வலைப்பூ நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்,
தானே புயல் கடந்த ஆண்டு இறுதியில் கடலூர்,புதுவை வட்டாரப்பகுதிகளை புரட்டிப்போட்டு சென்றதை நீங்கள் அறிவீர்கள்.அதற்கான நிவாரணங்கள் அரசு,தனியார் என பல இடங்களில் இருந்து வந்த வண்ணம் உள்ளது.ஆனால் சேதம் ,இழப்பு கணக்கிட இயலாதது.அவற்றை ஈடு செய்வது என்பதும் முடியாத ஒன்றுதான்.
நம் மக்களுக்கு நமது சகோதர,சகோதரிகளுக்கு நாம் உதவாமல் போவோமா?குஜராத் பூகம்பம்,கார்கில் நிதி,சுனாமி நிவாரணம் இப்படி எல்லா நேரங்களிலும் நமது மக்களுக்காக நாம் அளித்த பங்கு கணிசமானது என்பதையும் இந்த நேரத்தில் நினைவு கூராமமலிருக்க முடியாது.
இப்போது தானே ஏற்படுத்திய துயரத்தை சற்றே துடைக்கும் வகையில் விகடன் குழுமம் தனது சார்பில் ரூ.10 லட்சத்தை அளிக்க முன் வந்துள்ளது அது மட்டுமல்லாமல் அந்த நிறுவனம் சார்பில் வாசகர்களிடமிருந்தும் உதவிக்கரம் நீட்ட கோரியுள்ளது.வாசகர்களும் ஆதரவுக்கரம் நீட்டியவண்ணம் உள்ளனர்.
நண்பர்களே!வலைப்பூ வாசகர்களே!
இந்தப்பதிவு மூலம் உங்களையும் தங்களால் முடிந்த அளவு தானேவால் ஏற்ப்பட்ட துயரம் துடைக்க உதவுமாறு வேண்டுகிறேன்.இதன் விபரங்களுக்காக விகடனால் உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேகப்பக்கம் http://www.vikatan.com/thane/ இங்கே சென்று விபரங்கள் பெறலாம்.இது குறித்த விகடனின் அறிவிப்பு இதோ,
________________________________________________________________________________________________________________
நெஞ்சில் ஈரம் உள்ள அனைவரும் நம் தமிழ்ச் சொந்தங்களின் துயர் துடைக்க முன்வரலாம். Vasan Charitable Trust என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி. எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சேமிப்பு கணக்கு எண் 000901003381 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: ICIC 0000009 , நுங்கம்பாக்கம் கிளை, சென்னை-600034) வழியாக அனுப்பலாம்.
வெளிநாட்டு வாசகர்கள் எங்களின் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: IDIB000C032 , எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.
Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.
நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருப்பினும், கீழே நாங்கள் அளித்து உள்ள படிவத்தையும் தயவுசெய்து பூர்த்திசெய்து, 'தானே துயர் துடைப்புத் திட்டம்’ என்று உறையின் மீது மறவாமல் குறிப்பிட்டு 'ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600002' என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
வாருங்கள் வாசகர்களே... 'தானே’ துயரை நாமும் துடைப்போம்!
நெஞ்சில் ஈரம் உள்ள அனைவரும் நம் தமிழ்ச் சொந்தங்களின் துயர் துடைக்க முன்வரலாம். Vasan Charitable Trust என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி. எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சேமிப்பு கணக்கு எண் 000901003381 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: ICIC 0000009 , நுங்கம்பாக்கம் கிளை, சென்னை-600034) வழியாக அனுப்பலாம்.வெளிநாட்டு வாசகர்கள் எங்களின் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: IDIB000C032 , எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.
Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.
நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருப்பினும், கீழே நாங்கள் அளித்து உள்ள படிவத்தையும் தயவுசெய்து பூர்த்திசெய்து, 'தானே துயர் துடைப்புத் திட்டம்’ என்று உறையின் மீது மறவாமல் குறிப்பிட்டு 'ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600002' என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
வாருங்கள் வாசகர்களே... 'தானே’ துயரை நாமும் துடைப்போம்!
- ஆசிரியர்
- ஆசிரியர்
நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் உதவி சேகரித்து வருகிறேன், கணிசமான தொகை சேர்ந்ததும் விகடன் மூலம் உரியவர்களுக்கு சேர்க்க திட்டமிட்டுள்ளேன்.
எனது icici savings acc.no - 099601500497
Name- M.GOKUL
Branch- Karaikal .
இந்த சேமிப்பு கணக்கிற்கும் நீங்கள் பணமாக அனுப்பலாம். வலைப்பூ நண்பர்கள் சார்பாக அந்த பணத்தை அனுப்பி விடுகிறேன்.எனது கணக்கிற்கு பணம் அனுப்புபவர்கள் gokul304@gmail.com மெயிலுக்கோ அல்லது +91 9486146881, +91 9791961976 என்ற எனது தொலைபேசியிலோ முன்னமே தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து விடுங்கள். பணம் அனுப்பியவர்களது பெயரை பணம் அனுப்பியதும் எனது தளத்தில் பணம் அனுப்பியதற்கான சான்றுடன் வெளியிடுகிறேன்.முடிந்தவரை பணம் அனுப்புபவர்கள்(எனக்கு அனுப்புபவர்கள் மட்டும்) அடுத்த வெள்ளிக்குள்(27/01/2012) அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முடிந்தவரை இந்த பதிவை பலரிடம் கொண்டு சேர்க்கவும்.நன்றி.
Tweet | ||||||
27 comments:
நல்ல முயற்சி. விகடனுடையது மட்டுமல்ல. அதை இன்னும் பலருக்கும் பரப்பும் வகை செய்த உங்களுடையதும் தான்.
வாய்ப்பிருந்தால் நேரடியாக களத்தில் இறங்கி செயல்படலாமே!
@ரசிகன்
நிச்சயமாக நண்பரே...
நல்ல முயற்சி....
வாழ்த்துக்கள் ...
தானே துயரத்தை நாமும் துடைப்போம்..ந்ல்லதொரு அறிவிப்பை பதிவில் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி தோழர்..
நீ யாரெனத் தெரியவில்லை
நல்ல முயற்சி பாஸ் நானும் இந்த தகவலை பலரிடம் கொண்டு சேர்க்கின்றேன்
தங்களின் முயற்சிக்கு தலை வணங்குகிறேன் நண்பரே.
என்னால் இயன்றதை செய்கிறேன்.
அருமை....
கண்டிப்பாக என்னால் முடிந்த உதவி செய்கிறேன் நண்பா.... அறிய படுத்தியமைக்கு நன்றி...
நல்ல முயற்சி! வெற்றிபெற நாம் அனைவரும் முயல வேண்டும்!
முடிந்த அளவு நானும் உதவுவேன்!
புலவர் சா இராமாநுசம்
கண்டிப்பாய் உதவுவோம் சகோ. என்னால் இயன்ற பொருளுதவியை திங்களன்று அனுப்பி தங்களை தொலைப்பேசியில் தொடர்புக் கொள்கிறேன்
நல்ல சேவை !
இங்க ஒரு பெரிய இயக்கமே நடந்துட்டு இருக்கு நண்பா...
நானும் என் ஒரு சில பள்ளி நண்பர்களும் சேர்ந்து...
நீங்களும் செய்யுங்கள்...
மக்களாட்சி என்பது இதுதான்..(மக்களுக்காக மக்களே...)
நல்ல நோக்கத்துடன் தொடங்கிய முயற்சி வெற்றி பெறும்.
NAAI-NAKKS said...
நல்ல முயற்சி....
வாழ்த்துக்கள் ...
//
உங்கள் ஆதரவோடுதான் இந்த முயற்சி
//
மதுமதி said...
தானே துயரத்தை நாமும் துடைப்போம்..ந்ல்லதொரு அறிவிப்பை பதிவில் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி தோழர்.. //
ஆதரவுக்கு நன்றி
//
K.s.s.Rajh said...
நல்ல முயற்சி பாஸ் நானும் இந்த தகவலை பலரிடம் கொண்டு சேர்க்கின்றேன்
//
நன்றி நண்பா.
//
மகேந்திரன் said...
தங்களின் முயற்சிக்கு தலை வணங்குகிறேன் நண்பரே.
என்னால் இயன்றதை செய்கிறேன்.
//
உங்கள் முயற்சிக்கு நன்றியும் பாராட்டுகளும்.
சசிகுமார் said...
கண்டிப்பாக என்னால் முடிந்த உதவி செய்கிறேன் நண்பா.... அறிய படுத்தியமைக்கு நன்றி...
//
நன்றி நண்பா!
புலவர் சா இராமாநுசம் said...
நல்ல முயற்சி! வெற்றிபெற நாம் அனைவரும் முயல வேண்டும்!
முடிந்த அளவு நானும் உதவுவேன்!
புலவர் சா இராமாநுசம்
//
மிக்க நன்றி ஐயா!
@ராஜி
உங்கள் முயற்சியை வரவேற்கிறேன்
@மயிலன்
உங்கள் சேவைக்கு அனைவருக்கும் பாராட்டுகள்.
@சென்னை பித்தன்நன்றி ஐயா.
@koodal bala
வாங்க பாலா,ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க நலமா?
நல்ல முயற்சி தம்பி. ஆவன செய்வோம்.
வணக்கம் கோகுல் பாஸ்,
மிகவும் பயனுள்ள விடயத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
இச் செய்தி தொடர்பில் நானும் என்னாலானா உதவிகளை வழங்குகிறேன்.
வணக்கம் நண்பரே! தாமத வருகைக்கு மன்னிக்கவும். கணினி இணையப் பிரச்சினையால் வலைப்பூக்கள் பக்கமம் கடந்த ஒரு வாரமாக வரமுடியவில்லை. பதிவும் இடவில்லை. நல்ல முயற்சி. பாராட்டுகீறேன். என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். முடிந்தால் உங்கள் கணக்கில் திங்கள் to புதன் கிழமைக்குள் பணம் போட முயற்சிக்கிறேன் நண்பரே!
நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள்.
நல்ல முயற்சி.நான் அனுப்பியுள்ளேன் தமிழக அரசுக்கு
http://www.kovaineram.blogspot.com/2012/01/blog-post_10.html
அன்பின் கோகுல் - தானே - விகடனிற்கு நேரடியாகவே ஏற்கனவே அனுப்பி விட்டேன். தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா
நல்ல முயற்சி கோகுல்...உங்கள் சேவைக்கு பாராட்டுகள்...
Post a Comment