Sunday, October 9, 2011

மயக்கம் என்ன?





ஒரு பையன் நைட்டு லேட்டா வீட்டுக்கு வந்தானாம்.அப்பா ஏண்டா லேட்டுன்னு 

கேட்டதுக்கு பிரண்ட்ஸ் கூட க்ரூப் ஸ்டடி’ப்பா அதான் லேட் 

ஆகிடுச்சுன்னான்.நம்பிடுவாரா 


அப்பா?,யாறாரு எல்லாம் க்ரூப் ஸ்டடி பன்னிங்க அவங்க போன் நம்பர் 

எல்லாம் குடு நான் 

போன் பண்ணி கேக்குறேன் அப்படின்னார்.



பையன் ஒரு பத்து நம்பர் கொடுத்தான்.


மொத நாலு பேர் சொன்னாங்க,ஆமாம் அங்கிள் இங்க தான் வந்திருந்தான்.படிச்சு 

முடிச்சுட்டு அப்பவே போய்ட்டான் அப்படின்னாங்க.


அப்பாவுக்கு நம்பிக்க வர்ல.


அடுத்து ஒரு மூணு பேருக்கு போன் போட்டார்.


அவங்க சொன்னாங்க இப்பத்தான் அப்பா கிளம்பி போனான்’ன்னு.

அப்பா இன்னும் கன்பியுஸ் ஆகி இன்னும் ரெண்டு பேருக்கு போட்டார்.

அப்பா அவன் ஒரு புக் எடுத்துட்டு வர வீட்டுக்கு போயிருக்கான் இன்னும் வரலையா?ன்னாங்க



இப்ப அப்பா ரொம்ப கடுப்பாயி

கடைசியா ஒருத்தனுக்கு போன் பண்ணார்.


பாவம் அந்த பய புள்ள என்ன சொல்லுச்சோ தெரியல,போன கீழ போட்டுட்டு மயங்கி 

விழுந்துட்டார்.




நீங்க சொல்லுங்க அந்த பையன் என்ன சொல்லியிருப்பான்?தெரியாதவங்க காத கொடுங்க 

சொல்றேன்.


அப்பா இங்கே தான்பா படிச்சிகிட்டு இருக்கான் போன அவன்கிட்ட குடுக்கட்டுமா?

பேசுறிங்களா? அப்படின்னானாம்.



பாவங்க அப்பா அப்பறம் ஏங்க மயக்கம் போட மாட்டாரு?




36 comments:

Yoga.s.FR said... Reply to comment

நான் கூட மயக்கம் போட்டு வுழுந்துட்டேங்க.இப்ப தான் எந்திரிச்சேன்!

கோகுல் said... Reply to comment

@Yoga.s.FR
வாங்க ஐயா!வந்தவுடனே விழுந்துட்டா எப்படி?

Yoga.s.FR said... Reply to comment

பின்ன என்னங்க?நம்ம காலத்துல அப்பன நேருக்கு நேர பாத்தது கடேசியா எப்போன்னு இப்ப யோசிக்கிறேன்!

rajvel said... Reply to comment

good son

ராஜா MVS said... Reply to comment

நண்பேன்டா....

♔ℜockzs ℜajesℌ♔™ said... Reply to comment

///அப்பா இங்கே தான்பா படிச்சிகிட்டு இருக்கான் போன அவன்கிட்ட குடுக்கட்டுமா?

பேசுறிங்களா? அப்படின்னானாம்.///

நண்பேண்டா !!!!!!!!!!!!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

ம் ...

Unknown said... Reply to comment

நானும் என்னென்னமோ யோசிச்சுட்டேன். படிச்ச எனக்கே மயக்கம் வருது - அவர் என்ன பண்ணுவாரு.

Unknown said... Reply to comment

@Yoga.s.FR

யோசிச்சு முடிச்சுட்டிங்களா - இன்னும் இல்லையா?

Unknown said... Reply to comment

@Yoga.s.FR

நம்ம காலம்னா எதுங்க ஐயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said... Reply to comment

இவ்வளவு சொல்லியுமா அவரு நம்பல? என்ன அநியாயம் சார் இது? ஒருத்தன் இதுக்கு மேல என்ன பண்ண முடியும்?

செங்கோவி said... Reply to comment

நல்ல பையன்...நல்ல ஜோக்.

காட்டான் said... Reply to comment

நண்பேண்டா..!!

அப்புறம் நீங்க தமிழ் மணத்தில சிறந்த 20 பதிவர்களில் ஒருவரா வந்திட்டீங்களாம் வாழ்த்துக்கள்!!

vetha (kovaikkavi) said... Reply to comment

வாலிப யோக்கா! ..நல்லாத் தானிருக்கிறது..அக் காலம்...இக்காலம்...வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

கவி அழகன் said... Reply to comment

ரொம்ப நாளைக்கு அப்புறம் வாறேன் வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said... Reply to comment

வெளங்கீறும்....................ஹா.ஹா.ஹா.ஹா நல்ல சோக் பாஸ்

Unknown said... Reply to comment

ஹிஹி இப்படி நானும் மாட்டி இருக்கேன்யா...ஆனா அப்போ போன் இல்ல நேரிடையா!

மாய உலகம் said... Reply to comment

சூப்பர் கோகுல்... இது போன்ற சம்பவங்கள் நிறைய... அவங்க அப்பாவோட டவுட் கண்பார்ம் ஆகிடுச்சு ஹா ஹா ஹா

Unknown said... Reply to comment

சூப்பர் நண்பா ஜோக் அருமை

நிரூபன் said... Reply to comment

தத்துவத்தோடு சேர்த்து நண்பர்களின் உல்டா நிகழ்ச்சியினையும் சுவாரஸ்யமாகத் தந்திருக்கிறீங்க.

ரசித்தேன் பாஸ்

Yaathoramani.blogspot.com said... Reply to comment

மயக்கம் போடாவிட்டால்தான் ஆச்சரியம்
அருமையான ரசிக்கும்படியான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 13

settaikkaran said... Reply to comment

//அப்பா இங்கே தான்பா படிச்சிகிட்டு இருக்கான் போன அவன்கிட்ட குடுக்கட்டுமா? பேசுறிங்களா?அப்படின்னானாம்//

இதுக்கா அப்பா மயக்கம் போட்டாரு? அதான் பக்கத்துலேயே பையன் இருந்தானில்லே, கேட்டிருக்கலாமில்லே...? :-)

SURYAJEEVA said... Reply to comment

என்னமோ போங்க

Unknown said... Reply to comment

சத்தமா சிரிச்சேன் கோகுல்
வேற எதுவும் எழுதனுமா..

புலவர் சா இராமாநுசம்

குறையொன்றுமில்லை. said... Reply to comment

நல்ல அப்பா, நல்ல பிள்ளை, நல்ல சந்தேகம்.

பிரணவன் said... Reply to comment

கொஞ்சமாவது நம்புங்கப்பா. . .நாங்களும் படிப்போம்ல. . .

வெளங்காதவன்™ said... Reply to comment

ஹி ஹி ஹி ஹி...

நன்பேண்டா!

kowsy said... Reply to comment

தனிமையில் வாசித்தேன். என்னையறியாமல் சிரித்தேன். இந்தப் பதிவு போல் எமக்கு எப்போதும் வேண்டும். உங்கள் சொந்தக் கற்பனையா? இப்படி அப்பாவிற்கு இப்படித்தான் பிள்ளை இருக்கும்.

சக்தி கல்வி மையம் said... Reply to comment

மாப்ள கலக்கல்..

சசிகுமார் said... Reply to comment

ஹா ஹா....

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

பழைய நினைவுகள் பதிவா வருதே....

சென்னை பித்தன் said... Reply to comment

ஹா,ஹா,ஹா!

Anonymous said... Reply to comment

ஒரு வாட்டி சொன்னா நம்பனும்.. நம்பிக்கைதான் வாழ்க்கை.. இப்ப பார்த்தீங்களாஅப்பாக்கு நடந்த கதிய?

”தளிர் சுரேஷ்” said... Reply to comment

அடடா! அருமையான ஜோக்!

ஸ்ரிகரின் வலைப்பதிவு said... Reply to comment

நல்ல நண்பன் எப்பவும் சப்போர்ட் பண்ணுவான், நல்ல அப்பா எப்பவும் ஸ்ட்ரிக்ட் தான், ரெண்டும் தவறு இல்லை...நண்பேண்ட, நம்பேண்ட..:)

cheena (சீனா) said... Reply to comment

நண்பர்கள் சிறந்த நண்பர்கள் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா