உங்களுக்கெல்லாம் ஒரு விசயத்த பத்தி தெரியலன்னா என்ன பண்ணுவிங்க கோகுல்கிட்ட கேப்பீங்க.அய்யய்யோ அடிக்க வராதீங்க டங்கு ஸ்லிப்பு ஆகிடுச்சு.கூகுள்கிட்ட கேப்பீங்க.இதுல நாம தேடுற எல்லா விஷயங்கள் பத்தியும் விபரம் கிடைச்சுடும்.ஆனா அதுலயும் கிடைக்காத விஷயங்கள் இருக்கத்தான் செய்யுதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன் எப்படி தெரிஞ்சுககிட்டேன்னா ஜாக்கி எழுதுற கால ஓட்டத்திலகாணாமல் போனவைகள் அப்படிங்கற பதிவில மரத்தூள் அடுப்பு பத்தி எழுத்திட்டு இதோட போட்டோ கூகுள்ல தேடியும் கிடைக்கல அப்படின்னு எழுதியிருந்தார்.
அதைப்பார்த்ததும் எங்க வீட்லையும் அந்த அடுப்பு இருந்தது ஞாபகம் வந்துச்சு.அம்மாக்கிட்ட இது பத்தி கேட்டேன்.ஊர்ல இருந்து வீடு காலி பண்ணிட்டு வரும் போது தாத்தா வீட்டு பரண்ல போட்டுட்டு வந்ததா சொன்னாங்க.பொங்கலுக்கு ஊருக்கு போய் தேடினேன்.கூகுள்ல தேடியும் கிடைக்காத ஒன்று அங்கே பரணில் தூசி படிந்து பதுங்கிக்கிடந்தது.அது என்னை ஏளனமாக பார்ப்பது போல தெரிந்தது.தேவையில்லைன்னு தூக்கிப்போட்டு இப்ப எந்த மூஞ்ச வைச்சுக்கிட்டு பாக்க வந்த?ஓ!உனக்கு ஒரு பதிவு போட நான் தான் ஊறுகாயா அப்படின்னு எல்லாம் கேட்பது போல என் மனசுக்குள்ள ஓடுச்சு.அப்படியெல்லாம் இல்ல,உன்னை உலகத்துக்கு அறிமுகப்படுத்ததான் அப்படி இப்படின்னு சமாதானப்படுத்தி ரெண்டு போட்டோ எடுத்துக்கிட்டேன்.
அப்பறமா யோசிச்சு பாத்தேன்,இன்னும் என்னென்ன இப்படி தேடியும் கிடைக்காத பொருட்கள் இருக்கிறதா என தேட ஆரம்பித்தேன்.கூகுள்ல இல்லைங்க எங்க கிராமத்தை சுத்தி,அந்த தேடலில் கிடைத்த சில உங்கள் பார்வைக்கு...............
இதுதாங்க தண்டவாளப்பெட்டி.எண்பதுகளில் வந்த படங்களில் வில்லன் பணம் நகைகளை வைத்திருப்பார் அதை வில்லன் இல்லாத நேரத்தில் ஹீரோ லாவகமாக திறந்து பார்ப்பாரே,அதைப்போன்றதுதான் இது.இது எப்பத்துல இருந்து வீட்டுல இருக்குன்னு தாத்தாகிட்ட கேட்டேன் எனக்கு ஞாபகம் தெரிஞ்ச நாள்ல இருந்து இருக்குன்னார்.ஏன் இந்த பேர்னு கேட்டதுக்கு தண்டவாளம் மாதிரி உறுதியா இருக்கறதால அப்படின்னார்(நெம்பியெல்லாம் திறக்க முடியாது).தண்டவாளப்பெட்டியை இத்தனை நாளாக வைத்திருந்தது ஆச்சர்யமில்லை சாவியை இத்தனை நாளாக தொலைக்காமல் வைத்திருந்தது வியப்பை தந்தது.சாவி தொலைஞ்சா வெல்டிங் பண்ணிதான் திறக்கனும்.
பெருசா இருக்கறது உரல்னு தெரியும்.அதென்ன பக்கத்துல சின்னதா உரல் மாதிரியே,சின்ன உரலா?இல்ல உக்காந்து உரல்ல ஆட்டுறத்துக்கு ஸ்பெசல் ஸ்டூலா?இதோட பேரு அதெல்லாம் இல்லைங்க இதோட பேரு குந்தாணி.உரல்ல கம்பு,அரிசி இப்படிஎதாவது போட்டு உலக்கையால் இடிக்கும் போது வெளிய தெறிக்காம இருக்க பயன்படுத்து(ன)றது.இதுக்கு இன்னும் ரெண்டு பயன்பாடு இருக்கு.இப்ப சொன்ன மாதிரி சட்னியோ,இட்லிக்கோ அரைக்கும் போது ஸ்டூல் மாதிரி பயன்படுத்தலாம்.இன்னொன்னு எங்க ஊர்ப்பக்கம் திட்டுறத்துக்கும் குந்தாணி ங்கற வார்த்தையை பயன்படுத்துவாங்க பன்னாடை மாதிரி.
இன்னும் நமது இணையத்தேடலில் தேடி கிடைக்காத இது போன்ற எத்தனையோ விஷயங்கள் அவரவரது கிராமங்களில் இன்றைக்கும் பயன்படுத்தப்பட்டும்,சில பயன்படுத்தப்படாமல் பாதுகாக்கப்பட்டும்,சில நினைவுகளில் மட்டும் வாழ்ந்து வருகின்றன.அவற்றில் சிலவற்றை அறிமுகப்படுத்தியதில் மகிழ்வடைகிறேன்.
Tweet | ||||||
29 comments:
கோகுல் கூகுல்ல தேடிகிடைக்காத படம் இராட்டை, அந்த கால நூல் தயாரிக்கும் கருவி நம்ம மகாத்மா பயன்படுத்தியது.
அட.. இப்படியும் ஒரு பதிவுப்போட்டு அசத்திப்புட்டீங்களே கோகுல்..!
இது போன்ற கிராமங்களில் பயன்படுத்தியப் பொருட்கள் பலதும் பெயர் மட்டுமே தெரிந்து, உருவம் தெரியாமல் இருக்கிற பொருட்கள் எத்தனையோ இருக்கு.. அதைப்பற்றியும் தொகுத்து பதிவிட முனையுங்கள்..!
கோகுல்ல தேடியும் கிடைக்காதது.. ச்சீ ச்சீ.. கூகுல்ல தேடியும் கிடைக்காத்தைப் பற்றிய பதிவுக்கும், பகிர்வுக்கும் நன்றி கோகுல்..!!
நல்ல பதிவு. அந்த தண்டவாளப்பெட்டியை திறப்பதற்கே ஒரு தனி டெக்னிக் இருக்கும். ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு தனி டெக்னிக் வெச்சிருப்பாங்க. அது மறந்துட்டா உடைச்சுத்தான் எடுக்கனும்னு சொல்லுவாங்க...!
அடுப்பையும், பெட்டியையும் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். புகைப்படத்துடன் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா!
Super...gokul....
Nice
நல்ல தேடல் கூகுள் சாரி டங்க் ஸிலிப் ஆகிடுச்சு கோகுல்
தண்ணீர் இறைக்கும் ராட்டினம்,
அருமையான மலரும் நினைவுகள்..
கூகுல்லுகே படம்தந்த நீங்கள் பெரிய ஆளுதான் பாஸ்
வணக்கம் கோகுல்!அருமையான தேடல் கூகுல்...அடச்சீ!!!கோகுல்!!!!!பெரிய ஆளுதான் நீங்க.
வணக்கம் கோகுல்,
அருமையான பதிவு,
வரலாற்று ஆவணமாக உலகெங்கும் வாழும் தமிழ்ச் சந்ததிகளில் கூகிளில் தேடி எம் பண்டைய பொருட்களைப் பற்றி அறிந்திட, உங்களின் இச் சிறு பதிவும் ஓர் சிறு துளி உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அவ்வளவுத்தையும் பத்திரமா வச்சிகிடிடுங்க ...பிற்காலத்துல கோடிக்கணக்கான விலைக்கு ஏழாம் போகலாம் !
பெரிய பண்ணையார் வூட்டு புள்ளை போலிருக்கு நீங்க... அந்த கால பணப் போட்டி எல்லாம் வச்சு இருக்கீங்க...
ஒரு நாள் பூரா ஏற்றம் இறைக்கும் படம் தேடி சலித்து ஒரு வழியாய் கிடைத்தது நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை..
அடடா அருமை, அந்தக்காலத்துப் பொருட்களையெல்லாம் தேடித் தேடிப் படமெடுத்திருக்கிறீங்க.
அந்த தூசடுப்பு எங்கள் வீட்டிலும் இருந்ததாக ஞாபகம், கரண்ட் இல்லாத சண்டை நடக்கும் காலங்களில் பயன்பட்டது.
அந்தத் தண்டவாளப்பெட்டி, நான் நினைக்கிறேன் ஆங்கிலேயர்களால் அறுமுகப்படுத்தப்பட்டதென. ஏனெனில் அப்பெட்டி பிரித்தானியாவிலும் பயன்படுத்துகிறார்கள் சில ஷொப்களில் பார்த்திருக்கிறேன்... கதவைத் திறக்கவே முட்டை குடித்திருக்க வேண்டும் அவ்வளவு கனம்.
சிறப்பான பகிர்வு, கோகுல்.
யோவ்.. இந்த மூன்றும் எங்க வீட்டிலும் இருக்குயா...
இப்பவும் பயன்படுத்திக்கிட்டுத்தான் இருக்கிறோம்...
சமையல் எல்லாம் கேஸ்தான் ஆனால் குளிக்க தண்ணிப்போடுறது இந்த மரத்தூள் அடுப்பில்தான்...
ஹீட்டர் எனக்கு சரிப்பட்டு வரல அதனாலே இந்த அடுப்பை எங்க அம்மா இன்னும் பராமரித்து வருகிறார்கள்....
உண்மைதான் கணினிக்கு தெரியாத எத்தனையோ அற்புதமான விஷயங்கள் கிராமத்து முற்றங்களிலும்... பரண்களிலும் தூங்கிக்கொண்டு இருக்கிறது அதை உலகத்திற்கு வெளிச்சம் போடும் இது போன்ற பதிவுகளை நானும் வரவேற்கிறேன்...
வாழ்த்துக்கள் கூகுல் சாரி கோகுல்...
வணக்கம் கோகில்!
கூகிலுக்கே படம் சப்ளையா?ஹி ஹி
தண்டவாள பெட்டியை தவிர மற்றவை எனக்கும் அறிமுகம்..
வணக்கம் நண்பரே ..
நல்லதொரு முயற்சி ..
வாழ்த்துக்கள்
மிக சுவாரஸ்யமாக இருக்கு .....
இப்படியொரு வடிவத்தில் இல்லையென்றாலும், சாதாரண மண் அடுப்பிலேயே கூல்டிரிங்ஸ் பாட்டிலை அடுப்பின் வாயில் வைத்துவிட்டு உமியை போட்டு நிரப்பி, பின்பு மெல்ல அந்த பாட்டிலை எடுத்துவிடுவோம். பின்பு அந்த துவாரத்தில் விறகு வைத்து பயன்படுத்துவோம்.
கூகுளுக்கே படம் காட்டிய உங்களை வருங்காலம் வாழ்த்தும்...
நேத்து கூட அம்மா அந்த அடுப்ப மண்ணால கையாலேயே செஞ்சாங்க. வத்தல் செய்ய.
இதே போல நாம தொலைச்ச இன்னொரு விஷயம் கல் சிலேட்டு. மூணு வருஷமா தேடறேன். இன்னும் கிடைக்கல.
கோகுலுக்கும் கூகிளுக்கும் நல்ல பொருத்தம் தான்.
nanbaa... இனி கூகிள்ல வரும்னு நினைக்கிறேன்......
எல்லோரும் கூகிள்ல தான் படம் வாங்குவோம்....
நீங்க கூகிள்க்கு தந்துடிங்க...
இனிமே அந்த ஆட்டு உரல் எல்லாம் வெளியே எடுத்தாகனும் கோகுல் .மெட்ராஸ்ல மின்வெட்டு .
என்னதான் ஹீட்டர் தண்ணில குளிச்சாலும் கல்இரும்பு அடுப்பில் தண்ணி போட்டு குளிச்சா அந்த சுகமே தனி
மரத்தூள் போட்டு எரிக்கும் அடுப்பு ஞாபகம் வருது
மாப்ளே முதல்ல கைய கொடுய்யா...திருப்பி தந்துடரேன்..அசத்தலான பதிவு..இந்த விஷயம் எல்லாம் ஊருல பிரசிடெண்ட் வீட்ல பாத்து இருக்கேன்..அதாருன்னு கேக்குரியா ஹிஹி எங்க தாத்தா தான்!...அருமயான பழமய ஞாபகப்படுத்திய பதிவுக்கு நன்றி!
nice post . .
எளிமையான பதிவினில் கிராமத்து மணம் பரப்பிவிட்டீர்கள் சகோ.!
பகிர்ந்தமைக்கு நன்றி.!
Post a Comment