Saturday, November 5, 2011

வெந்த புண்-வேல் குட் காம்பினேஷன்





Jபெட்ரோல்விலைஏற்றதுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை-
மத்தியஅமைச்சர்!

ம்.வாய் வரைக்கும் வந்துடுச்சு!அப்படியே இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும்,எங்களுக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்லிடுங்க



Jஎல்லாருக்கும் ஒரு இட்லி நுழயுற அளவுக்கு தான் வாய் இருக்கு--கவுண்டமணி; என்ன பண்றது சார்,கேக்க வேண்டியவங்களுக்கு கேக்க மாட்டேங்குதே?


Jகாமராஜர் இறந்த போது அவரது வீட்டில் இருந்த பணம் மொத்தம் 67 ரூபாய்! (இன்றைய அரசியல்வாதி கமென்ட்-கிங் மேக்கரா இருந்து என்ன பண்றது அரசியல்ல மேக்’கிங்’ பண்ண தெரியாம போச்சே அவருக்கு)


Jமின்வெட்டு பற்றி சன் நியுஸ்ல சொல்றாங்க! ஆட்சியும் செய்தி வரும் .நிலைமை .சானல்களும் தான் மாறுகின்றன??????????


Jஅந்த பிராண்ட் வேஷ்டி அணிந்தால் கனவுகள் மெய்ப்படுமாம் .ஐயா அப்துல் கலாம் அவர்களே


Jவயசுஅதிகமானபொண்ணசெலக்ட் பண்றதுதப்பே இல்ல,எல்லாமூவும்அவளோடதாஇருக்கும்னு கணேஷ்அங்கிள்(விண்ணைத்தாண்டி வருவாயா) சொன்னதுசரிதான் #எங்கேயும்எப்போதும் ஜெய் அஞ்சலி லவ்!




Jபுதுத்துணி போடும் போது சிலர் ஏதோ நம்பிக்கைக்காக மஞ்சள் வைப்பார்கள்.சிலர் புதுத்துணி என காட்டுவதறகு வைக்கிறார்கள்!நம்பிக்கை இல்லாவிடிலும்!



Jபஞ்சர் கடையில் கதவிலோ ஏதாவது பழைய டயரிலோ கடை ஓனர் செல் நெ.. எழுதுவதின் நோக்கம் நிச்சயம் விளம்பரம் அல்ல!


Jஇங்கே ஒரு தியேட்டர்ல எந்த அறிவாலும் வெல்லமுடியாத ஆயுதம்னு 
பேனர் அடிசுருக்காங்க.எங்கயாவது எந்த ஆயுதத்தாலும் வெல்ல முடியாத 
அறிவுன்னு இருக்கா?


Jஎப்டிடா இங்கிருந்து மூணாவது தெருவில இருக்க பொண்ண சைட் அடிக்கற?தேங்க்ஸ் டூ வாசன் ஐ கேர்#நாங்க இருக்கோம்




Jபெட்ரோல் விலையை ஏற்றியதன் மூலம் தமிழக மக்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிவிட்டது மத்திய அரசு!-அம்மா!
நீங்க புண்ணாக்குங்க அவங்க வேல் பாய்ச்சட்டும்!#குட் காம்பினேஷன்


37 comments:

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

முதல் பஞ்சர்.....

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

என்னதான் மக்கள் போராடினாலும் அதை சட்டையே செய்யமாட்டேங்குது காங்கிரஸ் அரசு......

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

நாடே எரியும்போது பிடில் வாசித்தவன் ஊரிலிருந்து வந்தவர்களுக்கு மக்களைப் பற்றி என்ன நொன்னை அக்கறை இருக்கப்போகுது...!!!

விச்சு said... Reply to comment

நச் கமெண்ட்...

SURYAJEEVA said... Reply to comment

அந்த கடைசி படத்த எங்க புடிச்சீங்க, சூப்பர் சூப்பர் சூப்பர்

Anonymous said... Reply to comment

புண்ணாக்குங்க...//

ரொம்ப நேரமா புண்ணாக்கு ன்னு வாசிச்சேன்..புரியாம....அது தான் அவங்களுக்கு பொருத்தம் ..அதனால் போல...
எல்லாமே நல்லாயிருந்தது கோகுல்...

ராஜா MVS said... Reply to comment

எல்லாம் சூப்பர்... நண்பா...

கோகுல் said... Reply to comment

@MANO நாஞ்சில் மனோ
மக்கா ரொம்ப கடுப்புல இருப்பிங்க போல?

கோகுல் said... Reply to comment

விச்சு said...
நச் கமெண்ட்...
//
நன்றி நண்பா!
suryajeeva said...
அந்த கடைசி படத்த எங்க புடிச்சீங்க, சூப்பர் சூப்பர் சூப்பர்
//
எல்லாம் கூகுளாண்டவர் அருளியது தான்!

கோகுல் said... Reply to comment

ரெவெரி said...
புண்ணாக்குங்க...//

ரொம்ப நேரமா புண்ணாக்கு ன்னு வாசிச்சேன்..புரியாம....அது தான் அவங்களுக்கு பொருத்தம் ..அதனால் போல...
எல்லாமே நல்லாயிருந்தது கோகுல்...
//

எனக்கும் இப்பத்தாங்க புரியுது விழுந்து விழுந்து சிரிச்சேன்!

கோகுல் said... Reply to comment

ராஜா MVS said...
எல்லாம் சூப்பர்... நண்பா...
//
வாங்க நண்பரே நன்றி!

செவிலியன் said... Reply to comment

கலக்கல் குசும்பு கமெண்ட்ஸ்....அதுலேயும் குட் காம்பினேஷன் குட்.......

Mathuran said... Reply to comment

ஹா ஹா அரசியல்ல இருந்து சினிமா வரைக்கும் எல்லோருக்குமே சவுக்கடி

நிரூபன் said... Reply to comment

வணக்கம் மச்சி,
நலமா?

கோகுல் டுவிட்ஸ் வழமை போலவே அசத்தலாக இருக்கிறது,

சமகால நாட்டு நடப்பு, பொருளாதார விடயங்களைத் தாங்கி வந்திருப்பது இன்னும் சிறப்பாக இருக்கிறது.

சம்பத்குமார் said... Reply to comment

//காமராஜர் இறந்த போது அவரது வீட்டில் இருந்த பணம் மொத்தம் 67 ரூபாய்! (இன்றைய அரசியல்வாதி கமென்ட்-கிங் மேக்கரா இருந்து என்ன பண்றது அரசியல்ல மேக்’கிங்’ பண்ண தெரியாம போச்சே அவருக்கு) //


கலக்கல் நண்பரே..

கடைசிபடம் அத்தனையையும் உணர்த்திவிட்டது..

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

இன்னும் பெட்ரோல் விலை ஏறும். அப்பவும் பதிவு போடலாம். அதான் நம்மளால செய்ய முடியும்.

நம்ம தளத்தில்:
மக்கு பசங்களுக்கும் இது கண்டிப்பா புரியும். பார்க்க அனிமேஷன் படங்கள்

rajamelaiyur said... Reply to comment

Super . . Last photo chance ila

Unknown said... Reply to comment

கோகுல் Howdy...
பெட்ரோல் விலை உயர்வு கவலை கொள்ள வைக்கின்றது சைக்கிள் ஒன்னு வாங்கணும்

//நீங்க புண்ணாக்குங்க அவங்க வேல் பாய்ச்சட்டும்!#குட் காம்பினேஷன்//


வேல் பாய்ச்சல ஆசிட்ட ஊத்துறாங்க...

*anishj* said... Reply to comment

எல்லாமே சூப்பர் தலிவா...! யாரையோ புண்ணாக்கு nu சொல்ற மாதிரி இருக்கு...! இம்சை அரசன் மாதிரி புடிச்சு உள்ள போட்டுட போறாங்க.. :P

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

அத்தனையும் சூபு்பர்...

நடப்பு நிகழ்ச்சிகளை அப்படியே நகைச்சுவையில் சொல்வது நல்ல யுத்தி...


கலக்கு மச்சி....

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

அருண் ஐஸ்கிரிம் போல ஒவ்வொன்னும் ஒரு டைப்புடா..!

settaikkaran said... Reply to comment

எல்லாமே அமர்க்களம்!

K.s.s.Rajh said... Reply to comment

எப்படி பாஸ் ரூம் போட்டு யோசிப்பீங்களோ...அனைத்தும் அருமை

மகேந்திரன் said... Reply to comment

கமெண்ட்ஸ் ஒவ்வொன்றிலும் உங்களின் முத்திரை தெரிகிறது நண்பரே,,,,
அப்படியே நம்மவர்களின் முகத்திரையும் கிழிகிறது....

அம்பாளடியாள் said... Reply to comment

Jபெட்ரோல்விலைஏற்றதுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை-
மத்தியஅமைச்சர்!

ம்.வாய் வரைக்கும் வந்துடுச்சு!அப்படியே இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும்,எங்களுக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்லிடுங்க

அடடா அருமையான யோசனை வாழ்த்துக்கள் சகோ சிரிக்க சிந்திக்க வைத்த பகிர்வுக்கு .....

Anonymous said... Reply to comment

கலக்கல் மச்சி...வாசன் ஐ. கேர்... நாங்க இருக்கோம்..

Anonymous said... Reply to comment

அப்புறம் புது துணிக்கு மஞ்ச வக்குரவனுங்கள நம்ம ஊர்ல மஞ்ச மாக்கான்ன்னு சொல்வாங்க.... அது என்ன சமஞ்சா இருக்கு? மஞ்ச வைக்க?

shanmugavel said... Reply to comment

அத்தனையும் அருமை.

சீனுவாசன்.கு said... Reply to comment

நீங்க புண்ணாக்கு வதில் வல்லவருங்கோ!

தனிமரம் said... Reply to comment

காமராஜர் நாட்டுக்காக வாழ்ந்தார் கருணாநிதி குடும்பத்துக்காகவாழ்ந்தார் அதுதான் 67 ரூபாய் வித்தியாசம் சூப்பர் ஜோசனை சகோ!

தனிமரம் said... Reply to comment

காமராஜர் நாட்டுக்காக வாழ்ந்தார் கருணாநிதி குடும்பத்துக்காகவாழ்ந்தார் அதுதான் 67 ரூபாய் வித்தியாசம் சூப்பர் ஜோசனை சகோ!

தனிமரம் said... Reply to comment

நேரமாற்றம் தொடர்ந்து கருத்துப் போட முடியவில்லை நண்பா!

சுதா SJ said... Reply to comment

கமெண்ட்ஸ் நெத்தியடிகள்... ஆனாலும் இதெல்லாம் சம்மந்தப்பட்டவர்களுக்கு உறைக்காது பாஸ்.

கூடல் பாலா said... Reply to comment

\\\எப்டிடா இங்கிருந்து மூணாவது தெருவில இருக்க பொண்ண சைட் அடிக்கற?தேங்க்ஸ் டூ வாசன் ஐ கேர்#நாங்க இருக்கோம்\\\ இதுக்கெல்லாம்கூட உதவுராங்களா..பரவால்லியே !

Unknown said... Reply to comment

ஒவ்வொன்றும் முத்தே
உண்மைகளின் சத்தே
நவ்வென்று சிலவும்
நயம்பட சிலவும்
செவ்வென்றே தந்தீர்
சிந்தனையைத் தந்தீர்
இவ்வென்று சொல்ல
இணையேது மில்ல!

நன்றி!

புலவர் சா இராமாநுசம்

சிவகுமாரன் said... Reply to comment

அம்மாவை புண்ணாக்குன்னு சொன்ன கோகுலை வன்மையாய் கண்டிக்கறேன்.
வீட்டு வாசலுக்கு ஆட்டோ வந்திருக்கான்னு பாருங்க .

Anonymous said... Reply to comment

கடைசி ஜோக் செம கோகுல். பெட்ரோல் விலை ஏற்றத்துக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லைன்னு சொன்னவர் வாய்ல பழுக்க காச்சுன கம்பியால சூடு போடணும்.