Friday, March 23, 2012

பல"சரக்கு"கடை - 5(23/03/2012)

மௌனம் “கலை”த்”தாயே”
                      

கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது தங்கத்தாரகை,தமிழகத்தின்,விடி(!)வெள்ளி இப்படி சொன்னதில் ஆச்சர்யமில்லை.இவர் இப்படித்தான் என்ற எண்ணத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.அது மட்டுமல்லாமல் அதை அவ்வப்ப்போதும் நிரூபித்தும் வருகிறார்.ஆனால் ஒவ்வொன்றையும் சொல்வதற்கு இவருக்கு ஒரு தேர்தல் தேவைப்படுகிறது.பால்,பஸ் கட்டண உயர்வுக்கு உள்ளாட்சி தேர்தல்,இப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தல்.இடிந்தகரையில் கேரளா போலிஸ் உலவுகிறதாம்.அந்த பகுதியை கேரளாவுடன் இணைத்து விட்டார்களா என்ன?தமிழக மக்களே,இனி நீங்கள் இருளில்,இரவு வெக்கையில் வியர்த்து வழிய தேவையில்லை,இதோ கூடங்குளம் திறந்த உடன் கிடைக்கப்போகிறது தடையில்லா மின்சாரம்,அனுபவியுங்கள்.( இன்னும் என்னென்னவெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கோ).பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவாங்க,தாயே(?),தொட்டிலை ஆட்டிவிட்டு பிள்ளையை கிள்ளி விட்டுடீங்க.,நடத்துங்க.




தியாகிகள் தினம்

                  
அரசியல்வாதினாலே தியாகிகள் தானே அப்படின்னு ஆகிடுச்சு இன்றைய நிலைமை.வரும் காலங்களில் தியாகிகள் என்றால் இன்றைய அரசியல்வாதிகளை சுட்டிக்காட்டக்கூடும் வரலாறு.நாமறிந்தவரையாவது உண்மை தியாகிகளை நினைவு கூர்வோம்.இன்று தியாகிகள் தினம்(மார்ச் 23)பகத்சிங்,ராஜகுரு சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று.அப்போது பகத்சிங்கிற்கு வயது 24.



காதல் மன்னனுக்கு நினைவஞ்சலிகள்

தமிழ் சினிமாவின் முதல்(!)காதல் மன்னனுக்கு இன்று (22.03.12) ஏழாம் ஆண்டு நினைவுதினம்.பழைய படங்களில் காதலில் கசிந்துருகியிய பல பாடல்கள் இன்றைக்கும் இனிமையானவை.நான் ரொம்ப ரசித்தது வளர்ந்த கலை மறந்துவிட்டாய் கண்ணா ,பாடலின் இறுதியில் ஊடல் முடிந்த கூடல் அழகு. ( அந்த ஊடல் தீர்க்கும் சிறுவன் காதல் இளவரசனா?).அவ்வை சண்முகியில் கமல்,நாகேஷ் கூட்டணியில் ஐக்கியமாகி அசத்தியிருப்பார்.

யாருடா புள்ளப்பூச்சி?

புள்ளப்பூச்சிக்கேல்லாம் கொடுக்கு முளைக்காதுன்னு நினைத்திருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு திடீரென கொடுக்கு இல்லை கொம்பே முளைத்து விட்டது.நானும் ஆசியா காரன் தாண்டா என சிலிர்த்து விளையாடி இந்தியா,இலங்கையை புற முதுகிடச்செய்து பாகிஸ்தானையும் கிட்டத்தட்ட கிலி பிடிக்க செய்து,இறுதிப்போட்டியில் இறுதிப்பந்து வரை வெற்றிக்காகப்போராடி நாங்கள் புள்ளப்பூச்சியோ,கிள்ளுக்கீரைகளோ அல்ல என சொல்லியிருக்கிறார்கள்.



என்னா ஒரு ஒத்தும?

                     
அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல,ஏறக்குறைய எல்லா கட்சிகளும் ஆதரிக்க வேண்டிய விசயத்துக்கு தேவையான நேரத்தில் குரல் கொடுக்காமல் மௌனம் காத்துவிட்டு,ஆதரிக்க யோசிக்கவேண்டிய விசயத்துக்கு போட்டி போட்டுக்கொண்டு ஆதரிப்பது என்னே உங்க ஒற்றுமை என புல்லரிக்க வைக்கிறது.ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது.கையறு நிலை அப்படின்னு சொல்வாங்களே அந்த நிலைல தான் நாம இருக்கோம்னு நல்லா புரிய வைக்குறாங்க.,(இதை டைப்பும் போது இந்தியா ஒரு ஜனநாயக நாடுன்னு  நினைவுக்கு வந்து தொலையுது)


கவிதை சொல்றாராம்

போற வர பெண்ணைஎல்லாம்
ஏற இறங்க பார்ப்பதால் 
என்னை பெண் பித்தன் எனச்சொல்லி 
பிணங்கிச்சென்றாய்
நான் உன் பித்தனாய் மாறியதால் 
காணும் எல்லா பெண்களும் நீயாய் 
தெரிகிறாய் என எப்படி புரிய வைப்பேன். 
.
.
.

# எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு



இது ட்வீட்டாமாம்

சம்பளம் வந்து விட்டதா என smsகாக காத்திருக்கும் போது forward msgசெய்யும் நண்பனும் எதிரியாகிறான் #மவனே நீ மட்டும் இப்ப என் கையில கெடைச்ச......

போடுங்க வாய்ப்பூட்டு
               

மேல இருக்கறதை யாராவது கீழ இருக்கவர் வாயில யாராவது போட்டு வுடுங்க என்னாமா பேசுது ,ஒருத்தரு பேசாம கொல்றாரு,இவரு அவருக்கும் சேத்து பேசி கொல்றாரு

                
                      

தன்னிலை விளக்கம்

கொஞ்ச நாட்களாக எந்தப்பக்கமும் தலை காட்ட முடியவில்லை.என் பக்கமே தலை காட்ட முடியவில்லை.இப்போ கொஞ்சம் பரவாயில்லை தலைவாழை இலை போட்டு வைங்க வந்துட்டே இருக்கேன். 


மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை - 5(23/03/2012)"

Thursday, March 15, 2012

ஒகேனக்கல் விசிட்-அப்டியே பிளசெண்டா ,ஃப்ரீஸியா,கேசுவலா



கடந்த பலசரக்கு கடை பதிவில் எனது ஒகேனக்கல் பயணம் பற்றி நாலு வரியில் எழுதிவிட்டு ரெண்டு நாளா தூக்கமே வரல.பின்னே ஒரு பதிவரா இருந்துக்கிட்டு எங்கையாவது போய்வந்துட்டு ஒரு ரெண்டு பதிவாவது போட்டாதான பதிவர்னு ஒத்துக்குவாங்க.நாலு வரியில் எழுதினதுனால பதிவர் சங்கத்துல இருந்து தூக்கிடாதிங்க இதோ ஒகேனக்கல் விசிட் ஒரு முழுப்பதிவாக.,( என்னாமா குடுக்குது பாரு பில்ட் அப்பு)

           

அஞ்சு பேர் போறதா பிளான்.ஆளாளுக்கு ஒரு ஊர்ல இருக்கறதுனால அவங்கவங்க பஸ் புடிச்சு ஒகேனக்கல்ல காலைல வந்து சேந்துடமுன்னு பேசிக்கிட்டோம்.நான் கள்ளகுறிச்சியில இருக்குற ஒரு நண்பரை பிக்அப் பண்ணிக்கிட்டு [ஆமா இவரு பெரிய பென்ஸ் கார்ல போய் பிக்அப் பண்ணாரு.,கார்ப்பரேஷன் பஸ்ல போற நாய்க்கு லொள்ள பாரு]மேட்டூரில் இருக்கும் நண்பரின் அறையில் தங்கிவிட்டு காலையில் அங்கிருந்து புறப்படுவதற்காக இரவு அங்கே போய் சேர்ந்தோம்.அதற்கு முன்பாக சேலத்தில் ஹோட்டலில் சாப்பிடும் போது எங்களுக்குள் அலெர்ட் ஆறுமுகமாக மாறி ஸ்ப்ரிங் ரோல் இருக்கா?,கபாங்?டக்கீலா? என பேசிக்கொண்டு இருக்க எதிரில் இருந்தவர் டர்ரானார்.போதாததுக்கு சாப்டு முடிச்சதும் பர்ஸ்ச அடிச்சுட்டு ஓடிடுடா என சொன்னதும் மேலும் மெர்சலாகிப்போனார்.


                       

அங்கே போய் தூங்க இரவு கிட்டத்தட்ட 1 மணியாகியதால் காலையில் எழுந்திரிக்க ரொம்ப கஷ்டப்பட்டு எழுந்து கிளம்பி அங்கிருந்து மேச்சேரி போய் ஒரு அரசு பஸ் பிடித்து பென்னாகரம் போனோம்.அதற்கும் சென்னை,பெங்களூரில் இருந்து வந்த நண்பர்கள் ஒகேனக்கல் போய் சேர்ந்து ஹோட்டலில் ரூம்(மட்டும்) எடுத்து காத்திருப்பதாக சொன்னார்கள்(இவர்களல்லவா நண்பர்கள்).மேச்சேரி டூ பென்னாகரம் பயணத்தில் டிரைவர் பஸ் ஒட்டிய விதம் எந்திரன் பட சன் டி.வி. பேட்டியில் காதல் அணுக்கள் பாட்டுக்கு ஒரு இன்ட்ரோ குடுப்பாரே “அந்த இடத்துல பிளசெண்டா,ஃப்ரீஸியா,கேசுவலா ஒரு சாங் “அப்படின்னு அப்டி இருந்தது அவ்வளவு கேசுவலா ஓட்டினார்.



                       [[ லலல்லா ள லாகியே ]]

பென்னாகரத்திலிருந்து வேறு பஸ் பிடித்து(எத்தனை)ஒகேனக்கல் போய் ரூமில் ரிபிரேஷ்(மட்டும்)பண்ணிக்கொண்டு கிளம்பினோம்.முதலில் பரிசல் பயணம் என முடிவு செய்து போனோம்.அங்கே மீன் சமைத்து கொடுப்பதற்கென்று ஒரு கூடம் இருக்கிறது சில(பல) பெண்கள் இந்த பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.அவர்களில் ஒருவர் மீன் விற்க்குமிடத்துக்கு அழைத்து சென்று மீன் வாங்கி சமைத்து வைத்திருக்கிறேன் போய் சுற்றி விட்டு குளித்துவிட்டு வாங்க என்றார்.

[[ ஏன்கா சுறா மீன் இருக்கானு தான கேட்டோம் இப்டி மொறைக்குறீங்க ]] 

பரிசல் மையத்துக்கு போனால் கடந்த பதிவில் சொன்ன மாதிரி நிர்ணய கட்டணம் இல்லை போலும் 100-150,160 என ஒருவருக்கு வசூலிக்கிறார்கள்.LIFE JACKET கட்டணம் ஐந்து ரூபாய் தனி.ஒரு பரிசலில் ஆறு பேர் வரை [பரிசல் காரர் உட்பட] பயணிக்கிறார்கள்(லாமா?).இது ஒரு நல்ல அனுபவம்.கொஞ்ச தூரம் போய் இறக்கிவிட்டு கொஞ்சம் நடந்து வாங்க அந்தபக்கம் வந்து ஏறிக்கங்கனு(ஒரு நீர் வீழ்ச்சி குறுக்கிடுகிறது) சொல்லிட்டு பரிசலை தூக்கிகொண்டு அவர் நடக்க ஆரம்பித்தார்.கொஞ்சதூரம் போன பிறகு மீண்டும் பரிசல் பயணம். அங்கே ஆத்துலயே ஒன்றிரண்டு பரிசல் கடைகள் ஸ்நாக்ஸ்,கூல்டிரிங்ஸ்,வாட்டர்பாக்கெட் விற்பனையும் நடக்கிறது.

                    [[ பாதுகாப்பு முக்கியம் அமைச்சரே ]]

ஆளாளுக்கு தங்களது மொபைல் கேமிராவில் பி.சி.ஸ்ரீராமாக மாறிக்கொண்டிருந்தோம்.வலையில் இன்னுமோர் அருவி.சினிபால்ஸ் எனநினைக்கிறேன்.பரிசலை அருவிக்குள்ள விடட்டுமா என்றார் பரிசல்காரர்.ஜெர்க்கானேன் நான்,என்னது அருவிக்குள்ள விடப்போறிங்களா?னேன்.அதற்குள் போலாம் ரைட் என நண்பர்கள் சொல்ல அருவிக்குள் புகுந்தது பரிசல்.............
            
           [[ பரிசல உள்ளே விடட்டுமா?
ஏண்ணா இஸ்ரோ ல இருந்து ராக்கெட் விடட்டுமாங்கற மாதிரி கேக்குறிங்க ]]
                  
ம்ம்ம்.,அதுக்குள்ளே முடிச்சுட்டா பதிவர் சங்கத்துல இருந்து நோட்டிஸ் அனுப்பிடுவாங்க மீதி அடுத்த பதிவில்.
மேலும் வாசிக்க "ஒகேனக்கல் விசிட்-அப்டியே பிளசெண்டா ,ஃப்ரீஸியா,கேசுவலா"

Tuesday, March 13, 2012

பல"சரக்கு"கடை-4(13/03/12)





ஏன் எரியுது

 
கோடையில் காட்டுத்தீ அடிக்கடி பரவுமே அது போல இப்போது பெரிய்ய,முக்கிய கட்டிடங்களில் தீ பற்றுகிறது,கொஞ்ச நாளைக்கு முன்ன கொல்கத்தா மருத்துவமனை,போன மாசம்,சென்னை எழிலகம்,போன வாரத்துல பாரிஸ் கார்னர்ல இருக்குற ஒரு எல்.ஐ.சி. பில்டிங்.சொல்லி வைத்தார் போல மின்கசிவு தான் நிச்சயமாக காரணமாக இருக்கும்.இது மாதிரி இடங்களில் fire extingusher  போன்ற தீத்தடுப்பு சாதனங்கள் இருந்தாலும் அவை இருக்கும் இடம் அவசரத்தில் தொடர்பு கொள்ளும் எல்லையில் இருப்பதில்லை,அங்கே இருப்பவர்களுக்கு அவற்றை கையாள போதிய பயிற்சியும் இருப்பதில்லை.இது போன்ற சில விசயங்களை செய்ததால் தீப்பற்றியது ஆரம்பத்திலே கண்டுபிடிக்கப்பட்டால் நிலைமை மோசமாகாமல் தடுக்கலாம்.fire alarm,smoke detector போன்றவற்றை பொருத்தலாம்.இதெல்லாம் எல்லாருக்கும் தெரியும் தான் ம்ம்ம்.என்ன பண்றது?

மூணு சீட்டு

இது அந்த மூணு சீட்டு இல்ல.பஸ்ல மூணு சீட்ல உக்காந்துட்டு போற அனுபவம் இருக்கே ஸ்ஸ்ஸ்ஸ்பா.இதுக்கு மேல உடம்ப என்னால குறைக்க முடியாதுபா.முதல்ல உக்கார்றவருக்கு அந்த சீட்டு ஏகபோக உரிமம்தான்.ஏதோ போனா போகுதுன்னு அடுத்தவங்கள உட்கார வைக்குற மாதிரி ஒரு லுக்,அவங்களே பத்தி சீட்டை வலுக்கட்டாயமா ஆக்கிரமிப்பு பண்ணிக்குறாங்க.அம்மா போட்ட சட்டம்இந்த ஆக்கிரமிப்புக்கெல்லாம் செல்லாதா?கடைசியா உக்கார்ரவரு பாடு கூட பரவால்ல,கால வெளியில வைச்சுக்கலாம்,நடுவில இருக்கறவர் மத்தளம் தான்,


சுவர் இல்லாத சித்திரம்

    
டிராவிட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தது இன்னும் கூட நம்ப முடியவில்லை.டெஸ்ட் அணியில் அவர் இடத்துக்கு நெருக்கடி இல்லாத நிலையில்,அதுவும் நன்றாக விளையாடிக்கொண்டிருக்கும் போது இப்படி அறிவித்தது அதிர்ச்சிதான்.இன்னும் வருத்தம் என்னன்னா ஒரு போட்டியிலாவது விளையாடி ஓய்வு பெற்றிருக்கலாம்.பல போட்டிகளில் பெருமை தேடித்தந்த இவர் ஒரு போட்டியில் கவுரப்படுத்தப்பட்டு வழியனுப்பப்பட்டிருக்கலாம்.சச்சினும் ஆசிய கோப்பை முடிந்து அறிவிக்கலாம் (அ)இந்தியாவில் ஒரு தொடர் விளாடிவிட்டு) ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அறிவிப்பார் என பட்சி சொல்கிறது.


ஒலிஇல்லா யூடியூப்

ட்விட்டரில் ஏற்கனவே இணைந்திருக்கும் பிரதமர் அலுவலகம் இப்போது யூடியூபிலும் இணைந்திருக்கிறதாம்.பார்க்கும் எல்லோரும் வீடியோ வெறும் மௌனமாக ஓடுவதால் தங்களது ஸ்பீக்கர்களையும்,காதுகளையும் ஆராய்ந்து வருவதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது.


ஒகேனக்கல்-பைசா வசூல்



ரெண்டு நாளைக்கு முன்னால ஒகேனக்கல் போயிருந்தேன்.கையில பைசா பாக்கி வைக்காம வசூல் பண்ணிப்புட்டாங்க வசூல்.பரிசல்ல போக நிர்ணய கட்டணம் இல்ல.ஒருவருக்கு 100-160 வசூலிக்கிறார்கள்.life jacket படகுபயனங்களில் கட்டாயம் கொடுக்க வேண்டும் ஆனால் அஞ்சு ரூபா குடுத்தா(மட்டும்) தான் குடுக்குறாங்க.தொட்டதுக்கெல்லாம் காசுன்னு சொல்லுவாங்களே(பழமொழிங்க) அதை எங்காவது சுற்றுலா தலங்களுக்கு போகும் போது உணர முடியுது.எல்லா பொருட்களும் எல்லா கடைகளிலும் அதிக விலைக்கே விற்கப்படுகின்றன.வேறு வழியில்லாமல் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.


மாங்கல்யம் தந்துனானே



என் பேச்சிலர் விரதம் கலையும் நாள் முடிவாகி விட்டது.ஜூன் 7.நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில்.வரவேற்பு புதுவையில்,தயாராக இருங்கள்,விபரங்களுடன் விரைவில் அழைக்கிறேன். விஷயம் அறிந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.




மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை-4(13/03/12)"

Thursday, March 8, 2012

கலையும் பேச்சிலர் விரதம்...


வணக்கம் ,

செய்திகள் தொடர்கின்றன...

கோகுல் மனதில் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் கோகுல் தனது பேச்சிலர் விரதத்தை கலைக்கப்போவதாக வந்த தகவலை அடுத்து நாங்கள் உண்மை நிலவரத்தை அறிய எங்கள் குழுவுடன் விபரம் அறிய புறப்பட்டோம்.விசாரித்ததில் கோகுலின் பெற்றோர் பார்த்த ஒரு பெண்ணை மணமுடிக்க சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.அப்போ திரிசா வாழ்க்கை என்னாகுறது எனக்கேட்ட நண்பர்களிடம் திரிசா கிடைக்குலன்னா திவ்யா  என சொன்னதாக தெரிகிறது.ஆனால் பெண்ணின் பெயர் திவ்யா இல்லை என்பதால் அவரின் மேல் சின்ன சந்தேகம் எழுகிறது.

                   
ஜூன் முதல் வாரத்தில் திருமணம் என பரவலாக பேச்சு.எல்லாம் செய்யும் இந்த காதல் என அனுபவிக்காமலே எழுதிய இவர் இந்த இடைப்பட்ட காலங்களில் காதலை அனுபவித்து வெல்வாரா?இல்லை இல்லை சொதப்புவாரா?பொறுத்திருந்து பார்ப்போம்.

இது குறித்து கோகுல் என்ன கூறுகிறார்?அவரிடமே கேட்போம்.

எனக்கே இது எதிர்பாராத அதிர்ச்சியாதாங்க இருக்கு, டக்கு டக்குனு திரும்பி பாக்கறதுக்குள்ள என்னென்னமோ நடந்துடுச்சு.ஒரே ஒரு பொண்ணை பார்த்து அந்த பொண்ணையே ஓகே சொல்லிட்டதுல கொஞ்சம்,இல்ல இல்ல நிறையவே வருத்தம் இருக்கத்தாங்க செய்யுது.(செய்தியாளர் மனசுக்குள்- அந்த பொண்ணு தான வருத்தப்படணும்).அப்புறம் எங்கேயோ கேட்ட டயலாக் ஞாபகம் வந்துச்சு ஃபோன்,பைக்,கல்யாணதுக்கு வரன் இதெல்லாம் செலக்ட் பண்ணிட்டு கொஞ்ச நாள் கழிச்சு இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாமோனு தோணுவதை தடுக்கவே முடியாது.`அதை மனசில வைச்சிக்கிட்டு மனசை தேத்திக்கிட்டேன்ங்க.

அப்புறம் நம்மளையும் ஒரு பொண்ணு ஓகே சொல்லிடுச்சேனு ரொம்ப சந்தோசமா இருக்கு.என்ன இது வரைக்கும் காதலை வேறு பக்கங்களில் திசை திருப்பி விட்டிருந்தேன்.இப்ப கொஞ்சம்,இல்ல,இல்ல நிறையவே திசை திருப்பனும்.காதலில் சொதப்புவது எப்படின்னு படம் எடுத்தவங்க,கல்யாணம் வரை சொதப்புவது எப்படின்னு படம் எடுத்திருந்தாங்கன்னா எனக்கு கொஞ்சம் யூஸ் புல்லா இருந்திருக்கும்.பாப்போம்ங்க.நடப்பதெல்லாம் நல்லதுக்கேன்னு மனசை தேத்தி வைச்சிருக்கேன்.

                    

இது குறித்து அவரது மனசாட்சி சொல்வது என்ன கேட்போம் வாருங்கள்.


வாழ்க்கை ஒரு வட்டம்னு இளைய தளபதி சொன்னதை இப்ப இவன் நல்லா அனுபவிக்க போறான்.கூட இருக்குற பிரண்ட்ஸ்,லவ் பண்ணும போது அப்படி என்னடா இவ்வளவு நேரம் போன்ல பேசுறிங்க,இப்பதாண்டா மணிக்கணக்குல பேசுனிங்க அதுக்குள்ளே லொட்டு லொட்டுனு எஸ்.எம்.எஸ் அனுப்புறிங்கன்னு ஏகத்துக்கு ஓட்டிட்டு இருந்தான் இப்போ அவங்க டர்ன்.உங்களுக்கெல்லாம் ஒரு உண்மை சொல்றேன் இப்ப இவன் எல்லா ரீசார்ஜ் கடைலயும் போய் பாஸ் (எ) பாஸ்கரன் படத்துல வர்ற ஆர்யா மாதிரி ரெண்டு பேரு பேசணும்,கேப் விடாம 24 மணிநேரமும் பேசணும்,ஆனா ஃப்ரீயா பேசணும் அதுக்கு ஏதாவது ஸ்கீம் இருக்கானு நச்சரித்து கொண்டிருக்கிறான்.அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்கனு கடைக்காரர்கள் துரத்தியடிக்காத குறைதான்.

                      
இனி இவனது மொபைல்க்கு வரும் கால்கள் எல்லாம் வெயிட்டிங்கில் இருக்கும் எனவும்,இன்பாக்ஸ்,சென்ட்பாக்ஸ் நிரம்பி வழியும் எனவும் எதிர்பார்க்கிறேன்.ஐயோ பாவம் யார் பெத்த புள்ளையோ இப்படி புலம்பிக்கிட்டு திரியுதேன்னு பல பேர்க்கிட்ட பேர் வாங்க போறான்.அதெல்லாம் போகட்டும்ங்க இவனுக்கு வரப்போகும் இந்த புதிய உறவுகளும்,வாழ்க்கையும் சிறப்பாக அமையட்டும்னு வாழ்த்தறேன்ங்க..
நேயர்களே,
                    

கோகுலும்,அவரது மனசாட்சியும் நாம் கேள்விப்பட்ட செய்தியை உறுதி செய்து விட்டார்கள்.இதுவரை பேச்சிலர் விரதம் பூண்டிருந்த கோகுல் விரதம் கலைக்கப்போவது உறுதியாகிவிட்டது.அவருக்கு நமது வாழ்த்துகளை சொல்லி விடைபெறுவோம் நன்றி. 

படங்கள்-கூகுள் தேடலில்.....


மேலும் வாசிக்க "கலையும் பேச்சிலர் விரதம்..."

Thursday, March 1, 2012

என்கவுண்டர்,ஒரு கோடி - சில கேள்விகள்

சமீபத்திய நிகழ்வுகள் சில பற்றிய பொதுமக்களின் மனதில் எழும் சில வினாக்கள்.இந்த பொதுமக்கள்ல நானும் ஒருத்தன்.


சென்னையில் இரண்டு வங்கிகளில் கொள்ளையடித்த ஐந்து கொள்ளையர்களை என்கவுண்டர் செய்திருக்கிறது போலிஸ்.இது குறித்து பல சர்ச்சைகளும்,விவாதங்களும்,மனிதஉரிமை தொடர்பாகவும் வாதங்கள்,விசாரணைகள் நடந்து வருகின்றன.முப்பத்து நான்கு லட்சம் கொள்ளையடித்த கொள்ளையர்களை கொள்ளையர்கள் என அடையாளம் தெரிந்தவுடன்(அவர்கள் சுட்டதால் தான் திருப்பி சுட்டோம் என போலிஸ் சொல்லியிருக்கிறது அது உண்மையாக(வும்) இருக்கலாம்.).பொதுமக்கள் என்ன பேசிக்குறாங்கன்னா ம் , கோடி கோடியா கொள்ளையடிச்சுட்டு,கேசுவலா சுத்திக்கிட்டு இருக்கவங்க பல பேரு இந்த நாட்டுல இருக்காங்களே அவங்கள என்ன பண்ணப்போறீங்க? இவங்க தங்களை தற்காத்துக்கொள்ள உபயோகப்படுத்தும் ஆயுதம் சட்டம்.(சட்டம் ஒரு ஆயுதம் – செம டைட்டில்.எஸ்.ஏ.சி சார் ப்ளீஸ் நோட்)

அடுத்தது மக்களை கோடீஸ்வரன் ஆக்குறேன்னு சொல்லிட்டு விஜய் டி.வி. நடத்துற ஷோ பத்தியது.இது குறித்து  முகநூலில் என் நண்பர் ஒருவர் பகிர்ந்தை நான் இங்கு பகிர்கிறேன்.


//

கேள்வி 1:

இவற்றில் ஒருவர் செய்வதைப் பார்த்து மற்றவர் அப்படியே செய்வதை எப்படிக் குறிப்பிடுவீர்கள்?

நாய் அடிச்சான் காப்பி
கொசு அடிச்சான் காப்பி
ஈயடிச்சான் காப்பி
பேய் அடிச்சான் காப்பி

கேள்வி 2:

ஒரு உணவின் பெயர் கொண்ட பண்டிகை எது?

ஏகாதசி
பொங்கல்
விநாயக சதுர்த்தி
மெதுவடை

-
இந்தக் கேள்வி பதில்களைப் படித்ததும், என்னய்யா கிண்டலா என கடுப்பாக உங்களுக்குள் கேள்வி எழுந்தால்... அதை அப்படியே கேம்ஷோ நடத்தும் தனியார் தொலைக்காட்சிகள் பக்கம் திருப்பிவிடுங்கள்!.

'
எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்' என்று மயிலாசாமியிடம் விவேக் நடத்திய கேம்ஷோவை விட 'மகா அறிவாளித்தனமான' கேள்விகள் கேட்கப்படுவது தான் கோபத்தை வரவழைக்கிறது. மக்களை முன்னேறவே விட மாட்டார்கள் போலிருக்கிறது.

கேள்விகள் கேனத்தனமாக இருக்கிறதே என்று நக்கலடித்தபடி, அடுத்த வேலைக்கு போய்விட்டால், நாம் முட்டாள்கள். அதற்குள் உள்ள மோசடியைப் புரிந்து கொண்டால், இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துபவர்களை முட்டாளாக்க ஒரு வாய்ப்பாவது உண்டாகும்.

இது போன்ற கேள்வி- பதில் நிகழ்ச்சியின் பின்னால் விளையாடுகிறது பல கோடி ரூபாய் மக்கள் பணம்.

எப்படி... எல்லாம் பார்வையாளர்கள் மற்றும் ஆர்வக் கோளாறு நேயர்கள் மூலம்தான்.

இந்த கேம் ஷோவில் கலந்து கொள்ள ஒரு எஸ்எம்எஸ் போட்டி வைத்தார்கள். அந்த போட்டிக்கு இங்கே நீங்கள் படித்ததை விட கேவலமான ஏழு கேள்விகளை, ஏழு நாள் கேட்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் பல லட்சம் எஸ்எம்எஸ்கள். அதாவது ஒருவர் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதாது... இரண்டு அனுப்ப வேண்டும்.

அப்படி அனுப்பியதில் கிட்டத்தட்ட 5 கோடி எஸ்எம்எஸ் குவிந்ததாகச் சொல்கிறார்கள். ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு குறைந்தது ரூ 6 முதல் 9 வரை சார்ஜ் பண்ணுகின்றன மொபைல் நிறுவனங்கள்.

இப்போது கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். சராசரியாக ரூ 6 என்று வைத்துக் கொண்டால்கூட, எஸ்எம்எஸ் மூலம் மட்டுமே ரூ 30 கோடியை சம்பாதித்திருக்க முடியும். இது தவிர, ஸ்பான்ஸர்கள், விளம்பரதாரர்கள் தரும் பல கோடி ரூபாய்கள்...

ஒரு டிவி இந்த நிகழ்ச்சியை அறிவித்து கல்லா கட்டியதைக் கண்டதும், இன்னொரு முன்னணி டிவியும் ஒரு கோடி என்ற மயக்க பிஸ்கட்டை மக்கள் முன் நீட்ட ஆரம்பித்துள்ளது.

இது வர்த்தகம்தான் என்றாலும்... மிக சாமர்த்தியமாக மக்களைச் சுரண்டும் தந்திரம் என்பதே பல சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியை அனுமதிக்கும் அரசு, ஆன்லைன் லாட்டரிகள், ஒரு நம்பர் லாட்டரி, லாட்டரிச் சீட்டுகள், மூணு சீட்டு என பல்வேறு வகை சூதாட்டங்களையும் தாராளமாக அனுமதிக்கலாமே. பணம் சம்பாதிக்கும் குறுக்கு வழிகளில் இவையும் அடங்கும்தானே, என கோபக் கேள்விகள் எழுந்துள்ளன.

அரசின் 'கொர்ர்' தொடருமா, கலையுமா?
//


சன் டிவியும் இதே போன்ற ஒரு நிகழ்ச்சி நடத்த போவதாக விளம்பரம் வந்த வண்ணம் இருக்கிறது.

அஞ்சு பைசா திருடுனா தப்பா?னு கேக்க தோணுது.உங்க கருத்துகளை சொல்லுங்க .......

மேலும் வாசிக்க "என்கவுண்டர்,ஒரு கோடி - சில கேள்விகள்"