வணக்கம் நண்பர்களே,
( மேதைக்கு டிக்கெட் கன்பார்ம் ஆகிடுச்சா )
ஊர் சுத்தப்போனதோட போன பதிவில விட்டுட்டு போயிட்டேன்.தொடரலாமா?
ஊருக்குப்போய் ரொம்ப நாள் ஆனதால சொந்தக்காரங்க,நண்பர்கள் எல்லோருடைய வீட்டுக்கும் போய் சின்னதா ஒரு அட்டன்டன்ஸ் போடப்போனேன்.போன இடத்திலெல்லாம் ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே சாப்பிட்டுத்தான் போகனும்னு அன்புக்கட்டளைகள். அப்படி இப்படி செம கட்டு கட்டுனதுல ஒரு ரவுண்டு பெருத்தாச்சு.
அடுத்த நாள் மாட்டுப்பொங்கல்,எல்லா பண்டிகைக்கும் நாம ஒருத்தருக்கொருத்தர் வாழ்த்து சொல்றோம்.மாட்டுப்பொங்கலுக்கு யாருக்கு வாழ்த்து சொல்றது அப்படின்னு ஒரு டவுட்டு வந்தது.சரி பொதுவா சொல்லுவோம் ஹேப்பி மாட்டுப்பொங்கல்னு மொபைல்ல பேஸ் புக்ல இப்படி போட்டேன்,நம்ம மதுரன் குசும்பா சேம் டூ யூ பாஸ் அப்படின்னு வாரி விட்டுட்டாரு.ஓகே.மாட்டுப்பொங்கல் எனக்கு சின்ன வயசிலிருந்தே ரொம்ப இஷ்டம்( .பொங்கல் பண்டிகையிலே எனக்கு ரொம்ப பிடிச்ச நாள் குறிப்பா கிராமங்கள்ல இந்த நாளன்னிக்குத்தான் ரொம்ப சிறப்பா கொண்டாடுவாங்க. சின்ன வயசிலிருந்தே ஏன் பிடிக்கும்னா அந்த நாளன்னிக்குதான் எல்லா சொந்தக்காரங்களும் எந்த ஊர்ல இருந்தாலும் தவறாம வந்திடுவாங்க என்னென்ன உறவு முறைகள் நம்ம வழக்கத்துல இருக்கோ அவங்க எல்லோரையும் இந்த நாள்ல ஒண்ணா பாக்கலாம்.
அப்புறம் மாட்டுப்பொங்கல் அன்னைக்கு சில சிறப்புப்பணிகள்(?) எப்பவும் காத்துக்கிடக்கும் அது என்னன்னா மாடு குளிப்பாட்டுறது,கொம்புக்கு பெயின்ட் அடிக்கறது,பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் வாங்குறது,பொங்கல் வைக்க இடம் தயார் பண்றது இப்படி இதெல்லாம் செய்யும் போது ஒரு ராமராஜன் படத்துல அவருக்கு பதிலா நடிச்ச ஒரு பீலிங்(அவரு அளவுக்கு நம்மால முடியாது ஏதோ நம்மால முடிஞ்சது).
( கொம்பிலும் நான் கொஞ்சம் கறப்பேன்)
காலையில் முன்னோர்களுக்கு படையல் வைச்சு வணங்கிட்டு அன்னைய ஒரிஜினல் ஹீரோவ தயார்படுத்தும் வேலையில இறங்கியாச்சு.சமத்தா நின்னா மேதை படம் பாக்க கூட்டிட்டு போறேன்னு சொன்னதால தாத்தா வீட்டு பசு எந்த டிஸ்டர்ப்பும் பண்ணாம அமைதியா நின்னுச்சு.
சுத்து வட்டாரத்துல இருக்குற சில குடும்பங்கள் ஒண்ணா சேர்ந்து,அவங்க வீட்டுல இருக்குற கால்நடைகள் எல்லாத்தையும் ஒரே இடத்துல கூட்டிவந்து ஒண்ணா பொங்கல் வைச்சு படிச்சு அவங்களை சிறப்பிச்சு,நன்றி சொல்லி,அவங்களுக்கு இந்த வருஷம் நோய் எதுவும் தாக்காம இருக்கணும்னு வேண்டிக்கிட்டு எல்லோரும் ஒண்ணா பொங்கலோ பொங்கல் அப்படின்னு கூவுனது பக்கத்து ஊருக்கே கேட்டிருக்கும்.கையில தட்டு வைச்சுக்கிட்டு குச்சியால வாண்டுகள் செம தட்டு தட்டுனுச்சுங்க.
உறவினர்கள்,நண்பர்கள் கேலி,கிண்டல் பேச்சு,நலம் விசாரிப்புகள்,வாழ்த்துபரிமாற்றம் அவர்களுடன் நேரச்செலவிடுதல் இவைதான் ஒரு பண்டிகையின் உண்மையான கொண்டாட்டம், உண்மையான மகிழ்வு இது எல்லாமே எனக்கு ஒவ்வொரு பொங்கலுக்கும் என்னோட கிராமத்துல கிடைக்கும்.இது வேறெந்த பண்டிகைக்கும் கிடைக்காது.
அடுத்த நாள் மாடு பிடித்த கதையை எழுதலாமா?வேணாமா யோசித்துக்கொண்டிருக்கிறேன் பார்ப்போம்.
__________________________________________________________________________________________________________________________
இந்த வாரம் வலைச்சரத்தில் எழுதி வருகிறேன்.உங்கள் ஆதரவை அங்கும் எதிர்பார்க்கிறேன் ,நன்றி.
_____________________________________________________________________________________________________________________________
Tweet | ||||||
18 comments:
அழகிய சந்தோசமான அனுபவம் நண்பா
வணக்கம் கோகுல்!ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க.கலாய்க்கணும்னு தோணுது!ஆனா,என்னமோ தடுக்குது!(கொம்போ?)
@Yoga.S.FR
வணக்கம் ஐயா,வாங்க,நீங்க கலாய்க்கலாம்.தடையேதும் இல்லை.
போட்டோவுல நீங்க போட்டு இருக்குற டிரஸ்ல ஒரு டவுட்.... பேன்ட் சின்னதா ஆயிடுச்சா இல்ல ஷார்ட்ஸ் பெருசா தச்சுடீன்களா....
@சசிகுமார் நான் வளந்துட்டேன்.பேன்ட் சின்னதாகிடுச்சு.
கூட்டாளி மாட்டுக்கும்
பொங்கல் வைத்தே-கை
கும்பிட வத்திடும்
தைத்திரு நாள்
பாட்டாளி போற்றிடும்
மேதினம் போல்-இந்தப்
பாரெங்கும் கொண்டாட
செய்தி டுவோம்
புலவர் சா இராமாநுசம்
தொடர்ந்து எழுதுங்க ! நல்லா இருக்கு கோகுல்! நன்றி !
மாஆஆஆஆஆஆ
மாஆஆஆஆஆஆ
ஹேப்பி மனுஷப் பொங்கல்னு மாடு சொல்லுது.
வலைச்சரம் னு ஒரு விஷயம் இருக்கறதே எனக்கு நீங்க சொல்லி தான் தெரியும்.
வலைசரத்தை எனக்கும், வலைசரத்திற்கு என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு ரொம்ப நன்றி கோகுல்.
மாட்டுப்பொங்கல் வாழ்த்து யாருக்கு?
உங்களுக்கு...ஹா ஹா ஹா...
கிராமத்துல உறவினர்களோட
பண்டிகைகளை கொண்டாடுவது
மிகவும் சந்தோசமான விஷயம்.
மிக அழகா சொல்லியிருகீங்க நண்பரே.
நீங்கள் எங்கு எழுதினாலும் நாங்களும் அங்கே
இருப்போம்.
தங்களின் வலைச்சரப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
இன்னும் சில வருடங்களில் இந்த மாதிரி பண்டிகைகள் அனைத்துமே இப்படி போட்டோவில் மட்டுமே பார்க்க கூடியதாய் மாறிவிடும். நல்லா ரசிச்சு கொண்டாடியிருக்கீங்க.
மாட்டுக்கு பொங்கல் வைத்து சிறப்பித்த மேதையே வருக!
வணக்கம் கோகுல்,
என் ஊரில் இன்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் நாம் அனுபவித்து கொண்டாடிய மாட்டுப் பொங்கல் ஞாபகம் தான் வந்து போனது.
யுத்த இடப் பெயர்வால் இப்போது ஊரை விட்டு பிரிந்து விட்டோம்.
மண் மணம் நிறைந்த நல்லதோர் பதிவு நண்பா.
பாஸ் ஊர் நினைவுகளை ஞாபகப்படுத்திவிட்டீர்கள் எங்கள் ஊர்களிலும் ஒரு காலத்தில் நாங்கள் இப்படித்தான் சந்தோசமாக கொண்டாடுவோம் இப்ப எல்லாம் மாறிப்போச்சி
படத்தை பார்க்கும் போது மேதை டிக்கெட் கன்போம்தான்
இதுதான் உண்மையான சந்தோசம்.
உண்மையில் கிராமத்து வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய சந்தோசம் வேறெங்குமே கிடைக்காது.
பதிவைப்படித்தபோது அப்படியே மெய்மறந்துவிட்டேன்.
K.s.s.Rajh said...
படத்தை பார்க்கும் போது மேதை டிக்கெட் கன்போம்தான்.////தியேட்டர் "திறந்தே"இருக்கிறதாமே?ஈ,காக்காய் கூட ஏரியாவில் இல்லை என்றல்லவோ பேசிக் கொள்கிறார்கள்???
இணைப்பை நேற்றே அனுப்பி இருந்தீர்கள்...நன்றி..
ஆனால் மன்னிக்கவும்.. இன்றுதான் நிதானமாய் வாசிக்க முடிந்தது...
மாட்டு பொங்கல் பற்றிய உங்களது வரிகளும்..புகைப்படங்களும் துள்ளல்...
ஆனால் எல்லாத்தையும் விட "மாடு பிடித்த கதை" அப்டின்னு கடசில ஒரு அமானுஷ ட்ரைளர் ஓட்டிஇருக்கீங்களே...அது செம்ம..:)
Post a Comment