வணக்கம் நண்பர்களே!ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு உங்களையெல்லாம் சந்திப்பதில்
மகிழ்ச்சி!நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்ள நாகர்கோவில் வரைசென்று
வந்தேன்.இந்த பயணத்தில் எனது சில “கனிவான” அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
விழுப்புரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு(எரனியல்) அனந்தபுரி எக்ஸ்ப்ரஸ்சில் கல்யாண
மாப்பிள்ளையே முன்பதிவு செய்து கொடுத்து நீங்க வந்தா மட்டும் போதும் என அன்பு
காட்டியிருந்ததால் தூரத்தை காரணம் காட்டி மறுக்க முடியவில்லை.அது மட்டுமில்லாம
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் திண்டுக்கல்லை தாண்டியதில்லை.அதனால ஓசியில ஊர்
சுத்தி பாத்துடலாம்னு கிளம்பிட்டேன்.
சென்னையில் இருந்து வரும் நண்பர்களிடம் டிக்கெட் இருந்தது.பிளாட்பாரம் டிக்கெட்
மட்டும் வாங்கிக்கிட்டு,வடிவேல் கடைய எப்ப சார் தொறப்பீங்க கேக்குற மாதிரி.ட்ரெயின்
எப்ப சார் வரும்னு கவுண்டரில் இருக்கவங்கக்கிட்ட கேட்டேன்.(கிளம்புகையில் டி.வி.யில்
விழுப்புரம் வழியே வரும் ரயில்கள் ஒரு மணிநேரம் தாமதமாகும் என செய்தி
ஓடியது).வரும் போது அனவுன்ஸ் பண்ணுவோம்னாங்க(கனிவு).ரயிலில் வரும்
நண்பர்களுக்கு போன் செய்து தாமதம் இல்லையென தெரிந்துகொண்டேன்.காத்திருக்கும்
எல்லோருக்கும் யாராவது ஒருவர் ரயிலில் வருவார்களா?.
ரயில் வந்தது.அவர்கள் சொன்ன அனவுன்ஸ் செய்தார்கள்.எப்படி?பயணிகளின் கனிவான
கவனத்திற்கு திருவனந்தபுரத்தில் இருந்து விழுப்புரம்,தாம்பரம் வழியாக சென்னை வரை
செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் தடம் ரெண்டில் வந்து நிற்கும்.அடங்கோ!சென்னையில்
இருந்து வரும் ரயிலை சென்னைக்கு போகும் ரயிலாக கனிவுடன்
அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.கிட்டத்தட்ட பதினைந்து முறை.ஊழியர்கள் யாருக்கும் காது
கேட்காதோ?அல்ல ஏதோ அறிவிச்சா போதும் என்கிற அலட்சியமா?என்னதான் பதிவு
செய்யப்பட்ட கணினியின் குரலாக இருந்தாலும் ஒரு முறை கேட்டவுடனாவது
மாற்றியிருக்க வேண்டாமா?ரயில் கிளம்பும் வரை மாற்றவேயில்லை.பலர் சந்தேகத்துடன்
கடைசி நேர பரபரப்பில் அவதிப்பட்டார்கள்.(இதுதானா சார் உங்க அனவுன்சு என மனசுக்குள்
அனவுன்சு பண்ணுவோம் என சொன்னவரை கேட்டுக்கொண்டேன்)
இன்னொரு கனிவு திருநெல்வேலி சந்திப்பில்.கால்மணி நேரம் அங்கே ரயில்
நின்றது.மற்றொரு பாசஞ்சர் அங்கிருந்து தூத்துக்குடிக்கு கிளம்பியது.ரயில் கிளம்பி பத்து
நிமிடங்களாகியும்,இன்னும் சற்று நேரத்தில் தூத்துக்குடி பாசஞ்சர் கிளம்பும் என கனிவாக
அறிவித்துக்கொண்டிருந்தார்கள்(யாருமில்லா கடையில் டீ).
திரும்ப வருகையில் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்ல்
பயணம்.ரயில் நிலையத்தில் ரயில் பிளாட்பாரத்தில் நிற்கும் கோச் எண் காட்டப்படும்
டிஸ்ப்ளே வேலைசெய்யவில்லை.ஒருவர் போய் கேட்டார்.வேளை செய்யவில்லையா என
அதுக்கு ஹெல்ப் கவுண்டரில் இருந்தவர் போடவில்லை என்றார்.பக்கத்திலிருந்த ஊழியர்
ஒருவர் என்னவாம்?என்றார்.டிஸ்ப்ளே வேலை செய்யவில்லையாம் என்றார்.கேட்டவரது
கனிவான பதில் ரொம்ப முக்கியம்..ஆமாங்க ரொம்ப முக்கியம் தான்னு
சொன்னதுக்கப்புறம் முனகிக்கிட்டே ஆன் பண்ணாங்க.முக்கியமில்லேன்னா எதுக்குங்க
பணத்தை வீணாக்கி செலவு பண்ணி வைக்கணும்.ஒரு பட்டன தட்ட என்னா ஒரு
அலட்சியம்?
இரவு நேரங்களில் பல ரயில் நிறுத்தங்களில் ரயில் வந்து புறப்படும் அறிப்விப்புகள்
செய்யப்படவில்லை.(எல்லா நிறுத்தங்களிலும் அல்ல).இதனால் தூங்கும் பயணிகள்
ஸ்டேஷனை தவறவிட வாய்ப்பு அதிகம்.நான் வந்திறங்கிய விழுப்புரம் சந்திப்பிலும் ரயில்
வந்து கிளம்பிய வரை எந்த அறிவிப்பும் இல்லை.(நேரம் காலை நான்கு மணி)
எங்கே இருக்கிறது கனிவு?வெறும் அறிவிப்பில் மட்டும் தானா?
பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த போவதாக பேச்சு அடிபடுகிறது போல தெரிகிறது.ம்ம்ம்.
Tweet | ||||||
33 comments:
விழுப்புரம் சந்திப்பிலும் ரயில்
வந்து கிளம்பிய வரை எந்த அறிவிப்பும் இல்லை.(நேரம் காலை நான்கு மணி)//
ரயில்வேயின் அலட்சியத்திற்கு இன்னும் எவளவோ சொல்லிட்டே போகலாம், ஆமா நாகர்கோவில் போன நீங்க கே ஆர் விஜயனுக்கு சொல்லி இருக்கலாம்ல...ஓடி வந்துருப்பாரே...!!!
@MANO நாஞ்சில் மனோ நாகர்கோவிலில் இருந்து கொஞ்சம் தூரம் திங்கள் நகரை தாண்டி ஒரு கிராமத்துக்கு போனேன்.கூட நண்பர்களும் வந்திருந்ததால் யாருக்கும் சொல்ல முடியவில்லை.
இப்படி உசுபேத்தி, உசுபேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிடாங்க.பீ கேர் புல் என்ன சொன்னேன்.
வணக்கம் நண்பரே..
ரயில் பயணம் பாடாய் படுத்திவிட்டதுபோல எனக்கும் கூட இந்த அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு..
உலகிலேயே அதிக பணியாளர்கள் பணிபுரியும் ரயில்வேயில் இந்த அனவுஸ்மெண்ட் அதிக சிரமம் ஏற்படுத்துவது என்பது உண்மைதான்
வயதானவர்களை உடன் அழைத்துச் சென்று இவர்களால் படும்பாடு சொல்லிமாளாது..
"கனி" ன்னாலே ஒரு கனிவுதான்யா.... பொறுத்துக்க....
நம்ம தளத்தில்:
பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS - நமது தளங்களில் வைப்பது எப்படி?
கனிவு என்று செயலிலும் வருமோ தெரியவில்லை
ஆதங்கத்தை அருமையாகச் சொல்லிப் போகிறீர்கள்
த.ம 3
ரயில் பயணம் சுகமானதல்ல..! என் அனுபவத்திலும், நீங்கள் தனியாய் பயணம் செய்து உள்ளீர்கள்,
குடும்பத்துடன் போகின்றவர்கள் நிலைமை.....?!
ரயில் பயணமே எப்போது கடுப்புதான்...! அதுவும் ஆளில்லாத ஸ்டேசன்லயும் அரைமணி நேரம் நிற்கும் அனந்தபுரி எக்ஸ்பிரஸில் பயணம் என்றால் சொல்லவே வேண்டாம்...!
நல்ல பதிவு !!
கனிவா சொல்றேன்...நல்லதொரு ஆதங்க பதிவு கோகுல்...
எங்கே இருக்கிறது கனிவு?வெறும் அறிவிப்பில் மட்டும் தானா?
//
As an esteemed Citizen of India..அதுலயாவது இருக்கேன்னு கனிவா குந்திக்கணும்...-:)
ரயில்பயணத்தின் அனுபவங்களை சுகமாக கனிவாக பதிவு செய்துள்ளீர்கள் இரயில் வேயில் இருப்போர் இதை கவனம் எடுக்காமல் மக்களை துன்பத்தில் ஆழ்த்துவது சரியான முகாமைத்துவமும் மக்கள் நலனில் இல்லாத கவனயீனமுமே காரணம்!
தமிழகத்தின் ரயில் அனுபவம் இன்னும் கிடைக்கவில்லை பார்ப்போம் அடுத்த தடவை!
நானும் இதை அனுபவித்திருக்கிறேன் நண்பரே...
இவர்களெல்லாம் கனிவிருக்க காயை கவர்பவர்கள்....
நான் ரயிலில் செல்லும் பொது இதையெல்லாம் ஒருபக்கம் பார்த்தாலும் மறுபக்கம் நம்ம தேன் மாவட்டத்தோட பசுமையை கண்டு ரசிச்சுகிட்டே இருப்பேன்...
ரயில் பயணம் மிகவும் மனம் கொதிக்கும் பயணம் என்பதை அருமையா சொல்லிடீங்க நண்பரே...
வணக்கம் மாப்பிள!
இப்படியான அசெளகரியங்கள் இருந்தாலும் மகேந்திரன் சொன்னதைப்போல் தென் மாவட்டங்களின் அழகே தனி..!! எனக்கும் பயணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது இந்திய இரயில்களில்....!!!
மாப்ள அவுன்ஸ்(!) போட்டு இருப்பாய்ங்களோ!
பாஸ் உங்கள் பயண அனுபவத்தில் பல விடயங்களை அலசியிருக்கிறீங்க.....
பதிவர்கள் எங்க சென்றாலும் எதாவது ஒன்றை கவனித்துக்கொண்டுதான் இருப்போம் அதைனை பதிவாக்கிவிடுவோம்...உங்கள் பதிவுகளில் நான் அதிகம் ரசிப்பவை சமூகம் மீதான உங்கள் அக்கறை வாழ்த்துக்கள் பாஸ்
கனி என்றதும் கனிமொழின்னு நினைத்தேன்
இன்று என் வலையில்
அஜித் : THE REAL HERO
தங்கள் கனி வான கவனத்திற்று!
தங்கள் பதிவுமிகவும் நன்று!
புலவர் சா இராமாநுசம்
கனிவான பதிவு..
ஹா ஹா ஹா
நீங்க சொல்றதை போல இன்னும் ஏராளம் இருக்கு சொல்ல...
கனியிருப்பக் காய் கவர்வானேன் என்று கனிவாகச் சொல்லி விட்டார்கள்.பின் நடப்பதெல்லாம் காயாயிருப்பதைப் பற்றி அவர்களுக்கென்ன கவலை?
நன்று.
கோகுல்,
ரயில்வே துறை நட்டத்துல இயங்குதுன்ற கவலையோ என்னவோ. மப்புல தான் மக்கா டூயூட்டி பாக்குறாங்க.
ஒவ்வொரு ஊழியரும் தன் வேலையை சரிவர பார்க்க வேண்டும் என்ற (தொழில்பக்தி)அக்கரை இருந்தாலே எல்லாம் சரிவர நடக்கும்... நமக்கென்ன அவன் செய்யட்டுமே என்ற மனப்போக்கு தான் பல தவறுதலுக்கு மூலக் காரணம்...
தொடர்வண்டிப் பயணங்களில் நிறைய அனுபவிக்களாம்... நிறைய புதுமையான விஷயங்கள் கிடைக்கும்... நண்பா...
சிறந்த பயணம் இப்போ கொஞ்சம் சிரமமான பயணம் தான் ...
அனுபவப் பயணத்தை எண்களின் கனிவான பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி கோகுல்.
நல்ல பதிவு.
வாழ்த்துகள்.
எங்கே இருக்கிறது கனிவு?வெறும் அறிவிப்பில் மட்டும் தானா?
பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த போவதாக பேச்சு அடிபடுகிறது போல தெரிகிறது.ம்ம்ம்.
கனிவான பகிர்வு!
மாப்ள தலைப்பு செம...
கனிவான பதிவுதான்..
ஒரே ஒரு முறை முன்பதிவு செய்யாத வகுப்பில் சென்று பாருங்கள்... அவல நிலையாய் இருக்கும்... இதில் ரயில்வே நிர்வாகத்திற்கு பெரும் வருமானமே இந்த முன் பதிவு செய்யாத சீட்டுக்கள் தான்
நியாயமான ஆதங்கம் நண்பரே
கனிவான பதிவு
அன்பின் கோகுலின் கனிவான கவனத்திற்கு - விழுப்புரம் புகை வண்டி நிலையம் தகவல்கள் கூறுவதற்குப் பெயர் போனது - என்ன செய்வது - இவர்கள் எல்லாம் திருந்தவே மாட்டார்கள். நல்லதொரு பதிவு - நட்புடன் சீனா
Post a Comment