நெருப்பு
பெண்ணே!
உன்னை கண்ணகியோடு
சீதையோடு
ஒப்பிட்டால்
ஒப்புக்கொள்ளாதே!
நீ கண்ணகியாயிருந்தால்
ஒரு ஊரையே எரிக்கவேண்டியிருக்கும்
நீ சீதையாயிருந்தால்
நீயே எரிய வேண்டியிருக்கும்
நீ நீயாயிரு!
நீயே நெருப்பாயிரு!
நெருப்பு உனக்குள்ளிருக்கட்டும்!
எது உன்னை நெருங்கும்?
நெருப்பென்றால் எப்படி?
நல்லன ஆக்கவும்
தீயவை அழிக்கவும்
தெரிந்த நெருப்பாய்!
Tweet | ||||||
32 comments:
நீ நீயாயிரு!
நீயே நெருப்பாயிரு!
நெருப்பு உனக்குள்ளிருக்கட்டும்!
எது உன்னை நெருங்கும்?/
nice..
அருமையான வரிகள், உங்களுக்கு கவிதைகள் நன்றாக வருகின்றன.... வாழ்த்துக்கள்!
புதிய கோணத்தில்
பழைய மரபுகளோடு
பூத்த கவிதை
கடைசி நான்கு வரிகள் அருமை நண்பரே. வாழ்த்துக்கள்
ஞானியின்[நியா னியா என்று கேட்காதீர்கள் கண்டிப்பாய் தெரியாது] நெருப்பு மலர்கள் படித்தது நினைவுக்கு வந்தது... ஆனந்த விகடன் பிரசுரம் கிடைத்தால் படித்து பாருங்கள்
கவிதை அருமை
கோகுல்,
நெருப்பே பெண்ணாய்...
பெண்ணே நெருப்பாய் .....
சரி ...
கோகுல், அருமையிலும் அருமை.. யாரும் யோசித்திராத கோணம் இது. வாழ்த்துக்கள். இன்னும் இப்படி நிறைய தத்துவ கவிதைகள எதிர்பார்க்கிறேன் பாஸ்.
நீ சீதையாயிருந்தால்
நீயே எரிய வேண்டியிருக்கும்
மிகவும் அருமையான வரிகள்
கோகுல் கலக்கல் கவிதை ..
நீ சீதையாயிருந்தால்
நீயே எரிய வேண்டியிருக்கும்
மிகவும் அருமையான வரிகள்
கோகுல் கலக்கல் கவிதை ..
அருமை நண்பா...
அருமையான கவிதை ,அர்த்தம் நிறைந்தது.
//
நீ நீயாயிரு!
நீயே நெருப்பாயிரு!
நெருப்பு உனக்குள்ளிருக்கட்டும்!
எது உன்னை நெருங்கும்?
//
அருமையான வரி
அற்புதமான கவிதை...
வாழ்த்துக்கள் கோகுல்...
கவிதை அருமை நண்பா...
தாங்கள் தேர்ந்தெடுத்த புகைப் படங்களும் சூப்பர்...
வாழ்த்துகள்... நண்பா...
அருமையான கவிதை நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
புகைப்படங்களுக்கு கவிதை அருமை கோகுல்
கோகுல் கவிதை அருமை.,
வாழ்த்துக்கள் .. வீரியம் நிறைந்த வரிகள் ..
//நீ நீயாயிரு!
நீயே நெருப்பாயிரு//
அருமை
அருமையான சிந்தனை
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
அருமையான கவிதை... வித்தியாசமாகவும் உள்ளது
அருமையான படைப்பு !! வாழ்த்துகள் !!
அருமையான கவிதை நண்பரே...கடைசி நான்கு வரிகள் Superb..
மனமார்ந்த கைதட்டல்கள் நண்பரே.
மனதில் ஆணி அடித்தாற்போல
பதியும் கவிதை.
ஒவ்வொரு வரியும் சூபெர்ப் .அருமையான கவிதை .வாழ்த்துக்கள் கோகுல் .
பெண்கள் எப்படி இருக்கவேண்டும்...என்பதற்கான வரைவிலக்கணம் எளிய வரிகளிலும், பொருத்தமான படங்களிலும் பிரகாசிக்கின்றன.
நல்ல கவிதை, ஆண்களுக்கும் ஒரு கவிதை சொல்லுங்க,
''...நீ நீயாயிரு!
நீயே நெருப்பாயிரு!
நெருப்பு உனக்குள்ளிருக்கட்டும்!
எது உன்னை நெருங்கும்...''
மிக நல்ல வரிகள் கோகுல் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
super kavithai
உண்மையான வரிகள் சகா. . .அருமை. . .
மீண்டும் வணக்கம் பாஸ்,
காலதி காலமாக அடிமைத் தளையுள் இருக்கும் பெண்களின் மனத் திடத்தைச் சுய பரிசோதனை செய்து கொள்வதற்கும்,
பெண் என்றால் யார் என்று பெண்கள் அனைவரும் தம்மை உணர்ந்து கொள்ளும் வகையில் அனல் பறக்கும் வரிகளை, அழகிய கவிதையில் தாங்கி நிற்கிறது நெருப்பு.
காய்ச்சல் காரணமாக உடனுக்குடன் வர முடியலை.
Post a Comment