ஒரு வாரத்துக்கு முன்னால கூகுள் பஸ்ஸ (BUZZ)மூடப்போறதா தகவல் வந்தது அந்த நேரத்துல twitter-ள் உலாவிக்கிட்டு இருந்தப்ப iftwitterclosed அப்படின்னு # போட்டு ட்விடிக்கிட்டு இருந்தாங்க.அப்பா அங்கே வந்த நிருபன் கூட அடப்பாவிகளா பிக்குல தான் ரணகளமா ஓடிட்டு இருக்குன்னு இங்கே வந்தா இங்கே அதுக்கு மேல க்ளோஸ் பண்ற அளவுக்கு போட்டு தாக்குராங்களே என்று நொந்தார்!
அந்த நேரத்தில் என் கபாலத்தில் உதித்தது தான் இந்த எண்ணம் .IF BLOGGER CLOSED.என்ன நண்பர்களே அதிர்ச்சியா இருக்கா?சும்மா ஒரு கற்பனை என்ன நடக்கும் பாக்கலாம் வாங்க!
.
J எதை எழுதறது,என்னாத்த எழுதறதுன்னு மண்டைய போட்டு உடைச்சுக்க வேணாம்.அதே மாதிரி எதை வேணும்னாலும் எழுத தோணாது!
Jபதிவைப்போட்டுட்டு கமெண்ட்ஸ் வந்ததான்னு சும்மா சும்மா பேஜ்-refresh பண்ண தேவையில்ல.
Jஎந்தெந்த திரட்டிகள்ள இணைக்கலாம் எதெதுல இணைக்கக்கூடாதுன்னு ரூம் போட்டு யோசிக்க அவசியம் இருக்காது!
Jயாராரேல்லாம் மொய் வெச்சிருக்காங்கன்னு பாத்து பாத்து போய் மறு மொய் வைக்க வேணாம்!
Jவீட்டுல இருக்கவங்க அப்படி என்னாதான் அந்த கம்பியூட்டர்ல ஒக்காந்து நோண்டிக்கிட்டு இருக்கியோன்னு கயிவி கயிவி ஊத்துறது நின்னுடும்!
Jநாம ஏதோ எழுதப்போய்நீ எப்படி அப்படி எழுதலாம்னு யார்க்கிட்டையும் வாங்கிக்கட்டிக்க தேவை இருக்காது!
Jஇதப்பத்தி எழுதுனா அவங்க கோச்சுப்பாங்களோ?அதப்பத்தி எழுதுனா இவுங்க கோச்சுப்பாங்களோ அப்படின்னு எல்லாம் நினைக்க தேவையில்லை!
Jராத்திரி பேய் வரவரைக்கும் உக்காந்து கமென்ட் போடத்தேவையில்லை!
Jடாகுடர் படங்களுக்கு விளம்பரம் கொறையும்!
Jஅரசியல் கூத்துக்களை கண்டும் காணாம இருக்க வேண்டிய நிலைமை வரும். ஒருத்தர் காத பொத்திக்கிட்டு இருக்கற மாதிரி.
Jஆபீசுல பிளாக் பாக்குறது கொறைஞ்சு கொஞ்சம் வேலை நடக்கும்.
Jகையில மொபைல வைச்சுக்கிட்டு post super-அப்படின்னு சொல்லத்தேவையில்ல!
Jநம் எண்ணங்களை,சிந்தனைகளை தூண்டும் நட்புகள்,தொலைதூர,கடல்கடந்த நேசமிகு உறவுகள் கிடைக்காமல் போகும்!
Jயாரோ கொடுக்குற ரேங்கிங் க்கு நட்புகளுக்குள் பனிப்போர் தேவை இருக்காது
Jநேர்ப்பதிவு,எதிர்ப்பதிவு,தொடர்ப்பதிவு,சைடு பதிவுக்கேல்லாம் வாய்ப்பிருக்காது!
Jகலைஞர்,அம்மா,ராசா,கனிமொழி இவங்களைப்பத்தின நையாண்டிகள் கொறையும்.
Jஹன்சிகாவுக்கு © யாருன்னு சண்டை வராது.
Jஒரு பதிவர் சந்திப்பு அதுக்கு நாலைஞ்சு பதிவு போடத்தேவையில்ல.
JLast but not least இந்த பதிவே போட்டிருக்கத்தேவையில்ல!
டிஸ்கி1 - இந்த பதிவு ஒரு கற்பனையே.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல(இப்பல்லாம் இப்படி போட்டாலும் பிரச்சினையாகுது பாவங்க நாங்க எப்படிங்க கற்பனை பண்றது!)
டிஸ்கி2- உங்க கற்பனைகளையும் பின்னூட்டத்துல சொல்லுங்க!
படங்கள்-இணையங்களில் சுட்டது!
Tweet | ||||||
35 comments:
என்னே உம்ம நெனைப்பு...மாப்ள எனக்கென்னமோ நீர் இதை எதிர் பார்த்து பதிவு போட்டாப்போல தோணுது ஹிஹி!
இனிய காலை வணக்கம் தல..
நல்லாத் தானே போய்க் கிட்டிருந்திச்சு..
ப்ளாக்கர் இல்லைன்னா என்ன நடக்கும் என்று நீங்கள் சொல்லும் ஆரோக்கியமான விடயங்களை ரசித்தேன்.
உண்மையில் சண்டை, சச்சரவு, போட்டி இல்லையென்றாலே சந்தோசம் தானே..
ஹி...ஹி...
இந்த மாதிரி மொக்க பதிவுக்கு என்ன பின்னூட்டம் போட்டா நல்லா இருக்கும் என்று சிந்திக்க வேணாம்....
கோகுல்... முடியலப்பா
இது நல்லாருக்கே, சீக்கிரம் நடக்கற மாதிரி ஏற்பாடு பண்ணுங்க....
IF BLOGGER CLOSED......
TERROR... ideas.. Super..!
ஹா ஹா செம கற்பனை...
தலைப்பை பார்த்திட்டு என்னமோ ஏதோ என்று வந்தேன்....ஹி.ஹி.ஹி.ஹி......
////நம் எண்ணங்களை,சிந்தனைகளை தூண்டும் நட்புகள்,தொலைதூர,கடல்கடந்த நேசமிகு உறவுகள் கிடைக்காமல் போகும்!/////
இது மட்டும் தான் என் கவலை..
ha...ha..Ha...
மாப்ள நல்லாத்தான் கற்பனை பண்ற போ..
அட இது கூட நல்லாருக்கே...!
பிளாக்கர மூடிட்டாங்கன்னா...மூடிக்கிட்டு பொழப்ப பாக்க போயிடுவோம் மச்சி.. ஹா ஹா
கோகுல்,
கயிவி கயிவி...ய பாத்தா அனுபவம் போல தெரியுதே!
ப்லொக்- க மூடிட்டாகூட நல்லது போல தான் தோனுது.
என்ன பிளாக் மூடி விட்டாங்களா அப்ப இன்னும் கொஞ்ச நேரம் அமைதியாக நித்திரை கொள்ளமுடியும் இந்தப் போதையும் குறைந்து விடும் நண்பர்கள் தான் குறைந்து போய்விடுவாங்க என்ற கவலையைத் தவிர மற்றது எல்லாம் சூப்பர் கோகுல்!
எதிர்ப்பதிவு தொடர் என்று உள்குத்து குத்தினமாதிரி இருக்கு பாஸ்! ஹீ ஹீ
//நம் எண்ணங்களை,சிந்தனைகளை தூண்டும் நட்புகள்,தொலைதூர,கடல்கடந்த நேசமிகு உறவுகள் கிடைக்காமல் போகும்!//
கதையல்ல நிஜம்...
அழகா இருந்தா....கன்னத்துல ஒரு திருஷ்டி பொட்டு வெப்பாங்க....அந்தமாதிரி...இந்த பதிவு நம்ம பதிவு உலகத்துக்கு ஒரு அழகான திருஷ்டி பொட்டு....வாழ்க பிளாக்கர்...வளர்க பிளாக்கிங்...
அருமை
டாகுடர் படங்களுக்கு விளம்பரம் கொறையும்!///இது ஒண்ணுக்காகவாவது இப்புடி நடந்திடக்கூடாதான்னு மனசு ஏங்குறத யார்கிட்ட சொல்லுறது?ஹி!ஹி!ஹி!!!
GOOD THINKING....:))
நினைப்பு தான் ஹி ஹி ஹி
ஆனா இதுக்கு பிளாக்கர் க்ளோஸ் பண்ண வேண்டியது இல்லையே?
உங்க நெட்வொர்க் அட்மின் கிட்ட சொன்னா அவரு என்ன செய்யணுமோ அதை செஞ்சுடுவாரே !!?
ஹா..ஹா..ஹா...
/////ப்ளாக் திடீரென தடை செய்யப்பட்டால்? அய்யய்யோ!!///
நானும் இப்பிடி ஒரு பதிவு கற்பனையா எழுதினேன். அடுத்த ரெண்டு நாள் ப்ளாக் யாருக்குமே ஓபன் ஆகல...
இதனால அறியப்படும் நீதி என்னவெனில் இப்பிடி யாரும் கற்பனை செய்யாதிங்க.
அந்த பதிவுகளின் லிங்க்:
http://tamilvaasi.blogspot.com/2011/05/blog-post_12.html
http://tamilvaasi.blogspot.com/2011/05/blog-post_14.html
நடந்தா நல்லாத்தானிருக்கும் போலிருக்குது.:-)
Jராத்திரி பேய் வரவரைக்கும் உக்காந்து கமென்ட் போடத்தேவையில்லை!//
ஆஹா அனுபவம் செமையா பேசுதே....!!! பேயை பார்த்தீங்களா இல்லையா...
வணக்கம் மாப்பிள..
அப்பிடி நடந்தா நானும் வேலை செய்யுற இடத்தில இருந்து டெலிபோன நோண்டத்தேவையில்லை..
அது சரி இந்த பதிவு யாருக்கு உள்குத்து x பதிவருக்கா இல்ல y பதிவருக்கா..?? ஹி ஹி வந்த வேலை முடிஞ்சுது போயிட்டு வாறேன்யா.. ஹி ஹி
சூப்பர்....
கலக்கிட்டீங்க!
அது சரி........
கற்பனை சூப்பர் தலிவா
ஸலாம் சகோ.கோகுல்,
இப்படி சுத்தி வளைச்சு... எங்கெங்கோ போயி என்னென்னமோ சொல்லி...
ஆனால், அதையேல்லாம் சுருக்கமா ஒரே வரியிலே இப்படி சொல்லாலாமா... சகோ..?
"நாடும் மக்களும் தமிழ் இணைய உலகமும் நிம்மதியும் சுபிட்சமும் பெறுவர்".
இதானே..??? :-)
நல்லதொரு பகிர்வு...
மொத்தத்தில் நிம்மதியா இருக்கலாம்...
சூப்பர் ...
எதோ நடந்தா சரி, நமக்கு நிம்மதி தானே!
தமிழ்வாசி - Prakash said...
/////ப்ளாக் திடீரென தடை செய்யப்பட்டால்? அய்யய்யோ!!///
நானும் இப்பிடி ஒரு பதிவு கற்பனையா எழுதினேன். அடுத்த ரெண்டு நாள் ப்ளாக் யாருக்குமே ஓபன் ஆகல...
இதனால அறியப்படும் நீதி என்னவெனில் இப்பிடி யாரும் கற்பனை செய்யாதிங்க./
அந்தப்பதிவை படித்ததால்தான் பிளாக் வரவில்லை என நினைத்தேன்.
நான் வலை உலகத்திற்கு வந்த புதிய நேரம் அப்போது.
இப்போது நீங்கள் எழுதியிருக்கிறீகள்!
நிறைய பேர் பிளாக்கைக் காணோம் என்று வேறு அலறியிருக்கிறார்கள்.
நீங்கள் தான் காரணமா????.
செம கற்பனை...
இத கோகுல் வேற எதுக்காவது உபயோக......
கலக்குங்கள்...-:)
Post a Comment