Tuesday, November 8, 2011

700- மில்லியன் ஆண்டுகள்,முடியுமா?



மாண்புமிகு முன்னாள் குடியரசுதலைவர்,இந்தியர் பலரின் கனவு நாயகன் 

கூடங்குளம் அணுஉலையை ஆய்வு(!)செய்து அணுஉலை பாதுகாப்பானது 

என தனது(?)முடிவை விளக்கியுள்ளார்.கூடங்குளம் மட்டுமல்ல எல்லா 

அணுஉலைகளும் அணுஉலைக்கழிவினைப்பற்றி யாரும் 

கவலைப்படுவதாக தெரியவில்லை!


அணுஉலை மின் உற்பத்தியில் அனல்மின் திட்டதைப்போல சுற்றுச்சூழலை 

மாசுபடுத்தாது,நீர்மின் திட்டங்களைப்போல வாழும் மக்களின் 

வாழ்வாதாரத்தை(இடம் பெயர வேண்டிய சூழல்) அழிக்கும் பிரச்சினைகள் 

கிடையாது.எல்லாம் சரிதான்.அணுமின உற்பத்தியில் உற்பத்திக்குப்பின் 

வெளியாகும் அணுக்கழிவுகளை அழிக்கப்போவது எப்படி?அழிக்க முடியுமா?

அழிக்க முடியாவிடில் பாதுகாப்பது எப்படி?



சாத்தியமான வழி அணுக்கழிவுகளை பாதுகாப்பாக ஒரு பெட்டகத்தில் 

போட்டு காத்துக்கொண்டிருக்க வேண்டியது தான்.சரி,எவ்வளவு நாளைக்கு 

பாதுகாப்பது?யுரேனியம்-235 என்ற அணுஉலையில் பயன்படுத்தப்படும் 

எரிபொருளின் கதிரியக்கம் பாதியாக(half-life period) குறைய ரொம்ப 

இல்லைங்க சுமார் 700 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.கவனிக்கவும் 

பாதியாகக்குறைய.


அவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கூடிய பாதுகாப்புப்பெட்டகம் உள்ளதா 

தெரியவில்லை.அப்படியே இருந்தாலும் நண்பர் ராஜாMVS தனது ஒரு பதிவில் 

கேட்டது போல மனிதக்கழிவுகளையே சரியாக காக்க தெரியாத நாம் 

எப்படி இதனை ஆண்டுகளுக்கு அணுக்கழிவுகளை காக்கப்போகிறோம்?ஐயா 

நான் ஒன்றும் நமது தேசத்த கொசைப்படுத்துனும்னோ,நம்ம நாட்டுக்கு 

அந்த அளவுக்கு சக்தி இல்லேன்னோ சொல்லல,ஒரு உதாரணம் சமீபத்துல 

டெல்லி பல்கலைக்கழகத்துல இருந்து ஆராய்ச்சிக்காகபயன்படுத்தப்படும் 

கதிரியக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு கருவி மார்கெட்டுக்கு வந்தது 

உங்களுக்கு நினைவிருக்கிறதா?


பல்கலைக்கழகத்துல அந்த அளவுக்கு பாதுகாப்பு இல்லே அதனால 

வந்துடுச்சு.ஆனா இந்த விஷயம் அப்படியான்னு கேக்குரிங்களா?ஒரு 

வேளை வந்துடுச்சுன்னா?ரோட்டுல போகும் போது கூட தான் விபத்து 

நேரலாம் அதுக்காக ரோட்டுலையே போகாமையா இருக்குறோம் 

அப்படின்னு கேக்குறிங்களா?ரோட்டுல போகும் போது அடி பட்டா அது 

நம்மளோட முடிஞ்சுடும் ஆனா இந்த விஷயம் அப்படியா?




பூகம்பத்தால் விழும் என நினைத்தா தஞ்சை பெரிய 

கோவிலையும்,கல்லணையையும் கட்டினார்கள் என திரு கலாம் அவர்கள் 

கேட்டிருக்கிறார்.ஐயா அப்படியே பூகம்பத்தில் இவைஎல்லால் அழிய 

நேரிட்டால் பாதிப்பு எத்தனை பேருக்கு?எத்தனை நாளைக்கு?ஆனால் இந்த 

விஷயம் அப்படியா?


2005 வரைக்கும் அமேரிக்கா உருவாக்கியுள்ள அணுக்கழிவுகள் மொத்தம் 

சுமார் ஐம்பதாயிரம் டன்.அவையெல்லாம் பாதுகாப்பாகத்தானே இருக்கிறது?

ஆமாம் இருக்கிறது. இன்றைக்கு


வரும்காலத்தில்?அட அதைப்பற்றி நமக்கென்ன கவலை அது வரை 

நாமென்ன இருக்கப்போகிறோமா?







கீற்று கட்டுரை



மேலும் வாசிக்க "700- மில்லியன் ஆண்டுகள்,முடியுமா?"

Sunday, November 6, 2011

எல்லா கலர் மாக்கான்(ர்)களுக்கும் ஒரு வேண்டுகோள்!




இந்த உலகத்துல எத்தனையோ கலர் இருக்குங்க ஆனா ஆனா மஞ்ச கலருக்கும் மாக்கானுக்கும் என்னங்க சம்பந்தம்?ஆமாங்க எல்லாரும் மஞ்ச மக்கான்னு தான சொல்றாங்க.அது ஏன்னு யாருக்காவது தெரியுமா?சரி அந்த ஆராய்ச்சியெல்லாம் விட்டுடுவோம் விசயத்துக்கு வருவோம்.இப்படி ஒரு மாக்கனால் எனக்கு ஏற்பட்ட அனுபவம்,

இன்னைக்கு நானும் எங்கப்பாவும் வண்டியில போய்க்கிட்டு இருந்தோம்.(ஆமாங்க உங்க மைன்ட் வாய்ஸ்ல ஓடுறது கரக்ட் தான் இது ஒரு சாலை விழிப்புணர்வுப்பதிவுதான்).மழையில் பயணமா கவனம் தேவை அப்படின்னு சொல்லிட்டு நாமளே பின்பற்றலேன்னா எப்படி?ன்னு நினைச்சுக்கிட்டு,கூட அப்பாவும் வந்ததால மிதமான வேகத்தை விட கொஞ்சம் கம்மியான வேகத்தில போய்க்கிட்டு இருந்தேன்.

(இது நான் இல்லைங்க)

அப்ப அப்ப ரோட்டோரமா ஒரு மஞ்சமாக்கான் இல்ல இல்ல சிவப்பு மாக்கான் சிவப்பு சட்டை போட்டிருந்தாரு (சிவப்பு மாக்கார்- வயசு அதிகம்) நின்னுக்கிட்டு போன் பேசிட்டு இருந்தாரு.நல்ல விசயம் தான  
போய்க்கிட்டே பேசாம ஓரமா நின்னு பேசுராறேன்னு நான் கூட ஒரு நொடி மனசுக்குள்ளே பாராட்டுனேன்.அப்பறம் ஏன் மாக்கார் சொல்றேன்னா போன பாக்கெட்ல போட்டுக்கிட்டு அப்படியே அந்த மாக்கார் பின்னால திரும்பிப்பாக்காம சிக்னல் எதுவும் போடாம அப்படியே யூ டர்ன் அடிச்சார்.
எனக்கு பகீர்ன்னுச்சு,எங்கப்பா டோய் டோய்ங்குறார்.அந்த நொடி ரைட்டு,எத்தனைப்பல்லுவிழப்போகுதோ?மண்ணைக்கவ்விட்டோம்னு என்னென்னவோ கற்பனை ஓடிடுச்சு.சிரமப்பட்டு ஒதுக்கி ஓட்டியதில் மயிரிழையில் தப்பிசோம்னு சொல்வாங்கல்ல அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை அனுபவிச்சேன்.
                                                      (இதுதாங்க narrow escape -பாருங்க)
  
அந்த மாக்கார் வண்டியில ஒரு சின்ன பையன் வேற இருந்தான்.வண்டியை நிறுத்தி ஏங்க பாத்து ஓட்டக்கூடாதான்னு வழக்கமான கேள்விய கேட்டேன்.அவரும் வழக்கமான இல்லைங்க ஏதோ ஒரு சிந்தனையில் திரும்பிட்டேன் ங்கற பதிலை சொன்னார்.உங்க சிந்தனையில் ஊர்ர்ல இருக்குறவங்கள உலையில போட்டுராதிங்கன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.இது மாதிரி ஆட்களை மாக்கான்னு சொல்றது தப்பா?


அந்த படப்பிடிப்பு,ச்சே படபடப்பு நிக்க ரொம்ப நேரம் ஆச்சு. இதனால் சகல மாக்கார்(ன்)களுக்கும் சொல்வது என்னான்னா வண்டி ஓட்டும் போது எந்த சிந்தனைய சிதற விடாம,கவனத்த சாலையில மட்டும் வைச்சி ஓட்டுங்க.எதிர் முனையில தெரிஞ்சவங்க வர்றாங்கன்னு டபக்குன்னு திரும்பறது,திடீர்ர்னு பிரேக் போடுறது,சிக்னல் செய்யாம திரும்பறது இப்படியெல்லாம் பண்ணாதிங்க .இது தான் இந்த சக மாக்கானின் வேண்டுகோள்.


விபத்து ஏற்பட எவ்வளவோ வழிகள் இருந்தாலும் கவனக்குறைவு,சிந்தனைசிதறல்களைக் குறைச்சுகிட்டோம்னா விபத்துக்கான வாய்ப்புகள் கொஞ்சமாவது குறையும்.நாம நம்மள நம்பி மட்டும் பயணிப்பதில்லை.சாலையில் வாகனமோட்டும் எல்லோரை நம்பியும் தான்.


மேலும் வாசிக்க "எல்லா கலர் மாக்கான்(ர்)களுக்கும் ஒரு வேண்டுகோள்!"

Saturday, November 5, 2011

வெந்த புண்-வேல் குட் காம்பினேஷன்





Jபெட்ரோல்விலைஏற்றதுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை-
மத்தியஅமைச்சர்!

ம்.வாய் வரைக்கும் வந்துடுச்சு!அப்படியே இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும்,எங்களுக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்லிடுங்க



Jஎல்லாருக்கும் ஒரு இட்லி நுழயுற அளவுக்கு தான் வாய் இருக்கு--கவுண்டமணி; என்ன பண்றது சார்,கேக்க வேண்டியவங்களுக்கு கேக்க மாட்டேங்குதே?


Jகாமராஜர் இறந்த போது அவரது வீட்டில் இருந்த பணம் மொத்தம் 67 ரூபாய்! (இன்றைய அரசியல்வாதி கமென்ட்-கிங் மேக்கரா இருந்து என்ன பண்றது அரசியல்ல மேக்’கிங்’ பண்ண தெரியாம போச்சே அவருக்கு)


Jமின்வெட்டு பற்றி சன் நியுஸ்ல சொல்றாங்க! ஆட்சியும் செய்தி வரும் .நிலைமை .சானல்களும் தான் மாறுகின்றன??????????


Jஅந்த பிராண்ட் வேஷ்டி அணிந்தால் கனவுகள் மெய்ப்படுமாம் .ஐயா அப்துல் கலாம் அவர்களே


Jவயசுஅதிகமானபொண்ணசெலக்ட் பண்றதுதப்பே இல்ல,எல்லாமூவும்அவளோடதாஇருக்கும்னு கணேஷ்அங்கிள்(விண்ணைத்தாண்டி வருவாயா) சொன்னதுசரிதான் #எங்கேயும்எப்போதும் ஜெய் அஞ்சலி லவ்!




Jபுதுத்துணி போடும் போது சிலர் ஏதோ நம்பிக்கைக்காக மஞ்சள் வைப்பார்கள்.சிலர் புதுத்துணி என காட்டுவதறகு வைக்கிறார்கள்!நம்பிக்கை இல்லாவிடிலும்!



Jபஞ்சர் கடையில் கதவிலோ ஏதாவது பழைய டயரிலோ கடை ஓனர் செல் நெ.. எழுதுவதின் நோக்கம் நிச்சயம் விளம்பரம் அல்ல!


Jஇங்கே ஒரு தியேட்டர்ல எந்த அறிவாலும் வெல்லமுடியாத ஆயுதம்னு 
பேனர் அடிசுருக்காங்க.எங்கயாவது எந்த ஆயுதத்தாலும் வெல்ல முடியாத 
அறிவுன்னு இருக்கா?


Jஎப்டிடா இங்கிருந்து மூணாவது தெருவில இருக்க பொண்ண சைட் அடிக்கற?தேங்க்ஸ் டூ வாசன் ஐ கேர்#நாங்க இருக்கோம்




Jபெட்ரோல் விலையை ஏற்றியதன் மூலம் தமிழக மக்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிவிட்டது மத்திய அரசு!-அம்மா!
நீங்க புண்ணாக்குங்க அவங்க வேல் பாய்ச்சட்டும்!#குட் காம்பினேஷன்


மேலும் வாசிக்க "வெந்த புண்-வேல் குட் காம்பினேஷன்"

Friday, November 4, 2011

உழைப்பு!


வயலில்
வியர்வை சிந்தி 
உழைக்கிறார் தந்தை


தந்தையின் கஷ்டத்தை
புரிந்து கொண்ட மகனும்
வியர்வை சிந்தி
கஷ்டப்பட்டான்


திரையரங்க வாசலில்
தனது அபிமானத்துக்கு
பாலாபிசேகம் செய்ய!
டிக்கெட் வாங்க!


மேலும் வாசிக்க "உழைப்பு!"

Wednesday, November 2, 2011

விளைநிலம்!!!


எல்லையில் இருந்து கொண்டு
எல்லோரையும் காப்பவரே!

பனியில் உறைந்து வெயிலில் காய்ந்து
பகைவரை அழிப்பவரே!

தூக்கம் தொலைத்து உணவு மறந்து
தேசம் காப்பவரே!

வீட்டு நலம் கருதாமல்
நாட்டுநலம் போற்றுபவரே!

உயிரை துச்சமெனக்கருதி-நாட்டை
உயிரென மதிப்பவரே!

துப்பாக்கி குண்டுகளை எதிர் கொண்டு
துணிந்து நிற்பவரே!

அதோ!
எதிரிகள் கொக்கரிக்கின்றனர்
ஏதோ ஒரு வீரனை கொன்றதற்க்காக!
அதைப்பற்றி கண்டு கொள்ளாதீர்கள்
அவர்களுக்குத்தெரியாது
இங்கே ஒரு வீரனைப்புதைத்தால்
ஈராயிரம் வீரர்கள் முளைப்பார்களென்று
ஏனெனில் இது வீரர்களின் விளைநிலம்!



(சில நேரங்களில் இந்த வீரத்தின் விளை நிலத்தில் சில களைகளும் வளர்ந்து விடுவது வருத்தமளிக்கிறது.சமீபத்திய உதாரணம் சிறுவன் தில்சன் சம்பவம்.மேலும் சில நிகழ்வுகள் உங்களுக்கே தெரியும். )

மேலும் வாசிக்க "விளைநிலம்!!!"

Monday, October 31, 2011

நம்பலாமா?


முன்பொரு காலத்தில் ஒருவர் கடவுளின் மீது தீவிர பற்று கொண்டவராக இருந்தார்.கடவுளின் புகழையும் பெருமைகளையும் உலகெங்கும் பரப்பி வந்தார்.கடவுளின் நாமத்தையே எந்நேரமும் நினைத்தும்,ஜபித்தும் வந்தார்.இருந்தாலும் அவர் வாழ்க்கையில் சில கஷ்டங்களை அனுபவித்தார்.இது அவருக்கு பெரும் சந்தேகத்தையும் வருத்தத்தையும் தந்தது.எப்பவும் கடவுளை நினைத்துக்கொண்டிருந்தும் ஏன் இவ்வளவு கஷ்டங்கள்?என அலுத்துக்கொண்டார்.

இப்படியிருக்க அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது.மனிதனாய்ப்பிறந்தால் இது இயல்புதானே!இறந்தவுடன் அவரது ஆன்மா(?)கடவுள் இருக்கும் இடத்துக்கு சென்றது.அங்கே கடவுள் அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார்.அவரிடம் போன நமது மதபோதகர் அவரை வணங்கிவிட்டு தனது நீண்ட நாள் ஆதங்கத்தை அவரிடம் உடைத்தார்.

கடவுளே!நான் எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டே தான் இருந்தேன்.எப்போதும் உனது பெயரை சொல்லிக்கொண்டுதான் இருந்தேன்.இருந்தாலும் எனது வாழ்வில் சில தருணங்கள் மிகவும் கஷ்டமாக உணர்ந்தேன்.சில கடினமான நேரங்களை கடந்திருக்கிறேன்.ஏனிப்படி?உன்னையே நினைத்திருந்தவனுக்கு நீ கொடுக்கும் பரிசு இது தானா?என்றார்.

கடவுள் மெல்லிய புன்னகையுடன் டி.வியைப்பார் என்றார்.டி.வியில் ஒரு பாதையும் நான்கு காலடிகளும் வரிசையாக தெரிந்தது.அதைக்காட்டி இதுதான் உனது வாழ்க்கைப்பாதை அதில் முன்னாலிருக்கும் இரு காலடிகள் உன்னுடையது பின் வரும் காலடிகள் என்னுடையது.நான் எப்போதும் உன்னை தொடர்ந்து தான் வந்திருக்கிறேன் என்றார்!

அந்த நேரம் பார்த்து கடவுளின் உதவியாளர் வந்து கோகுல் அடுத்த போஸ்ட் போட்டுட்டார்னு சொல்ல கடவுள் நம்மவரை டி.வி.பார்த்துக்கொண்டிருக்கச்சொல்லிவிட்டு நம்ம பிளாக் பக்கம் வந்துட்டார்.தனியா இப்ப தனியா டி.வி பாத்துக்கிட்டு இருந்த நம்மவர் சில இடங்களைப்பார்த்து அதிர்ச்சி ஆனார்.ஏனெனில்அவர் காட்சிகளில் சில இடங்களில் இரு காலடிகள் மட்டுமே இருந்தது.தனது நினைவாற்றலால் அந்த காலங்களை நினைவு கூர்ந்தார்.அந்த காலங்களே இவர் கஷ்டப்பட்டகாலங்களாய் இருந்தன.இதைக்கண்டு அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார், கடவுள் நாம் கஷ்டம் வரும் காலங்களில் நம்மைப்பின் தொடராமல் போனதால் தான் நாம் துயரை அனுபவித்தோம் என கோபம் கொண்டார்.

கடவுள் திரும்ப வந்தவுடன் அவரிடம் கடிந்து கொண்டார்.இதுதான் உங்கள் நீதியா?கஷ்டப்படும் காலங்களில் பின் தொடராமல் விலகி நிற்பது தான் உங்களை வணங்கி நினைத்துக்கிடப்போர்க்கு நீங்கள் பரிசா?என பொங்கித்தள்ளினார்.

பொறுமையாகக் கேட்டுக்கொண்ட கடவுள் பதிலுரைத்தார்.நீ உனது கஷ்ட காலங்களில் கண்ட இரு காலடிகள் உன்னுடையது அல்ல அவையிரண்டும் என்னுடையது.அப்போது உன்னை நான் எனது தோளில் சுமந்து துயர காலத்தைக்கடக்க வைத்தேன்.இல்லையென்றால் நீ அந்த நேரங்களில் தாங்க முடியா துயரை சந்தித்திருப்பாய் என்றார்.இன்பமும் துன்பமும் இணைந்து வருவதே வாழ்க்கை.துன்ப நேரங்களில் மட்டும் இறைவனை நினைப்பது சில மனிதர்களின் இயல்பு எனவும் துன்பம் என்று ஒன்று வாழ்வில் இல்லாவிடிலும் மனிதனது முயற்சிகளுக்கு வேலையில்லாமல் போய்விடும் என வாழ்வியல் அர்த்தத்தை உணர்த்தினார்.

இதிலிருந்து பெறப்படும் நீதி என்னவெனில் ஒரு விசயத்தில் நம்பிக்கை வைத்தால் எந்த நிலையிலும் அதன் மீதுள்ள நம்பிக்கை இழக்கக்கூடாது.அதேபோல நம்பிக்கை இல்லாவிடிலும் அது கடவுளின் மீதுள்ள நம்பிக்கையாக இருந்தாலும்.(குழப்பமா இருக்கா நம்பின விசயத்த சந்தேகப்படாதிங்க,சந்தேகமான விசயத்த நம்பாதிங்க அவ்வளவுதான்) 


(இது ஒரு ஆங்கில ஆசிரியர் சொன்னது,தமிழ்ப்படுத்தி ஒரு நீதியை வைத்து தந்திருக்கிறேன்)
மேலும் வாசிக்க "நம்பலாமா?"

Saturday, October 29, 2011

நெருப்பு!!!


நெருப்பு

பெண்ணே!
உன்னை கண்ணகியோடு
சீதையோடு
ஒப்பிட்டால்
ஒப்புக்கொள்ளாதே!


நீ கண்ணகியாயிருந்தால்
ஒரு ஊரையே எரிக்கவேண்டியிருக்கும்

நீ சீதையாயிருந்தால்
நீயே எரிய வேண்டியிருக்கும்
நீ நீயாயிரு!
நீயே நெருப்பாயிரு!
நெருப்பு உனக்குள்ளிருக்கட்டும்!
எது உன்னை நெருங்கும்?

நெருப்பென்றால் எப்படி?
நல்லன ஆக்கவும்
தீயவை அழிக்கவும்
தெரிந்த நெருப்பாய்! 



மேலும் வாசிக்க "நெருப்பு!!!"

Thursday, October 27, 2011

IF BLOGGER CLOSED!!!


ஒரு வாரத்துக்கு முன்னால கூகுள் பஸ்ஸ (BUZZ)மூடப்போறதா தகவல் வந்தது அந்த நேரத்துல twitter-ள் உலாவிக்கிட்டு இருந்தப்ப iftwitterclosed அப்படின்னு # போட்டு ட்விடிக்கிட்டு இருந்தாங்க.அப்பா அங்கே வந்த நிருபன் கூட அடப்பாவிகளா பிக்குல தான் ரணகளமா ஓடிட்டு இருக்குன்னு இங்கே வந்தா இங்கே அதுக்கு மேல க்ளோஸ் பண்ற அளவுக்கு போட்டு தாக்குராங்களே என்று நொந்தார்!
அந்த நேரத்தில் என் கபாலத்தில் உதித்தது தான் இந்த எண்ணம் .IF BLOGGER CLOSED.என்ன நண்பர்களே அதிர்ச்சியா இருக்கா?சும்மா ஒரு கற்பனை என்ன நடக்கும் பாக்கலாம் வாங்க!
.



J எதை எழுதறது,என்னாத்த எழுதறதுன்னு மண்டைய போட்டு உடைச்சுக்க வேணாம்.அதே மாதிரி எதை வேணும்னாலும் எழுத தோணாது!

Jபதிவைப்போட்டுட்டு கமெண்ட்ஸ் வந்ததான்னு சும்மா சும்மா பேஜ்-refresh பண்ண தேவையில்ல.

Jசினிமா விமர்சனம் எழுத மொக்க படத்துக்கெல்லாம் போய் சொந்த செலவில சூனியம் வைச்சுக்க வேணாம்!

Jஎந்தெந்த திரட்டிகள்ள இணைக்கலாம் எதெதுல இணைக்கக்கூடாதுன்னு ரூம் போட்டு யோசிக்க அவசியம் இருக்காது!

Jயாராரேல்லாம் மொய் வெச்சிருக்காங்கன்னு பாத்து பாத்து போய் மறு மொய் வைக்க வேணாம்!

Jவீட்டுல இருக்கவங்க அப்படி என்னாதான் அந்த கம்பியூட்டர்ல ஒக்காந்து நோண்டிக்கிட்டு இருக்கியோன்னு கயிவி கயிவி ஊத்துறது நின்னுடும்!

Jநாம ஏதோ எழுதப்போய்நீ எப்படி அப்படி எழுதலாம்னு யார்க்கிட்டையும் வாங்கிக்கட்டிக்க தேவை இருக்காது!

Jஇதப்பத்தி எழுதுனா அவங்க கோச்சுப்பாங்களோ?அதப்பத்தி எழுதுனா இவுங்க கோச்சுப்பாங்களோ அப்படின்னு எல்லாம் நினைக்க தேவையில்லை!

Jராத்திரி பேய் வரவரைக்கும் உக்காந்து கமென்ட் போடத்தேவையில்லை!

Jடாகுடர் படங்களுக்கு விளம்பரம் கொறையும்!

Jஅரசியல் கூத்துக்களை கண்டும் காணாம இருக்க வேண்டிய நிலைமை வரும். ஒருத்தர் காத பொத்திக்கிட்டு இருக்கற மாதிரி.

Jஆபீசுல பிளாக் பாக்குறது கொறைஞ்சு கொஞ்சம் வேலை நடக்கும்.

Jகையில மொபைல வைச்சுக்கிட்டு post super-அப்படின்னு சொல்லத்தேவையில்ல!

Jநம் எண்ணங்களை,சிந்தனைகளை தூண்டும் நட்புகள்,தொலைதூர,கடல்கடந்த நேசமிகு உறவுகள் கிடைக்காமல் போகும்!

Jயாரோ கொடுக்குற ரேங்கிங் க்கு நட்புகளுக்குள் பனிப்போர் தேவை இருக்காது

Jநேர்ப்பதிவு,எதிர்ப்பதிவு,தொடர்ப்பதிவு,சைடு பதிவுக்கேல்லாம் வாய்ப்பிருக்காது!

Jகலைஞர்,அம்மா,ராசா,கனிமொழி இவங்களைப்பத்தின நையாண்டிகள் கொறையும்.

Jஹன்சிகாவுக்கு © யாருன்னு சண்டை வராது.

Jஒரு பதிவர் சந்திப்பு அதுக்கு நாலைஞ்சு பதிவு போடத்தேவையில்ல.

JLast but not least இந்த பதிவே போட்டிருக்கத்தேவையில்ல!


டிஸ்கி1 - இந்த பதிவு ஒரு கற்பனையே.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல(இப்பல்லாம் இப்படி போட்டாலும் பிரச்சினையாகுது பாவங்க நாங்க எப்படிங்க கற்பனை பண்றது!)


டிஸ்கி2- உங்க கற்பனைகளையும் பின்னூட்டத்துல சொல்லுங்க!





படங்கள்-இணையங்களில் சுட்டது!
மேலும் வாசிக்க "IF BLOGGER CLOSED!!!"

Tuesday, October 25, 2011

சந்தோஷத் தீபாவளி!!!



வெடிக்கும் பட்டாசுகளையும்
பொறியும் மத்தாப்புகளையும்
பார்த்து நாம் மகிழ்கிறோம்
நம்மை மகிழச்செய்த
பட்டாசுதொழிலாளர்கள்?

பட்டாடை மினுமினுக்க
புத்தாடை ஜொலிஜொலிக்க
நாமுடுத்தி மகிழ
உருவாக்கி தந்த
மில் தொழிலாளர்கள்?


வீட்டில் நுழைந்தவுடன்
வாலாட்டி குலைந்து கொண்டு
நன்றியுடன் காவல் காத்து
நடைப்பயிற்சிக்கு உடன் வரும்
செல்லப்பிராணிகளுக்கு?


எல்லையின்றி திரிந்து
சிறகு விரித்துப்பறந்து
கீச்சுக்குரலில் பாடி
நம் மனதை மயக்கும்
பறவையினங்களுக்கு?


உறவுகளைப் பாக்கணும்
ஊர்ப்போய்ச் சேரனும்
நட்புக்களுடன் நகைக்கணும்
கொண்டு சேர்க்கும்
போக்குவரத்துத்துறையினருக்கு?


பட்டாசின் மிச்சம்
புதுத்துணிகளில் சுற்றப்பட்ட
இனிப்பு காரம் செய்ய வாங்கிய
பிளாஸ்டிக் குப்பைகளை
அடுத்த நாள் சுத்தம் செய்யும்
துப்புரவாளர்களுக்கு?


இந்த நன்னாளில்
எந்த வித அசம்பாவிதங்களும்
நிகழக்கூடாது என
தங்கள் வயிற்றில் நெருப்பைக்கட்டி
தயார் நிலையில் இருக்கும்
தீயனைப்புப்படையினருக்கு?


This diwali will enlighten us with sweets and crackers

இது போல ஒரு பண்டிகையை
நம்மை கொண்டாட வைக்கும்
இவர்களைப் போன்றவர்களுக்கு
இது சந்தோசத்தீபாவளியா என்றால்
என்னைப்பொருத்த வரை கேள்விக்குறியே
நம்மால் இயன்ற வரை இந்நாளில்
இவர்களைப்பார்க்க நேரிடுகையில்
வாழ்த்து சொல்லி கை கொடுப்போம்.
நிச்சயம் சந்தோஷத்தீபாவளியாய் உணர்வார்கள்!


அனைத்து நண்பர்களுக்கும்,குடும்பத்தார்க்கும்
பாதுகாப்பான இனிய,தீபஒளித்திருநாள் வாழ்த்துக்கள்!
மேலும் வாசிக்க "சந்தோஷத் தீபாவளி!!!"