Showing posts with label கதிர்வீச்சு. Show all posts
Showing posts with label கதிர்வீச்சு. Show all posts

Tuesday, November 8, 2011

700- மில்லியன் ஆண்டுகள்,முடியுமா?



மாண்புமிகு முன்னாள் குடியரசுதலைவர்,இந்தியர் பலரின் கனவு நாயகன் 

கூடங்குளம் அணுஉலையை ஆய்வு(!)செய்து அணுஉலை பாதுகாப்பானது 

என தனது(?)முடிவை விளக்கியுள்ளார்.கூடங்குளம் மட்டுமல்ல எல்லா 

அணுஉலைகளும் அணுஉலைக்கழிவினைப்பற்றி யாரும் 

கவலைப்படுவதாக தெரியவில்லை!


அணுஉலை மின் உற்பத்தியில் அனல்மின் திட்டதைப்போல சுற்றுச்சூழலை 

மாசுபடுத்தாது,நீர்மின் திட்டங்களைப்போல வாழும் மக்களின் 

வாழ்வாதாரத்தை(இடம் பெயர வேண்டிய சூழல்) அழிக்கும் பிரச்சினைகள் 

கிடையாது.எல்லாம் சரிதான்.அணுமின உற்பத்தியில் உற்பத்திக்குப்பின் 

வெளியாகும் அணுக்கழிவுகளை அழிக்கப்போவது எப்படி?அழிக்க முடியுமா?

அழிக்க முடியாவிடில் பாதுகாப்பது எப்படி?



சாத்தியமான வழி அணுக்கழிவுகளை பாதுகாப்பாக ஒரு பெட்டகத்தில் 

போட்டு காத்துக்கொண்டிருக்க வேண்டியது தான்.சரி,எவ்வளவு நாளைக்கு 

பாதுகாப்பது?யுரேனியம்-235 என்ற அணுஉலையில் பயன்படுத்தப்படும் 

எரிபொருளின் கதிரியக்கம் பாதியாக(half-life period) குறைய ரொம்ப 

இல்லைங்க சுமார் 700 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.கவனிக்கவும் 

பாதியாகக்குறைய.


அவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கூடிய பாதுகாப்புப்பெட்டகம் உள்ளதா 

தெரியவில்லை.அப்படியே இருந்தாலும் நண்பர் ராஜாMVS தனது ஒரு பதிவில் 

கேட்டது போல மனிதக்கழிவுகளையே சரியாக காக்க தெரியாத நாம் 

எப்படி இதனை ஆண்டுகளுக்கு அணுக்கழிவுகளை காக்கப்போகிறோம்?ஐயா 

நான் ஒன்றும் நமது தேசத்த கொசைப்படுத்துனும்னோ,நம்ம நாட்டுக்கு 

அந்த அளவுக்கு சக்தி இல்லேன்னோ சொல்லல,ஒரு உதாரணம் சமீபத்துல 

டெல்லி பல்கலைக்கழகத்துல இருந்து ஆராய்ச்சிக்காகபயன்படுத்தப்படும் 

கதிரியக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு கருவி மார்கெட்டுக்கு வந்தது 

உங்களுக்கு நினைவிருக்கிறதா?


பல்கலைக்கழகத்துல அந்த அளவுக்கு பாதுகாப்பு இல்லே அதனால 

வந்துடுச்சு.ஆனா இந்த விஷயம் அப்படியான்னு கேக்குரிங்களா?ஒரு 

வேளை வந்துடுச்சுன்னா?ரோட்டுல போகும் போது கூட தான் விபத்து 

நேரலாம் அதுக்காக ரோட்டுலையே போகாமையா இருக்குறோம் 

அப்படின்னு கேக்குறிங்களா?ரோட்டுல போகும் போது அடி பட்டா அது 

நம்மளோட முடிஞ்சுடும் ஆனா இந்த விஷயம் அப்படியா?




பூகம்பத்தால் விழும் என நினைத்தா தஞ்சை பெரிய 

கோவிலையும்,கல்லணையையும் கட்டினார்கள் என திரு கலாம் அவர்கள் 

கேட்டிருக்கிறார்.ஐயா அப்படியே பூகம்பத்தில் இவைஎல்லால் அழிய 

நேரிட்டால் பாதிப்பு எத்தனை பேருக்கு?எத்தனை நாளைக்கு?ஆனால் இந்த 

விஷயம் அப்படியா?


2005 வரைக்கும் அமேரிக்கா உருவாக்கியுள்ள அணுக்கழிவுகள் மொத்தம் 

சுமார் ஐம்பதாயிரம் டன்.அவையெல்லாம் பாதுகாப்பாகத்தானே இருக்கிறது?

ஆமாம் இருக்கிறது. இன்றைக்கு


வரும்காலத்தில்?அட அதைப்பற்றி நமக்கென்ன கவலை அது வரை 

நாமென்ன இருக்கப்போகிறோமா?







கீற்று கட்டுரை



மேலும் வாசிக்க "700- மில்லியன் ஆண்டுகள்,முடியுமா?"