வாச்சாத்தி,இந்த ஊரின் பெயரை இன்று தெரியாதவங்க தமிழகத்துல
இருக்க முடியாது,தமிழகத்துல மட்டுமல்ல தமிழறிந்த உலககதோர்
எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும்.பொதுவா ஒரு ஊரப்பத்தி நிறைய பேருக்கு
தெரிய வரணும்னா அந்த ஊருக்கு ஏதாவது
தனிச்சிறப்போ,சுற்றுலாத்தலமாகவோ இல்ல ஏதாவது தலைவர்கள் பிறந்த
ஊராகவோ இருக்கும்.ஆனா இந்த வாச்சாத்தி என்கிற குக்கிராமத்தின்
பெயர் எல்லோரையும் எட்டியிருப்பதன் காரணம் சிறப்புகள்
அல்ல.நாமெல்லாம் நெனைச்சுப்பாக்கவே அஞ்சுகிற கொடூரத்தின் உச்சம்
நிகழ்தப்பட்டதால்..இப்படி ஒரு கொடுமை எந்த ஊருக்கும் வரக்கூடாது.
சில விளக்கங்கள்;
ஊரின் பின்னணி; தருமபுரி மாவட்டம் பேதாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட
வனப்புமிக்க சந்தன மரங்கள் நிறைந்த சித்தேரி மலையின் அடிவாரத்தில்
அமைந்திருக்கும் குக்கிராமம்தான் வாச்சாத்தி. 90 சதவிகிதம் பழங்குடியினரே
வசிக்கின்றனர். வாச்சாத்தி மக்களில் பெரும்பாலானோர் சொந்தமாக நிலம்
வைத்திருக்கின்றனர். விவசாயமும் மலைக்காட்டில் விறகு சேகரிப்பதும்,
கூலி வேலைக்குச் செல்வதுமே இவர்களின் வருமானத்திற்கான வழி.
பகலெல்லாம் உழைத்து விட்டு, இருள் கவ்வும் போதே கூட்டுக்குள்
அடைந்து விடுவது வாச்சாத்தியில் வழக்கம்.மின்சாரம், போக்குவரத்து என
எந்த வசதியும் இன்றி மக்கள் வசித்து வந்ததே இதற்கு காரணம்!
90-களில் நிலவிய சூழல்; . வாச்சாத்தி அமைந்துள்ள சித்தேரி மலைப்
பகுதியில் சந்தன மரங்கள் அடர்ந்திருந்தன. காடுகளைத் தாண்டியதோர்
வாழ்வை அறிந்திராத வாச்சாத்தி மக்களுக்கு, சித்தேரி மலை சந்தன
மரங்களுக்கு உலகளவில் தேவை இருக்கிறதென்றோ, அவை கொள்ளை
விலை மதிப்புடையவை என்றோ தெரிந்திருக்க நியாயமில்லை! ஆனால்,
வனத்துறை அதிகாரிகளுக்கு அது தெரிந்திருந்தது. பழக்கப்பட்ட
வனவிலங்குகள் மனிதர்களின் அதிகாரத்திற்கு அடங்குவதைப் போல,
பழங்குடியினரை கட்டற்ற தங்களின் அதிகாரத்தால் அடிமைகளாக்கியது
வனத்துறை. வனத்துறை அதிகாரிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்தும்,
கிடைக்கும் சொற்ப கூலிக்காகவும் சந்தன மரங்களை வெட்டித் தருவது
சிலரின் வழக்கமாக இருந்ததே தவிர, பழங்குடியினர் எவரும் தங்களின்
வங்கி சேமிப்பை அதிகரிக்கவோ, வளமான வாழ்வுக்காகவோ மரங்களை
வெட்டவில்லை. சந்தன மரங்களை வெட்டித்தர மறுத்தவர்களை
அதிகாரிகள் தண்டித்தனர்.
விளைவுகள்; 1992 சூன் 19. அன்று காலை ஏழெட்டு பேர் கொண்ட
வனத்துறைக்குழு ஒன்று சந்தனக்கட்டை கடத்தலை தடுக்க(?)மேற்கொண்ட
சோதனையில் வாசாதிக்கு அருகில் உள்ள ஒரு ஆற்றில் மணலுக்கடியில்
புதைத்து வைத்திருந்த சந்தனக்கட்டைகளை கைப்பற்றி அருகிலுருந்த
வாச்சாதியை சேர்ந்த ஒருவரை அடித்து,உதைத்து யாரிங்கே இதை
புதைத்தது?என விசாரித்திருக்கிறார்கள்.விஷயமறிந்த வாச்சாதிமக்கள்
திரண்டு சென்று வனத்துறையினரை அடித்து ஓடவிட்டு அவரை
மீட்டிருக்கிறார்கள்.இதுதான் ஆரம்பம்.இனி நிகழ்ந்ததை எழுதாமலே
இருந்தால் பரவாயில்லை என நினைக்குது என் நெஞ்சம்..
வன்மத்தின் உச்சம்; அடிபட்டு ஓடிய வனத்துறையினர் தங்கள் கேம்ப்புக்கு
சென்று உயர் அதிகாரிகளிடம் நடந்ததை சொன்னவுடன் வெகுண்டெழுந்த
அவர்கள்,எழுதப்படிக்க தெரியாத காட்டுமிராண்டி பசங்க நம்மையே எதிர்ப்பதா
என பொருமிக்கொண்டு அன்று மாலையே 155 வனத்துறையினர், 108 காவல்
துறையினர், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படையே புகுந்தது.
ஊரில் உள்ள அத்தனை பேரும் தரதரவென இழுத்து வரப்பட்டு, ஊரின்
மய்யத்தில் அமைந்திருக்கும் ஆலமரத்தடியில் அமர வைக்கப்பட்டனர்.
பெண்கள், குழந்தைகள், வயதானோர் எனப் பாகுபாடின்றி அடித்து துவைத்து
உட்கார வைக்கப்பட்டனர். வெறியாட்டம் தொடங்குவதற்கு முன்பே,
ஆலமரத்தடியில் நின்றிருந்த பெண்களில் 18 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து,
வாகனத்தில் ஏற்றி ஏரிக்கரையை நோக்கிக் கொண்டு சென்றனர்
அதிகாரிகள். பதுக்கி வைத்திருக்கும் சந்தனக் கட்டைகளை எடுப்பதற்கு
அழைத்துச் செல்வதாக ஒரு நாடகம் அரங்கேறியது.
பெண் காவலர்கள் இருந்தும் அவர்கள் இப்பெண்களோடு செல்லவில்லை.
ஏரிக்கரைக்கு சென்றதும், ஒவ்வொரு பெண்ணை யும் தனித்தனியாக
இழுத்துச் சென்று மூவர் நால்வராகக் கூட்டு வல்லுறவு கொண்டனர்.
இதில் 13 வயதேயான சிறுமியும் இருந்தார். பருவமெய்தாத நிலையில்
ரத்தம் கொட்ட அவர் அனுபவித்த கொடுமை, வக்கிரத்தின் உச்சம். 18
பெண்களையும் வன்கொடுமை செய்து அதே வாகனத்தில் ஏற்றி, அரூர்
வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். ஆலமரத்தடியில்
குவிந்திருந்த உறவுகளைப் பார்த்து பெண்களும், உடைகள் கிழிக்கப்பட்டு
கசங்கி நின்ற பெண்களைப் பார்த்து உறவுகளும் கதறி அழுதனர்.
சூலை 20 தொடங்கி மூன்று நாட்கள் வாச்சாத்தியை மொத்தமாக சிதைத்து
வெளியேறியது, அரச பயங்கரவாத கும்பல். இப்படியொரு கொடுமை
நடந்ததற்கான சுவடு கூட வெளியுலகத்திற்கு தெரியவில்லை. வாச்சாத்தி
மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை சொல்லி அழக்கூட
ஆளின்றி புழுங்கிக் கொண்டிருந்த நிலையில்தான், மார்க்சிஸ்ட் கட்சியின்
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சித்தேரி மலை மாநாடு கூடியது.
சூலை 7 அன்று கூடிய மாநாட்டில் பங்கேற்ற மலைவாழ் மக்கள் சிலர்,
அரைகுறையாக கேள்விப்பட்ட விஷயங்களை எடுத்துரைக்க, தமிழ்நாடு
மலைவாழ் மக்கள் சங்கம் போராட்டத்தில் இறங்கியது.
இது உண்மையாக இருக்கும் என நம்ப, எந்த செய்தி நிறுவனமும் தயாராக
இல்லை. அதே மனுவை சில நாட்கள் கழித்து மார்க்சிஸ்ட் கட்சியின்
அப்போதைய தலைவரான ஏ. நல்லசிவன் மூலம் முதலமைச்சருக்கு
அனுப்ப, அதன் பின்னரே ஊடகங்கள் வாச்சாத்தி என்ற பெயரை உச்சரிக்கத்
தொடங்கின.
இப்போது ; வாச்சாத்தி பாலியல் வழக்கில் மொத்தம் உள்ள 269
குற்றவாளிகளில் உயிரோடு உள்ள 215 பேரும் குற்றவாளிகள் எனத்
(2011செப்டெம்பர் 29)தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் பலாத்காரம் செய்ததாக 17
வனத்துறையினர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
வனத்துறையினர் 17 பேர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு உறுதி
செய்யப்பட்டது. 17 பேரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல்
தண்டனையும் 5 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவலும் விதிதக்கப்பட்டது.
மற்றவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் மூன்று ஆண்டு வரை சிறை
தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் சில பிரிவுகளில்
விடுவிக்கப்பட்டுள்ளனர்.
காலம் எப்படிப்பட்ட காயத்துக்கும் மருந்து என்பர்.ஆனால் இந்த
அரக்கர்களின்(இது நல்ல வார்த்த உங்களுக்கு தெரிஞ்ச வார்த்தைகளை
போட்டுக்கங்க)விட்டுச்சென்ற வன்மத்தின் உச்சத்தால் விட்டுப்போன
வலியின் மிச்சம்
எத்தனை தலைமுறைக்கு தொடர்கிறதோ???
தகவல்கள்-http://ta.wikipedia.org,http://tamilseythi.com/kaddurai/572.html தளங்களிலிருந்தும் ,சில ஊடகங்களிலிருந்தும் திரட்டப்பட்டது.
Tweet | ||||||
36 comments:
இனிய இரவு வணக்கம் நண்பா,
வாச்சாத்தியில் ஏழை மக்களின் உணர்வுகளோடு வனத் துறையினர் விளையாடிய கொடூரமான நிகழ்வுகள் பற்றி இன்று தான் அறிந்தேன்.
காலத்தின் செயற்பட்டால், இன்று அவர்களுக்குத் தண்டனை கிடைத்தாலும், ஏழை மக்களின் உணர்வுகளும், அவர்களின் உயிரும் மீண்டும் வரப் போவதில்லைத் தானே..
இனிமேல் இவ்வாறு ஏழைகளின் வாழ்வோடு அதிகாரிகள் விளையாட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
பதிவுக்கு மிக்க நன்றி.. தீர்ப்பு கொடுக்கப்பட்டாலும்.. இந்த பதினெட்டு வருட வேதனை தீருமா??? கொடுமைகளிலும் கொடுமை இப்படி இழுத்தடிக்கும் தீர்ப்புகள் தான்
@நிரூபன்
இரவு வணக்கம் நிரூ!
நிச்சயம் வலியின் எச்சம் பல தலைமுறைக்கும் தொடரும்தான்.
விலாடமாட்டர்கள் என உருதியாட சொல்ல முடியாத நிலைதான் இருக்கிறது.சமீபத்தில்தான் ராணுவ அதிகாரி ஒருவரால் சுடப்பட்ட தில்ஷன் நினைவுக்கு வருகிறான்.
@Rameshஆமா ரமேஷ்,
காலம் தாழ்த்திய நீதி மறுக்கப்பட்ட நீதிதான்,ஆனாலும் நீதியை தடுத்துவிடலாம் என்ற நினைப்பை இது போன்ற தீர்ப்புகள் உடைத்தெறியும் போது கொஞ்சம் மன நிறைவைத்தருகிறது.
படிக்கும் போதே மனசு துடிக்குது நன்பா..
தூக்கு தண்டனை தேவையில்லைத்தான்
ஆனால் இவர்களுக்கு தூக்குதான் சரி நன்பா.. இவர்களை உடனேயே தூக்கில் இட்டு இருக்க வேண்டும். :(
இவ்வளவு கொடூரம் நம்பமனசு மறுக்குமளவு நடந்திருக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர்களிற்கு இந்தத்தண்டனையெல்லாம் போதாது.
காலம் தாழ்த்திய தீர்ப்பு என்றாலும் நீதி வென்றிருக்கின்றது...
அரச பயங்கரவாத கும்பல் செய்த கொடுமையை படிக்கும்போது நெஞ்சம் பதறுகிறது நண்பா
மிகவும் கேவலமான,தாமதமான தீர்ப்பு.,
இவங்களை உடனே தூக்கிலிட்டுருக்கணும்...
நல்ல கட்டுரை நண்பரே...
உடலின் வெறி, அதிகாரத்தின் தினவு, இது என்று அடங்குமோ... அன்று இது போன்ற செய்திகள் வரலாறாகும்... அது வரை இவை மீண்டும் மீண்டும் புதிய செய்தியாகவே உலாவரும் வேறு பெயர்களில்..
வேதனையான விடயம். அந்த பாவிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை போதாது. அதுவும் காலம்கடந்து தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அநீதி
19 வருடங்களுக்குப் பின் நீதி கிடைத்தாலும், அந்த நீதிக்காக அரசு அதிகார மையங்களை எதிர்த்து அவர்கள் தொடர்ந்து வழக்கு நடத்தியதே பெரிய விஷயம்.....!இது ஒரு முன்னுதாரணம்!
சுதந்திர இந்தியாவில் நியாயமான தீர்ப்பு கிடைக்க 19 வருடங்கள் காத்திருக்கத்தான் வேண்டும் என்ற நிதர்சனமான உண்மை நெஞ்சை சுடுகிறது நண்பரே..
எனினும் காலம் கடந்தேனும் தீர்ப்பு சரியாய் வந்துள்ளது.
அருமையான பகிற்விற்கு நன்றி
நட்புடன்
சம்பத்குமார்
வேதனையான விஷ்யம் நண்பா
இன்று என் வலையில்
கருத்துரைகளை சுருக்க விரிக்க
சொல்ல முடியாத, தாங்க முடியாத வேதனை.
சொல்ல முடியாத, தாங்க முடியாத வேதனை.
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
மிகவும் கேவலமான,தாமதமான தீர்ப்பு.,
///
ரெவெரி said...
இவங்களை உடனே தூக்கிலிட்டுருக்கணும்...
நல்ல கட்டுரை நண்பரே...
///
துஷ்யந்தன் said...
படிக்கும் போதே மனசு துடிக்குது நன்பா..
தூக்கு தண்டனை தேவையில்லைத்தான்
ஆனால் இவர்களுக்கு தூக்குதான் சரி நன்பா.. இவர்களை உடனேயே தூக்கில் இட்டு இருக்க வேண்டும். :(///
நண்பர்களே!தூக்கு தண்டனைஎல்லாம் அந்த ஐந்து நிமிடங்களுக்குத்தான் வலி,அதன் பின் அவர்களது குடும்பதாருக்குதான் வலி,
அரேபிய நாடுகளில் உள்ளதைப்போல இதுக்கு என்ன தண்டனைன்னு உங்களுக்கே தெரியும்,
மக்களை பாதுகாக்க கொடுத்த அதிகாரம் அவர்களையே பதம் பார்க்கிறது...
மிக கொடுமையான சம்பவம் அந்த மக்களுக்கு நடந்தது...
கோகுல் உண்மையில் உங்களின் கட்டுரையை படித்த பிறகு தான் அங்கு என்ன நடந்தது என அறிய முடிகிறது....அரக்க மனிதர்கள்
மிகவும் வேதனைதரும் சம்பவம் .
என்னத்தச் சொல்ல .காமூகர்களிற்கு
கண் ஏது சகோ. இந்த நிலை மாறவேண்டும் .நன்றி பகிர்வுக்கு .....
தனித்து விடப்பட்ட வாச்சாத்தி மக்களை தலை நிமிரச் செய்த தலைவர்கள்
rootsredindia.blogspot.com
வாச்சாத்தி வனத்தில் ஆதி நீரின் சிவப்பு ~ மாற்று
www.maattru.com
வாச்சாத்தி வழக்கு : வேட்டை நாய்களுக்கு தீர்ப்பு
natputanramesh.blogspot.com
Pls read this
ஐயோ இப்படியும் ஒரு கொடுமையா படிக்கவே மனசு நடுங்குது பாதிக்கப்பட்டவங்களுக்கு எப்படி இருந்திருக்கும். அவங்களைத்தூக்கில் போடுவதால இவங்களுக்கு என்ன நியாயம் கிடைக்கும்.பாதிப்பு பாதிப்புதானே.
நடந்தவற்றை மிக ஆழமாக விரிவாக விளக்கியுள்ளீர்கள்..
உண்மையில் இது கொடூரத்தின் உச்சம்தான்,,
நல்லதொரு பதிவு நிறைய தகவல்களை தேடி எழுதியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..
மிகத் தாமதமாக வந்த தீர்ப்பு,
தவறிழைத்தவர்களில் சிலர் மாண்டே போனார்கள்,
அவர்கள் தங்கள் வாழ்வை செம்மையாய் வாழ்ந்த பின் தானே போனார்கள்.
அவர்களுக்கான தண்டனை எங்கே...
எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதற்கான தீர்வு உடனே கிடைக்க வேண்டும்
அதுவே சரி.
வாச்சாத்தி கண்ண விட்டு அகலாத காட்டுமிராடி செயலின் கோலம்.
என்னையா இது ரொம்ப கொடுமையா இருக்கு?
உண்மையான பதிவு...
கொடுமை நண்பா..குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது.
படிக்கவே கஷ்டமாக இருக்கு நண்பரே
மனதுக்கு வேதனை தரக்கூடிய விஷயம்
ஆயுள் தண்டனை கொடுத்திருக்கனும்
மிகத் தெளிவாக அரசு பயங்கரவாத்தின் கொடுமை
எப்படி இருக்கும் என்பதை தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள்
அரசு அதிகாரமும் தனிமனிதத் திமிரும் ஒன்று சேரும் போது
இதுபோன்ற வெறியாட்டங்கள் தொடரத்தான் செய்யும்
அடித்தட்டு மக்கள் எல்லாம் விதிவழி என வாளாது
இருந்திடாது ஒன்றுபட்டு நிற்க்கையில்தான்
இதுபோன்ற அசிங்கங்கள் அம்பலமேறும்
இல்லையேல் இருட்டினில் மறந்து போகும்
தரமான பதிவைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
பழைய வலிகளை மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி!
முழு விவரம் அடங்கிய கட்டுரை. justice delayed is justice denied என்று சொல்வார்கள்.இப்போதாவது நீதி கிடைத்ததே?
சிட்டிசன் படத்தில் நடந்தேறிய வன்மத்தை பார்த்த போது இப்படியும் செய்வார்களா? படத்தில் தானே என்றிருந்தேன். நிஜத்தில், ஐயோ மனம் பதறுகிறது. 19 வருடங்களாக கனிந்துகொண்டிருக்கின்றது என்றால் அது நெருப்பல்ல, எரிமலை. இவர்களை எல்லாம் சாலையின் நடுவில் நிற்க வைத்து____, ______.
மன்னிக்கவும். சற்றே சுமை... மனதிலும்/ காலம் கடந்து வந்துள்ளேன்.
இனி வருவேன் அடிக்கடி.
@MUTHARASU
அந்த சிட்டிசன் படத்துக்கு மூலக்கரு இந்த சம்பவம் தான் என கேள்விப்பட்டேன்!
மன்னிப்பெல்லாம் எதற்கு நண்பா!நேரமிருக்கும் போது வாருங்கள்!
Post a Comment