Tuesday, November 22, 2011

கலைஞர் செய்தது சரியா?



கலைஞர் தமிழுக்கும் தமிழர்க்கும் எவ்வளவோ செய்திருக்கார்(?)நான்

எதைப்பத்தி சொல்லப்போறேன்னு கேக்குறிங்களா?இந்த பதிவுக்கும்

கலைஞருக்கும் சம்பந்தம் இல்ல.அப்புறம் எதுக்கு தலைப்பு இப்படி

வைச்சேன்னு ரொம்ப யோசிக்காதிங்க.

போன வாரம் கலைஞர் தொலைக்காட்சியில ஒரு நிகழ்ச்சி போட்டாங்க.பேரு

தில்,தில்,மனதில்’லாம்.ரொம்ப தில்லான காரியம் செய்பவர்களின் திறமையை

உலகுக்கு கொண்டு செல்வது இந்நிகழ்ச்சியின் நோக்கமாம்.மகிழ்ச்சிதான்.பல

வெளியில் தெரியாத திறமைகளை கொண்டுள்ளவர்கள் அறிமுகமாகிறார்கள்

சந்தோஷம்.


ஆனால் இதில் தில்லான செயல் என சில அபத்தங்களையும் ஒளிபரப்பி

ஊக்குவிப்பதாக எனக்குப்படுகிறது.உதாரணமா நான் பார்த்த போது ஒருத்தர்

பைக் ஒட்டுறாரு.எப்படி?ஹாண்டில் பார்ல ஒக்காந்துகிட்டு,அப்புறம்

இன்னொருத்தரு இவருக்கும் மேல ஓடுற பைக்குல இருவதோ முப்பதோ

வகையான யோகா செய்யுறாரு.


இதுல என்ன தப்பு இருக்கு?அவங்களுக்கு திறமை இருக்கு செய்யுறாங்கன்னு

சொல்றிங்களா?எனக்கொரு சந்தேகம்.எனக்கு தெரிந்தவரை யோகா

சொல்லிதரவங்க,செய்யுரவங்க யாரும் இப்படி செஞ்சு

பாத்ததில்லை.அதுக்குன்னு சில விதிமுறைகள் இருக்கறதாவே

எனக்குப்படுது.



அதெல்லாம் விடுங்க இந்த சாதனையை(?)ஏதாவது ஒரு மைதானத்திலோ

யாருமில்லா சாலையிலோ செய்திருந்தால் பரவாயில்லை.நான்

பார்த்தஇரண்டுமே போக்குவரத்து மிகுந்த சாலையில்

நிகழ்த்தப்பட்டது.அரசு,தனியார் பேருந்துகள்,கார்கள், பக்கமாகவும்,எதிரிலும்

போய் வருகின்றன.காவல்துறையின எப்படி அனுமதித்தார்கள் என

தெரியவில்லை.கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் வண்டி ஒட்டியதாக

காட்டினார்கள்.என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும்

சாலையில் செல்லும் பிற ஓட்டுனர்களுக்கு கவனம் சிதற நிறைய

வாய்ப்பிருக்கு.

அது மட்டுமில்லாம நிகழ்ச்சியை பார்க்கும் சிலரும் இது போல செய்து பார்க்க

வாய்ப்புள்ளது.அவங்க என்னதான் நீங்க இது போல செய்து பாக்காதிங்க இது

ஆபத்தானதுன்னு அறிவிப்பு செஞ்சாலும் சக்திமான் காப்பாத்துவார்னு செத்து

போனவர்கள் எத்தனை பேர் இருக்காங்க இங்கே.இல்ல சிகரெட்

அட்டையில்,மது பாட்டில்ல உயிருக்கு கேடுன்னு போட்டிருக்கறதால யாரும்

அதை தொடுரதில்லையா?

                                                 (ஒழுங்கா ஒட்டுவியா?ஒட்டுவியா?)
                                                 
என்ன நண்பர்களே!திறமையை வெளிக்கொண்டு வரேன் பேர்வழினு சில

தொலைக்காட்சிகள் இது போன்றவற்றை ஒளிபரப்புவது எனக்கு

அபத்தமாகபடுகிறது.இல்ல இது போன்ற சாதனைகள் வெளியே

கொண்டுவரத்தான் வேண்டுமா? உங்க கருத்துகளை சொல்லுங்க.


நட்புடன்,
ம.கோகுல்.

28 comments:

*anishj* said... Reply to comment

திறமை இருந்தால் எதுவும் பண்ணலாம்...! எனக்கு அபத்தமாக படவில்லை...!
நன்றி !!

Unknown said... Reply to comment

தலைப்பு பிச்சுக்குது மாப்பு

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

.பேரு

தில்,தில்,மனதில்’லாம்.ரொம்ப தில்லான காரியம் செய்பவர்களின் திறமையை

உலகுக்கு கொண்டு செல்வது இந்நிகழ்ச்சியின் நோக்கமாம்.//

ஆமா ஆமா, ஊழல் செய்து கொள்ளை அடிச்சவிங்களும் மிக நல்ல திறமை உள்ளவர்கள்தான், திகார்ல போயி பேட்டி எடுத்து டிவி'ல போட சொல்லுங்க பார்ப்போம் கொய்யால....

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

புதுமையா ஏதாவது நிகழ்ச்சி தரோம்ன்னுட்டு இதுமாதிரி தருவது கண்டிக்க கூடியதுதான்...

இதை பார்க்கும் அடுத்த தலைமுறை கண்டிபபாக பாதிக்கும்...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

இதை விட தில்லான விஷயங்களை கலைஞர் குடும்பம் செய்து வருகிறது அதை ஒளிப்பரப்பு செயய் முடியுமா ?

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

லூசு பசங்க

Mathuran said... Reply to comment

திறமை இருந்தால் எதுவும் செய்யலாம் என்றில்லை. அது அதுக்கென்று ஒரு வரைமுறை கட்டுப்பாடு இருக்கிறது. அவற்றை மீறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்

arasan said... Reply to comment

அடுத்தவருக்கு தொந்தரவு செய்யாமல் பண்ணினால் வாழ்த்துக்கள் சொல்லலாம் .. ஆனால் இப்படி பண்ணினால் அது கண்டிக்க கூடியதே

K.s.s.Rajh said... Reply to comment

////அது மட்டுமில்லாம நிகழ்ச்சியை பார்க்கும் சிலரும் இது போல செய்து பார்க்க

வாய்ப்புள்ளது.அவங்க என்னதான் நீங்க இது போல செய்து பாக்காதிங்க இது

ஆபத்தானதுன்னு அறிவிப்பு செஞ்சாலும் சக்திமான் காப்பாத்துவார்னு செத்து

போனவர்கள் எத்தனை பேர் இருக்காங்க இங்கே.இல்ல சிகரெட்

அட்டையில்,மது பாட்டில்ல உயிருக்கு கேடுன்னு போட்டிருக்கறதால யாரும்

அதை தொடுரதில்லையா?
////

சரியாகச்சொன்னீங்க பாஸ் இதனால் பல பிரச்சனைகள் வரும் டீ.வி நிகழ்ச்சிக்கு என்றபடியால் தனியான மைதானத்தில் செய்யாலாம்

Yaathoramani.blogspot.com said... Reply to comment

நீங்கள் குறிப்பிடுவது சரி
சாகசம் எனில் பதுகாப்பான இடங்களில் செய்யலாம்
பொது இடங்களில் வேண்டாமே
த.ம 5

அம்பாளடியாள் said... Reply to comment

அட ஏன் சகோ கோவப் படுகுறீங்க?..இப்ப பாருங்க நான்
அவங்கள என்னமா வாழ்த்தப் போறன் எண்டு "லூசுப் பசங்க"
போதுமா?...வாழ்த்துக்கள் சகோ இது அதுமாதிரி இல்ல .உங்க
ஆக்கம் நல்லா இருக்கு ஓக்கேவா....மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

மகேந்திரன் said... Reply to comment

சாகசம் என்பது
சரித்திரம் நிற்கவேண்டும்,
இப்படி சந்திக்கு வரக்கூடாது...
அடுத்தவரை தொந்தரவு செய்யக்கூடாது..

ராஜா MVS said... Reply to comment

இந்த நிகழ்ச்சி பார்பவர்களின் யார் மனதிலும் ஊக்கம் ஏற்படாது. மாறாக ஒரு வித பயத்தைதான் ஏற்படுத்தும். இதற்கு பெயர் திறமை அல்ல... இதன் பெயர் வேறு...
அதனால்தான் இந்த நிகழ்ச்சியை தவிர்த்து வெகு நாட்களாகிவிட்டது...

'திறமை' என்பது நாம் செய்கின்ற செயல்களைப் பார்ப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கவேண்டும். அதேபோல் பார்ப்பவர்கள் அவனை/அவளை ஊக்கப் படுத்த வேண்டும். அதற்கு பெயர்தான் திறமை...

தங்களின் சிந்தனை மிகச் சரியானது... நண்பா...

சசிகுமார் said... Reply to comment

உண்மையான திறமை வெளிக்கொனர்ந்தால் நன்றே...

SURYAJEEVA said... Reply to comment

தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு சென்சர் போர்டு வரும் என்று எதிர்பார்த்து இருக்கிறேன்... இந்த மாதிரி நிறைய அபத்தமான நிகழ்ச்சிகள் வருகிறது தோழர்

M.R said... Reply to comment

மற்றவர்களுக்கு தொந்தரவு தராதவண்ணம் இருக்க வேண்டும்

rajamelaiyur said... Reply to comment

Rating காக என்ன வேண்டுமானாலும் செய்வானுங்க ..
அன்புடன்
ராஜா

நெருப்பு நரியுடன்(FIREBOX) சில விளையாட்டுகள்.

சென்னை பித்தன் said... Reply to comment

உங்கள் கருத்துச் சரிதான் கோகுல்.

Anonymous said... Reply to comment

திரும்பவும் சொல்றேன், ஆக்ஸிடன்ட்ல பல தடவை பாதிக்க பட்டவன் என்கிற முறையில் உங்கள் ஒவ்வொரு விழிப்புணர்வு பதிவும் முக்கியமான பதிவுகள்.....தொடர்க உங்கள் சேவை...

பிரணவன் said... Reply to comment

எதிர்பாராமல் நடக்கும் சில விசயங்கள் நம் வாழ்க்கையை பெரிதும் மாற்றிவிடலாம். . . எதிலும் கவணம் தேவை. . .

Anonymous said... Reply to comment

உங்கள் கருத்து சரி கோகுல்...

எங்கங்க நேரம் இருக்கு டிவி பார்க்க? குடுத்து வச்ச ஆளு நீங்க... -:)

செங்கோவி said... Reply to comment

தனி மைதானத்தில் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டுப் போகட்டும்...பொது ரோட்டில் செய்வது கொஞ்சம் ஓவர் தான்...

Unknown said... Reply to comment

@ரெவெரி
I agree with you

சக்தி கல்வி மையம் said... Reply to comment

kandippa venaam gokul, unnoda karuththuthaan sari...

Unknown said... Reply to comment

அவர்கள் எல்லா (தில் தில் மனதில்)நிகழ்ச்சியும் நடுரோட்டில்தான் நிகழ்த்துகிறார்கள்! நான் ஒருமுறை பார்த்த போது விபத்து கூட நடந்தது (பாவம்! அவர் என்ன ஆனார் என்று
தெரியவில்லை)கட்டாயமாக கன்டிக்கதக்கது...

மாய உலகம் said... Reply to comment

நீங்கள் சொன்னது போல் செய்ய வேண்டிய சாதனையை ... அதற்கென தனி இடங்களில் செய்தால் நல்லது... பொது இடங்களில் இது போன்ற நிகச்சி அனுமதியை தடை செய்தால் நல்லது.

FARHAN said... Reply to comment

திறமைய இப்பிடித்தான் வெளிக்காட்ட வேண்டுமா நீங்கள் குறிப்பிட்டது சரியே

Unknown said... Reply to comment

காளை பிடிக்கும் போட்டிகள், காளைகளின் விருப்பத்தைக் கேட்டா நடத்தப் படுகின்றன? யார் யாருக்கோ எவ்வளவோ விதத்தில் “லாபம்” இருப்பதால் கலை, பண்பாடு, வீரம் என்பவற்றின் பெயரில் பலரின் உயிரோடு விளையாடும் அரசியல் கூத்தாகத்தானே தொடர்கின்றது. தன்னை முன்னிலைப் படுத்துவதே இவற்றின் நோக்கம் என்றே கொள்ளலாம். ஊரின் புறப்பகுதியில் சாதனைகளுக்கென்றே தனி இடம் ஒதுக்கலாம். உயிர் போனாலும் பரவாயில்லை சாதித்துக் காட்டுவேன் என்ற துணிச்சல்காரர்களுக்கு நாம் ஏன் இடையூறு செய்ய வேண்டும்?