ஒருங்கே வரப்பெற்ற ஒரு மிக முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்பு. இரண்டுக்கும் இடையிலான சமநிலையை பேணுவது மிகக்கடினமான காரியம். அறிவியல் மனித வாழ்கையின் முன்னேற்றத்துக்காகவே, அழிவுக்காக அல்ல. மீண்டும் ஆரம்பித்திருக்கும் இந்த விவாதம் பல தெளிவுகளை அளிக்கும் என்று எண்ணுகிறேன்.
மொக்கராசு மாமா said...
//விஞ்ஞானத்துக்கும் வாழ்வுக்கும் இடையிலான போராட்டம்... கூடிய சீக்கிரம் நல்ல முடிவு வரணும்//
இந்த காமென்ட நான் எங்கயோ போட்டதா ஞாபகம், ஒரு வேளை பிரம்மையா?
நல்ல முடிவு கிடைக்கும்.
என்ன கொடுமை?! அணு உலை பாதுகாப்பானதுன்னு சொல்றது ஒருவேளை கட்டடத்தை சொல்லியிருப்பாரோ?! கொடுமை
இனிய காலை வணக்கம் கோகுல் பாஸ்...
நலமா?
சுய நல அரசியல் இலாபங்களுக்காக பொது நலத்தினைப் பற்றிச் சிந்திக்க மறுத்து அறிவியல் விளக்கம் கொடுப்போர் மனம் மாறாதா என உள்ளம் ஏங்குகிறது!
இங்கே நாம் விவாதிப்பது எல்லாம்
பழுத்த அனுபவமிக்க
படிப்பாளி, அறிவாளி
மதிப்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதிக்கு
தெரியாததல்ல...
சொன்ன ஏவலை செவ்வனே முடித்து
சென்றிருக்கிறார்...
நல்ல தீர்ப்பு கிடைக்கட்டும்.
உங்கள் பதிவின் மூலம் பல தகவல்களை தெரிந்து கொண்டேன்...
மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கவேண்டும்
இந்த அரசியல்வாதிப் பண்ணாடைங்களோட கத்திக் கத்தி தொண்டைத் தண்ணி வத்திப் போச்சு...
நான் மொரீசியஸ் குடும்பத்தோட குடிபெயரப் போறேன்... எல்லாருத்துக்கும் ஒரு அட்வைஸ்.. நீங்களும் குடும்பத்தோட வெளிநாட்ல போயி செட்டில் ஆயிடுங்க...
#வாழ்க ஜனநாயகம்.
@வெளங்காதவன்
பாத்துங்க! அக்கரைக்கு இக்கரை பச்சையாகிடப்போகுது!
போயிட்டு வாங்க!
ஹா ஹா ஹா..
:)
//
மனிதக்கழிவுகளையே சரியாக காக்க தெரியாத நாம்
எப்படி இதனை ஆண்டுகளுக்கு அணுக்கழிவுகளை காக்கப்போகிறோம்?
//
நல்ல கேள்வி நண்பா
The half life of U-235 is 704 million NOT 704 billion years. The age of universe itself is 13.75 billion years.
@Anonymous
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கும் “அடி” சருக்கும் -னு கனவா கண்டோம்?
கூடங்குளத்தை இந்தியாவின் தலைநகரமாக்கி விட்டு நாதாரி ஆட்சியாளர்களை அங்கே குடிவைத்து விடலாம் என்பது எனது ஐடியா.
நாமெல்லாம் வேறு பகுதிக்குச் சென்று குடியேறிக்கலாம்.
எதிர்காலத்தைப் பற்றி இவர்களுக்கு என்ன கவலை தீர்க்க தருசனம் இல்லாமல் மக்களை ஜோசிக்காமல் இந்த அணுவிடயத்தை கையால்கின்றார்கள்
இத்தனை ஆண்டுகள் நினைக்கவே பயமாக இருக்கு !
கைய கொடுங்க கோகுல், நான் சிவப்பு சாயம் பூசியவன் என்பதால் இவ்வளவு விவரமாக கேட்க்க முடியவில்லை... நீங்கள் கேட்டதும் மகிழ்ச்சி, பலரும் கேட்க்க ஆரம்பித்து விட்டார்கள்.. இன்று ஒரு செய்தி பார்த்தேன், அநேகமாக உடல்நிலை அனுமதித்தால் இன்று இரவு ஒரு பதிவை போடுவேன் என்று நினைக்கிறேன்
இன்குலாப் ஜிந்தாபாத்
cant doers cannot make history - apj abdul kalam..
todays news
my hint for todays post
அப்துல் கலாம் எப்போதுமே அரசாங்கம் சொல்வதை அப்படியே எதிரொலிப்பவர் தான்..ஈழ விஷயத்திலும் அவர் ஏதாவது வாய் திறந்தாரா?
மாப்ள இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு...மக்களுக்கு பயம் இருக்கும் விஷயத்தை தொடர்ந்து வலியுறுத்தி செய்ய நினைக்கிறார்களே...இது எதற்கு!
700- மில்லியன் ஆண்டுகள்,முடியுமா?
இயலாத காரியம்
மிகத் தெளிவாக கூறியுள்ளீர்கள்... நண்பா...
அவர்கள் எப்படி அவர்களுடைய முயற்சியில் வலுவாது இருக்கிறார்களோ...
நாம் நமது முயற்சியிலும் வலுவாதும், வளிமையாகவும் இயங்குவோம்...
வெற்றி பெறுவோம்.
இன்குலாப் ஜிந்தாபாத்
சரியான கேள்விகள்...
பகிர்வுக்கு நன்றி... நண்பா...
என் பதிவையும் பகிர்ந்து கொண்டதற்க்கும் நன்றி... நண்பா...
யாரும் யாரையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ மாட்டார்கள்....எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் இதையும் தெரிந்துகொண்டால் நல்லது....
கரடியா கத்திகிட்டு இருக்கோம், ஆனாலும் சில மேதாவிகள் ஆதரவு தெரிவிப்பதுதான் ஆச்சர்யத்தின் உசசம் போங்க....!!!!
அப்துல்கலாம் ஒரு நல்ல மனிதர் என்பதற்காகவே அவர் மீது அளவடந்த மரியாதை வைத்திருந்தேன், அதை ஜீரோ ஆக்கிட்டாரே....!!!!
உண்மையோ ஒருபக்கம் தூங்க இந்திய அரசின் வற்புறுத்தலுக்கு இது மாதிரியான கருத்துகளை சொல்லி அரசவை கோமாளியாக வந்து நம்மிடையே நச்சை கொட்டுகிறார் பவம் விட்டுவிடுங்கள்
//வரும்காலத்தில்?அட அதைப்பற்றி நமக்கென்ன கவலை அது வரை
நாமென்ன இருக்கப்போகிறோமா?//
சந்ததிகள் இருப்பார்களே!.
ஐயா அப்படியே பூகம்பத்தில் இவைஎல்லால் அழிய
நேரிட்டால் பாதிப்பு எத்தனை பேருக்கு?எத்தனை நாளைக்கு?ஆனால் இந்த
விஷயம் அப்படியா?// இது சரியான கேள்வி நண்பா..
நல்லதே நடக்கும் என்று நம்புவோம்..
சகோ மாண்புமிகு முன்னாள்
குடியரசுத் தலைவர் அப்துல்
கலாம் அவர்கள் இப்பணிக்கு
வராமல் இருந்திருக்கலாம்!
புலவர் சா இராமாநுசம்
கேட்டாலே மலைப்பா இருக்கு, கூடவ்சே பயமாகவும். அனைவரும் படிக்க வேண்டிய பதிவு
700- மில்லியன் ஆண்டுகள்,முடியுமா?
>>>
முடியுமா?
அணுக்கழிவுகள் பற்றி தெரிந்துகொண்டேன் நண்பரே...!
எனக்கு அணு உலையின் நன்மைகள், தீமைகள் இவை இரண்டும் எனக்கு முழுமையாக தெரியாது...! ஆனால் ஒரு சந்தேகம் உள்ளது...! இடிந்தகரையில் இன்று உண்ணாவிரதம் இருக்கும் மக்கள் 10 ஆண்டுகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்...? திடீரென்று முளைத்த இந்த உண்ணாவிரத போரட்டத்தின் உண்மையான பின்னணி என்ன?
Post a Comment