தானே! கடந்த நான்கு நாட்களாக பாண்டிச்சேரி,கடலூர்,சிதம்பரம் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளை புரட்டிப்போட்ட வார்த்தை.இது ஆண்பாலா பெண்பாலா தெரியவில்லை ஆனால் இந்த பகுதிகளில் உள்ள பெரும்பாலானவர்களின் இயல்பு வாழ்க்கையை பாழ் பண்ணிப்போய்விட்டது.வழக்கமாக செய்தித்தாள்களில் மட்டுமே பலத்த காற்றுடல் மழை,புயல் கரையைக்கடந்தது என்பதை பார்த்து வந்தவர்களுக்கு,நான் இப்படித்தான் இருப்பேன் என தன் கோர முகத்தைக்காட்டி உணர்த்திச்சென்றது தானே புயல்.
புயல் குறித்து முன்பே எச்சரிக்கப்பட்டதால் 29.12.2011வியாழன் மதியத்திலிருந்தே கரண்ட் கட்.சாயங்காலம் லேசா மழை ஆரமிச்சது.ராத்திரி ஆக ஆக மழை கொஞ்சம் அதிகமானது.பதினோறு பணிக்கு மேல காத்து கொஞ்சமா வீச ஆரமிச்சு நேரம் ஆக ஆக நெடுஞ்சாலையில் டாப் கியரில் போகும் காரின் வேகமெடுத்தது.வார்த்தைகளில் அளவிட முடியா வேகம்.வீட்டைச்சுற்றியிருந்த தென்னை மரங்களிலிருந்து மட்டைகளும் தேங்காயும் தொபீர்,தொபீரென விழுந்துகிட்டே இருந்துச்சு.ஜன்னல்களை சாத்தியிருந்தும் காற்று இடுக்குகளில் புகுந்து என்னென்னவோ சத்தம் போட்டு பயமுறுத்தியது.இரவு முழுக்க தூக்கமில்லை.இரைச்சல் பேரிரைச்சல்......
வெளிச்சம் வந்ததும் வெளிய வந்து பார்த்தால் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தது மரமெல்லாம்.எதிரில் ஒரு வீட்டின் மாடியிலிருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை பெயர்த்துக்கொண்டு மூன்று வீடு தாண்டி விழுந்தது.சின்டெக்ஸ் டாங்குகள் பல தெருக்கள் தாண்டி கிடந்தன.பெரிய மரம,சின்ன மரம் பாகுபாடு இல்லாம எல்லா மரங்களும் ரோட்டுல ,சிலது வீட்டு மேல,வண்டிங்க மேல முறிஞ்சு விழுந்தது.மொபைல் போன் சிக்னல்கள் கட் ஆகிடுச்சு.கிட்டத்தட்ட மதியம் பன்னெண்டு மணிக்கப்பறம் தான் காத்து நின்னுச்சு.
சரி கொஞ்சம் வெளிய போய் பாத்துட்டு வரலாம்னு போனா,வரலாறு காணாத அளவு சேதம்,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது ன்னு பேப்பர்ல படிச்சதெல்லாம் நேரில் பாத்தேன்.டூ வீலர்ல கொஞ்ச தூரத்துக்கு மேல போக முடியல ரோட்டுல அவ்வளவு மரம்.காற்றடிச்சி ஓய்ஞ்ச பின் மழை பெய்தது,இதனால மீட்பு பணிகளுக்கு தாமதமானது.கடைகள்ல(ஒண்ணு ரெண்டு தான் திறந்திருந்தது) மெழுகுவர்த்தி,பால்,ரவை,நூடுல்ஸ்'க்கெல்லாம் நல்ல கிராக்கி.மெழுகுவர்த்தி பத்து ரூபாய் வரைக்கும் வித்தது(சின்னது தாங்க சாதாரணநாள்ல ரெண்டு அல்லது மூணு ரூவா தான்).கிட்டத்தட்ட புதுவையே முடங்கியிருந்தது பேருந்து,மின்சாரம்,குடிநீர்,தகவல் தொடர்பு எதுவுமில்லாமல் வெள்ளியன்று துண்டிக்கப்படிருந்தது.
சனி காலை விழுப்புரம்-புதுவை,கடலூர்-புதுவை போக்குவரத்து மட்டும் தொடங்கியது.மின்சாரம் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு தலையெடுக்க தொடங்கியது.அருகிலிருந்த தொழிற்சாலைகள் சில தங்கள் நிறுவனத்திலிருந்து ஜெனேரேட்டர் மூலம் குடிநீர் விநியோகித்தன.ATM கள் எங்கும் இயங்கவில்லை.பல இடங்களில் செல்போன் தவர்களும் விழுந்ததால் சிக்னல் கிடைப்பதில் பிரச்னை மூன்றாவது நாளாக கரண்ட் இல்லாததால் செல்போனில் சார்ஜூம் இல்லை பலருக்கு.
ஞாயிறு-புத்தாண்டு எந்தவித ஆர்ப்பாடமுமில்லாமல் தானேவின் புண்ணியத்தில் கடந்தோடியது.பட்டாசு இல்லை,டி.வி.சிறப்புநிகழ்ச்சி இல்லை,செல்போனில் ஹேப்பி நியூ இயர் இல்லை.
சில இடங்களில் நிவாரணம் வரவில்லை என சிலர் நடத்திய சாலை மறியல்களால் நிவாரணம் இன்னும் சற்று தாமதமானதென்னவோ உண்மை.அதிலும் விழுந்திருக்கும் மின் கம்பங்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது.சேதம் எங்கெங்கே என்று அறிவதற்கே சில நாட்கள் பிடிக்கும்.ஆங்காங்கே சரி செய்து மின்சாரம் தருகிறார்கள் எங்கள் பகுதிக்கு ஐந்து நாட்களுக்கு பிறகு நேற்று இரவு மின்சாரம் வந்தது(இதையே அதியசமாக பார்த்தோம்,பத்து நாளாவது ஆகுமென நினைத்தோம்).இவ்வளவும் போதாதென்று நேற்று அதிகாலை நிலநடுக்கம் வருதென மக்கள் நடுத்தெருவில் வந்து நின்றார்கள்.யார் கிளப்பி விட்டார்களோ?
விரைந்து பணியாற்றிய மின் ஊழியர்களுக்கும்,பொதுத்துறை ஊழியர்களுக்கும்,குறிப்பாக அந்தந்த பகுதி மக்களின் உதவிக்கும்,தொண்டு நிறுவனங்களுக்கும் மிக்க நன்றிகளும் பாராட்டுகளும்.
இந்த தானே புயல் மூலம் இயற்கை தானாக ஏதோ சொல்லிச்செல்வது போல தெரிகிறது.நான் கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தமாதிரி எல்லோரும் தண்ணீரை சொட்டு சொட்டாக பார்த்து பார்த்து செலவு செய்ததையும்,மின்வெட்டே இல்லாத புதுவையில் ஐந்து நாளாக மின்சாரம் இல்லாமல் மக்கள் வாழப்பழகியதையும் பார்க்க முடிந்தது.ஒரு வேளை இயற்கை உணர்த்தி சென்றது இது போன்ற நிகழ்வுகளைதானோ???
புகைப்படங்கள்-http://thegreenogre.blogspot.com,http://kottakuppam.wordpress.com,தினமலர்.
Tweet | ||||||
26 comments:
ஒரு ருத்திர தாண்டவமே ஆடிவிட்டு போய்விட்டது "தானே"
இயற்கையின் விளைச்சலுக்கு நாம் தடைபோட முடியுமா??
நீங்கள் கூறியதுபோல இயற்கை நமக்கு பலவாறு இயைபுகளை
சொல்லிப்போகிறது...
எந்த சூழலிலும் வாழத் தெரிந்தவன் மனிதன்.
All is well.அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
மாலை வந்து அனைவரையும் சந்திக்கிறேன்.
வேதனையான பதிவு.
மீண்டு வர பிரார்த்திக்கிறோம்.
////ஞாயிறு-புத்தாண்டு எந்தவித ஆர்ப்பாடமுமில்லாமல் தானேவின் புண்ணியத்தில் கடந்தோடியது////
வணக்கம் பாஸ் புத்தாண்டே புயலுடன் தான் தொடங்கியிருக்கு....
இயற்கையின் சீற்றங்களை என்ன வென்று சொல்வது விரைவில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பிராத்திக்கின்றேன்
தானே புய்லின் அகோரத்தாண்டவத்தை தங்கள் புகைப்படமும் விளக்கமும்
பத்திரிக்கைகளைவிட மிகச் சரியாக உணரச் செய்து போகிறது
இறுதி வார்த்தைகோடிப்பெறும்
நிச்சயம் அதனுடன் இயைந்து வாழப் பழகச் சொல்லித்தான் போகிறது இயற்கை
எத்தனைபேர் புரிந்து கொள்கிறோம்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
த.ம 4
இனிய வணக்கம் கோகுல்,
இயற்கை அன்னையின் கொடூரங்களுக்கும், சீற்றத்திற்கும் ஓர் எல்லை இல்லையா?
பாவம் எம் சொந்தங்கள். அதுவும் பண்டிகைக் காலத்தில் பொங்கியெழுந்திருக்கிறதே புயல்..
உங்கள் வீடு எல்லாம் எப்படி கோகுல்?
உங்கள் உறவினர்கள், நீங்கள் அனைவரும் நலமா?
சலாம் சகோதரர்,
//விரைந்து பணியாற்றிய மின் ஊழியர்களுக்கும்,பொதுத்துறை ஊழியர்களுக்கும்,குறிப்பாக அந்தந்த பகுதி மக்களின் உதவிக்கும்,தொண்டு நிறுவனங்களுக்கும் மிக்க நன்றிகளும் பாராட்டுகளும்.//
நன்றி நன்றி...
//நான் கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தமாதிரி எல்லோரும் தண்ணீரை சொட்டு சொட்டாக பார்த்து பார்த்து செலவு செய்ததையும்,மின்வெட்டே இல்லாத புதுவையில் ஐந்து நாளாக மின்சாரம் இல்லாமல் மக்கள் வாழப்பழகியதையும் பார்க்க முடிந்தது.ஒரு வேளை இயற்கை உணர்த்தி சென்றது இது போன்ற நிகழ்வுகளைதானோ???//
ஆம். நிச்சயமான உண்மை.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
பாதிக்கப்பட்டவர்கள் நிம்மதி அடைய இறைவனை வேண்டுவோம் கோகுல்! நன்றி!
புகம்பம்னு வேறு கிளப்பி விட்டுடாங்க ..
என்ன தான் கோபமோ நம் மேல் இயற்க்கைக்கு...சகஜ நிலை திரும்ப வேண்டுகிறேன்!
வணக்கம் கோகுல்!என்னவோ புதுவை அரசு கொஞ்சம் பரவாயில்லை போல் தெரிகிறது.விரைந்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்களே?தாமதித்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
எப்பவும் போல புயல் ஆந்திராவுக்கு போகாமல் நம் ஊரில் கரைய கடந்ததால் தான் இதனுடைய உண்மையான பாதிப்பை அறிய முடிகிறது......
பத்திரிக்கைகளில் படித்ததை விட பாதிக்கப்பட்ட நீங்கள் கூறும் பொழுது உண்மையான் பாதிப்பை அறிய முடிகிறது...
ஆமாம்ய்யா சில நேரங்களில் இயற்கை சில பாடங்களையும் சொல்லி தருது உண்மைதான்...!!!
மக்கள் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டிகொள்வோம்.
வணக்கம் கோகில்..! விரைந்து நடவடிக்கை எடுத்த ஊழியர்களை பராட்டுவோம்..
புத்தாண்டு வாழ்த்துக்கள்..!
பாதிப்படைந்த மக்களுக்கு உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வோம்.
என்ன ஒன்னு, எவ்வளவு படிச்சாலும், நம்மை பிடிச்சிருக்கும் சுயநலம் சமூகத்தை சுமூகமாய் வாழ விடாது.
இந்த மாதிரி நேரங்கள்ல மனிதம் வெளிப்படுது...... சீக்கிரமே சகஜ நிலை திரும்பட்டும்!
வணக்கம் கோகுல் அண்ணே, பதிவை வாசிக்கவே பயங்கரமா இருக்கு.. இனியும் இப்படியான இயற்கையின் அழிவுகள் வேண்டாம் நமக்கு.
நாய்நக்ஸ் அங்கு நடப்பதை லைவ்வாக கூறினார். மிகவும் மனதுக்கு என்னவோ போல் இருந்தது.அவருடைய வீடும் சிறிது சேதம் அடைந்ததாக கூறினார்.இப்பொழுது மீண்டு வருகிறார் அவருக்காக உதவுவதற்காக என்னை தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி.கோகுல் புயலின் கோரத்திலிருந்து மீண்டு வர இறைவனை பிராத்திக்கிறேன் பிராத்திக்கிறோம்.
பதிவை வாசிக்கும்போது மனசுக்கு வருத்தமாய்த்தான் இருக்கிறது..இயற்கையிடம் இருந்து மனித இனம் தப்பிப்பது என்னமோ பெரும் சவாலான விசயம் தான்..பதிவுக்கு நன்றி..
மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.நீங்கள் சொல்கிற மாதிரி பல உதவிகள்.இறுதியில் சொல்லியிருப்பது சிந்திக்க வைக்கிறது.
இயல்பு வாழ்க்கை திரும்பிய வரைக்கும் மகிழ்ச்சியே.
கோகுல் உலகத்திலயே நான் அதிகம் பயம்படும் ஆள் இயற்கைதான். இயற்கையின் சீற்றம் தாங்க முடியாது. நல்லதே நடக்க பிரார்த்திப்போம்
ஒரு தலைமுறையே கண்டிராத புயல் ஏற்படுத்திய சேதம் சோகம் தருகிறது! விரைவில் மீண்டுவர பிரார்திப்போம்!
@??????????
Maayan Calender is true.. Belive it or not, surely all will face it..
இயற்கை நம்மால் மாசுபடும்போது சிலசமயம் நமக்கு எதிராக இப்படி சீற்றங்களை வெளிப்படுத்துகிறது. விரைவில் சகஜநிலை திரும்ப பிரார்திப்போம்.
Post a Comment