அறிவுத்திருட்டு
புத்தகங்களை தொலைப்பதில்
எனக்கு மகிழ்ச்சியே
அவை
எடைக்கு
போடப்படாதவரை!
சிரிப்பு
கசகசத்த
பேருந்துப்பயணத்தை
கவித்துவமாக்கியது
ஒரு மழலையின்
சிரிப்பு
காக்கை எங்கே?
பிண்டம் வைத்தாயிற்று
எந்தக்காக்கை
எடுக்கும்
சிங்கப்பூரில்!
கொள்கை
புரியாதது
கேட்பவர்களுக்கு
கொஞ்சமாய்
சொல்பவர்களுக்கு
சுத்தமாய்
Tweet | ||||||
48 comments:
கொள்கை விளக்கம் சூப்பர்..
இப்ப புத்தகங்களுக்கு பதிலாக ஐபாட் வந்திருச்சாம், அதையும் தொலைக்கும் போது மகிழ்ச்சியா?
//புரியாதது
கேட்பவர்களுக்கு
கொஞ்சமாய்
சொல்பவர்களுக்கு
சுத்தமாய் //
அழகான ஆழமான வரிகள்
அத்தனையும் அருமை நண்பரே
நட்புடன்
சம்பத்குமார்
நல்லா இருக்கு ..குறிப்பா இரண்டாவது சூப்பர் ...
Dr. Butti Paul said...
கொள்கை விளக்கம் சூப்பர்..
//நன்றி!
//
Dr. Butti Paul said...
இப்ப புத்தகங்களுக்கு பதிலாக ஐபாட் வந்திருச்சாம், அதையும் தொலைக்கும் போது மகிழ்ச்சியா?
//
அது உங்கள் ஐபாட்-ஆகா இருந்தால் மகிழ்ச்சியே! ஹி ஹி
சம்பத்குமார் said...
//புரியாதது
கேட்பவர்களுக்கு
கொஞ்சமாய்
சொல்பவர்களுக்கு
சுத்தமாய் //
அழகான ஆழமான வரிகள்
அத்தனையும் அருமை நண்பரே
நட்புடன்
சம்பத்குமார்
//
நன்றி நண்பரே!
கந்தசாமி. said...
நல்லா இருக்கு ..குறிப்பா இரண்டாவது சூப்பர் ...
//
பாப்பா சிரிப்பு உங்களையும் மயக்கிடுச்சா?
இனிய இரவு வணக்கம் மச்சி,
நலமா?
பதிவினைப் படிச்சிட்டு
நறுக்கு கவிதைகளை ரசித்திட்டு வாரேன்.
கசகசத்த
பேருந்துப்பயணத்தை
கவித்துவமாக்கியது
ஒரு மழலையின்
சிரிப்பு//
இது சூப்பரா இருக்கு தல.
நறுக்களின் புனைவு அருமை, சிங்கப்பூரில் காக்கை உணவு எடுக்காதது முரண் போலத் தோன்றுகிறது.
ரசித்தேன்.
@நிரூபன்
வணக்கம் மச்சி,
இது கூட நல்லாத்தான் இருக்கு
சூப்பர்! நல்லா சிந்திக்கிறீங்க,கோகுல்.
நல்ல கொள்கை!
ஏன் சிங்கப்பூர்ல காக்கைகள் கிடையாதா...
எல்லாவற்றையும் தொலைத்து விட முடியாதே..
அருமை அனைத்தும் ...
அழகிய கவிதைவரிகளில் கொள்கை விளக்கம் அருமை !....பாராட்டுக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ...........
அசத்தல் கவிதைகள்!
சிங்கப்பூரில் காகம் இல்லாட்டியும் அருகில் மலேசியாவில் இருக்கு மச்சி !
வித்தியாசமான சிந்தனைகள் கோகுல்.
கசகச பேருந்துக் கவிதை அருமை.
காக்கை எங்கே?
என்னை கவர்துவிட்டது நண்பேண்டா...
லண்டன் என மாற்றிபார்கிரேன்...
நன்றி,
ஸ்ரிகர்
////புத்தகங்களை தொலைப்பதில்
எனக்கு மகிழ்ச்சியே
அவை
எடைக்கு
போடப்படாதவரை!////
என்ன ஒரு வரிகள் பாஸ்...
மாப்ள நல்லா இருக்கு நன்றி!
Super kavithai
First one very super
குறுங்கவிதைகள் அத்தனையும்
வடிவாக உள்ளது நண்பரே.
வேர்த்து வழிந்து நெரிசல் பட்டு பயணிக்கும்
பேருந்துள் போக்கை வாய் விரித்து சிரிக்கும்
குழந்தையை கண்டால் மனம் லேசாவதை
சிக்கின்னு சொல்லியிருக்கீங்க...
வாழ்வின் யதார்த்தம் ஹைக்கூ வடிவில்
அருமை
அருமை
அருமை
அருமை
அருமை
சூப்பர்[cartoon]
அனைத்தும் அருமையான ஹைக்கூ ...கடைசி கார்டூன் கலக்கல் !
எனக்கு என்னமோ அந்த கொள்கை புரிஞ்ச மாதிரி இருக்கு... ஹி ஹி... காக்காவ ஒன்னும் சொல்லாதீங்க, அதுக நம் முன்னோர்கள் ..
அருமை வரிகள் நண்பா
கடைசியா சொன்ன கொள்கை விளக்கம் அருமை
நல்லா இருக்கு கோகுல்...
கவிதைகள் அசத்தல் மக்கா...!!!!
கடைசி கார்ட்டூன் படம் நெத்தியடி...!!!
அனைத்தும் மிக அருமை... நண்பா..
ரசித்தேன்...
அருமையான ஹைக்கூ-க்கள்,அதற்கு தகுந்த ஒளிப்படங்கள்.
இப்படியும் கலக்கறீங்களே! அருமை.
குட்டிக் கவிதைகள் ஆயினும் சுட்டிக் கவிதைகள்.
வர வர அளவுக்கு அதிகமாய் சிந்திங்கிறீங்க...புதுசா என்ன சாப்பிட ஆரம்பிச்சீங்க கோகுல்...அருமை...
சூப்பர் விளக்கங்கள் பாஸ்
மழலை எல்லாவற்றையும் ரசிக்கச் செய்யும். நல்ல சிந்தனை வரிகள் நன்று.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
:-)
கசகசத்த பேருந்தில் மழலையின் சிரிப்பு... சூன்ய வாழ்க்கையில்ஆன்மீகம் நாடுதல் நல்லது..... சூப்பர் நண்பா
கோகுல்,
எல்லா கவிதைகளும் சூப்பர்.. அதிலும் அந்த 'சிரிப்பு' மற்றும் 'கொள்கை' ரொம்பவே பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
ஒவ்வொன்றும் ஒருவிதம்....
ஏழையின் சிரிப்பில்
இறைவன் இருக்கிறானோ இல்லையோ....
மழலையின் சிரிப்பில்
உண்மையாகவே
கவிதை இருக்கிறது....
=================
அருமை....
மழையின் சிரிப்பு அருமை சகா. . .
நல்ல சங்கதி மூன்று சொல்லியிருக்கிறியள். புத்தகங்கள்மீதான காதலும் கொள்கைவிளக்கமும் super.
பிண்டம் வைத்தாயிற்று
எந்தக்காக்கை
எடுக்கும்
சிங்கப்பூரில்!/////
அசத்தலான குட்டிக் கவிதைகள் கோகுல்!
கசகசத்த
பேருந்துப்பயணத்தை
கவித்துவமாக்கியது
ஒரு மழலையின்
சிரிப்பு
கவித்துவப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
Post a Comment