நித்தியானந்தா இந்த பெயரை கொஞ்ச நாளா சொல்லும்,கேட்கும் பல பேருடைய(என்னையும் சேர்த்து தான்) ரியாக்சன் என்னவாக இருந்திருக்கும் அப்படிங்கறது உங்க எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.கேலி,கிண்டல்,நையாண்டி,நக்கல்,கோபம்,சிலருக்கு இயலாமை கூட(எதுக்குன்னு கேக்காதீங்க).ஆனா சமீபத்துல இந்த எல்லா ரியாக்சனும் மறந்து போய் மரியாதையுடன் பார்க்க வைத்திருக்கிறார் புதுச்சேரியின் சில கிராமப்புற மக்களை.
இங்குள்ள சில கிராமங்களுக்கு இப்போதைக்கு அவர்தான் தானே வந்த தானைத்தலைவர்,ஆமா,தானே புயலால் வந்த தானைத்தலைவர்.தானே புயல் புதுவை,கடலூர் வட்டார பகுதிகளை புரட்டிப்போட்டது எல்லாருக்கும் தெரியும்.அது நித்தியானந்தாவின் மேலிருந்த களங்கத்தையும் சற்றே(சற்று தான்) புரட்டிப்போட்டிருக்கிறது.
ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தபட்ச சேதம் 5000ரூபாயாவது(விவசாயிகள்,வியாபாரிகள்,தொழிற்சாலைகளின் சேதம்,இழப்பு ரொம்ப அதிகம்)இருக்கும்.புயலால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் எதிர்பார்த்திருந்தது உடனடி நிவாரணம்.நிவாரணமென்றால் பணம் கிடையாது.அன்றைய வேளை சாப்பாடு,தாகத்துக்கு தண்ணீர்.உடுத்திக்க துணி.புதுவை முதல்வர் அறிவித்த குடும்ப அட்டைக்கு ரூ.2000 கூட யாருக்கும் பெரிதாய் தெரியவில்லை.இங்கே பாண்டிச்சேரியில் பணம் கிடைச்சா நம்ம மக்கள் என்ன பண்ணுவாங்கன்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.( எப்பேர்ப்பட்ட புயலிலிலும் உடனடியா மீண்டது கள்ளுக்கடைகளும் சாராயக்கடைகளும் தான்).
பத்து நாள் கழித்து இப்போதான் மத்தியக்குழு வந்து சேதங்களை பார்வையிடுகிறது.(இன்னும் ஒரு ரெண்டு வாரம் கழிச்சு வந்திருக்கலாமே –இப்படி ஒரு டக்க எங்கயும் பாத்திருக்க முடியாது). இவங்க போய் அங்கே அறிக்கை தாக்கல் செஞ்சு,ஆலோசனை நடத்தி,முடிவுஎடுத்து,அமுல்படுத்தறதுக்குள்ள............ஹாவ்வ்வ்வ்(கொட்டாவி).
பத்து நாள் கழித்து இப்போதான் மத்தியக்குழு வந்து சேதங்களை பார்வையிடுகிறது.(இன்னும் ஒரு ரெண்டு வாரம் கழிச்சு வந்திருக்கலாமே –இப்படி ஒரு டக்க எங்கயும் பாத்திருக்க முடியாது). இவங்க போய் அங்கே அறிக்கை தாக்கல் செஞ்சு,ஆலோசனை நடத்தி,முடிவுஎடுத்து,அமுல்படுத்தறதுக்குள்ள............ஹாவ்வ்வ்வ்(கொட்டாவி).
இந்த நிலைமையில்தான் களமிறங்கினார் நித்தியானந்தா.களமிறங்கினார்னா எப்படி ?அவரே நேரிடையா புதுவையில் அவருக்கு இருக்குற ஒரு இடத்துல நிவாரணக்குழு அமைச்சு அதுவும் புயலடித்த இரண்டாம் நாளே அவரே நேரில் வந்து அந்த பகுதி மக்களுக்கு மூன்று வேளை உணவு,குடிநீர்,துணி,குளிருக்கு போர்வைகள் வழங்கி உடனடி நிவாரணம் என்றால் என்ன என்பதை உணர்தி சென்றார்.
இத்தனைக்கும் அவர் சர்ச்சையில் சிக்கிய சமயம் இதே இடம் சிலரால் அடித்து சேதப்படுத்தப்பட்டது.இன்று அதே இடத்தில் அந்த பகுதி மக்களுக்காக நிவாரணமுகாம் அமைத்து அந்த மக்களின் மனதில் ஒரு படி உயர்ந்து நிற்கிறார்.அவரது இந்த நிவாரணப்பணியின் நோக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.அதன் ஆதி,அந்தமெல்லாம் ஆராயாமல்,அவர் தன் மேலுள்ள அவப்பெயரை மறக்கடிக்க இது போல சேவை செய்கிறார் என்று பேச்சு அடிபட்டாலும் அவரது இந்த செயலால் இன்னும் கொஞ்ச நாளாவது நிவாரண உதவி பெற்ற மக்கள் மனதுக்குள் அவரை வாழ்த்திக்கொண்டிருப்பார்கள் என்பது மட்டும் உண்மை.
Tweet | ||||||
23 comments:
கல்லுக்குள் ஈரம் என்பதைவிட கள்ளியில் இருந்தும் பால் வரும் மனிதனுக்கு அது விசம் ஆடுகளுக்கு நல்ல உணவு அதைப்போல....நித்தி திருந்தினா சரி....
பரவாயில்லையே சாமிக்கு இந்த வேலையும் செய்ய நேரமிருக்கே..!!
ஓகே ஓகே நன்றி சாமி.. இவ்வளவு நடந்த பின்னும் சாமிய பாராட்ட வைச்சது அரசாங்கம்தான். அவர்கள் தங்கள் கடமையை ஒழுங்கா செய்திருந்தால் ஏன் மக்கள் இவரிடம் போகப்போறார்கள்..!!
எல்லோரும் நலமா?
தானே தாக்கிய தாக்கில் மின் இணைப்பு,இணைய இணைப்பு சீராக இல்லை அதான் ஒரு வாரம் ரெஸ்ட்.
நிலைமை மெல்ல மெல்ல சீராகிக்கொண்டிருக்கிறது.நிலைமை விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
நல்லவற்றைச் செய்யும் போது நாம் வரவேற்பதில் தப்பில்லைத்தானே! எனவே நித்தியானந்தாவின் நிவாரணப்பணிகளை நாம் வரவேற்கலாம் கோகுல்!
நூறு சதவீத நல்லவங்களும் இல்லை. நூறு சதவீத கெட்டவங்களும் இல்லை
நாய் விற்ற காசு குரைப்பதில்லை! பாவக்காசு கசப்பதில்லை!
சாமியார்கள் பணியே வழிகாட்டுவதும் துயர் துடைப்பதும் தான்! நித்தியின் பணியில் ஆச்சரியம் ஏதுமில்லை! விளம்பரம் தேடிக் கொண்டாரா இல்லை அமைதியாக நடந்தேறியதா என்பதே கேள்வி!
நலமா கோகுல்?
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..
நித்தியின் விளம்பரம் costly...:)
Publicity kaga illama unmaiyana manasoda senjiruntha kandippa paarattalaam Sago.
வாங்க கோகுல், நலமுடன் மீண்டு வந்தததற்கு வாழ்த்துகள்! விரைவில் முழு இயல்பு நிலையும் திரும்பட்டும்!
நித்தியின் செயல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாம், ஆனால் அதை பற்றி சிந்திக்கும் நிலை இப்போது இல்லை.
வணக்கம் கோகுல்!தானே வந்த "தானே"புயலிலிருந்து ஒரு வழியாக மீண்டு விட்டது சந்தோசம்!அப்புறம், நித்தியானந்தா செய்த பணி உள்நோக்கமோ,வெளிநோக்கமோ பாதிக்கப்பட்ட மக்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியிருக்கும் என்பது திண்ணம்!அரசை நம்புவதை விட ஆண்டியை?!ஜனங்கள் இதனால் தான் அளவுகடந்து நம்புகிறார்களோ?
தானே போய் இயல்பு வாழ்க்கை திரும்பியதற்கும் தாங்கள் மீண்டு வந்ததற்கும் வாழ்த்துக்கள்.
நித்தியைப் பாராட்டத் தானே வேணும்.
ஓடி வந்தது கொடுத்ததற்காக.
மீண்டும் உங்கள் பக்கம் நிச்சயம் அவர் செல்வாக்கு உயரும்.
ஒரு சாமியார் செய்ய வேண்டியது இதுவே! நடிகையுடன் கட்டிலில் உருளுவதல்ல என்பதை நித்தி புரிந்தால் சரி!
நடிகைகளின் சகவாசத்தான் எதுக்கும் போஸ் கொடுப்பதில் 'நித்தி'பலே கில்லாடிதான்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக எதாவது செய்தாரே அதை பாராட்டலாம்
நாடகமே உலகம் நாளை நடப்பதை யார் அறிவார்!
சாமிக்கு வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
உள் நோக்கத்திற்காக செய்தாரோ வெளிநோக்கதிர்க்காக செய்தாரோ உணவின்றி தவித்தவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கினார் அது பாராட்ட தக்கது தான்....
சூப்பர்ஸ்டார் சொன்னது போல மனதிற்கும், மூளைக்கும் இடையேயான சண்டையில் மனம் தான் ஜெயிக்கிறது...
அவசரத்துக்கு உதவி - ஆறுதல்.
அது யாரு செய்தால் என்ன?
யார் என்ன சொன்னாலும் இந்த நேரத்துக்கு உதவி செய்ய மனம் வந்ததே அவருக்கு அதுக்கு எம் பாராட்டுக்கள்!
மன்னித்தலும் மறத்தலும் மனித தன்மை. உரிய நேரத்தில் மற்றவர்களுக்கு உதவுதும் மனிதம் தான். . .
கதவையும் திறக்க வேணாம். காத்தும் வர வேணாம் :p
கஷ்டப் படும் உயிர்களை காக்க முற்படும் யாரும் கடவுளுக்கு இணையானவர்களே.
நித்யானந்தாவின் செயல் பாராட்டுக்குரியதே.
வணக்கம் கோகுல்,
இன்று தான் ஆன்மிகவாதிகள் மக்களின் உணர்வுகளைப் புரிந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
பிராடு பண்ணும் அரசியல்வாதிகள் மக்களை கவனிக்காதிருக்கும் சூழலில் நித்தியானந்தாவின் நிவாரணப் பணி போற்றத்தக்கது.
தலை தாழ்த்துகிறேன்.
ஆனாலும் எனக்கு மனம் ஒப்பவில்லை.
If you want to know why his name is defammed, u need to read the book 'Breaking India'. Who is behind the kudankulam & what is happening in Tamilnadu, Andhar & Kerala will be known by everyone.
Post a Comment